மனிதர்கள் மனிதர்களாக வாழ பல சிறந்த பொன்மொழிகளை மகான்களும், அறிந்தவர்களும் கூறியுள்ளனர். அவற்றை படித்து அதன்படி வாழ்ந்து காட்டுவோம்.
தாயிற் சிறந்த கோவிலும் இல்லை, தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை.
உனக்கு ஒரே நண்பன் நீயே, ஒரே பகைவனும் நீயே, உன்னைத் தவிர பகைவனும் இல்லை, நண்பனும் இல்லை
இயற்கை தன் வழியிலேயே செல்லும், அடக்குதல் என்ன செய்யும்.
சன்மார்க்கத்தின் முடிவு சாகாத கல்வியைத் தெரிவிப்பதேயன்றி வேறில்லை.
தூக்கத்தை ஒழித்தால் ஆயுள் விருத்தியாகும்.
அவசரமாக தவறு செய்வதை விட தாமதமாக சரியாகச் செய்வதே மேல்
உண்மையான நட்பு ஆரோக்கியம் போன்றது. அதை இழக்கும் வரை அதன் மதிப்பு தெரிவதில்லை.
மற்றவர்களின் நற்செயல்களைப் பார்த்து மகிழ்ச்சி அடையாதவனால் நற்செயல்களை செய்ய இயலாது.
நம்முடன் வாழ்வோரைப் புரிந்து கொள்வதற்கு நம்மை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
மகிழ்ச்சி என்ற உணர்ச்சி மட்டும் இல்லாவிட்டால் வாழ்க்கை என்பது சுமக்க முடியாத பெரிய சுமையாகியிருக்கும்.
மின்மினிப் பூச்சி எவ்வளவு ஒளியுடன் திகழ்ந்தாலும் அது தீ ஆகாது.
நம்பிக்கை குறையும் போது ஒவ்வொரு மனிதனும் நெறியற்ற கொள்கையை மேற்கொள்கிறான்.
அரசன் அன்று கொல்லும், தெய்வம் நின்று கொல்லும்.
எளியாரை வலியார் அடித்தால், வலியாரைத் தெய்வம் அடிக்கும்.
ஊசி முனையில் தவம் செய்தாலும் உன்னதுதான் கிட்டும்.
வியாதிக்கு மருந்து உண்டு, விதிக்கு மருந்த உண்டா
தினை விதைத்தவன் தினை அறுப்பான், வினை விதைத்தவன் வினை அறுப்பான்
No comments:
Post a Comment