'பெண்ணாசை' என்னும் வார்த்தை திருவருட்பா
முழுவதிலும் 5 இடங்களில் உள்ளன
முதல் திருமுறை
1. தெய்வமணி மாலை
வாய்கொண் டுரைத்தல்அரி தென்செய்கேன் என்செய்கேன் வள்ளல்உன் சேவடிக்கண் மன்னாது பொன்னாசை மண்ணாசை பெண்ணாசை வாய்ந்துழலும் எனதுமனது பேய்கொண்டு கள்உண்டு கோலினால் மொத்துண்டு பித்துண்ட வன்குரங்கோ பேசுறு குலாலனாற் சுழல்கின்ற திகிரியோ பேதைவிளை யாடுபந்தோ காய்கொண்டு பாய்கின்ற வெவ்விலங் கோபெருங் காற்றினாற் சுழல்கறங்கோ காலவடி வோஇந்த்ர ஜாலவடி வோஎனது கர்மவடி வோஅறிகிலேன் தாய்கொண்ட சென்னையில் கந்தகோட் டத்துள்வளர் தலம்ஓங்கு கந்தவேளே தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி சண்முகத் தெய்வமணியே மூன்றாம் திருமுறை 4. சிவநேச வெண்பா
|
1. தெய்வமணி மாலை
காமஉட் பகைவனும் கோபவெங் கொடியனும்
கனலோப முழுமூடனும்
கடுமோக வீணனும் கொடுமதம் எனுந்துட்ட
கண்கெட்ட ஆங்காரியும்
ஏமம்அறு மாச்சரிய விழலனும் கொலைஎன்
றியம்புபா தகனுமாம்இவ்
வெழுவரும் இவர்க்குற்ற உறவான பேர்களும்
எனைப்பற்றி டாமல்அருள்வாய்
சேமமிகு மாமறையின் ஓம்எனும் அருட்பதத்
திறன்அருளி மலயமுனிவன்
சிந்தனையின் வந்தனைஉ வந்தமெய்ஞ் ஞானசிவ
தேசிக சிகாரத்னமே
தாமம்ஒளிர் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகர் சைவமணி
சண்முகத் தெய்வமணியே
வன்பெரு நெருப்பினைப் புன்புழுப் பற்றுமோ
வானைஒரு மான்தாவுமோ
வலியுள்ள புலியைஓர் எலிசீறு மோபெரிய
மலையைஓர் ஈச்சிறகினால்
துன்புற அசைக்குமோ வச்சிரத் து‘ண்ஒரு
துரும்பினால் துண்டமாமோ
சூரியனை இருள்வந்து சூழுமோ காற்றில்மழை
தோயுமோ இல்லைஅதுபோல்
அன்புடைய நின்அடியர் பொன்அடியை உன்னும்அவர்
அடிமலர் முடிக்கணிந்தோர்க்
கவலமுறு மோகாமம் வெகுளிஉறு மோமனத்
தற்பமும்வி கற்பம்உறுமோ
தன்புகழ்செய் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தன்முகத் துய்யமணி உன்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே
மனமான ஒருசிறுவன் மதியான குருவையும்
மதித்திடான் நின் அடிச்சீர்
மகிழ்கல்வி கற்றிடான் சும்மாஇ ரான்காம
மடுவினிடை வீழ்ந்துசுழல்வான்
சினமான வெஞ்சுரத் துழலுவன் உலோபமாம்
சிறுகுகையி னு‘டுபுகுவான்
செறுமோக இருளிடைச் செல்குவான் மதம்எனும்
செய்குன்றில் ஏறிவிழுவான்
இனமான மாச்சரிய வெங்குழியின் உள்ளே
இறங்குவான் சிறிதும்அந்தோ
என்சொல்கே ளான்எனது கைப்படான் மற்றிதற்
கேழையேன் என்செய்குவேன்
தனநீடு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே
3. பிரார்த்தனை மாலை
வேல்கொண்ட கையும் விறல்கொண்ட தோளும் விளங்குமயில்
மேல்கொண்ட வீறும் மலர்முகம் ஆறும் விரைக்கமலக்
கால்கொண்ட வீரக் கழலும்கண் டால்அன்றிக் காமன்எய்யும்
கோல்கொண்ட வன்மை அறுமோ தணிகைக் குருபரனே
7. ஜீவசாட்சி மாலை
வன்சொலினார் இடைஅடைந்து மாழ்கும் இந்த
மாபாவி யேன்குறையை வகுத்து நாளும்
என்சொலினும் இரங்காமல் அந்தோ வாளா
இருக்கின்றாய் என்னேநின் இரக்கம் எந்தாய்
இன்செல்அடி யவர்மகிழும் இன்ப மேஉள்
இருள்அகற்றும் செழுஞ்சுடரே எவர்க்கும் கோவே
தன்சொல்வளர் தரும்தணிகை மணியே ஜ“வ
சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே
வந்தாள்வாய் ஐயாவோ வஞ்சர் தம்பால்
வருந்துகின்றேன் என்றலறும் மாற்றம் கேட்டும்
எந்தாய்நீ இரங்காமல் இருக்கின் றாயால்
என்மனம்போல் நின்மனமும் இருந்த தேயோ
கந்தாஎன் றுரைப்பவர்தம் கருத்துள் ஊறும்
கனிரசமே கரும்பேகற் கண்டே நற்சீர்
தந்தாளும் திருத்தணிகை மணியே ஜ“வ
சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே
18. புன்மை நினைந் திரங்கல்
கச்சுக் கட்டி மணங்கட்டிக்காமுகர்
கண்ணைக் கட்டி மனங்கட்டி வஞ்சகம்
வச்சுக் கட்டிய வன்கழற் கட்டியும்
மண்ணின் கட்டியும் மானும்மு லைக்கட்டிக்
கிச்சைக் கட்டிஇ டும்பைஎ னும்சுமை
ஏறக் கட்டிய எற்கருள் வாய்கொலோ
பிச்சைக் கட்டிய பித்தன் புதல்வனே
பெருமை கட்டும் பெருந்தணி கேசனே
19. திருவடி சூட விழைதல்
கல்லாக் கொடிய மடவார்தம் காமக் குழிக்கண் வீழாமே
நல்லார்க் கெல்லாம் நல்லவநின் நாமம் துதிக்கும் நலம்பெறவே
சொல்லாற் புனைந்த மாலையொடும் தொழுது தணிகை தனைத்துதிக்க
வல்லார்க் கருளும் நின்திருத்தாள் அடியேன் முடிமேல் வைப்பாயே
கள்ளக் கயற்கண் மடவார்தம் காமத் துழலா துனைநினைக்கும்
உள்ளத் தவர்பால் சேர்ந்துமகிழ்ந் துண்மை உணர்ந்தங் குற்றிடுவான்
அள்ளற் பழனத் திருத்தணிகை அரசே ஞான அமுதளீக்கும்
வள்ளற் பெருமான் நின்திருத்தாள் அடியேன் முடிமேல் வைப்பாயே
20. ஆற்றா விரகம்
எளியேன் என்ன இருப்பாரோ ஏழைக் கிரங்கும் விருப்பாரோ அளியேன் பேர்நெஞ் சிருப்பாரோ அழியாக் காமம் திருப்பாரோ களியேன் என்ன உருப்பாரோ கருதும் அருட்குக் கருப்பாரோ தெளியேன் யான்என் செய்கேனே தென்பால் தணிகைப் பொருப்பாரே காமப் பயலைத் தடுப்பாரோ கடப்ப மலர்த்தார் கொடுப்பாரோ ஏமத் தனத்தைக் கடுப்பாரோ என்மேல் அன்பை விடுப்பாரோ மாமற் றொருவீ டடுப்பாரோ மனத்தில் கோபம் தொடுப்பாரோ தாமத் தாழ்வைக் கெடுப்பாரோ தணிகை தனில்வேல் எடுப்பாரே 22. பணித்திறஞ் சாலாப் பாடிழிவு
Download Tamil Audio Links: |
No comments:
Post a Comment