Showing posts with label Vasi Yogam. Show all posts
Showing posts with label Vasi Yogam. Show all posts

Friday, September 4, 2015

உங்கள் தூக்கம் இதில் எந்த வகையானது?


கடந்த தொடரில் உறக்கத்தின் மூன்று நிலைகளை பற்றி குறிப்பிட்டிருந்தோம்.
இதன் கடைசி நிலை தான் துரீயம் என்ற சமாதி நிலை. இதனை 'உறை உணர்வு கடந்த நிலை' என்றும் சொல்வர். இதில் விழிப்பு, கனவு, தூக்க நிலைகள் மூன்றும் அடங்கி விடுகின்றன. ஆகவே, விழிப்பிலும் துரீய நிலையில் இருந்து கொண்டு இயங்க முடியும். கனவிலும் கூட இதனை உணர முடியும். இயல்பான நல்ல தூக்கத்தின் சுகமும் இதில் உண்டு. அதாவது பரு உடலின் தொடர்பின்றி துரீயத்தில் இருக்க முடியும். தியானத்தின் ஆழ்ந்த நிலையில் இருப்பவர்கள் இந்த துரீய நிலையை எளிதாக உண்டாக்கி கொள்ள முடியும். அதாவது, ஒரு சில மனநல மருத்துவர்கள் எந்த மருந்துகளும் இல்லாமல் ஒருவரின் ஆழ்மனதில் பதிந்திருக்கும் எண்ணங்களை கேட்டறிய அவர்களை ஆழ்துயிலில் ஆழ்த்துவதுண்டு. அது போன்ற ஒரு நிலை தான் இதுவும்.
இது போன்ற ஒரு நிலையை தியானத்தின் மூலம் வரவழைத்துக் கொள்ளும் நிலை என்பது வேறு. துரீய நிலையை எய்தியவரின் உடலைச் சுற்றி இருக்கும் அதிர்வலைகள் என்பது மிகுந்த சக்தி வாய்ந்ததாக இருக்கும் என்கிறார்கள் ஞானிகள். அதாவது துரீயத்தில் இருப்பவரின் உடலை அதற்கான நுண்ணோக்கியால் நோக்கினால் அதில் உடலை சுற்றி காணப்படும் வண்ணங்கள் வித்தியாசமாக இருக்கும். உடல் முழுவதையும் ஒரு நீல நிறப்பிழம்பு போர்த்தியது போல் காணப்பட்டு அந்த பிழம்பின் நுனியானது தங்க நிறத்தில் தகதகப்பாக தோன்றும் என்கிறார்கள். இந்த நான்கு நிலைகளின் கலப்பாக தூக்கத்திற்கு 16 வகையான நிலைகள் இருப்பதாக எழுதுகிறார் பதஞ்சலி யோக சூத்திரம் நூலை எழுதிய சுவாமி. அதாவது,
விழிப்பில் விழிப்பு:
நமது மனமானது மறதி, மனக்கோளாறுகள் எதுவுமின்றி முழு நினைவுடன் இருப்பது.
விழிப்பில் கனவு
சூழ்நிலையை மறந்து இன்பமான கற்பனை மனக்கோட்டைகளில் ஆழ்ந்திருத்தல், உருவெளித்தோற்றங்களை காணுதல்.
விழிப்பில் தூக்கம்
தன் நினைவு சூழ்நிலைகளில், ஒன்றையோ இரண்டையோ அறியாமல் பிரமை பிடித்தது போல் இருப்பது. இந்த நிலையில் எதையும் மனது கவனிப்பதோ, புரிந்து கொள்வதோ இல்லாமல் இருத்தல். தூக்கத்தில் நடப்பது போல் தினசரி வேலைகளும் இருக்கும்.
விழிப்பில் துரீயம்
ஆன்மீக செய்திகளில் தொடர்பு இருக்கும். கடவுள் பக்தி, ஆன்மீக நூல் படிப்பது, உபநியாசம் கேட்பது, திருவிழாக்களில் பங்கெடுத்துக் கொள்வது, பக்தி யாத்திரைகளை மேற்கொள்வது, யோகாசனங்களை செய்வதில் ஆர்வம் போன்றவை இருக்கும்.
கனவில் விழிப்பு
கனவு காணும் போது அது கனவு என்ற அறிவு ஏற்படும். விழிப்பு நிலையில் செய்ய வேண்டியவற்றின் நினைவு கனவிலும் உண்டாகும். விழிப்பில் இயங்குவது போல கனவிலும் மனது வேகமாக இயங்கும்.
கனவில் கனவு
கனவு காண்பதில் கனவு வருதல் என்று சொல்வார்கள். அதாவது கதைக்குள் கதை வருவது போல். கனவில் தோன்றும் ஒருவர் தோன்றும் ஒருவர் முகம் பாதியில் வேறோருவர் முகமாகி விடும். எதைப்பற்றியோ யாரிடமாவது பேசிக் கொண்டிருப்பது போல தோன்றும். சில நேரங்களில் கண்ட கனவின் தொடர்ச்சி வரும். ஏற்கனவே கனவில் கண்டவர் மீண்டும் தோன்றுவார். கனவில கண்டதையே அடிப்படையாக வைத்து ஒரு தொடர்கதை போல் இன்னொரு கனவு வரும்.
கனவில் தூக்கம்
தெய்வக் காட்சிகள் உண்டாவது, மகான்களின் தரிசனம் கிடைப்பது, கோவில் திருவிழாக்களை பார்த்தல், தத்துவக்கருத்துக்கள் தோன்றுதல் முதலியவை. இது போன்ற கனவுகள் ஏறக்குறைய துரீய நிலையின் ஒரு பகுதி. இந்த மாதிரியான கனவுகள் ஒரு வகையான புல்லரிப்பை உண்டாக்கும்.
தூக்கத்தில் விழிப்பு
தூங்கும் போது தூக்கத்தில் நடப்பது, சாப்பிடுவது போன்றது. கனவுகளின் போது இப்படி நடக்கும் சம்பவங்கள் உடலின் ஜீவன் கனவின் போது பருவுடலையும் பயன்படுத்திக் கொள்ளும் ஒரு நிகழ்வாகும். அதாவது, ஆசாபாசங்கள் தேவையின் அளவு அதிகமாவதால் மேல் மனம் உறங்கும் போது, உள்மனம் எப்போதும் விழித்துக் கொண்டே இருக்கிறது. அந்த உள் மனம் சில நேரங்களில் கனவு காணும் நிலையில் உடலையும் சில செயல்களை செய்ய ஏவிவிடும். ஹிஸ்டிரியா போன்ற சில நோய்கள் இந்த நிலையில் தான் உண்டாகின்றன. தூக்கத்தில் எழுந்து எல்லா வேலைகளையும் சரியாக செய்வர். ஆனால் விழித்து எழுந்ததும் தான் என்ன செய்தோம் என்ற நினைவு இவர்களுக்கு இருக்காது.
சிலர் மனதில் ஆழமாக பதிந்து விட்ட எண்ணத்தால், தூக்க நிலையை மேல் மனம் அடையும் போது, தங்களை ஆவிகளாகவும், குட்டி தேவதைகளாகவும் எண்ணிக் கொண்டு அருள் சொல்வதும் ஆடி,ஓடி, ரகளை செய்வதும் உண்டு. இவர்களுக்கு அசுர சக்தி உண்டாகும். சில நேரங்களில் போதைப் பொருட்களை பயன்படுத்துபவர்களுக்கும் இப்படி ஒரு சக்தி உண்டாகும். இவர்கள் விழித்திருக்கும் நபர்களுடன் பேசுவர். ஆனால் சாதாரண நிலைக்கு வந்த பின் யாரிடம் பேசினோம் என்ன பேசினோம் என்பதை இவர்கள் உணர மாட்டார்கள்.
தூக்கத்தில் கனவு நிலை
மேல் மனம் உறங்கும் போது உள்மனம் கனவு காண்கிறது. எப்போதும் விழித்திருக்கக் கூடிய உள்மனம் எப்போதாவது அதிசயமாக கனவில் ஆழ்ந்து விடும். அப்போது அது எதையும் நம்பிவிடும். அதற்கு கனவும் உண்மையான தோற்றமாக தோன்றும். ஆகவே, தான் காணும் கனவை பிறரையும் காண வைக்கிறது. உள்மனம் மிகவும் விசாலமானது. எனவே, அது உடலுக்கு வெளியிலும் இயங்குகிறது. இதனால் தான், இந்த நிலையில் உள்ளவர் பிறரையும் பாதிக்கின்றனர். இவர்கள் தம் தூக்ககனவில் காண்பதை பிறகும் காணும்படி சிலநேரம் செய்கிறார்கள். ஆவியுடலில் இருந்து பருவுடலுடன் தொடர்பு கொள்வர்.
பயங்கர கனவுகளை காணும் போது தங்கள் உடலில் மாறுதலை அடைவார்கள். சில நேரங்களில் தாங்கள் சண்டையிடுவது போல் கனவு காணும் போது உடலில் காயங்களை ஏற்படுத்திக் கொள்வார்கள். உள்மனது வெளியில் சஞ்சரிப்பதால் அவர்களது உடலில் இருக்கும் கட்டுப்பாட்டுக் கேந்திரம் கட்டுப்பாட்டை இழந்து விடும். அப்போது இவர்கள் நிகழ்த்தும் காரியங்கள் விழிப்பு நிலையில் இருப்பவர்களுக்கு ஆச்சரியமாக தோன்றும். இப்படி செயல்களை நிகழ்த்துபவர்களை பார்த்து தான் அவர்களுக்கு பேய் பிடித்து விட்டதாக அல்லது சாமி இறங்கிவிட்டதாக சொல்வதுண்டு. அதாவது, மேல் மனம் உறக்கத்தில் ஆழும் போது உண்டாகும் மனநிலைகள் இவ்வாறு ஒருவரை நடந்து கொள்ள தூண்டுகின்றன.
தூக்கத்தில் காணப்படும் இன்னும் பல நிலைகளை பற்றியும், எந்த கனவுகளும் அற்ற ஆழ்ந்த நிம்மதியான தூக்கத்திற்கு உதவும் யோகாசனங்களையும், தியானங்களையும் பற்றி வரும் தொடரில் பார்க்கலாம்.
தூக்கம் :

ஒருவன் எவ்வளவு காலம் தூங்காமல் இருக்கிறானோ அவனுக்கு பலம் அதிகம்.இராவணன் மகனான இந்திரஜித்து எவனொருவன் 14 ஆண்டுகள் தூங்காமல் இருக்கிறானோ அவனே இந்திரஜித்தை கொல்வான்,என்ற வரம் பெற்றவன். இலக்குவன் தன் அண்ணனுக்கும்,அண்ணிக்கும் 14 ஆண்டுகள் காவலிருக்கும் பொருட்டு தன் மனைவியான ஊர்மிளையிடம் தன் உறக்கத்தை கொடுத்துவிட்டு போனதாக கதை உண்டு(14 ஆண்டுகள் ஊர்மிளை தூங்கிக் கொண்டே இருந்ததாகவும் சொல்லப்படுகிறது).அதன் காரணமாக 14 ஆண்டுகள் தூங்காமல் இருந்து பின் அது தந்த பலத்தின் காரணமாக(இலக்குவனை கொல்ல இந்திரஜித்து நிகும்பலையில் யாகம் செய்தும்) இந்திரஜித்தை, இலக்குவன் கொன்றார்.
திருவருட் பிரகாச ராமலிங்க வள்ளலார் எவன் ஒருவன் தினம் ஒரு மணிநேரம் மட்டும் உறங்குகின்றானோ அவன் ஆயிரம் வருடம் உயிர் வாழ்வான் என்கிறார்.
தூக்கத்தின் போது மூச்சு மிக அதிகமாக ஒடி உயிர் அழிகிறது.எனவே தூங்கும் போது மூச்சு அதிகம் ஓடி (நிமிடத்துக்கு 64 மூச்சு வீதம் ஓடி)ஆயுள் விரயமாகி நாம் மடிகின்றோம்.
இதையே அகத்தியர்
உண்ணும்போது உயிர் எழுத்தை உயரே வாங்கு,
உறங்குகின்ற போதெல்லாம் அதுவே ஆகும்,
பெண்ணின் பால் இந்திரியம் விடும் போதெல்லாம்
பேணி வலம் மேல்தூக்கி அவத்தில் நில்லு
தின்னும் காய் இலை மருந்து இதுவேயாகும்
தினந்தோறும் இப்படியே செலுத்த வல்லார்
மண்ணூழி காலம் மட்டும் வாழ்வார்தாமே
மறலி கையில் அகப்படுவார் மாட்டர்தாமே.
-அகத்தியர்-
உண்ணும்போதும் உயிர் எழுத்தான மூச்சுக் காற்றை அதிகமாக ஓடவிடாமல் பிடித்து இழுத்து நிறுத்திக் கொள்ள வேண்டும்.உறங்குகின்ற போதும் இப்படியே இருக்க வேண்டும்.பெண்ணிடம் சம்போகத்தில் ஈடுபடும்போதும் இதே போல் மூச்சைப் பேணி மேல் தூக்கி அவத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.
உயிர் அழியாமல் இருக்க தின்னக் கூடிய காயகற்பமாகிய காய் இலை மருந்து இதுவேயாகும். தினந்தோறும் இது போல் உங்களால் செலுத்த முடியுமானால் இந்த மண் உள்ள வரையில் உயிர் வாழலாம்.மறலி என்றால் எமன்,அந்த எமன் கையில் அகப்பட்டு உயிரை விட மாட்டீர்கள் என்று அகத்தியர் கூறுகிறார்.
வள்ளலார் இதை
பசித்திரு!
தனித்திரு!
விழித்திரு!
பசி ஒரு திரு(திரு என்றால் செல்வம்),தனித்திரு (தனிமையாக இருப்பது ஒரு செல்வம்,இதையே அவ்வையார் இனிது இனிது ஏகாந்தம் இனிது என்று தனிமையைப் போற்றுகிறார்),விழித்திரு(விழிப்போடு இருப்பது ஒரு செல்வம்).
பசியோடு இருந்தால் தூக்கம் வராது,விழிப்போடு இருப்பதான செல்வம் தானே வரும்.தனிமையான செல்வத்தை ஏற்படுத்திக் கொண்டு இறையை தியானம் செய்தால் மரணமில்லாப் பெருவாழ்வு வாழலாம்.(இதையே அவ்வையார் அதனினும் இனிது ஆதியைத் தொழுதல் என்கிறார்)
எனவே தூக்கத்தை குறைக்கும் வழி அறிந்து குறைத்தால் மூச்சு விரயம் குறைந்து மரணமில்லாப் பெருவாழ்வு வாழலாம்.

வாசியோகம் & புருவ மத்தியாம் நெற்றிக் கண் பூட்டுத் திறக்க


வாசியோகம் என்பது குருமுகமாக நெற்றிப் பொட்டைத் தொட்டுக் காட்டிப் பூட்டுத் திறக்க வழி செய்து, மூச்சுக் காற்றை உள்ளே இழுத்து வெளிப்படுத்தாது உள்ளுக்குள்ளேயே மேலும் கீழுமாக ஓட்டிச் சமாதி நிலை எய்தச் செய்வதாகும். அவ்வாறு இடகலை, பிங்கலை வழியாக மூச்சுக்காற்றை ஒரே முறையில் ஏற்றிப் பின்பு இறக்கில் புருவமத்தியில் பூரிக்கச் செய்தல் வேண்டும். இவ்வாறு செய்தால் கபமெனும் எமனை எட்டி உதைக்கலாம். வாசியோகத்தினால் பிராணன் (காற்று) தங்கு தடையற்றுச் சுழுமுனையை நாடிச் செல்லும். வாசியோகம் பயிலப் பயில உடலில் மறைந்துள்ள தேவையற்ற ஊன் (கபம்) மறையும். இதனால் குண்டலினியை எழுப்ப அநுபவங்களைப் பெற்று சித்தியடையலாம்.இரு மூக்குத் துவாரம் வழியாகப் பிராணனை வெளிவிடாமல் ஒன்று சேர்க்கும்போது புருவ மத்தியில் அக்னிகலை தோன்றும். இந்த அக்னியில் நாட்டம் வைத்தால் (மனதை நிறுத்தினால்) கோபுரத்துக்குச் செல்லும் வாயில் பூட்டான நாசிமுனை புருவமத்தி திறந்து கொள்ளும். மறக்காமல் தினம் ஒருதடவை சாதனை செய்துவரவேண்டும். மெளனத்துடன் அடங்கி அமைதியாக இருந்தால் மதிஅமுதம் சுரந்துவிடும். மனம் தூங்காமல் தூங்கி சுகம் பெறும். இந்நிலை ஏற்பட மூக்கு மார்க்கமான மற்றோர் வீட்டிற்குச் செல்லாமல் நெற்றி மார்க்கமாக மேலே செல்லவேண்டும்.பிராணன் இயல்பாக உலவும் வழி இடகலை, பிங்கலைகளாகும். அவைகளை மாற்றிச் சுழுமுனையில் செலுத்துவதையே திருமூலர் கூறுகிறார். மூக்கின் வழியாக உள்ளே சென்று மீண்டும் மூக்கின் வழியாக வெளியே ஏறுகிற காற்றை அவ்வாறு செல்லவிடாமல் தடுத்து நிறுத்தி மூலாதாரத்தில் மேல் உள்ள முதுகெலும்பின் அடிப்பாகத்தில் இருந்து முதுகெலும்பின் உள்ளே உள்ள சிறு துவாரம் வழியாகச் செலுத்தினால் அதாவது சுழுமுனை வழியாகச் செலுத்தினால் மூச்சானது சிறிது சிறிதாக மேலேஏறி அண்ணாக்கில் உள்ள துவாரத்தின் வழியாகப் புருவ மத்திக்கு வந்து அங்கிருந்து உச்சிக்குச் செல்லும். இவ்வாறு ஏற்றி இறக்கிச் செய்யும் மூச்சுப் பயிற்சியே வாசியோகம் எனப்படும்.                                                                
                                          
                            

சுழுமுனை வாசல் திறப்பதற்கான விபரம் :
வாதம், பித்தம், சிலேத்துமம்(கபம்) மூன்றும் ஆகாது. எனினும் சிலேத்துமத்தின் சேர்க்கைதான் (சேத்துமம்) உச்சிக்குழிக்குக் கீழே உள்நாக்குக்கு மேலே எரிகிற பச்சை விளக்கை பங்கப் படுத்துகிறது. ஆகவே தான் சுழுமுனை வாசல் திறக்க கபம் வெளியேற வேண்டும். இதற்குக் காலைப் பிடித்தல் ஒன்றே வழி. (கால்-காற்று) காற்றில் உட்கலந்து ஊடாடி நிற்கும் நெருப்பை யோகிகள் உட்கொள்கிறார்கள். இந்தக் கனலால் கபம் அறுபடுகிறது. இந்தக் கபம் வெறும் சளி மாத்திரம் அல்ல. உடலெங்கும் ஒட்டிக் கிடக்கும் கசிறு. இதை புத்தவேதம், " உட்கவிழ்ந்த மேகம்" என்று கூறுகிறது. ஊத்தை சடலம், உட்குழிந்த பாண்டம் என்று உடல் அழைக்கப்பட்டதற்கு "கபமே" மூலகாரணம். எனவே கபத்தை எமன் என்றே அழைக்கலாம்."ஊனினை உருக்கி, உள்ளொளி பெருக்கி" என்கிற திருவாசக அடியால் இதைத் தெளிவு பெறலாம். ஊன் என்பது ஊத்தைக்கசிறு, உடல் என்பதாக நாம் கொள்கிற பொருள் தவறு. இந்த ஊன் உருகுவதற்கு உள்ளொளி பெருகவேண்டும். வாசியோக சாதகர்கள் காற்றிலிருந்து (பிராணன்) நெருப்பைக் கொள்முதல் செய்கிறார்கள். இந்த நெருப்பின் நேயச் சேர்க்கையால் உள் ஒடுங்கிய பொறி உள்ளொளியாக விளக்கம் பெற்றுப் பெருகுகிறது. பிறகு உவப்பிலா ஆநந்தமாய்த் தேன் அமிர்ததாரையாக வருகிறது. இது வாசியோகத்தின் சிகர சாதனை என்று கருதலாம்.
கபம் என்பது உடல் துரியநிலை பெற (நிர்விகல்ப சாயுச்யநிலை) இடையூறாக இருக்கிறது. மாவுப்பொருட்கள் நிறைந்த உணவுகள் அனைத்தும் கபம் விளைகிற கால்வாய்கள் எனலாம். "கோழை கபம் தான் யமன்!" இதை நீக்க சித்தர்களால் ஆகாது. வாசியோகக் கனலாலே தான் எரிக்க முடியும்.
                               

புருவ மத்தியாம் நெற்றிக் கண் பூட்டுத் திறக்க :
சுகாசனத்தில் அமர்ந்து தலை, கழுத்து உடல் நேராக நிமிர்த்தி, புருவமத்தியில் மனம்பதிந்து இரு இமைகளுக்கும் இடையில் நுண்ணறிவால் (உணர்வால்) பார்த்தால் அந்த இடத்தில் அசைவு காணும். பிராணனை மேலே தூக்கி உடலைத் தளர்த்தி,மனதை அந்த இடத்தில் செலுத்திப் பார். அறிவு நிற்கும் இடமாகிய புருவ மத்தியில் மனதை நிறுத்தி, காலை, மாலை 2 வேளையும் 11/2 மணி நேரம் பார்த்து வர வேண்டும். இவ்வாறு பழகி வந்தால்தான் பலன் காண முடியும். புருவ மத்தியில் உள்ள வாசல் திறக்கும்போது நீலம், பச்சை, வெள்ளை போன்ற நிறங்கள் தோன்றும்.புருவமத்தியில் நினைவை வைத்துத் தூண்டும்போது உண்டாகும் துன்பங்கள்:காதடைப்பு, கிறுகிறுப்பு உண்டாகிக் கண்கள் இருளும். உடல் வலி எடுத்து நடுக்கம் ஏற்படும். புலன்கள் வலிமை குன்றும். இந்நிலையை அநுபவித்துப் பார்த்தவர்களுக்கே தெரியும். மன உறுதி உள்ளவர்கள் மட்டுமே இதைத் தாண்டி மேலே வரமுடியும். மற்றவர்கள் தாண்ட மாட்டார்கள்.
                                

வாசி பார்க்கும் நெறி :
வாசியானது மூக்குத் தண்டு நடுவில் (புருவமத்தி) வருவதே வல்லபம் ஆகும். யோகத் தண்டான முதுகுத் தண்டு நிமிரும். அப்போது கண்ணை இறுக்கி சிரமத்துடன் கிடந்து நெற்றியைப் பார்க்காதே. மனதால் அந்த இடத்தைக் காணவேண்டும். நடு நெற்றி முதல் பிரம்மரந்திரம் என்ற நாமம் போன்று வாசி ஏறும். (அந்நிலையைக் குறிக்கவே நாமம் என்கின்றோம்) அப்போது குமரியாகிய வாலை விளையாடுவதைக் காணலாம்.ஏமாந்து போகாமல் ஒரு நாமமார்க்கத்தில் தொட்டேறி உச்சி வழியாக பிரம்மரந்திரத்திற்குச் செல்லவேண்டும். அப்போது பேசாமல் சித்திரம் போல் அசையாமல் மோனத்தில் இருந்துகொண்டு புருவமத்தியை மனதால் காணும்போது உடல் லேசாகும். மேலே தூக்கும். மனமும், வாசியும் இடது புறம் போகாமல் வலது புறமாக சூரிய கலையில் ஓடும். இந்நிலையில் தன்னைத் தான் காணலாம். சாதாரண மனிதனுக்கும் தாது உயிர் நின்ற இடம் இதுதான். தன்னைத் தானே காணும் இடமும் (ஆன்ம தரிசனம்) நெற்றியடி புருவமத்தி, ஊசிமுனை துவாரம் உள்ள மூக்கின் அடிமத்தியாகும். எனவே, புருவ மத்தியில் நின்று உருளும் வாசியை அநுபவித்துப் பார்க்கவேண்டும். சாதனையில் முன்னேறினால் அந்தச் சித்தியை ஓராண்டுக்காலத்தில் பெறலாம். அதன் பின் நெற்றியில் நடு நாம வழியைப் பற்றிச் செல்வதே முத்திக்கு நேரான வழியாகும். இவ்வாறு செல்பவர்கள் முனிவர்களாக ஆகலாம்.இவ்வாறு கண் இரண்டையும், புருவ மத்தில் சுழிமுனையின் நடுவில் அசையாமல் பார்த்தால் அங்கு மூன்றாவது கண்ணாகிய ஞானக்கண்ணைக் காணலாம். இதனால் ஞானரசத்தைப் பருகலாம். உடல் ஒளியுறும். புலன்கள் தோறும் தேவையற்ற கருவிகள் அடங்கிப் போகும். அப்போது உடல் கற்பூர வாசனை வீசும். உலக விவகாரம் அற்றுப் போகும். வயோதிகம் குறைந்து வாழ்நாள் நீடிக்கும். மூக்கு மத்தியில் வாசி கொண்டு ஏற்றினால் நாசி மத்தியில் வாசி நீண்டு விடும். இந்நிலையில் தானாகவே வேண்டும்போது திறக்க, பூட்டச் செய்யலாம். அதாவது நினைத்த மாத்திரத்தில் புருவ மத்தியில் நின்று சமாதி நிலையை எய்தலாம் மேலும் அந்த வாயிலைத் தாண்டி உட்புகுந்து மேலே, (பிரமரந்திரம்) ஏறினவர்களுக்கு யோகத்தின் புராதனமாகிய யோகதண்டம், கமண்டலம், குகை போன்றவைகள் வேண்டாம்.
                        இதனால் குருவருளும் திரிகால ஞானத்திலுள்ள எல்லா சித்திகளும் உண்டாகி கர்மவினை மாறி தர்மம் ஆகும். நரை, மூப்பு, மரணம் இவை போகும்.மூலாதாரத்தில் இருந்து மூலக்கனல் எனும் வாசி முதுகுத் தண்டின் வழியாகக் கொஞ்சம் கொஞ்சமாக மேலே ஏறி, பிடரி வரை வரும். உடல் முழுதும் ஓடாது முதுகுத் தண்டின் உள்ள நடு நாடிவழியாக வரும். அப்போது வாய் மூடி மெளனமாக உடல் ஆடாமல் அசையாமல் இருந்தால் வாசி சீறி எழும் வேகத்தால் உடலைப் பின்னால் தள்ளும். மீண்டும் வாசி கீழ் நோக்கிச் செல்லாமல் உள் நாக்கின் வழியாக மேலே செல்லும். அதன் பின்பு பிரம்மரந்திரத்தை அடைந்து வாசியானது உச்சிவெளியான சிதாகாசத்தில் கலந்ததால் அனைத்தும் தோன்றும். பஞ்ச பூதங்களும் அவர்களுக்கு ஏவல் செய்யும். சூரியன், சந்திரன், நட்சத்திரம், ஆகியவை அவர்களுடன் பேசும். இவர்களே சித்தர் நிலையை அடைந்தவர்கள் ஆவார்.இவர்கள் உடல் பல மாறுதல்களை அடையும். நடந்து செல்லாமலேயே ஆகாய மார்க்கத்தில் செல்லமுடியும். தொலைதூரம் நடப்பதைக் காணவும், தொலைதூரம் பேசுவதைக் கேட்கவும் முடியும். இவை எல்லாம் ஒரு நொடியில் நடக்கும். சாதாரண மனிதன் தெருவில் நடப்பது போல் பல உலகங்களில் உலவிவர முடியும். இவை எல்லாம் வாலையாகிய குண்டலினி சக்தி உடலில் உள்ளதால் நடைபெறும்.
                   
               

காயசுத்தி விபரம் :
காலனுக்கு உயிரை உண்ணும் வேலைதான். அவன் ஏவலால் சூலாயுதம் கொண்டு உயிரை எமன் கொண்டு செல்கிறான். எமனுக்கு எமனாய் இருக்கவேண்டுமானால் சூலனுக்கு சூரனாய் இருக்கவேண்டும். அதற்குக் கால சித்தியே துணையாகும். காலசித்தி பெற்றால் எமன் அணுகமாட்டான். வேலாயுதமாகிய வாசியில் எல்லாக்குற்றங்களையும் இரையாக இட்டால் பிராணன் வெந்து காயாது, பசி நீங்கும். கபம் போகும். காம உணர்வு நீங்கும். இவ்வாறு இருந்தால் காலன் நம்மை அணுக மாட்டான்.காயகல்பநிலை பெற விரும்பு துறவியர்களுக்கான உணவு, இருப்பிடம் மற்றும் பல விபரங்கள் கல்ப சாதனை செய்யவிரும்புபவர்கள் கடுமையான சக்தியுடன் இருக்கவேண்டும். தனிக்குடிசை (வீடு-மாடி) கட்டிக் கொள்ளவேண்டும். இந்நிலையில் நல்ல குருவும், சிஷ்யனும் தேவை.கருங்குறுவை அரிசி, பாசிப்பயிறு, மிளகு, சீரகம் இவைகளை வேகவைக்கக் கூடிய அளவுக்குக் காராம்பசுவின் பாலைச் சேர்த்துப் பொங்கி ஒரு வேளை சாப்பிடவேண்டும். மற்ற நேரங்களில் காராம்பசுவின் பால் மட்டும்தான் சாப்பிட வேண்டும். வேறு ஒன்றும் சாப்பிடக் கூடாது. மழை, வெயில், பனி, காற்று நான்கும் ஆகாது. பிரம்மசரிய விரதம், ஆகாரப் பத்தியம் கடுமையாக இருக்கவேண்டும். தவறினால் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். இதனால்தான் இக்காயகல்ப சாதனை பற்றி சித்தர்கள் விவரமாகச் சொல்லாமல் மறைத்து விட்டுப் போய்விட்டார்கள். இந்தக் கடுமையான பத்தியம் இருந்து அஜபா காயத்திரி மந்திரம் செய்து வரும்போது மெளனமும் தொடர்ந்து இருந்து வந்தால், மாதாமாதம் செய்தால் 12 மாத பலனைப் பெறலாம். சிரத்தையுடன் தொடர்ந்து ஒவ்வொரு வருடமாகப் பனிரண்டு வருடங்கள் செய்து வந்தால் 12 வருட பலனையும் பார்க்கலாம். இதற்கு இடம், பொருள், ஏவல் மூன்றும் தேவை.
                                   

புருவ நடு திறந்து சஹஸ்ராரத்தில் நடனம் கண்டபின் உடலில் ஏற்படும் மாற்றங்கள்
சஹஸ்ராரத்தில் திருநடனம் காணும்போது கண்கள் சிவந்து காணப்படும். பாதம், ஆசனவாய் இவைகளில் எரிச்சலும், வலியும் இருக்கும். தினமும் கொஞ்சம் கொஞ்சமாகப் பயிற்சி செய்யவேண்டும். அப்போது வாசி செந்தீ போல் இருப்பதை நுண்ணறிவால் உணரலாம். இந்தச் செந்தீயாகிய வாசிய இடுப்பிற்குக் கீழே இருபிளவாக இருக்கும் கால்களுக்குச் செல்லுமாறு செலுத்தவேண்டும். ஒளி காணும்வரை செலுத்தவேண்டும். சாதனை காலத்தில் புருவமத்தி, உச்சி, பிடர் போன்ற இடங்களில் சுலபமாக ஒளி காணமுடியும். ஆனால் இடுப்பிற்குக் கீழே பாதம் வரை யோகக்கனல் வருவதற்கு நீண்ட காலப் பயிற்சி வேண்டும்.காலை, மாலை இருவேளையும் மூக்கு முனையில் இருவிழிகளை நிறுத்திப் பார்த்தால் இரு விழிகளுக்கிடையில் நேர் மத்தி புருவ மத்தியில் வாசியாகிய உயிர் புருவம் தட்டும். இந்த இடத்தில் மனம் பதிவதையே குரு என்பர். இந்நிலை வந்தால் கருவிக்கூட்டங்கள் ஒடுங்கி ஓடிப் போய் விடும். அதாவது புலன்களும், கருவிகளும் செயலிழந்துவிடும். மனம் திறந்து ஒளி வீட்டைக்காணலாம்.கருவி கரணங்கள் என்னும் தத்துவங்களை வென்ரதால் மனதை விட்டுக் கவலைகள் ஒழிகின்றன. புலன்கள் சுத்தமாகும். முயற்சி செய்தால் முடியாதது எதுவுமே இல்லை. புருவமத்தி என்னும் குன்றின்மீது ஏறி, பிரம்மரந்திரமாகிய மலை உச்சிக்குச் சென்று அம்பலதரிசனம் கண்டவரே மறையோகியும் குருவும் ஆவார்.
                      குரு வருளால் திருவாகும் யோக்கியதை உண்டாகும். சித்தர்களுக்கெல்லாம் அரசனாக வாழலாம். திரிகால தரிசனம் கிடைக்கும்.யோகிகள் தன் மரணத்தை மறந்து, சரீரத்தை பேணிப்பாதுகாப்பதை மறந்து நேரங்களையும் துறந்து காலை, மதியம், மாலை என்று மூன்று காலமும் வாசியை ஏற்றிச் சாதனை செய்தவர்கள். தூண்டாத ஜோதியுடன் வெளிச்சம் காண்பர். காயகற்பம் கண்டவர்கள் அமுதத்தை உண்டு கலை சித்தி பெறுவார்கள். ஒளியைப் புருவ மத்தியில் ஏற்றியவருக்குக் கூட சஹஸ்ரார தரிசனம் சிலசமயம் கிட்டுவதில்லை. சஹஸ்ராரத்தில் சென்ற பிராணன் குளிகை போல் ஆகிவிடும். அவ்வாறு உச்சிக்குச் சென்று குளிகை ஆனால் ஆகாய மார்க்கத்தில் பறக்கும் ஆற்றல் உண்டாகும். பிராணன் பலப்பட பலப்பட ககனமார்க்கம் செல்லும் திறன் உண்டாகும். முக்திநிலை கூடும். இந்நிலையில் மனம் மெளனத்தில் இருந்து மோனத்தில் ஒடுங்கும். அஜபா காயத்ரியை (ஓம்) தியானம் செய்யச் செய்ய உயிர் வலுக்கும் குளிகையாகும். சஹஸ்ர தளத்தின் நடுவில் உள்ள கேசரங்களில் உயிர் நிற்கும். இதை விட சந்தோஷம் வேறு எதுவும் இல்லை.நெஞ்சுப்பள்ளமாகிய அநாஹதத்தில் பிராணன்(வாசி) வரும்போது நீண்ட காலத்திற்கு அங்கேயே சுற்றிச் சுழன்று கொண்டிருக்கும். இந்நிலையில் யோகிகளுக்குத் திட சித்தம் ஏற்படாமல் சலனங்கள் உண்டாகும். உயிர் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கும். அதற்கு மேல் விசுத்தி சக்கரத்திற்கு வரும். அதற்கு மேல் விரைவாக ஏறி புருவ மத்தியாகிய ஆக்ஞாசக்கரத்திற்கு வந்தால் சலனங்கள் மறைந்துவிடும். அதன் பிறகு நெற்றி வழி உச்சிக்குச் சென்று முட்டும். உச்சிக்குச் சென்று முட்டும் பிராணன் அங்கு சுற்றிச் சுழன்று வட்டமிடும். இதைப் பார்ப்பதே ஞானம் எனப்படும்.
                             இஞ்ஞானநிலையை விட்டு உயிர் கீழே இறங்கி பிடரிக்கு வந்தால் வாத, பித்த, சிலேத்துமம் அதிகரிக்கும். பித்தம் அதிகமாகும். மேன்மக்கள் இருவர் கூடினால் பலம் அதிகமாவது போல் பிராணனும் பித்தநீரும் ஒன்று கூடினால் உடல் தொல்லை அதிகமாகும். பிராணன் இன்னும் கீழே இறங்கி வந்தால் மும்மூர்த்தியானாலும் மரணம் அடைவார்கள். அதனால் எப்போதும் உச்சியிலே நிற்கவேணும். அப்படி இறங்கினாலும் மீண்டும் லகுவாக மேலே ஏற்ற வேண்டும். காலை, மாலை இரண்டு வேளையும் அமைதியான இடத்தில் மனமும், உடலும் இணங்கிய (காலம்) சுகாசனத்தில் இருந்து சாதனை செய்தால் வெட்டவெளியில் மனம் ஒடுங்கும்.
யோகசாதனையின் முடிவில் யோகத்திற்குத் தடையாக இருந்த நீர் கழிந்துவிடும். பிராணன் கபாலம் ஏறும். யோகம் 12 ஆண்டில் சித்தியாகும். அவரவர் புண்ணியத்திற்குத் தகுந்தபடி 3 ஆண்டு, 5 ஆண்டு, 8 ஆண்டு, 10 ஆண்டு, 2 ஆண்டு என யோகம் சித்திக்கும். மேலே செல்லச் செல்ல யோகம் எளிதாகும். இடைவிடாது பயின்றால் சிற்பரத்தைக் காணலாம். இதுவே நெற்றிக்கண் திறத்தலாகும். இதற்கு மேலெ ஞானநிலை கூட உச்சி ஏறுவர். தலை உச்சியில் கபால மத்தியில் அண்ணாக்கிற்கு நேர் தூண்போல் 1 சாண் நீளம் ஒளி உண்டாவதைக் காணலாம். இந்நிலை வந்தால் நாவால் உணவு உண்ணாமல் உள்நாவால் அமுதம் உண்ணலாம்.அண்ணாக்கில் உள்ள துவாரமே 10-ம் வாசல். இதை ஊடுருவி மூலத்துண்டின் மூலம் உள்நாக்கு வழியே பற்றி வாசிக்குதிரை ஏறி ஒளி இடமாகிய காசிக்குச் செல். அங்கு பரை ஆடுவதைக் காண்பாய். அண்ணாக்கில் இருந்து உச்சிவரை செல்லும் மூல மார்க்கத்தை நடுநாடி, உயிர்நாடி, பிராணநாடி ஆகிய வழி சென்று உயிர் நடனத்துக்குக் கூத்தாடும்.
                   புருவ மத்தியை நோக்கி சாதனை செய்து கொண்டிருக்கும்போது நோய்கள் வந்தால் மருந்துகளால் குணமாகாது. யோகத்தால் அதை நிவர்த்தி செய்யமுடியும். சாதனையைப் பாதியில் நிறுத்தினால் நோயினையே அடைவார்கள். பொய் யோகியாகி விடும். ஞானபதம் கண்டவர்கள் பித்தர்கள் போல் தன்னை மறந்து காணப்படுவார்கள். சுழலில் அகப்பட்ட துரும்பு போல துடிப்பார்கள். இச்சமயத்தில் ஞானத்தால் ஊன்றி நின்று பித்தம் போக்கி எச்சரிக்கையுடன் இருந்து 1 வருடம் வரை சாதனை செய்யவேண்டும்.சாதனை செய்யும் ஒரு வருட காலத்தில் கிறுகிறுப்பு, மயக்கம் இவை தோன்றும். மயங்கி விழுந்த மண்டைக்குள் வாலை கூத்தாடும். இவ்விளையாட்டு ஒருவருடம் வரை நடக்கும். இதைக் குளிகை என்பர். இந்நிலை வரவிரும்பினவர்கள் யோகத்தில் மேல்நிலையில் உள்ளவர்கள். கபாலத்தில் உயிர் குளிகையாகி நிற்கும்போது ஏற்படும் உணர்வுகளாகும். முக்தி நிலையில் முழுமை பெற்று சித்தி பெற்ற ஞானிகளுக்கு நாடி, நரம்புகள் இறுகிக் காணப்படும். உடல், உயிர் இவைகளில் உண்டான மும்மலக் கசடுகள் நீங்கும். குண்டலினி சக்தி உடலில் இருந்து ஆடிப்பாடும். மனம், உடல், உயிர் மூன்றும் ஒன்றாய் கூடி ஒடுங்கி நிற்கும். ஒளி பெருகும், இருள்விலகும். இந்நிலை வந்தால் நரை, மூப்பு ஓடிப் போகும்.ஞானசித்தி பெற்ற பின்பு நாடி, நரம்புகள் இறுகும். ககன மார்க்கத்தில் செல்ல முடியும். பூமியில் நடப்பது போன்று வானத்தில் நடக்கலாம். வல்லபங்கள் அநேகம் உண்டு. மனதில் உற்சாகம் தோன்றும். கேட்டதெல்லாம் கிடைக்கும். வாலைத்தாய் குண்டலினி சக்தி முன்னே நின்று தொண்டு செய்வாள். இத்தகைய சக்தி பெற்ற உடல் உயிர் கேவலப் பிறவியாகாது. மனம் சித்தியும், உயிர் முத்தியும் பெறும். 2 வருடம் யோகம் செய்து சித்தி பெற்று அந்த சித்தியில் ஏமாந்துவிடாமல் அதன் பின் ஞானமார்க்கத்தில் இரட்னு வருடம் சித்துடன் சேர்ந்து விளையாடி முதிர்ச்சி அடைய வேண்டும்.
 
                            

பிரமரந்திர உற்பத்தி
பிரமரந்திரத்தில் ஊசி துவாரத்தில் உயிர் நிற்கும் நிலையே ஞானம் ஆகும். இந்நிலையில் உள்ளபோது திரிகால உணர்வும் தெரியும். ஆன்மா உச்சி மண்டையில் ஏறி வெட்டவெளியில் சென்று மூன்று காலத்தையும் உணரும். முதுகுத் தண்டின் எலும்பின் உள்ளே சிறிய ஊசியைச் செலுத்தும் அளவுள்ள துவாரத்தின் வழியாகப் பிராணன் செல்லும். இந்த எலும்பின் உள்ளே ஓடுகிற வாசியே ஆன்மாவாகும். இவ்வாறு எறிமுனை மூக்குக்கு வரும். வாயுவான ஆன்மா எலும்பில் உள்ள துளையின் வழியாகப் புருவ மத்தி ஏறும். இவ்வாறு ஆறு ஆதாரங்களைக் கடந்து புருவமத்தியின் வழியாக உச்சி மண்டைக்குச் செல்லும்.காயசித்தி பெற்ற பின்பு நரைத்த முடி கறுத்துவிடும். உடல் பலமடையும். சரீரம் வெகு காலத்துக்கு நிலைத்து நிற்கும். ஆன்மா உச்சி ரோமம் வழியாகச் சேர்ந்து ஏறி, ரோமக்கால்களைத் தொடர்ந்து பற்றி 12 அங்குலம் மேலே ஏறும். உச்சிக்கு மேலே 12 அங்குலம் மேலே துவாதசாந்தப் பெருவெளியில் ஆன்மா செல்லும். அப்போது கூடுவிட்டுக் கூடு பாயும் நிலை உண்டாகும். பிராணன் முதுகுத் தண்டு வழிமேலே ஏறிப் பிடரி, மூக்கு நுனி கடந்து சதா புருவ மத்தியிலோ, சஹஸ்ராரத்திலோ ஒடுங்கிவிட்டால் நிர்விகல்பசமாதி நிலையை அடையலாம். மெளன நிலை போல் மோனநிலை கிடைக்கும். மோன நிலையில் பிராணன் ஒடுங்கியபின் உயர்வு, தாழ்வற்ற நிலை ஏற்பட்டுவிடும். இதுவே எல்லாம் பிரம்மமயம். இதை எல்லாரும் அடையலாம். இதற்கே மறு பிறவி கிடையாது.

For More Info :
http://siddarkalvaralaru.blogspot.in/2012/08/blog-post_1080.html

Tuesday, May 31, 2011

புத்தகங்கள் தளவிறக்கம்

Ebook -பாரதியாரும் வள்ளலாரும்

Ebook -மகாவீரரும் வள்ளலாரும்

Ebook -புத்தரும் வள்ளலாரும்

Ebook -தாயுமானவரும் வள்ளலாரும்

Ebook -திருமூலரும் வள்ளலாரும

Monday, May 30, 2011

Yoga Health Fitness - Baba Ramdev - Pranayam - Tamil

Baba Ramdev - Meditation and Pranayam - Yoga Health Fitness - Tamil. Swami-ji advises you to take yourself away from the hustle and bustle of life. Find tips to gather your mental strength and encompass yourself in a shield that separates you from your past, present and future and relax your mind and body. Click on http://www.rajshri.com/Listing/Baba-Ramdev/Free-Yoga-Videos-By-Baba-Ramdev-Pr... to watch more Baba Ramdev Yoga videos and bring fitness and spirituality into your lives.

Monday, January 3, 2011

Secret Yogic Breath -Vasi


Valmiki Siddhar – ‘Sutra Jnanam’
2.”Vandhadhuvum ponadhuvum vasi ahum
 What had come and what had gone is Vasi
What we are now in this eternal moment is the sacred Divine Breath, Vasi!
     Vaanil varum Ravi Madhiyum vasi ahum
      The sun and the moon that come in the sky is vasi
What leads us to the infinite mind of the universe, through Ida and Pingala
(the twin energy of Mother Kundalini), the left and right breath is 
this sacred Divine Breath, Vasi!
     Chindai thellindhu iruppavan Siddhan
     The one whose mind is crystal-clear is the Siddhar
The One who posses this infinite universal 
mind is the Perfected Being, the Siddhar
     Jagamellam Sivam endrae arindhon Siddhan
     The Siddhar is one who realizes that the cosmos in its entirety is Siva
Realizing all the living in the Universe as Sacred- as Siva, the Absolute is the Siddhar
     Nandhi endra vahanamae sthula deham
     The gross (physical body is none other than Siva the vehicle
Recognizing the physical body we are in as the Guru, the vehicle
     Naan muhanae kaan mooku sevi naaku aahum
     The eyes nose ears and the tongue are none other than Brahma (the ‘four-faced one’)
What is our ego is the the Creator Brahma- the senses of four and one perceived.
     Nandhi muhan Siva-Sakthi Thiru moochaahum
     The divine-breath is none other than the divine human-faced Siva-Sakti
The transforming Divine Breath of Vasi as the
 Divine Human (the Perfected Guru) is Siva and Sakthi.
     Thanthai Thaai Ravi madhi endru arindhu kollae
     Realize that the sun and moon are the Father and Mother!”
In the Divine Breath (within the Kundalini Energy) of the Sun and the 
Moon realize our Father (the Infinite Absolute) and our Mother 
(Energy and Perception)!!!
aum
Secret Yogic Breath- Vasi
Sacred words of Siddhar Kongananathar:
"Vasi pallakham ariya venum mattrum
Literal translation: The functioning of the vibrant-breath should be realized,further
Insight: Gain the ultimate realization through knowing the secret breath- "VaSi"
"Mandala veeduhal katta venum"
Literal translation: The mandala (spheres – chandra,surya,agni mandalas)houses should be built
Insight: In the infinite space, all is manifested.
"Nasi vallhi kondu yogamum vasiyum"
Literal translation: Through the nasal-passage,yoga(integration)and vasi(pranayama)
Insight: The sacred union of dissolving to be One is through breath utilizing the science of breath, Vasi
"Nattathhi paradi vallai pennae!"
Literal translation: See the yearning,lady Kundalini!”
Insight: Our awakened subtle kundalini reveals"
Sacred words of Siddhar Vanmeeganathar (Sage Valmiki)

" Vandhadhuvum ponadhuvum vasi ahum
Literal translation: What had come and what had gone is Vasi
Insight: What we are now in this eternal moment is the sacred Divine Breath, 

Vasi that is infinite void mind.
Vaanil varum Ravi Madhiyum vasi ahum
Literal translation: The sun and the moon that come in the sky is vasi
Insight: What leads us to the infinite mind of One, 

through Ida and Pingala (the twin energy of Mother Kundalini), 
the left and right breath is this sacred Divine Breath, Vasi!
Chindai thellindhu iruppavan Siddhan
Literal translation: The one whose mind is crystal-clear is the Siddhar
Insight: The One who posses this infinite universal mind of clarity is the Perfected Being, the Siddhar
Jagamellam Sivam endrae arindhon Siddhan
Literal translation: The Siddhar is one who realizes that the cosmos in its entirety is Siva
Insight: Realizing all the living as Sacred- as the essence of God is the Siddhar
Nandhi endra vahanamae sthula deham
Literal translation: The gross (physical body is none other than Siva the vehicle
Insight: Our physical body enshrines the spirit and this physical body of 

human is the ascending and guided vehicle towards the divine.
Naan muhanae kaan mooku sevi naaku aahum
Literal translation: The eyes nose ears and the tongue are none

 other than Brahma (the ‘four-faced one’)
Insight: Being One, perceive our senses as Brahma, the Four Headed Creator, karma
Nandhi muhan Siva-Sakthi Thiru moochaahum
Literal translation: The divine-breath is none other than the divine human-faced Siva-Sakti
Insight: Grace of the Guru enables the awakened kundalini to be lead to

 samadhi through Vasi, the sacred breath. This sacred tantric union of siva and sakthi is oneness.
Thanthai Thaai Ravi madhi endru arindhu kollae
Literal translation: Realize that the sun and moon are the Father and Mother!”
Insight: Through the Sacred Breath (of the awakened Kundalini) realize our

 Father (the Infinite Absolute) and our Mother (Energy and Perception)!!! "


aum
translated from ancient tamil to english by the grace of our 
seniors- suresh and adiyen nandhi
with folded hands!
EXPERIENCE VASI!
Invoke the Masters, our new album:
Listen to the Vasi Mantra and experience the energies of VASI:The mantra:

AUM
Si Va Ya Na Ma
Ya Na Va Si Ma
Ma Va Ya Na Si
Si Ya Na Ma Va
Va Si Ma Ya Na
Aum
Vasi Ma Ya Na Aum
Vasi Ma Ya Na Aum
Vasi Ma Ya Na Aum
Vasi Ma Ya Na Aum
Vasi Ma Ya Na Aum 


Vasi Yogam Talk by Th.Kuppusamy Ayya



Vasi yogam, is the advanced type of pranayama. It is not breathing through the nostrills. It is a form of inner breathing. By this method your breath is at the initial stages hitting the pineal gland and activating it. At present the pineal gland is secreating seratonin, it has got 2 functions, it will make you go to sleep, it will give you the sense of place and time.

Both these senses are essential for worldly activities. But the same advantages become disadvantages in the inner practice of yoga and meditation. The conquest of sleep and the limitations of time and space is called spirituality. So when you are practising vasi yoga, slowly the secretion of the seratonin will dwindle and melatonin will start secreting then you will easily enter into the inner domain of meditation. The yoga literature of the world have gone only so far, but vallalar says there is one more stage then your spirit will start secreting nectar or amrita by imbibing this nectar, the physical body will be transformed into a pure body or sutha deha.

But these are the effects of vasi yoga. As for the process of doing it, it should be learnt directly from a teacher who has already learnt it. Because it cannot be taught online.

This is a dangerous practice. Instead of going through the 8 limbs of pathanjali yoga, the siddhas have devised a short cut to attaining samathi, the last stage of yoga.
If you do it in the wrong way, you might have breathing trouble. you might even have headache and other side effects.More over your consciousness could get locked in. That is why this is not taught online or by book.

So please don't mistake me. If you could come in person I will teach you.

There is no bar, provided you are a vegetarian. For 1 year you should not have taken any kind of non-vegitarian food including eggs. If this condition is fullfilled anyone could learn vasi yoga.
Otherwise the curse of the siddhas will be upon my head., I believe you would not like it.

Vasi yoga is the most advanced type of pranayama. At the final stage your external breath would be suspended and the inner breath will be initiated by the Lord, says swami Ramalinga Vallalar.

" வாசி நடத்தி தருவாண்டி - ஒரு
வாசியிலே இங்கு வருவாண்டி "

Please listen to my speeches on CDs about vasi yoga.

- R.Kuppusamy
mobile : [0091] 98427 51510
mail id : r.kuppusamy@gmail.com



Categories

Vasi Yogam Talk by T.Udayasivaneri in Tamil


Tuesday, December 28, 2010

Guruparananda -Eight Fold Yoga,Yoga Sutra,Karma Yoga,Bhakti Yoga



The yoga sutras were written by Rishi Patanjali. These 6 talks give the essence of the Sutras.
Audio FilesVBR MP3Ogg Vorbis
Eight Fold Yoga 016.2 MB10.2 MB
Eight Fold Yoga 026.8 MB10.8 MB
Eight Fold Yoga 036.7 MB11.3 MB
Eight Fold Yoga 046.6 MB11.1 MB
Eight Fold Yoga 056.6 MB11.2 MB
Eight Fold Yoga 066.8 MB10.8 MB
Audio FilesVBR MP3Ogg Vorbis
Yoga Sutra 016.6 MB11.0 MB
Yoga Sutra 026.4 MB10.6 MB
Yoga Sutra 035.7 MB9.5 MB
Yoga Sutra 046.3 MB10.6 MB
Yoga Sutra 056.4 MB10.7 MB
Yoga Sutra 066.2 MB10.5 MB
Yoga Sutra 076.4 MB10.8 MB
Yoga Sutra 086.3 MB10.3 MB
Yoga Sutra 096.2 MB10.5 MB
Yoga Sutra 105.8 MB9.8 MB
Yoga Sutra 116.3 MB10.6 MB
Yoga Sutra 126.3 MB10.6 MB
Yoga Sutra 136.3 MB10.7 MB
Yoga Sutra 146.0 MB10.2 MB
Yoga Sutra 156.2 MB10.2 MB
Yoga Sutra 166.3 MB10.6 MB
Yoga Sutra 176.3 MB10.7 MB
Yoga Sutra 186.4 MB10.7 MB
Yoga Sutra 196.4 MB10.4 MB
Yoga Sutra 206.4 MB10.6 MB
Yoga Sutra 216.6 MB10.7 MB
Yoga Sutra 226.2 MB10.1 MB
Yoga Sutra 236.6 MB10.8 MB
Yoga Sutra 246.6 MB10.5 MB
Yoga Sutra 256.5 MB10.5 MB
Yoga Sutra 266.2 MB9.9 MB
Yoga Sutra 276.5 MB10.7 MB
Yoga Sutra 285.6 MB9.3 MB
Yoga Sutra 296.5 MB10.5 MB
Yoga Sutra 306.5 MB10.5 MB
Yoga Sutra 316.3 MB10.4 MB
Yoga Sutra 326.5 MB10.5 MB
Yoga Sutra 336.5 MB10.4 MB
Yoga Sutra 346.4 MB10.3 MB
Yoga Sutra 356.6 MB10.7 MB
Bhakti Yoga 016.3 MB10.7 MB
Bhakti Yoga 026.5 MB11.0 MB
Bhakti Yoga 036.6 MB10.6 MB
Bhakti Yoga 046.7 MB10.8 MB
Bhakti Yoga 056.8 MB10.9 MB
Bhakti Yoga 066.8 MB10.9 M
Audio FilesVBR MP3Ogg Vorbis
Karma Yoga 016.5 MB10.7 MB
Karma Yoga 026.7 MB11.6 MB
Karma Yoga 036.6 MB11.4 MB
Karma Yoga 046.7 MB11.7 MB
Karma Yoga 056.6 MB11.5 MB