35. சிவயோக நிலை
( 3832 ) மதிமண்ட லத்தமுதம் வாயார உண்டே பதிமண்ட லத்தரசு பண்ண - நிதிய நவநேய மாக்கும் நடராஜ னேயெஞ் சிவனே கதவைத் திற |
( 3833 ) இந்தார் அருளமுதம் யானருந்தல் வேண்டுமிங்கே நந்தா மணிவிளக்கே ஞானசபை - எந்தாயே கோவே எனது குருவே எனையாண்ட தேவே கதவைத் திற |
( 3834 ) சாகா அருளமுதம் தானருந்தி நான்களிக்க நாகா திபர்சூழ் நடராஜா - ஏகா பவனே பரனே பராபரனே எங்கள் சிவனே கதவைத் திற |
( 3835 ) அருளோங்கு தண்ணமுதம் அன்பால் அருந்தி மருள்நீங்கி நான்களித்து வாழப் - பொருளாந் தவநேயர் போற்றும் தயாநிதியே எங்கள் சிவனே கதவைத் திற |
( 3836 ) வானோர்க் கரிதெனவே மாமறைகள் சாற்றுகின்ற ஞானோ தயஅமுதம் நானருந்த - ஆனாத் திறப்பா வலர்போற்றும் சிற்றம் பலவா சிறப்பா கதவைத் திற |
( 3837 ) எல்லாமும் வல்லசித்தென் றெல்லா மறைகளுஞ்சொல் நல்லார் அமுதமது நானருந்த - நல்லார்க்கு நல்வாழ் வளிக்கும் நடராயா மன்றோங்கு செல்வா கதவைத் திற |
( 3838 ) ஏழ்நிலைக்கும் மேற்பால் இருக்கின்ற தண்ணமுதம் வாழ்நிலைக்க நானுண்டு மாண்புறவே - கேழ்நிலைக்க ஆவாஎன் றென்னைஉவந் தாண்டதிரு அம்பலமா தேவா கதவைத் திற |
( 3839 ) ஈன உலகத் திடர்நீங்கி இன்புறவே ஞான அமுதமது நானருந்த - ஞான உருவே உணர்வே ஒளியே வெளியே திருவே கதவைத் திற |
( 3840 ) திரையோ தசத்தே திகழ்கின்ற என்றே வரையோது தண்ணமுதம் வாய்ப்ப - உரைஓது வானேஎம் மானேபெம் மானே மணிமன்றில் தேனே கதவைத் திற |
( 3841 ) |
No comments:
Post a Comment