Sunday, May 8, 2011

அனுபவத்தை மறந்தால்தான் அனுபவிக்க முடியும் – ஜே கே


ஒரு விஷயத்தை பற்றிய கருத்து , அந்த விஷயத்தை புதிதாக பார்ப்பதை தடை செய்யும் என்கிறார் ஜெ கிருஷ்ணமூர்த்தி..
க்டவுள் இருக்கிறாரா இல்லையா என்பதில் மட்டுமல்ல , ஒரு மலரின் அழகை ரசிப்பதிலும் கூட , முன்கூட்டியே ஒரு கருத்து இருப்பது தெளிவான பார்வை தடுக்கும் என்கிறார்
************************************************************************************************************
அனுபவம் என்பது வேறு.. அனுபவித்தல் என்பது வேறு. நமது அனுபவங்கள் புதிதாக அனுபவிப்பதை தடை செய்கின்றன. மோசமான அனுபவம் அல்ல்து இனிதான அனுபவம் என்ற வித்தியாசம் எல்லாம் இல்லை. இரண்டுமே இடையூறுதான்.
அனுபவம் என்பது காலத்தின் பிடியில் உள்ளது., அனுபவம் முடிந்து போனது. இறந்த கால்ம். நிகழ்காலத்திற்கேற்ப இது உயிர் பெறுகிறது. வாழ்க்கை என்பது நிகழ்காலத்தில் நிகழ்வது. இது அனுபவம் அல்ல.
அனுபவத்தின் நிழல் நிகழ்காலத்தில் விழுவதால், அனுபவித்தல் என்பது முழுமையாக இல்லாமல் அனுபவம் ஆகிறது.
அனுபவங்களால் ஆனதுதான் மனம். எனவே இது எதையும் அனுபவிக்க முடியாது.  தொடர்ச்சி எதுவும் இல்லாமல் ஒரு விஷ்யத்தை புதிதாக பார்க்கும் தன்மை மனதுக்கு இல்லை. அனுபவம் இல்லாத இடத்தில்தான் அனுபவித்தல் நிகழும்..
மனம் தனக்கு ஏற்கனவே தெரிந்த ஒன்றைத்தான கற்பனை செய்து அதைத்தான் பார்க்கும். மனம் செயல்படுபவதை நிறுத்தினால்தான் தெரியாத ஒன்றை பார்க்க முடியும்..
அனுபவத்தின் வெளிப்பாடுதான் சிந்தனை. இது நினைவு சார்ந்தது. சிந்தனை இருக்கும்வரை அனுபவித்தல் இருக்காது.
சரி, அனுபவத்தை எப்படி துறப்பது? இப்படி துறக்க நினைப்பதே , துறக்க முடியாமல் செய்து விடும்.
துறக்கவேண்டும் என்பது ஓர் ஆசைதான். ஆசையற்ற அமைதியான நிலையே அனுபவித்தலுக்கு அவசியம்… ஆனால் மனம் அந்த நிலையை அடைய பேராசை படுகிறது… தான் அனுபவித்ததை அனுபவமாக மாற்றபார்க்கிறது. எனவே அனுபவம் அதை அனுபவித்தவர் என்ற இருமை நிலை தோன்றுகிறது..
ஒன்றை முழுமையாக அனுபவிக்கும்போது அங்கு அனுபவிப்பனோ , அனுபவிக்கபடும் பொருளோ இருக்காது… அனுபவிதல் மட்டுமே நிகழும். நான் அனுபவிக்கிறேன் என்ற எண்ண்ம் இருக்காது..சிந்தனை இல்லாமல் மனம் அமைதியாக இருக்கும். ஒரு விண்மீனை பார்த்தால் , அதன் அழகை முழுதும் ரசிப்போம், நான் அதை ரசிக்கிறேன் என்ற எண்ணம் இல்லாத நிலையில் அனுபவம், அனுபவிப்பவன் என்ற இருமை இல்லை.
இந்த நிலையை அடைய எந்த வழிமுறையும் இல்லை. முயற்சி செய்து அடையவும் முடியாது .
காலம் கடந்த அமைதியை , நான் என்ற எண்ணம் மறையும்போதுதான் அடைய முடியும்…

No comments:

Post a Comment