* பணமும், வசதி வாய்ப்புகளும் வந்து போகக்கூடியவை.
மனித சமூகம் செல்வத்தை தேடி ஓடிக் கொண்டு இருக்கிறது.
வாழ்க்கை பொருளுடையதாக இருக்கவேண்டுமானால், பொருள் தேடுவதோடு அருளையும் தேட வேண்டும்.
* சுயநலமற்ற சேவை மட்டுமே மனசாந்தியைத் தரவல்லது.
நமக்குள் இருக்கும் தெய்வீக சக்தியை சேவை வெளிக்கொணர்ந்து விடும் ஆற்றல் கொண்டது.
* தலைவனாக வேண்டும் என்ற எண்ணம் நமக்குள் இருக்குமானால்,
முதலில் தொண்டனாக சேவை செய்யும் அனுபவத்தைப் பெறவேண்டும்.
* எவன் ஒருவன் சுகம், துக்கம் எல்லாவற்றையும் சமமாக எண்ணுகிறானோ
அவனே வாழ்வின் உண்மையை உணர்ந்தவன் ஆவான்.
* கடந்த காலம் திரும்புவதில்லை. வருங்காலம் எப்படி இருக்கும் என்று நமக்குத் தெரியாது.
நிகழ்காலத்தை நல்ல முறையில் கழிப்பதே அறிவாளியின் செயல்.
* பிறக்கும்போது ஆபரணங்களுடன் பிறப்பதில்லை. ஆனால்,
முற்பிறவியில் செய்த செயல்களின் வினைப்பயனை அணிந்து கொண்டு வருகிறோம். யாராக இருந்தாலும் இதில் தப்ப முடியாது.
-சாய்பாபா
No comments:
Post a Comment