Thursday, February 10, 2011

மனதுக்குள்ளே காமத்தை அடக்கினால்தான் கடவுளை அடைய முடியுமா?.....


காமம் ....
 மனிதனாகப்   பிறந்த  அனைத்து  உயிர்களும்  ஒவ்வொரு
வகையில்இன்பம்  பெறத்  தவிக்கின்றனர்.
மது...    சூது ...  மண்ணாசை .... பெண்ணாசை   இன்னும் பல
உளவியல்ஆசைகள்.
ஒவ்வொன்றுமே   மனதை  துன்பப்படுத்துபவை .அதிலும்
காமத்தீ ...இருக்கிறதே  அப்பப்பா...
மனதுக்குள்  அந்த எண்ணம்  வந்துவிட்டால்  வேறு
வேலைகள்எதுவும்  செய்ய முடியாமை ...
வேறு  புதிய  சிந்தனைகள்  தோன்றாது.
உடலும்  வெப்பமடையும் .
முடிவு...
முறையற்ற  சிந்தனைகள் ,முறையற்ற  பாலுணர்வுகள் ...
தகாத  உறவு ... சுயஇன்பம் .... இன்னும்  பல...

          இது  எந்த வயதுவரை .....தெரியாது
என்னுடைய  எண்ணப்படி   சாகும்  வரை  காமம்  இருக்கும்.

தினசரிகளில்  இப்போது  தினமும்- காமம்  ஆட்சி  செய்யும
சாமியார்களைப்  பற்றியும் பல முதியோர்கள்  பற்றியும்
செய்திகள்  வருவதில்  இருந்தே  தெரியும் -
காமம்  நம்  வசப்பட்டது அல்ல...   

அதற்காக  மனிதனாகப் பிறந்த நாம்  எதையும்
இழக்க ...சிலநேரம்   மானத்தையும் , புகழையும்,
கௌரவத்தையும் இழக்கத்தயாராகி விட்டோம்.

பணஇழப்பு  நமக்கு  எப்போதுமே  பெரிதாகத்
தோன்றுவதில்லை.

காமத்தை  நாம் வசப்படுத்த  முடியாது .நாம்தான்
காமவசப்படமுடியும்அதேபோல
கடவுளையும்  நாம் வசப்படுத்த  இயலாது .....
கடவுள்தான்  அவர் பக்கம்  நம்மை இழுக்க  வேண்டும் ...
அதற்கு  நாம் தயாராக  வேண்டும்.                                                                                               எப்படி ....
மனதை  அடக்க  வேண்டும் ... ஆனால்,அதற்கான  வழி ...

    காம  நுகர்வின் போது  நம்  மூளையில் ஒரு சிறு
மின்னல் தோன்றுவது  உண்டு.இதை உறவின்
" உச்சநிலை " என்கிறோம்.
அதிகம் போனால்  பத்து  வினாடிகள்  இருக்கும்.

  ஆன்மீகத்தில் இதனை  "  சிற்றின்பம் " என்று
குறிப்பிடுவர் .அப்படியானால் 
உண்மையான " பரவசநிலை " எப்படி  வரும்?

 பேரின்பம்  என்ற  பரவசநிலையை   உண்மையான
தியானத்தின்  மூலம் நாம்  அனுபவிக்க  முடியும் .

 இதை  எழுதும்போது  கூட  என்னால்  அனுபவித்துப்
பார்த்து  உளப் பூரிப்போடு  எழுத  முடிகிறது .

  தியானம்  செய்ய   நல்லநேரம்  பார்க்க  வேண்டியதில்லை .
எதிரில்  சுவாமி படம்  தேவையில்லை.
தீபம்  எரிய    வேண்டியதில்லை 
வீடு ,  கோயில் , அலுவலகம்  எங்கும்
தியானம்  செய்யலாம் .

மனதுதான்  வேண்டும் . மனம்  தெளிவானால்
உண்மையான
தியானம்  கைகூடும்.

கடவுளையே  குருவாக  எண்ணி  மனதை
அமைதிப் படுத்துங்கள்.கடவுளும்  கருணை  புரிவார்.
 சிந்தனை  தெளிவானால்  மனம்  தெளிவாகும்.
மனம் தெளிவானால்  தியானம்  தெளிவாகும் .

 தியானத்தின்  "உச்சநிலை " பத்து  வினாடியில்
முடியாது.தலையில்  ஆரம்பித்து  உள்ளங்கால்
வரை  உணரமுடியும்.இந்த  "பரவச நிலை " யை
மறுபடி  மறுபடி  நம்மால் தூண்ட முடியும்.
 மூளையின்  இருபக்கமும்  அதிர்வுகள்  பலமாக
இருக்கும். மூளையில்  ஆரம்பித்த  அதிர்வு  நமது
உடலை  புல்லரிக்க  வைக்கும். இந்த  மெய்சிலிர்ப்பு
அடங்காது, மறுபடி மறுபடி  தொடரும்.

நம்  மனம்  ஒருமித்து  இருக்குமானால்
அரைமணி  முதல்  ஒருமணிநேரம்  வரை  இந்த
பரவநிலையை  நாம்  அனுபவிக்கலாம்.
இந்தப்  பரவநிலை  சத்தியமாகப்  "பேரின்பம்" தான். 

 இந்தப்  பேரின்பத்திற்குமுன்  காமம்  மிக  அல்ப
விஷயம்தான்.ஒப்பீடு  இரண்டு  நிலையையும்
அறிந்தபின்பே  முடியும். 

 காமசுகம்  முடிந்தபின்  உடல் ,மனம்
சோர்வடைகிறது. ஆனால்,தியானத்தின்  மூலம்
  பரவநிலை  அடைந்தால்  உடல்,மனம் ,புத்தி
முதலியன  தெளிவாகிறது.அந்த  நேரத்தில்
மனம், உடல்  பறப்பது  போன்ற  நிலை
ஏற்படுகிறது.உடற் சோர்வும்  மனச்  சோர்வும்
அறவே  நீங்குகிறது.
காமம்  வேறு வழி ....  நம்மை  ஒரு வேலையும்
செய்யவிடாது.
தியானம்  வேறு வழி .... நம்மை  புத்துணர்ச்சி
அடையச்  செய்யும்.
காமம்....  நமது குற்றங்களுக்கு  வழி  வகுக்கும் .
 தியானம் ... கடவுளின்  அருகில்  நம்மை
இழுத்துச்  செல்லும் .
காமம் ... அதிகரித்தால்  நோய் ....!
தியானம் ...  உடலுக்கும் ,மனதிற்கும்  நல்ல மருந்து.

      எனினும், காமத்தை  சிவபெருமான்  தவிர
யாரும்  அடக்கியதாக தெரியவில்லை. சிவபெருமானுக்கும்
நெற்றிக்கண்  இல்லையென்றால் மன்மதனின்
மலர்க்கனைகள்  பாயும்போது , மன்மதனை  எரித்திருக்க
முடியாது.எனினும்,
               மனதுக்குள்ளே  காமத்தை  அடக்கப் பழகுவோம் ,
             கடவுளை  நமக்கு அருகாமையில்  வைக்க , தியானத்தின்
மூலம்  கடவுளை  நோக்கி  நகர்வோம் ...
                                               வாழ்க   வளமுடன் .....

No comments:

Post a Comment