மனநல மருத்துவர் ஷாலினி
அந்தக் காலத்து படித்த இளைஞர்களுக்-கெல்லாம் பெரிய ஆர்வத்தையும், வாழ்க்கைக்-கான குறிக்கோளையும் கொடுத்தது, இந்திய தேசிய காங்கிரஸ். இந்தக் கழகத்தில் உறுப்-பினராக இருப்பதே ஒரு பெரிய கவுரவமாக கருதப்-பட்டதால், இந்தியாவில் வாழ்ந்த இளைஞர்கள் ஆகட்டும், வெளிநாட்டில் வாழ்ந்து-விட்டு திரும்பிய இந்தியர்கள் ஆகட்டும், எல்லோரும் கொத்துக் கொத்தாய் போய் இந்தக் கழகத்தில் சேர்ந்தார்கள்.
ஜவஹர்லால் நேரு 1912 ஆம் ஆண்டு, இங்கிலாந்தில் தன் படிப்பை முடித்துவிட்டு இந்தியா வந்தார். அப்போது அவருக்கு 23 வயது தான். வந்ததுமே தன் தந்தை மோதிலால் நேரு ஏற்கனவே உறுப்பினராக இருந்த இந்த கழகத்தில் சேர்ந்துகொண்டார்.
மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி என்கிற ஒரு 46 வயது பாரிஸ்டர், தென் ஆஃப்ரிக்காவில் பணிசெய்துகொண்டிருந்தவர், 1915 ல் இந்தியா திரும்பினார். அவரும் இந்திய தேசிய காங்கிரஸில் சேர்ந்தார்.
அப்போது கோபால கிருஷ்ண கோகலே என்ற பெரியவர் ஒருவர் காங்கிரஸ் தலைவராக இருந்தார். மோகன் தாஸுக்கு அவர் மேல் ரொம்ப அபிமானம் என்பதால், அவர் விருப்பப்படி மோகன் காங்கிரஸுக்காக ஊழியம் செய்ய ஆரம்பித்தார்.
மோகன் குஜராத்தை சேர்ந்த ஒரு எளிய வாணிக குடும்பத்தவர். அவர் அம்மா புத்லிபாய் சமணக் கொள்கைகளைப் பின்பற்றியதால் சின்ன வயதிலிருந்தே மோகனுக்கு அகிம்சை, தர்மம், தயை, நோன்பு மாதிரியான தன் தாயின் பழக்கங்கள் நிறையவே தொற்றிக்-கொண்டிருந்-தன. மோகன் தாஸ் தென் ஆஃப்ரிக்கா-வில் இருந்த சமயம், பல முறை நிறவெறிக் கொடுமை-களுக்கு அவர் ஆளாக நேர்ந்தது.
அவர் இங்கிலாந்தில் சட்டம் படித்து, பாரிஸ்டர் பட்டம் பெற்றவர். ஆங்கிலேயருக்கு இணையான கல்வித் தகுதியும், உத்யோக அந்தஸ்தும் உள்ள இவர் ஒரு முறை, தென் ஆஃப்ரிக்காவில் ரயிலில் போய்கொண்டிருந்த போது, ஒரு வெள்ளைக்கார துரை அந்த ரயில் பெட்டியில் ஏறினான். மோகனைக் கண்டதும், கருப்பன் இந்தப் பெட்டியில் வரக்கூடாதே என்று நிறபேதம் பார்த்து, உனக்கு இடம் மூன்றாம் தர கோச் தான், அங்கே போ என்றானாம். மோகனிடம் இருந்ததோ முதல் வகுப்பிற்-கான பயணசீட்டு. அதிலும், தன் கல்வி, தன் பூர்வீகம், தன் சுயமரியாதை, ஆகியவற்றில் தனக்கு இருந்த நம்பிக்கையின் காரணமாக மோகன் கொஞ்சமும் சளைக்காமல், என்னிடம் முதல் வகுப்பிற்கான பயணச்சீட்டு உள்ளது, நான் நகர மாட்டேன், என்றார் தைரியமாக. வெள்ளைக்காரன் என்ன திமிர் இருந்தால் எதிர்த்துப் பேசுவாய்! என்று மோகனைப் பிடித்து வெளியே தள்ளி விட்டான். வேறு வழி இல்லாமல் வேறொரு வண்டி பிடித்து மோகன் பயணத்தைத் தொடர முயற்சிக்க, அந்த வண்டி ஓட்டுனர், வெள்ளைக்காரனுக்கு இடம் விட்டு கீழே இறங்கி படியில் நில் என்று மோகனை அடித்தே விட்டான்.
பல முறை வெள்ளைக்காரர்களுக்கான விடுதியில் தங்க அனுமதி இல்லை, என்று வெளியே துரத்தப்பட்டார் மோகன் தாஸ். ஒரு முறை, முண்டாசைக் கழட்டு என்று தர்பான் கோர்ட்டின் மேஜிஸ்திரேட் அவரை உத்தரவு இட, முடியாது என்று சாதித்தார் மோகன்.
இப்படி பல முறை அவமானப்படுத்தப் பட்ட போதெல்லாம், மோகனுக்கு, தான் வெள்ளைக்-காரனுக்கு நிகராகப் படித்ததினால் தனக்கும் சமநிகரான மரியாதை கிடைக்க வேண்டும் என்கிற மான உணர்வு தான் தலை தூக்கியது. ஆனால், வெள்ளைக்காரர்களுக்கு மோகன் ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. தென்ஆப்ரிக்-கா-வில் இருந்த கோடானு கோடி கருப்பின மனிதர்களில் இவனும் ஒருவன், என்கிற இளக்காரத்தோடு தான் மோகனையும், அவரைச் சார்ந்த மற்ற இந்தியர்களையும் அவர்கள் நடத்தினார்கள்.
ஆரம்பத்தில் மோகனுக்கு இது பெரிய கோபத்தை ஏற்படுத்தியது, நாங்கள் ஒன்றும் கருப்பர்கள் கிடையாது. எங்களை அவர்களோடு சேர்க்காதீர்கள். நாங்கள் தூய்மையான இனத்தவர்கள், இந்தக் கருப்பின கஃபீர்கள் அசுத்த-மானவர்கள், மிருகம் மாதிரி இருக்கிறார்-கள். அவர்களுக்கு நாகரீகமே இல்லை. இந்தியர்கள் ஆகிய நாங்கள் அவர்களை விட உசத்தியான-வர்கள்தான் தெரிந்து-கொள்ளுங்கள். என்ற ரீதியில் தான் பல பத்திரிக்கைகளில் அவர் ஆரம்பத்தில் எழுதினார்.
இதனால் தென் ஆஃப்ரிக்காவில் வாழ்ந்த இந்தியர்களுக்கு பிரத்தியேக அந்தஸ்து, குடி உரிமை, ஓட்டு உரிமை ஆகியவை தரப்படாததைக் கண்டித்து பல கவன ஈர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டார் மோகன். இதற்காகவே, இந்திய காங்கிரஸ் எனும் அமைப்பை 1894ல் அங்கு ஆரம்பித்தார். இந்திய வம்சாவழியினரை, தனி அந்தஸ்துடன் நடத்த வேண்டும், என்று அவர்களுக்கு இழைக்கபட்ட அநீதிகளை எதிர்த்து மோகன் தாஸ் நடத்திய போராட்டங்-களுக்காக, அவர் கைது செய்யபட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். இப்படி சிறையில் அடைக்கப்பட்ட போது தான் காந்தி தமிழர், தெலுங்கர், இஸ்லாமியர் என்று அது வரை தனக்கு பரிச்சயமே இல்லாத பல புதிய மனிதர்களை சந்தித்தார். அத்தோடு பல பூர்வீக ஆஃப்ரிக்கர்களையும் சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றார். இப்படி பல தரப்பட்ட மனிதர்களோடு கூடிப் பழக வாய்ப்புக் கிடைத்த போது தான், இனம், நிறம், மொழி, மாநிலம், பூர்வீகம் ஆகிய வேறுபாடுகளைத் தாண்டி, எல்லா மனிதர்களும் ஒன்றுதான் என்கிற புரிதல் முதன் முறையாக அவருக்கு வந்தது. ஏற்கெனவே மோகனுக்கு சின்ன வயதில் இருந்து சமணக் கொள்கைகள் அத்துப்படி. அவர் இங்கிலாந்தில் இருந்த போது சில காலம் தியசஃபிசல் சொசைட்டியில் உறுப்பினராக இருந்ததில் பௌத்தம், ஹிந்துமதம், கிறித்துவம் ஆகியவற்றைப் பற்றியும் ஒரு விசாலமான கருத்தை உள்வாங்கிக்கொள்ளும் வாய்ப்பு அவருக்கு கிடைத்திருந்தது. இது எல்லாமுமாய் சேர்ந்து மோகன் தாஸைப் பாதிக்க, அநீதி ஏற்படும் போதெல்லாம் அதை ஆக்ரோஷ-மில்லாத அமைதியான முறையில் எதிர்த்துப் போராடும் ஒரு முறையை அவர் பயன்படுத்த ஆரம்பித்தார்.
இந்த யுத்தி ஆங்கிலேயர்களை ஸ்தம்பிக்க வைத்தது. ஒன்றுமே செய்யாமல் சும்மா அமைதி-யாக ஒத்துழைக்காமல் இருப்பவர்களை அடித்தாலோ, சுட்டாலோ, கைது செய்தாலோ, பொது மக்கள் எல்லோரும், சும்மா இருக்-கிறவனைப் போய் இம்சிக்கிறியே, நீ எல்லாம் ஒரு மனிதனா? என்று அதிகாரிகளை நிந்திக்க, பொதுக் கருத்துக்கு கட்டுப்பட வேண்டி இருந்த-தால், தென் ஆஃப்ரிக்க ஜெனரல் ஜான் ஸ்மட்ஸ் மோகன் தாஸுடன் சமரச நடவடிக்கையில் ஈடுபட்டார். இப்படியாக, அகிம்சை, சத்யாகிரகம் என்கிற இந்த புது யுத்திகள் ரொம்பவே பிரபலமாயின.
1906 ஆம் ஆண்டு ஆங்கிலேயருக்கும், தென்ஆப்ரிக்காவைச் சேர்ந்த ஸுலு பழங்குடி இன மனிதர்களுக்கும் போர் மூண்டது. அப்போது, மோகன் தாஸ் போரில் இந்தியர்-களையும் சேர்த்துக்கொள்ள வேண்டி ஆங்கிலேயர்-களிடம் கேட்டுக்கொண்டார். ஆனால், இந்தியர்களைப் போரில் சேர்த்துக்-கொண்டால், ஆங்கிலேயர்களுக்கு நிகரான ராணுவ அந்தஸ்தை இந்தியர்களுக்குத் தர நேருமே என்று ஆங்கிலேயர்கள் இந்தியர்களை போரில் சேர்த்துக்கொள்ள மறுத்துவிட்டார்கள். அப்போதும் விடாமல் குறைந்த பட்சம், போரில் அடிபட்டுக் கிடக்கும் ராணுவ வீரர்களுக்கு மருத்துவ உதவி செய்யும் பணியையாவது இந்தியர்களுக்குத் தரலாமே என்று மோகன் தாஸ் கேட்டு கொள்ள, அப்பணி இந்தியர்களுக்கு தரப்பட்டது. 1914ல் முதல் உலகப் போர் வெடித்த போது, மோகன்தாஸ் மீண்டும் இந்தியர்களை ராணுவத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டினார். மீண்டும் அது மறுக்கப் படவே, ஆம்புலென்ஸ் ஊழியராய் பணிபுரியும் வாய்ப்பைக் கோறினார்.
அதெப்படி, ஒரு பக்கம் அகிம்சை என்கிறார், இன்னொடு பக்கம் போரில் சேர்த்துக்கொள் என்கிறாரே, ஏன் இந்த மோகன் தாஸ் இரட்டை நிலை கொள்கிறார் என்று அவர் நெருங்கிய நண்பர்களுக்குக் கூட முரண்பாடாய் இருந்தது. இந்த நிலையில் தான் மோகன் தாஸ் தென் ஆஃப்ரிக்காவில் தன் வேலைகளை முடித்துக்கொண்டு இந்தியா திரும்பி இருந்தார்.
இந்தியாவிற்குத் திரும்பியதும், கோபால கிருஷ்ண கோகலேவின் ஆதரவுடன் இந்திய தேசிய காங்கிரஸில் சொற்பொழிவுகளை நடத்-தினார் மோகன் தாஸ். அகிம்சை, சத்யாகிரகம், ஒத்துழையாமை மாதிரியான புது கருத்துகளை அவர் முன் வைக்க, படித்த இளைஞர்களிடம் அவருக்குப் பெருத்த வரவேற்பு இருந்தது. இப்படி காந்தியால் ஈர்க்கப்பட்ட ஒரு மிக முக்கிய-மான மனிதர் இராஜகோபாலாச்சாரி என்கிற ஒரு புகழ்பெற்ற வழக்குரைஞர். இவர் சேலத்தில் ரொம்ப பிரசித்தி பெற்ற வழக்குரைஞராக இருந்த போது, வரதராஜூலு நாயுடு என்பவர் மீது பிரிட்டிஷ் சர்க்கார் செடிஷன் என்கிற தேச துரோக முயற்சி என்று குற்றம் சுமத்தி அவரை சிறையில் இட முயன்றது. வரதராஜூலு நாயுடு, ராசிபுரத்தை சேர்ந்த ஒரு மிக பெரிய பணக்காரரின் மகன். மருத்துவர். இதை எல்லாம் விட தீவிர காங்கிரஸ்காரர். கப்பல் ஓட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம், திரு.வி.கல்யாணசுந்தரம் ஆகியோருக்கு ரொம்ப நெருங்கிய நண்பர். மிகவும் கெட்டிக்கார வழக்குரைஞராக இருந்ததால் வரதராஜூலு நாயுடு இராஜகோ-பாலச்சாரியை தன் வக்கீலாக நியமித்தார். அவருக்கு வழக்குரைஞராப் பணியாற்றிய போது இராஜகோபாலாச்சாரிக்கு காங்கிரஸ் மீது நாட்டம் ஏற்பட்டு விட, காந்தியை சந்தித்த போது, அது மேலும் தீவிரமாகி, இராஜகோ-பாலாச்சாரி தன் வக்கீல் தொழிலை விட்டு விட்டு, சேலம் ஜில்லா சேர்மேன் பதவிக்கு உயர்ந்தார். இந்த சமயத்தில் தான் 1917-ல் மதராஸில். டீ.எம்.நாயர், தியாகராய செட்டி ஆகியோர் ஷிஷீலீ மிஸீபீவீணீஸீ லிவீதீமீக்ஷீணீறீ திமீபீமீக்ஷீணீவீஷீஸீ என்று அழைக்கப்பட்ட நீதிக் கட்சி (யிவீநீமீ றிணீக்ஷீஹ்) என்கிற ஒரு அரசியல் கட்சியை துவக்கினார்கள். இந்தக் கட்சி பிராமணர்களுக்கு எதிராக செயல்படுவதையே தன் முக்கியக் குறிக்கோளாகக் கொண்டிருந்தது. பிரிட்டிஷ் சர்க்காரில் பிராமணர்களுக்கு மட்டுமே ஓரவஞ்சனையாய், அதிக வேலை வாய்ப்பு தரப்பட்டது. 1917-ல் இருந்த 286 அரசு வேலைகளில் 185அய் பிராமணர்களே வகித்திருந்தார்கள். அதே சமயம் பிராமணர் அல்லாத இந்துக்கள் 58 இடங்களையும், இஸ்லாமியர்கள் 17 இடங்களையும், கிறித்து-வர்கள் 12 இடங்களையும், அய்ரோப்பியர்கள் 14 இடங்களையுமே வகித்திருந்தார்கள். இது போக, அந்தக் காலத்தின் முக்கியமான எல்லா பத்திரிக்-கைகளை நடத்தியவர்களும் பிராமணர்-கள் தான். ஆங்கிலேயர்கள் அவர்களுக்கு ஓரவஞ்சனை செய்வதாக பொதுக் கருத்து தலை தூக்க, அதனை கண்டித்து, பிராமணர் அல்லாதவரின் சார்பாக குரல் எழுப்ப ஆரம்பிக்கபட்டது இந்த நீதிக்கட்சி.
இதே சமயம் அனி பெஸண்ட் எனும் அய்ரிஷ் அம்மையார், ஹோம் ரூல் லீக் என்கிற, சுய ஆட்சி கோரும் அமைப்பை ஏற்படுத்தி இருந்தார். 1917களில், பிரிட்டிஷ் ஆதிக்கத்-திற்கு உட்பட்டிருந்தாலும், ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து, தென் ஆஃப்ரிக்கா ஆகிய நாடுகள் சுய ஆட்சி அந்தஸ்தை பெற்றிருந்தன. இந்தியா-விற்கும் அதே அந்தஸ்த்தை வழங்க கோறினார் அனிபெஸண்ட். இந்த அம்மையாரின் இந்த முழக்கம், முகமது அலி ஜின்னாவுக்கும், பால கங்காதர திலகருக்கும், சுப்ரமணிய ஐயருக்கும் சரியாகப்பட, அவர்கள் இந்த ஹோம் ரூல் இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்தார்கள்.
ஆனால் மோகன்தாஸ் காந்தி இந்த ஹோம் ரூல் இயக்கத்தை ஆதரிக்கவில்லை. அவர் இந்திய நகரங்களில் கிளர்ச்சி ஏற்படுத்துவதை விட கிராமங்களில் கவனம் செலுத்துதல் முக்கியம் என்று கருதினார். அனி பெஸண்டின் வெளிநாட்டுத் தோற்றத்தை விட, மோகன் தாஸின் இந்திய மற்றும் இந்துமத பாரம்பரியம் பொது மக்களுக்கு பிடித்து போய் விட, மோகன் தாஸின் ஆதரவாளர்கள் அனி பெஸண்டுக்கு எதிராக செயல்பட ஆரம்-பித்தார்கள்.
வரதராஜூலு நாயுடு, மோகன் தாஸின் விசுவாசி. அதனால் அவர் நீதிக்கட்சிக்கு எதிராகவும், அனி பெஸண்ட் அம்மையாருக்கு எதிராகவும் திருப்பூரில் ஒரு வார இதழைத் துவக்கினார். இந்த வார இதழுக்கு சந்தா வசூலிக்க வரதராஜூலு நாயுடு ஈரோட்டுக்கு விஜயம் செய்தார். ஈரோட்டிற்கு ஒரு முக்கிய மனிதர் வந்தால் ராமசாமி நாயக்கரின் வீட்டில் மரியாதை செய்வது வழக்கம் என்பதால் வரதராஜூலு நாயுடுவை ராமசாமியார் சந்திக்க நேர்ந்தது. அதோடு இராஜகோபாலச்-சாரியாரையும் சந்தித்தார் ராமசாமி.
இராஜகோபாலாச்சாரிக்கும் ராமசாமி நாயக்கருக்கும் ஏற்கெனவே பரிச்சயம் உண்டு. ஒன்று: இராஜகோபாலாச்சாரி புகழ் பெற்ற வழக்குரைஞர், அதனால் ராமசாமியும் அவரும் தொழில் ரீதியாக அறிமுகமானவர்கள். இரண்டு: வரதராஜூலு நாயுடுவின் கேஸ் விசாரணைக்காக மதுரைக்குப் போகும் வழியில் ஈரோடு ரயில் நிலையத்தில் அவர்கள் இறங்குவது வழக்கம், அந்த ரீதியாகவும், ஆச்சாரியாருக்கும் ராமசாமிக்கும் தொடர்பு இருந்தது. மூன்று: ஆச்சாரியார் சேலம் முனிசிபல் சேர்மனாக இருந்த அதே சமயம் ராமசாமியார் ஈரோட்டில் சேர்மனாக பதவி வகித்தார். அதனால் ஈரோடு வரும் போதெல்லாம், அங்கு ராமசாமி ஏற்படுத்தி இருந்த துப்புரவுப் பணி மாற்றங்கள், சாலை விரிவாக்கம், குடிநீர் வசதி, மாதிரியான நகர் நிர்வாக அம்சங்களைக் கண்டு புகழ்வார். இது எல்லாம் போக, அந்தக் கால-கட்டத்தில் ராமசாமி நாயக்கர் ஈரோட்டின் மிக சக்தி வாய்ந்த ஓர் ஆசாமி. இன்கம்டாக்ஸ் வசூலிப்பதில் இருந்து, சர்வே எடுப்பது, நகர சபை நடத்துவது, சண்டை சச்சரவு-களுக்கு மத்தியஸ்தம் செய்வது வரை, ராமசாமி இல்லாமல் எந்தக் காரியமுமே ஈரோட்டில் நடந்த-தில்லை. அதனால் இராஜகோபாலாச்-சாரியாருக்கு ஒரு யோசனை தோன்றியது.
அது பற்றி எல்லாம் அடுத்த உண்-மையில்.
More Info :www.unmaionline.com
No comments:
Post a Comment