காமம் என்பது உலகில் உள்ள உயிர்கள் அனைத்திற்கும் பொதுவான உணர்வாகும் காமம் இழுத்த இழுப்புக்களுக்கெல்லாம் மற்ற உயிர்கள் உடன் பட்டு அடிமையாய் கிடக்கும் போது மனிதன் மட்டும் தான் அதை எதிர்த்து போராடி ஆறாவது அறிவை வளப்படுத்திக் கொண்டு வருகிறான் அதை எதிர்க்க முடியாமல் மண்டியிட்ட மனிதர்கள் யாரும் நிரந்தர வெற்றிமாலை சூடமுடியாது காமத்தை எதிர்த்து போராட்டம் என்பது அதனுடன் நேருக்கு நேராக நடத்தும் யுத்தமல்ல அது வரும்வழியை விட்டுவிட்டு மாற்றுப்பாதையில் நம்பயணத்தை துவங்க வேண்டும் அதாவது காமத்தை அடக்க முயற்ச்சிக்காமல் கடக்க முயற்ச்சிக்க வேண்டும் 24 மணிநேரமும் காமத்தை அடக்கவேண்டுமென நினைத்துக் கொண்டிருப்பதே ஒரு சுமைதான் அது நமக்குள் இருப்பதை மறந்துவிட்டு அல்லது ஊதாசீனப்படுத்தி விட்டு வேலையை கவனியுங்கள் தானாக சரியாகிவிடும் முனிவர்களும் இதைத்தான் செய்தார்கள் கூடவே உடலையும் மனதையும் கட்டுக்குள் வைக்கும் சில யோகாசனங்கள் செய்தார்கள் காரம் உப்பு புளி போன்ற சுவைகளை குறைத்தும் கொண்டர்கள்
More Info :http://www.tamilhindu.net/t915-topic
No comments:
Post a Comment