Showing posts with label Dr N Shalini Psychiatrist. Show all posts
Showing posts with label Dr N Shalini Psychiatrist. Show all posts

Monday, January 2, 2012

“Dark Makeup” செய்துகொள்ளும் பெண்கள், ஆண்களுக்கு மறைமுகமாக ‘I Am Available’ என்று குறிப்பால் உணர்த்துவதாக அர்த்தம் – மன நல மருத்துவர் ஷாலினி


மேக் அப் செய்து கொள்வதென்பது தவிர்க்க முடியாத விசயமாகிவிட்ட இன்றைய நாட்களில் ஹெல்த்தி மேக் அப் செய்து கொள்ள சில டிப்ஸ்கள் சரும ஆரோக்கியம் கெடாதிருக்க… மேக் அப் செய்து கொள்வத ற்கு முன்நீங்கள் பயன்படுத்தப் போகும் காஸ்மெடிக் பொருள் எதுவானாலும் அவற்றின் லே பிளில் Ingrediants பட்டியலில் கீழ்க்காணும் பொருட்கள் இரு ந்தால் அந்த காஸ்மெடிக் பொ ருட்களை தவிர்ப்பது நல்லது. 
 ·    டை எத்தனாலமைன் (DEA ) 
·    ட்ரை எத்தனாலமைன் (TEA )
·    பினைலீன் டை அமைன் (PPD ) 
உலக காஸ்மெடிக் ஆராய்ச்சி நிறுவனம் இந்தப் பொருட்கள் கலந்த காஸ்மெடிக் வகைகள் தீங்கானவை என்று அறிவித்து ள்ளது. நகங்களின் ஆரோக்கிய த்துக்கு… நெயில் பாலிஷ்போ டும் முன்பு கவனத்தில் வைத் துக் கொள்ள வேண்டிய விஷ யம், விரல்களை நன்றாக கழு வி விட்டு மாய்ச்சரைசிங் க்ரீம் தடவிக் கொண்டு அதன் பிறகு நெயில் பாலிஷ் போட்டுக் கொள்ள வேண்டும் கண்களின் ஆரோக் யத்துக்கு… .
எந்த வகை காஸ்மெடிக் ஐட்டம் என்றாலும் கண் இமைகளின்   மீதுஉபயோகிக்கக் கூடாது, கண்க ளின் பாது காப்புக்கு வெள்ளரி, கேரட் போன்ற காய்கறிகளை ஸ்லைஸ்களாக நறுக்கி கண் களின் மீது வைத்துக் கொள்ள வே ண்டும். 
இதழ்களின் ஆரோக்கியத்துக்கு …லிப்ஸ்டிக் போட்டுக் கொள்வ தற்கு முன்பு இதழ்களை ரோஸ் வாட்டரால்(பன்னீரால்)  கழுவி விட்டு தரமான லிப்ஸ்டிக்குகள் உபயோகிக்கலாம்,அதே போல லிப்ஸ்டிக்குகளை நீக்கிய பின்னும் கடைசியில் இதழ்களை பன் னீரால் கழுவ வேண்டும் விஜய் டி.வி யில் ஒளி பர ப்பான “நீயா நானா’’ நிகழ்ச்சியில் பெண்கள் ஒப்பனை செய்து கொள்வதை ப் பற்றி காரசாரமாக விவாதி க்கப்பட்டது, நிகழ்ச்சியின் முடி வில் நடுவர்களாக வந்த மன நல மருத்துவர் ஷாலினியும், பாரதிய ஜனதா கட்சியின் மாநிலச் செயலாளரும் வழக்கறிஞருமா ன வானதி அவர்களும் பெண்களுக்கு மேக்அப் அவசியமா என்ப தைக்குறித்த தங்களது கரு த்துகளைப் பகிர்ந்து கொண்டார் கள். இதுவரை எல்லாம் சரி, ஆனால் டாக்டர் ஷாலினி, பெண்கள் அடர்த்தியான ஒப்ப னை செய்து கொள்வதைப் பற் றி பரிணாமவி யல் கோட்பாட் டின் அடிப்படையில் டார்க் மேக் அப் செய்துகொள்ளும் பெண் கள் ஆண்களுக்கு மறைமுக மாக ‘I Am Available’ என்று குறி ப்பால் உணர்த்துவதாக அர்த்தம் என்று கூறி னார். பரிணா மவியல் கோட்பாட்டின் அடிப்படையில் இது நிஜமாக வும் இருக் கலாம்.
அதற்காக பெண்கள் ஒப்பனையே செய்து கொள்ளக் கூடாது, பெண்களுக்கு மேக் அப் எதற்கு? என்றெல்லாம் மேக் அப் விஷயத்தை ஒதுக்கி விட முடியாது இல்லை யா?!
 இன்று நேற்றா இந்தப் பிர ச்னை ! 
ஆனானப்பட்ட ஈஸ்வர னே பார்வதியின் கூந்தலுக்கு இயற்கை மணம் இருப்பதாக நிரூ பிக்க முடியாமல் நக்கீரரிடம் அவஸ்தைப் பட்டார்.
அன்னை பார்வதியின் கூந்தலே ஆயினும் பெண்களின் கூந்தலு க்கு இயற் கை மணம் கிடையாது, கூந்த லில் பூசிக்கொள்ளும் எண்ணெ ய், முடி உலர்த்தப் போடப்படும் நறு ம் புகை, சூடிக் கொள் ளும் மலர்கள் போன்றவற்றின் காரணமாக செயற்கை மணமே அன் னையின் கூந்த லுக்கும் உண்டு என்று வாதிட்டு வென் றவர் நக்கீரர். அப்படிப் பார் த்தால் இயற்கை அழகோடு செயற்கை அலங்கார ங்களும் ஏதோ கொஞ்சம் அவசியம் என்று தானே தோன் றுகிறது. இது புராணம், புராணங்களை நம்பத் தேவை இல்லை . 
ஆனால் நடைமுறை வாழ்வில் ஒரு பெண்ணுக்கு மேக் அப் அவசி யமா இல்லையா? என்று பெண் களில் பல தரப்பினரிடையே அவ ர்கள் என்ன நினைக்கிறார்கள் என் று தெரிந்து கொள்ளும் முனைப் பாக மருத்துவர், ஆய்வு மாணவி, தமிழ்ப் பேராசிரியர், கவிஞர், பள் ளி ஆசிரியர், பத்திரிகை யாளர், இல்லத்தரசி என்று பல்வேறு பொறுப்புகளை திறம்பட நிர்வகித்து தங்களது குடும்பத்தாரால் கொண்டாடப்படும் பெண்களிடையே இந்தக் கேள்வியைக் கேட் டோம். ,அவர்கள் அளித்த பதில்கள் ஹெல்த் வாசகர்க ளுக்காக இந்த இதழில் பகி ர்ந்து கொள்ளப்படுகிறது. வாசித்து விட்டு மேக் அப் செய்து கொள்வது குறித்து நீங் கள் உங்களது கருத்து களையும் எங் களுக்கு எழுது ங்கள்.
டாக்டர்.ரோஹிணி பல் மருத்துவர், பொள்ளாச்சி. 
பொதுவாக பெண்கள் அலங்காரத் தில் விருப்பம் உள்ளவர்கள். ஆனா ல் அது சூழலுக்குத் தக்கதாக இருக்க வேண்டும், தன்னை உறு தியாய், அழகாய் உணரச்செய்யும். பிறர் கண்ணை, எண்ணத்தை உறுத்தாத எதுவும் சிறப்பு என் பது என் எண்ணம்.
முத்துலெட்சுமி, இல்லத்தரசி புதுதில்லி. 
மேக்கப் என்றால் என்னைப் பொறுத்தவரையில் முகம் கழுவிப் பொட்டு வச்சிக்கிறது அவ்ளோதான். குளிர்காலம் என்றால் தில்லி யில் கொஞ்சம் தோல் வறட்சிக்காக கவனமெடுக்கணும்.. அதற் காக க்ரீம்களை கண்ணுக்குத் தெரியாத அளவில் எடுத்துக் கொள் வது அவசியமா கிறது.  மேலும் அழகு செய்துக்கணும் என் கிற அவசியங்களிலிருந்து அல்லது ஆ சையிலிருந்து ஒரு காலத்தில் நான் வெளி யே வந்துவிட்டேன். எளிமையான முகம், அல்லது நேர்த்தியான மேக்கப் செய் துகொண்ட முகம் இரண்டுமே உள் அழகால் மட்டுமே அழகாத்தெரியுதுன்னு தோணும்.  மத்தபடி அவங்கவங்களுக்கு மேக்கப் வேணுமா என்பது அவரவர் முடி வே.
தமிழ்நதி, கவிஞர் & எழுத்தாளர் சென் னை.
ஒப்பனை செய்துகொள்வது என்பது ஒருவகையில் வெளி யுலகத் திற்குத் தன்னைக் ‘காண்பித்து’க் கொள்வதே. தோற்ற த்தை வைத் து மதிப்பிடும் (அது சரியான மதிப்பீடு அல்லாதபோதிலும்) பெரும் பாலான கண்களின் முன் நாம் அழகாகத் ‘தோன்ற’ விரும்புகிறோம். பல்வேறு ஊடகங்களில் காட்டப்படும் அழகின் கற்பித அளவு கோல் களுக்கிணங்க உருமாற விரு ம்புவதும், முடியாத போது தாழ்வுணர்ச்சி கொள்வதும் அபத் தமே என்றறிந்தும் அதுவே தொடர்கிறது.
ஒப்பனை செய்வதும் செய்யாமல் விடுவதும் அவரவர் தனிமனித சுதந்திரம் சார்ந்தது. அதில் பிறர் தலையிடுவது  அநாகரீகம். 
அறிவும் ஆரோக்கியமுமே உண்மையா ன அழகு என்று தெரிந்திருக்கிறபோதி லும், நானும் ஒப்பனைசெய்து கொள்கி றேன். ‘என்னது?’ என்று மற்றவர்களை புருவம் உயர்த்த வைக்குமளவு அதீத ஒப்பனையல்ல; மிதமாக,  பொருத்தம் என்று எனக்குத் தோன் றும் வகையில்.
எம்.ஏ.சுசீலா, தமிழ்ப்பேராசிரியர், பணி நிறைவு,
பாத்திமா கல்லூரி, மதுரை.
பெண்ணின் அழகு, கம்பீரம் இவற்றை அவளது முகத்தில் மிளிரும் தன்னம்பிக் கையும் அதன் அடித்தளமான சுயசார்புமே நிர்ணயிக்கி ன்றன என் பதே என் தீர்மானமான முடிவு என்றபோதும் புற உலகில் புழங்கும் போது தன்  தோற்றத்தை மேம்படுத்திக் கொள்ளவும் அதன் வழி தன்னை மேலும் தன்னம்பிக்கை கொண்டவளாக ஆக்கிக் கொள்ள வும் ஓரளவு தன் வெளித் தோற்றத்திலும் அவள் அக்கறை காட்ட வேண்டியதாகவே இருக்கிறது. அந்த அடிப்படையில் ஒரு சில குறிப்புகள்…
இயற்கை நமக்கு அளித்த மகத்தான தோற்றத்தை முறையான உணவுப் பழ க்கம்,உறக்கம்,அளவான உடல் உழைப்பு ஆகியவற்றின்படி பேணி வந்தாலே செய ற்கைப் பொருள்களின் துணையை நாட வேண்டியிருப்பதில்லை;  கலகலப்பான உற்சாகமான சுறுசு றுப்பான மனநிலை யைத் தக்க வைத்துக் கொண்டபடி அனை வருடனும் அன்புடனும் நட்புடனும் பழகி வருவதும்,எதைக் கண்டும் சலித்துக் கொள்ளாத முகத்துடன் ,அதில் ஒரு புன் சிரிப்பையும் தவழ விட்ட படி வலம் வருவதும் தரும் பொலிவை விடக் கூடுதலான அழகை எந்தச் செயற்கைப் பொரு ளும் நமக்கு அளித் து விட முடியாது.
இவற்றில் நாம் செய்யும் தவறே துணைக்கு ஒப்ப னைப் பொருட் களைச் சேர் த்துக் கொள்ள வேண்டிய தேவையை நோக்கி நம் மைத் தள்ளிவிடுகிறது.
அன்றாட வாழ்வில் நாம் அடிப்படையாகப் பயன்படுத்தியே ஆக வேண்டிய சில பொருட்களை (சோப்,டால்கம் பவுடர்) போன்றவற்றை விளம்பர மாயைகளில் சிக்கிக் கொண்டபடி அடிக்கடி மாற்றாமல், எது நமக்கு ஒத்துப்போகிறதோ அதை மட்டுமே வாழ்நாள் முழுவதும் பயன்படுத்தி வரும் பழக்கத்தைக்கை க் கொண்டாலே சரு மநோய்கள் நம் மைப் பொதுவாக அணுகுவதில்லை என்பது என் அனுபவத்தில் நான் கண்ட முடிவு.
டாக்டர் கே.சந்தனமாரி, நேச்சு ரோபதி பிஸிசியன்
& யோகா மாஸ்டர் ஆயூர்சுகா.சென்னை
இன்றைக்குப் பெண்கள் ஃபேஷன் என்ற பெயரில் உச்சி முதல் உள்ளங்கால் வரை மேட்சிங்காக அழகு சாதனப் பொருட்களைஎத்தனை விலை கொடுத்தா லும் பார்த்துப் பார்த்து வாங்கி அணிந்து கொள்ளத் தயங்குவ தில்லை,  தங்களது ஆடை, ஆபரணங்கள், அழகு சாதனப் பொருட்களால் அவர்கள் புழங் கும் இடங்களில் பிற ரது கவ னத்தைக் கவரும் விருப்பம் அவர்களுக்கு இருக்கிறது. பிற ரது கவனத்தைக் கவர விரும்பு வதால் அல்லது centre of Attraction இருக்க விரும்புவதால் அவர்கள் தவறானவர்கள் என்று அர்த்த மில்லை, வாழ்வில் அது ஒரு காலகட்டம், அந்த வயதில் அப்படி இருக்கத் தோன்றுவது இயல்பு தான். ஆனால் பெரும் பாலான பெண்களின் ஒரே தவறு இந்த வயதில் அவர்களது வெளித் தோற்றத் தைக்கண்டு மயங்கி காதல் பேசும் ஆண் களிடம் எளிதில் ஏமாறும் குணம், இத னால் அவர்களது எதிர்கால வாழ்க்கையே கேள்விக்குறியாகி விடுகிறது . 
தமிழில் ஒரு பழமொழி உண்டு. “அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’’ “என்பார்கள், மனம் ஆரோக்யமாக இருந் தால் அது முகத் தில் வெளிப்படும், அப்படியான ஆரோக்கியமான அழகே நிலை யானது, எளிமையான ஒப்பனைக ளால் அந்த அழகை மேம்படு த்திக் காட்டலாமே தவிர ஆடம்பர அழகுசாதனப் பொருட்களை வாங்கிக் குவிப்பதும் அடர்த்தியான ஒப்ப னைகள் செய்து கொள்வ து என்பதும் பெண்களுக்கு எந்த வித த்திலும் நன்மையைத் தேடித் தரப் போவதில்லை. வீண் உபத் திரவங்கள் தான் வந்து சேரும். அளவுக் கதிகமாக மேக் அப்க்கு முக்கியத்துவம் கொடுத்தால் பெண்கள் தங்களது சுயத்தை இழந்து கடைசியில் மேக் அப் சாதனங் களுக்கு அடிமையாகி விடும்  சூழல் தான் ஏற்படும், இது நிச்சயமாக எந்த விதப் பெண்களுக்கும் நல்லது அல்ல. ஒரு நேச்சுரோபதி மருத்துவராக இயற்கை யாக நமது நாட்டு சீதோஷ்ண நிலைக்கே ற்ப மிதமான ஒப்பனைகளோடு எப்போ தும் உள்ளமும் உடலும்  பரிசுத்தமாக இரு ப்பது தான் பெண்களுக்கான சிறந்த மேக் அப் என்பேன் நான் .
சாந்தி கார்த்திகேயன்,
ரிசர்ச் ஸ்காலர், அண்ணா யுனிவர்சிட்டி. 
சென்னை.
பெண்கள் என்றில்லை ஆண்களுக்கும் கூட இந்தக் காலத்தில் மி தமான மேக் அப் அவசியம் என்பதே என் க ருத்து. விதவிதமான படிப்புகள், ஆண், பெண் பேதமின்றி சவாலான வேலைகள் என்று சமூகத்தில் பல மட்டத் தினரோடு புழங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் போது யாராக இருந்தாலும் கூட அவரவர் புழங்கும் இடங்களுக்குத் தக்கவாறு தங் களை வெளிப்படுத்திக் கொள்ள வேண் டும். இல்லையேல் இந்த போட்டி உலகில் நம்மை தோற் றத்தின் அடிப்படையில் வெளிப்படுத்திக் கொள்ளும் விஷயத்தில் மற்றவர்களை விட பின்தங்கி விடும் வாய்ப்புகள் அதிகம். நாம் ஒன்றும் வீட்டுக்குள்ளேயே உட்கார்ந்திருக்கப் போ வதில்லையே! சேக்ஸ்பியர் சொன்ன தைப் போல “உலகமே ஒரு நாடக மேடை”. அந்த மேடையில் வெ ளி உலகத்திற்கு என்று சில ரோல்கள் இருக்கின்றன, அந்தந்த இடத்திற்குத் தக்கவாறு உடைகள், மேக் அப் சமாசாரங்கள், ஆபரணங்கள் என்று நம்மை நாம் வெளிப்படு த்திக் கொள்வதில், அழகாகக் காட்டிக் கொள்வதில் தவறேதும் இல்லை.
பரிமளா டீச்சர் & கேம்ப்ரிட்ஜ் பப்ளிக் ஸ்கூல் TSR லேஅவுட்
பெங்களூரு.
பெங்களூரில் இப்போது சில பள்ளி களில் ஆசிரியைகள் வார நாட்களில் ஃபார்மல் பேண்ட் சர்ட் போட்டுக் கொண் டு பள்ளிக்கு வரலாம் என்று அனுமதிக் கப்பட்டுள்ளது. மேலும் சனிக்கிழமை ஜீன்ஸ் கூட அணிந்து வர  அனுமதிக்கி றார்கள். டீச்சர் என்றால் புட வை தான் கட்டிக்கொண்டு பாடம் நட த்த வேண்டும் என்ற கட்டாயம் இங்கே தளர்த்தப் பட்டிருக்கிறது. மாணவர்கள் பாவம் போரடித்துப் போவார்களே !  
எல்.கே.ஜி, ஒன்று, இரண்டாம் வகு ப்புக் குழந்தைகள் கூட டீச்சர்கள் கண்ணுக்கு லட்சணமாக அழகாக உடுத்திக் கொண்டு வந்தால் “யு ஆர் லுக்கிங் நைஸ் மேம்’’ என்று பாராட் டத் தவறுவதே இல்லை. அவர்களு க்கு அவர்க ளது கிளாஸ் டீச்சர் தான் அழகு, புத்திசாலி என்று தங்களது பிற செக்ஷன் நண்பர்களிடம் சொல்லிக்கொள்ள ரொம்பவே ஆசை. பொறுமையும், புத்திசாலித்தனமும் இனிமை யான அழகான தோற்றமும் கொண்ட டீச்சர்கள் தங்களது மாணவர் களை வெகு எளிதாக ஈர்த்து விடுகிறார்கள். அவர்களது பாடத்தை மாணவர் கள் விரும்பிக் கற்று நிறைய மதிப்பெண்களும் பெறுகிறார்கள். இது நான் அனுபவத்தில் கண்ட உண்மை. ஆக ஒரு டீச்சர் என்ற முறையில் பெண்களுக்கு மித மான உறுத்தாத மேக் அப் அவசி யம் என்பதுதான் என் கருத்து .
மறைந்த எழுத்தாளர் அனுராதா ரமணன் சொன்னதாக
எங்கோ வாசித்தது … 
“வீட்டு வாசலில் கோலம் போடப் போ னால் கூட நான் மேக் அப் இல்லாமல் போ க மாட்டேன். பெண்கள் தோற்றத்தில் கவனம் செலுத்துவதில் என்ன தவறு! இப் படி இருப்பது எனக்கு நிறைய தன்னம்பி க்கையைத் தருகிறது. 
‘அனும்மா’ என்று தனது ரசிகைகளால் கொண்டாடப்பட்ட அனு ராதா ரமணன், இறந்த பின்னும் கூட அவரது நோயுற்ற தோற்ற மோ துக்கமான புகைப்படமோ எவரும் கண்டதில்லை. அனுராதா ரமணன் என்றதும் நமக்கெல் லாம் ஞா பகம் வருவது திட்டமான அலங்காரத்துடன் பளிச்சென்ற சிரித்தமுகமும் அவரது அழகான கோபி சாந்துப் பொட்டும்தான்.
தேனம்மை லக்ஷ்மணன் ஃப்ரீலான்ஸ் ஜர்னலிஸ்ட் & வலைப் பதிவர்.
சென்னை.
பொதுவா கேட்டா தேவையில்லைன்னு தான் சொல்ல வேண்டும். ஏனெனில் நம்மு டைய நிறமிகளை வெண்க்ரீம்கள் மறைத் து வெண்மையாக்கி காண்பிக்கின்றன.  இய ற்கைப் பொருட்களான தயிர், எலுமிச்சை, தக்காளிச்சாறு, முல்தானி மிட்டி, தேன்,  பழக் கூழ், பாலாடை, கசகசா, கடலை மாவு, பயத்த மாவு போ ன்றவை கலந்து குளித்தாலே கலர் கொடுக்கும்.
நல்ல உழைப்பும், ஓய்வும், உறக்கமும், சரிவிகித உணவும் முகம்பொலிவாய் வைக்கும். இயற்கையிலேயே நமக்கு  என்று ஒரு அழகு உண்டு. இது யோகா, தியானம் செய்வதாலும், பர்சனாலிட்டி டெவலெப்மெண்ட் மூலமும் கிடைக்கும். மிக அதிகமாக மேக்கப் போடு பவர்கள் முகத்தை நெருக்கத்தில் பார்த்தால் சுருக்கமாக இருக்கும்.  அடிக்கடி ஃபேஷியல் செய்து சிலர் முகம் கருத்துப் போய் இருக்கும். 
ரிஷப்ஷனிஸ்ட், ஏர்ஹோஸ்டஸ் போன்ற உத்யோ கங்களில் இருப்பவர்கள் தவிர மற்றவர்கள் தேவை ஏற்படின் (தி ருமண விழா, பார்ட்டிகள்)  மிக மெல்லிய மேக்கப் போடலாம். ஆனால் தினப்படி அல்ல. உங்களை உங்களு க்காக.,  உங்கள் திறமைக ளுக்காக, உங்கள் ஆளுமைத் தன்மைக் காக மற்றவர்களுக்குப் பிடிக்க வேண்டும். சில மணி நேரங்களில் கலையக்கூடிய அலங் காரத்துக்காக அல்ல.
ஈஸ்வரி பாஸ்கர்சக்தி. எழுத்தாளர் பாஸ் கர்சக்தியின் மனைவி,
சென்னை. 
என் வரையில் மேக்அப்ன்னா குளிக்க சோப், முகத்துக்கு பவுடர் ,தலைக்கு ஷாம்பூ இவ்ளோ தான். வேற சின்ன  சின்னதா ட்ரெஸுக்கு மேட்ச்சா காதுல தோடு மாத்தி மாத்தி வெரைட்டியா போட்டுக்க பிடிக்கும். வேற ஆடம்பரங்கள் எதுலயும் பெருசா விருப்பங்கள் இருந்த தில்லை. அடிக்கடி கண்ணாடி பார்த்துக்கறது அலர்ஜி,  எங்கயாவது கிளம்பணும்னா சிம்பிளா காட்டன் புடவை போதும்னு நினைப் பேன், எனக்கு தலைமுடி உடையாம  நீள மா பட்டுப் போல சாஃ ப்ட்டா இருக்கறதா ஃபிரெண்ட்ஸ் சொல்வாங்க. ஆனாலும் வித விதமா ஹேர் ஸ்டைல் பண்ணிக் கறதுல ஆர்வம் இருந்ததில்லை, பின்ன ல் போட்டுக்கறதை விட ரப்பர் பேன்ட் போட்டுக்கறது கம்ப ர்ட்டபி ளா தோ ணும் எனக்கு. உறவுக்காரங்க, நண்பர்கள் வீட்டு கல்யாணத்துக்குப் போறதுன்னா லும் கூட கன மான நகைகள், அகல ஜரி கை போட்ட பட்டுப்புடவைன்னு பகட்டா போறதை விட நீட்டா காட்டன் புடவை கட்டிக்கிட்டு சிம்பிளான  நகைகளோட போறது தான் எப்பவும் என்னோட சாய்ஸ். பெண் களுக்கு மேக் அப் அவசியம் இல் லைன்னு சொல்ல முடியாது, ஆனா அது தேவையில்லாம மத்தவங்க கண்களை உறுத்தாம எளிமையா இருக் கணும் அவ்ளோதான்.
மறைந்த நடிகை பத்மினி சொன்னது  
பெண் நிருபர் ஒருவர் பேட்டிக் காக நடிகை பத்மினியை கா ணச் சென்றபோது பேட்டி முடி ந்ததும் அவர் சொன் னதாக:
“லிப்ஸ்டிக் போட்டுக்க மாட்டி யாம்மா? முகத்துக்கு க்ரீம் எதுவும் போடலைன்னாலும் சும்மா முகம் கழுவித்து டைச்சு லேசா லிப்ஸ்டிக் மட்டும் போட்டுக்க ணும். அழகா இருக்கும், லிப்ஸ்டிக் போடாம நான் இருந்ததே  இல்லை’’என்றாராம். தவிர பத்மினி க்கு வளையல்கள் என்றால் கொள் ளை இஷ்டமாம். தனது திருமணம் முடிந்து புகுந்த  வீட்டு க்குப் போகை யில் ஒரு பீரோ நிறைய வித வித மான வளையல் களைகணவர் வீட் டுக்கு எடுத்துச் சென்றதாக பத்மினி தனது பழைய பேட்டி ஒன்றில் குறி ப்பிட்டிருந்தார்.
மேக்&அப் விஷயத்தில் பெண்களின் ஒட்டுமொத்த கருத்துகளைப் பார்க் கையில் மேக்&அப் அனாவசியம் என்று யாரும் சொல்லக் காணோம், மிதமாகவேனும் பெண்கள் தங்களை அழகுபடுத்திக் கொள்வது ஆரோக்யமானது எ ன்பதே இவர்களது ஒட்டுமொத்த கருத் தாக இருக்கிறது. மேலும் இன்றை ய போட்டி உலகில் ஆண் களுக்கு சமமாக பெண்களும் பொருளீட்ட வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கும் போது தங்களது தோற்றம் சமூ கத்தினர் பார்வையில்  கௌரவ மாக மதிக்கப்பட வேண்டும் என் றே விரும்புகிறார்களே தவிர, பிற ர் அசூயையாக நினைக்கும் அள வுக்கு அதீதமாக மேக் &அப் செய்து கொள்ளும் ஆர்வம் பெரும்பாலோ னோருக்கு இல்லை என்ற முடிவுக்கே வரவேண்டியதாக இருக் கிறது.
மேற்காணும் இடுகையில் காணப்படும் புகைப்படங்களில் நீயா நானா கோபிநாத் மற்றும் பத்மினி ஆகிய இருவர் மட்டுமே மேற்காணும் கட்டுரையுடன் தொடர்புடையவர்கள். ஆவர். இந்த இரண்டு புகைப்படங்களை மற்ற‍ புகைப்படங்கள் யாவும், விளம்பரங்களிலும், திரைப்படங்களிலும் நடிக்கும் நடிகைகளின் புகைப்படங்களே!
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.
தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Thursday, February 10, 2011

காதல் என்றால் என்ன? -பெரியார்



அன்பு,ஆசை, நட்பு என்பவற்றின் பொருளைத் தவிர வேறு ஒரு பொருளைக் கொண்டதென்ற சொல்லும் படியான காதல் என்னும் ஒரு தனித்தன்மை ஆண் பெண் சம்மந்தத்தில் இல்லை என்பதை விவரிக்கவே இவ்வியாசகம் எழுதப்படுவதாகும். ஏனெனில் உலகத்தில் காதல் என்பதாக ஒரு வார்த்தையைச் சொல்லி அதனுள் ஏதோ பிரமாதமான தன்மை ஒன்று தனிமையாக இருப்பதாகக் கற்பித்து மக்களுக்குள் புகுத்தி, அனாவசியமாய் ஆண் - பெண் கூட்டு வாழ்க்கையின் பயனை மங்கச் செய்து காதலுக்காகவென்று இன்பமில்லாமல் திருப்தியில்லாமல் தொல்லைப்படுத்தப்பட்டு வரப்படுகின்றதை ஒழிக்க வேண்டுமென்பதற்காகவேயாகும். 


ஆனால் காதல் என்றால் என்ன? அதற்குள்ள சக்தி என்ன? அது எப்படி உண்டாகின்றது? அது எது வரையில் இருக்கின்றது? அது எந்த எந்த சமயதில் உண்டாவது? அது எவ்வெப்போது மறைந்து விடுகிறது? அப்படி மறைந்து போய் விடுவதற்குக் காரணம் என்ன? என்பவை போன்ற விஷயங்களைக் கவனித்து ஆழ்ந்து யோசித்துப் பார்த்தால் காதல் என்பதின் சத்தற்ற தன்மையும் பொருளற்ற தன்மையும் உண்மையற்ற தன்மையும் நித்தியமற்ற தன்மையும் அதைப் பிரமாதப்படுத்துவதின் அசட்டுத் தனமும் ஆகியவைகள் எளிதில் விளங்கிவிடும்.

ஆனால் அந்தப்படி யோசிப்பதற்கு முன்னே இந்தக் காதல் என்ற வார்த்தையானது இப்போது எந்த அர்த்தத்தில் பிரயோகிக்கப்படுகின்றது? உலக வழுக்கில் அது எப்படிப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது? இவற்றிற்கு என்ன ஆதாரம்? என்பவைகளைத் தெரிந்து ஒரு முடிவு கட்டிக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

இன்றைய தினம் காதலைப் பற்றிப் பேசுகிறவர்கள் “காதல் என்பது அன்பு அல்ல, ஆசை அல்ல, காமம் அல்ல, அன்பு -நேசம் -ஆசை -காமம் என்பவை வேறு, காதல் வேறு, நட்பு வேறு என்றும் அது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் தங்களுக்குள் நேரே விவரித்துச் சொல்ல முடியாத ஒரு தனிக் காரியத்திற்காக ஏற்படுத்துவதாகும். அக் காதலுக்கு இணையானது உலகத்தில் வேறு ஒன்றுமே இல்லை என்றும்,

அது ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணிடமும், ஒரு பெண்ணுக்கு ஒரு ஆணிடமும் மாத்திரந்தான் இருக்க முடியும். அந்தப்படி ஒருவரிடம் ஒருவருக்குமாக இருவருக்கும் ஒரு காலத்தில் காதல் ஏற்பட்டு விட்டால் பிறகு எந்தக் காரணம் கொண்டும் எந்தக் காலத்திலும் அந்தக் காதல் மாறவே மாறாது என்றும் பிறகு வேறு ஒருவரிடமும் அந்தக் காதல் ஏற்படாது அந்தப்படி மீறி அந்தப் பெண்ணுக்கோ ஆணுக்கோ வேறு ஒருவரிடம் ஏற்பட்டு விட்டால் அது காதலாயிருக்க முடியாது. அதை விபச்சாரம் என்று தான் சொல்ல வேண்டுமேயொழிய அது ஒருக்காலும் காதலாகாது என்றும், ஒரு இடத்தில் உண்மைக் காதல் ஏற்பட்டு விட்டால் பிறகு யாரிடமும் காமமோ விரகமோ மோகமோ என்றெல்லாம் ஏற்படாது என்றும் சொல்லப்படுகின்றது.

மேலும் இந்தக் காதல் காரணத்தினாலேயே ஒரு புருஷன் ஒரே மனைவியுடனும் ஒரு மனைவி ஒரே புருஷனுடனும் மாத்திரம் இருக்க வேண்டியது என்றும் கற்பித்து அந்தப்படி கட்டாயப்படுத்தியும் வரப்படுகின்றது.

ஆனால் இந்தப்படி சொல்லுகின்றவர்களை எல்லாம் உலக அனுபோகமும் மக்களின் அனுபவ ஞானமும் இல்லாதவர்கள் என்றோ அல்லது இயற்கையையும் உண்மையையும் அறியாதவர்கள் என்றோ அல்லது உண்மையை அறிந்தும் வேறு ஏதோ ஒரு காரியத்திற்காக வேண்டி வேண்டுமென்றே மறைக்கின்றவர்கள் என்றே தான் கருத வேண்டி இருக்கின்றது.

அன்றியும் இந்த மாதிரி விஷயங்களைப் பற்றி நாம் சொல்லும் மற்றொரு விஷயமென்னவென்றால் ஒரு ஆணின் அல்லது ஒரு பெண்ணின் அன்பு, ஆசை, காதல், காமம், நட்பு, நேசம், மோகம், விரகம் முதலாகியவைகளைப் பற்றி மற்றொரு பெண்ணோ ஆணோ மற்ற மூன்றாவதர்கள் யாராவதோ பேசுவதற்கோ, நிர்ணயிப்பதற்கோ, நிர்ப்பந்திப்பதற்கோ சிறிது கூட உரிமையே கிடையாது என்றும் சொல்கின்றோம்.

இன்னும் திறந்து வெளிப்படையாய்த் தைரியமாய் மனித இயற்கையையும் சுதந்திரத்தையும் சுபாவத்தையும் அனுபவத்தையும் கொண்டு பேசுவதானால் இவை எல்லாம் ஒரு மனிதன் தனக்கு இஷ்டமான ஒரு ஓட்டலில் சாப்பிடுவது போலவும் தனக்குப் பிடித்த பலகாரக் கடையில் பலகாரம் வாங்வது போலவும் அவனுடைய தனி இஷ்டத்தையும் மனோபாவத்தையும் திருப்தியையும் மாத்திரமே சேர்ந்ததென்றும் இவற்றுள் மற்றவர்கள் பிரவேசிப்பது அதிகப்பிரசங்கித் தனமும் அனாவசியமாய் ஆதிக்கம் செலுத்துவதுமாகுமென்றும் தான் சொல்ல வேண்டும்.

இவ்வளவு பெருமையையும் அணியையும் அலங்காரத்தையும் கொடுத்துப் பேசப்பட்ட காதல் என்பதை முன் குறிப்பிட்டபடி அது என்ன? அது எப்படி உண்டாகிறது? என்பதை யோசித்துப் பார்த்தால் யாவருக்கும் சரி என்று விளங்கிவிடும். காதல் என்கின்ற வார்த்தை தமிழா? வடமொழியா? என்பது ஒரு புறமிருந்தாலும் தமிழ் மொழியாகவே வைத்துக்கொண்டாலும் அதற்கு ஆண் பெண் கூட்டுத் துறையில் அன்பு, ஆசை, ஆவல், நட்பு, நேசம், விரகம் என்பவைகளைத் தவிர வேறு பொருள்கள் எங்கும் எதிலும் காணப்படவில்லை. அதன் வேறுவிதமான பிரயோகமும் நமக்குத் தென்படவில்லை.

அன்றியும் அகராதியில் பார்த்தாலும் மேற்கண்ட பொருளைத் தவிர வடமொழி மூலத்தை அனுசரித்துக் காதல் என்பதற்கு கொலை, கொல்லல், வெட்டுதல், முறித்தல் என்கின்ற பொருள்கள் தான் கூறப்பட்டிருக்கின்றன. மற்றப்படித் தனித் தமிழ் மொழியில் பார்த்தாலும் ஆண்பெண் சேர்க்கைக்கூட்டு முதலியவை சம்மந்தமான விஷயங்களும் அன்பு, ஆசை, நட்பு, நேசம் என்பவைகளைத் தவிர வேறு தமிழ் மொழியும் நமக்குக் காணப்படவில்லை. இவைகளுடன் காதல் என்பதைச் சேர்த்துக் கொண்டாலும் இக்கருத்துக்களையே தான் மாற்றி மாற்றி ஒன்றுக்கு மற்றொன்றாகக் கூறப்படுகிறதே தவிர காதலுக்கென்று வேறு பொருளில்லை.

ஆதலால் இவைகளன்றி காதல் என்பதற்கு வேறு தனி அர்த்தம் சொல்லுகின்றவர்கள் அதை எதிலிருந்து எந்தப் பிரயோகத்திலிருந்து கண்டு பிடித்தார்களென்பதும் நமக்கு விளங்கவில்லை.

நிற்க, இப்படிப்பட்ட காதலானது ஒரு ஆணுக்கோ பெண்ணுக்கோ எப்படி உண்டாகின்றது? அல்லது மூன்றாவது மனிதனுடைய பிரவேசத்தைக் கொண்டு உண்டாகின்றதா? ஒரு சமயம் தானாகவே உண்டாவதாயிருந்தால் எந்த சந்தர்ப்பத்தில் எந்த ஆதாரத்தின் மீது என்பவைகளைக் கவனித்தால், பெண் ஆணையோ ஆண் பெண்ணையோ தானே நேரில் பார்ப்பதாலும் அல்லது தான் மூன்றாவது மனிதர்களால் கேள்விப்படுவதாலும் உருவத்தையோ, நடவடிக்கையையோ, யோக்கியதையையோ வேறு வழியில் பார்க்க கேட்க நேரிடுவதாலுமே தான் உண்டாகக் கூடுமே தவிர இவைகள் அல்லாமல் வேறு வழியாக என்று சுலபத்தில் சொல்லிவிட முடியாது.

இந்தப் படியும் கூட ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணிடத்தில் காதல் ஏற்பட்டு அந்தப் பெண்ணுக்கு அந்த ஆணிடத்தில் காதல் ஏற்படாமல் போனாலும் போகலாம். இந்தப்படியே ஒரு பெண்ணுக்கு ஒரு ஆணிடம் காதல் ஏற்பட்டு அந்த ஆணுக்கு அந்தப் பெண்ணிடம் காதல் ஏற்படாமல் போனாலும் போகலாம். எப்படியும் ஒரு மனிதன் ஒரு வஸ்துவைப் பார்த்த மாத்திரத்தில் கேட்ட மாத்திரத்தில் தெரிந்த மாத்திரத்தில் அந்த வஸ்து தனக்கு வேண்டும் என்பதாக ஆசைப்படுகின்றானோ, ஆவல் கொள்கிறானோ அதுபோல் தான் இந்தக் காதல் என்பதும் ஏற்படுவதாயிருக்கின்றதே தவிர வேற எந்த வழியிலாவது ஏற்படுகின்றதா என்பது நமக்குப் புலப்படவில்லை.

எப்படிப்பட்ட காதலும் ஒரு சுய லட்சியத்தை அதாவது தனது இஷ்டத்தைத் திருப்தியைக் கோரித்தான் ஏற்படுகின்றதே தவிர வேறில்லை என்பதும், காதலர்கள் என்பவர்களின் மனோபாவத்தைக் கவனித்தால் விளங்காமல் போகாது.

அதாவது அழகைக் கொண்டோ, பருவத்தைக் கொண்டோ, அறிவைக் கொண்டோ, ஆஸ்தியைக் கொண்டோ, கல்வியைக் கொண்டோ, சங்கீதத்தைக் கொண்டோ, சாயலைக் கொண்டோ, பெற்றோர் பெருமையைக் கொண்டோ, தனது போக போக்கியத்திற்குப் பயன்படுவதைக் கொண்டோ அல்லது மற்றும் ஏதோ ஒரு திருப்தியை அல்லது தனக்குத் தேவையான ஒரு காரியத்தையோ குணத்தையோ கொண்டோதான் யாரும் எந்தப் பெண்ணிடமும் ஆணிடமும் காதல் கொள்ள முடியும். அப்படிப்பட்ட அந்தக் காரியங்களெல்லாம் ஒருவன் காதல் கொள்ளும் போது இவன் அறிந்தது உண்மையாகவும் இருக்கலாம் அல்லது அங்கு இருப்பதாக அவன் நினைத்துக் காதல் கொண்டு இருந்தாலும் இருக்கலாம். அல்லது வேஷ மாத்திரத்தில் காட்டப்பட்ட ஒன்றினால் இருந்தாலும் இருக்கலாம்.

உதாரணமாக ஒரு நந்தவனத்தில் ஒரு பெண் உல்லாசமாய் உலாத்துவதை ஒரு ஆண் பார்க்கின்றான். பார்த்தவுடன் அந்தப் பெண்ணும் பார்க்கின்றாள். இரண்டு பேருக்கும் இயற்கையாய் ஆசை உண்டாகிவிட்டது. பிறகு யார் என்று இவர்களில் ஒருவர் கேட்கிறார்கள். பெண் தன்னை ஒரு அரசன் குமாரத்தி என்று சொல்லுகின்றாள். இவனை யார் என்று அவள் கேட்கிறாள். உடனே ஆண் காதல் கொண்டு விடுகிறான். இவன் தான் ஒரு சேவகனுடைய மகன் என்று சொல்லுகிறான். உடனே அவளுக்கு அசிங்கப்பட்டு வெறுப்பேற்பட்டுப் போய்விட்டது. இது சாதாரணமாய் நிகழும் நிகழ்ச்சி. இங்கு ஏற்பட்ட காதல் எதை உத்தேசித்தது?

நிற்க, அவன் தன்னைச் சேவகன் மகன் என்று சொல்லாமல் தானும் ஒரு பக்கத்துத் தேசத்து ராஜகுமாரன் என்று சொல்லிவிட்டால் அவளுக்கு அதிக காதல் ஏற்பட்டு “மறுஜென்மத்தாலும்” இவனை விட்டுப் பிரியக்கூடாது என்று கருதி விடுகிறாள். நான்கு நாள் பொறுத்த பின்புதான் காதல் கொண்டவன் அரச குமாரன் அல்ல என்றும் சேவகன் மகன் என்றும் அறிந்தாள் என்று வைத்துக்கொள்வோம்.இந்த நிலையில் அந்தக் காதல் அப்படியே இருக்குமா?அல்லது இருந்தாக வேண்டுமா? என்பதை யோசித்துப் பார்த்தால் காதல் ஏற்படும் தன்மையும் மறுக்கும் தன்மையும் விளங்கும்.

இந்தப்படிக்கே ஒரு பெண்ணை நோயல்லாதவள் என்று கருதி ஒருவன் காதல் கொண்டபின் நோயுடையவள் என்று தெரிந்தது அல்லது மற்றவனுடைய மனைவி என்று தெரிந்தது அல்லது ஒரு தாசி என்று தெரிந்தது அல்லது தன்னை மோசம் செய்து தன்னிடம் உள்ள பொருளை அபகரிக்க வந்தவள் என்று தெரிந்தது. இது போலவே இன்னமும் தான் முதலில் நினைத்ததற்கு அல்லது தனது நன்மைக்கும் திருப்திக்கும் இஷ்டத்திற்கும் விரோதமாயோ தான் எதிர்பார்க்காத கெட்ட காரியத்திற்கு அனுகூலமாகவோ ஏற்பட்டுவிட்டால் அந்தக் காதல் பயன்படுமா? அதை எவ்வளவு தான் கட்டிப்போட்டாலும் அது இருக்க முடியுமா? என்பவைகளை யோசித்தால் உண்மைக்காதலின் நிலையற்ற தன்மை விளங்காமல் போகாது.

நிற்க, உண்மைக் காதல் என்பது ஒருவரை ஒருவர் பார்த்தவுடன் உண்டாகுமா? அல்லது கொஞ்ச நாளாவது பழகியவுடன் உண்டாகுமா? பார்த்ததும் ஏற்பட்ட காதல் உயர்வானதா? அல்லது சிறிது நாள் பழகிய பின் ஏற்படும் காதல் உயர்வானதா? சரீரத்தைக் கூடச் சரியாய் தெரிந்து கொள்ளாமல் தூர இருந்து பார்ப்பதாலயே ஏற்படும் காதல் நல்லதா? அல்லது சரீரத்தின் நிலை முதலியவைகள் தெரிந்து திருப்தி அடைந்த காதல் நல்லதா? என்பவைகளைக் கவனிக்கும் போது சரீர மாறுபாடாலும் பொருத்தமின்மையாலும் ஏன் எப்படிப்பட்ட உண்மைக் காதலும் மாற முடியாது? என்பதற்கு என்ன விடை பகர முடியும்? அல்லது உண்மையாகவே ஒருத்தன் ஒருத்தியுடன் காதல் கொண்டு விட்டால் ஒருத்தி தப்பாய் அதாவது வேறு ஒருவனிடம் காதல் கொண்டுவிட்டதாய்க் கருத நேர்ந்தால் அது பொய்யாகவோ மெய்யாகவோ இருந்தாலும் தன் மனதுக்குச் சந்தேகப்படும்படி விட்டால் அப்போது கூடக் காதல் மாறாமல் இருந்தால் தான் உண்மைக் காதலா? அல்லது தன் மனம் சந்தேகப்பட்டால் அதிருப்தி அடைந்தால் நீங்கி விடக்கூடிய காதல் குற்றமான காதலா?என்பதற்கு என்ன மறுமொழி பகர முடியும்?

காதல் கொள்ளும் போது காதலர்கள் நிலமை, மனப்பான்மை, பக்குவம், லஷியம் ஆகியவைகள் ஒரு மாதிரியாக இருக்கலாம். பிறகு கொஞ்சக் காலம் கழிந்த பின் இயற்கையாகவே பக்குவம், நிலைமை, லஷியம் மாறலாம். இந்த மாதிரிச் சந்தர்ப்பங்களில் காதலுக்காக ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துக் கொண்டு சதா அதிருப்தியிலும் துன்பத்திலும் அழுந்த வேண்டியதுதானா? என்று பார்த்தால் அப்போதும் காதலுக்கு வலுவில்லாததையும் அது பயன்படாததையும் காணலாம்.

ஒரு ஜதைக் காதலர்களில் அவ்விருவரும் ஞானிகளாய் துறவிகளாய் விட்டார்களானால் இந்தச் சந்தர்ப்பத்தில் ஒருவரை ஒருவர் பிரிவதும் வெறுப்பதும் காதலுக்கு விரோதமாகுமா? விரோதமானால் அப்படிப்பட்ட காதல் பயன்னடுமா? விரோதமில்லையானால் ஓருவர் ஞானியாகி துறவியாகிவிட்டால் மற்றவரை விட்டுப் பிரிந்து கொள்ளுவது காதலுக் விரோதமாகுமா? என்பதும் கவனித்தால் காதலின் யோக்கியதை விளங்காமல் போகாது. பொதுவாக மனித ஜீவன் ஒன்றைப் பார்த்து நினைத்து ஆசைப்படுவதும், ஒன்றினிடம் பலதினிடம் அன்பு வைப்பதும் நேசம் காட்டுவதும் இயற்கையேயாகும்.

அது போலவே மனிதனுக்குத் தானாகவே எதிலும் விரக்தி வருவதும் வெறுப்புக் கொள்வதும் பிரிவதும் இயற்கையேயாகும். பலவீனமாய் இருக்கும் போது ஏமாந்து விடுவதும், உறுதி ஏற்பட்ட பின்பு தவறுதலைத் திருத்திக் கொள்ள முயற்சிப்பதும், அனுபவ ஞானமில்லாத போது கட்டுப்பட்டு விடுவதும், அனுபவம் ஏற்பட்ட பிறகு விடுதலை செய்து கொள்ளுவதும் இயற்கையேயல்லவா?

உதாரணமாக ஒரு வாலிபன் ஏமாந்து ஓரு தாசியிடம் காதல் கொண்டு சொத்துக்களையெல்லாம் கொடுத்து விடுவதைப் பார்க்கின்றோம். அந்த வாலிபனுக்கு அந்தத் தாசியிடம் ஏற்பட்டது காதல் என்பதா? அல்லது காமம் என்பதா? அதே தாசி சில சமயத்தில் தனக்குத் தாசித் தொழில் பிடிக்காமல் இந்த வாலிபனிடமே நிரந்தரமாயிருந்து காலத்தைக் கழிக்கலாம் என்று கருதி விடுவதைப் பார்க்கின்றோம். ஆகவே இந்தத் தாசி கொண்டது காதலா? அல்லது வாழ்க்கைக்கு ஒரு செளகரியமான வழியா? இதை வாலிபன் அறியாமல் நேசத்தை வளர்த்துக் கொண்டே வந்தால் இது ஒத்த காதல் ஆகிவிடுமா? இப்படியெல்லாம் பார்த்தால் காதல் என்பது ஆசை, காமம், நேசம், மோகம், நட்பு என்பவைகளை விடச் சிறிது கூடச் சிறந்தது அல்லவென்பது விளங்கிவிடும்.

அதற்கு ஏதேதோ கற்பனைகளைக் கற்பித்து ஆண் பெண்களுக்குள் புகுத்திவிட்டதால் ஆண் பெண்களும் தங்கள் உண்மையான காதலர்கள் என்று காட்டிக்கொள்ள வேண்மென்று கருதி எப்படிப் பக்திவான் என்றால் இப்படி இப்படி எல்லாமிருப்பான் என்று சொல்லப்பட்டதால் அநேகர் தங்களைப் பக்திவான்கள் என்று பிறர் சொல்ல வேண்டுமென்று கருதிப் பூச்சுப் போடுவதும் பட்டை நாமம் போடுவதும் சதா கோவிலுக்குப் போவதும் பாட்டுக்கள் பாடி அழுவதும் வாயில் சிவ சிவ என்று சொல்லிக்கொண்டிருப்பதுமான காரியங்களைச் செய்து பக்திமான்களாகக் காட்டிக் கொள்ளுகின்றார்களோ அதுபோலும், எப்படிக் குழந்தைகள் துங்குவது போல் வேஷம் போட்டுக் கண்களை மூடிக்கொண்டிருந்தால் பெரியவர்கள் குழந்தைகளின் தூக்கத்தைப் பரிசோதிப்பதற்காக ‘தூங்கினால் கால் ஆடுமே’ என்று சொன்னால் அந்தக் குழந்தை தன்னைத் தூங்குவதாக நினைக்க வேண்டுமென்று கருதிக் காலைச் சிறிது ஆட்டுமோ அதுபோலும், எப்படிப் பெண்கள் இப்படி இப்படி இருப்பது தான் கற்பு என்றால் பெண்கள் அது போலவெல்லாம் நடப்பது போல் நடப்பதாய் காட்டித் தங்களைக் கற்புள்ளவர்கள் என்று காட்டிக் கொள்ளுகின்றார்களோ அதுபோலும், உண்மையான காதலர்களானால் இப்படியல்லவா இருப்பார்கள் என்று சொல்லி விட்டால் அல்லது அதற்கு இலக்கணம் கற்பித்துவிட்டால் அது போலவே நடந்து காதலர்கள் என்பவர்களும் தங்கள் காதலைக் காட்டிக் கொள்ளுகிறார்கள். இதற்காகவே அவர்கள் இல்லாத வேஷத்தையெல்லாம் போடுகிறார்கள். அதை விவரிப்பது என்றால் மிகவும் பெருகிவிடும்….

ஆகவே ஆசையைவிட, அன்பைவிட, நட்பைவிட காதல் என்பதாக வேறு ஒன்று இல்லை என்றும் அவ்வன்பு, ஆசை, நட்பு ஆகியவைகள் கூட மக்களுக்கு அ.றிணைப் பொருள்கள் இடத்திலும் மற்ற உயர்திணைப் பொருள்களிடத்திலும் ஏற்படுவதுபோல் தானே ஒழிய வேறில்லையென்றும் அதுவும் ஒருவருக்கொருவர் அறிந்து கொள்வதிலிருந்து, நடவடிக்கையிலிருந்து, யோக்கியதையில் இருந்து, மனப்பான்மையில் இருந்து, தேவையில் இருந்து, ஆசையில் இருந்து உண்டாவதென்றும் அவ்வறிவும் நடவடிக்கையும் யோக்கியதையும் மனப்பான்மையும் தேவையும் ஆசையும் மாறக் கூடியதென்றும் அப்படி மாறும் போது அன்பும் நட்பும் மாற வேண்டியது தான் என்றும், மாறக் கூடியது தான் என்றும் நாம் கருதுகின்றோம்.

ஆகவே, இதிலிருந்து நாம் பொருளாகக் கொண்ட காதல் கூடாதென்றோ அப்படிப்பட்டதில்லை என்றோ சொல்ல வரவில்லை. ஆனால் அன்பும் ஆசையும் நட்பும் மற்றும் எதுவானாலும் மன இன்பத்திற்கும் திருப்திக்குமேயொழிய மனதிற்குத் திருப்தியும் இன்பமும் இல்லாமல் அன்பும் ஆசையும் நட்பும் இருப்பதாய் காட்டுவதற்காக அல்ல என்பதை எடுத்துக் காட்டுவதற்காகவே இதை எழுதுகின்றோம். இதுவும் ஏன் எழுதவேண்டியதாயிற்று என்றால் மற்றவர்கள் திருப்தியிலும் சந்தோஷத்திலும் நுழைந்து கொண்டு தொட்டதிற்கெல்லாம் ‘இது காதலல்ல’, ‘அது காதலுக்கு விரோதம்’, ‘அது காம இச்சை’, ‘இது மிருக இச்சை’, ‘இது விபச்சாரம்’ என்பது போன்ற அதிகப் பிரசங்கித்தனமான வார்த்தைகளை ஒரு விதப் பொறுப்புமில்லாதவர்கள் எல்லாம் கூறுவதால் அப்படிப் பட்டவர்கள் கூற்றையும் கூறும் காதலையும் சற்றுப் பார்த்துவிடலாம் என்றே இதைப் பற்றி எழுதலானோம்.

(18.01.1931′குடிஅரசு’ இதழில் பெரியார் எழுதிய தலையங்கம்.)

Saturday, January 22, 2011

Dr Shalini Psychiatrist








பதின் பருவத்தின் top பத்து பிரச்சனைகள்! -Dr N Shalini Psychiatrist

குழந்தைகளாய் இருக்கும் வரை அப்பா அம்மா என்றாலே அடங்கிப்போய் அன்பாய் பழகியவர்கள் எல்லாம் இந்த பதின் பருவத்தை தொட்டு விட்டாலே போதும், புது புது பிரச்சனைகள் பல தலை தூக்கிவிடுகின்றன. இப்படி பலதரப்பட்ட பதின் பருவ பிரச்சனைகள் இருந்தாலும், மிக அதிகமாய் ஆலோசனை மையத்திற்கு வருபவை எவை தெரியுமா?


1. படிப்புல் வீக்”அஞ்ஜாம் கிளாஸ் வரைக்கும் அவ்வளவு சூப்பரா படிச்ச பிள்ளை தான், என்னனே தெரியல, வர வர படிப்புல ரொம்வ வீக்காயிட்டே போய், மார்க்கெல்லாம் சொல்லிக்கிறா மாதிரியே இல்லை” என்ற புகாருடன் வரும் பெற்றோர்களின் எண்ணிக்கை தான் மிக அதிகம். குழந்தையை அழைத்து விசாரித்தால், “எவ்வளவு படிச்சாலும் மறந்து போயிடுது” என்கிறார்கள், அல்லது, “புக்கை திறந்தாலே, பகல் கனவா வருது” என்கிறார்கள். பரிசோதித்து பார்த்தால் அநேக குழந்தைகள் புத்திசாலிகளாகவே இருந்தாலும், வெறுமனே மக் அடித்து, அர்த்தமே புரியாமல் படிக்கும் பாணி தெரியவரும். இந்த “டப்பா அடிக்கும்” பாணி எல்லாம் சின்ன கிளாஸ் சிம்பிள் பாடங்களுக்கு ஓகே. ஆனால் பெரிய கிளாஸ் போக போக, பாடங்களின் ஆழம் அதிகம், புரிந்துக்கொள்ள வேண்டிய மேட்டரின் அகலமும் அதிகம் என்பதால் இந்த மனப்பாட யுத்தி அதற்கு மேல் பிரயோஜனமே படாது. 
முழு பாடத்தையும் அப்படியே முறுக்கி பிழிந்து வெறும் முக்கியமான சாரை மட்டும் கரந்தெடுத்து, கரைத்து குடிக்கும் யுத்திகள் பல உள்ளன. நியாயமாய் பாடம் நடத்தும் ஆசிரியர்களே இந்த யுத்திகளையும் சேர்த்து மாணவர்களுக்கு சொல்லித்தந்தால் தான் கற்றவை நிற்கும் அதற்கு தக. ஆனால் என்ன செய்வது, இந்த யுத்திகளை எல்லாம் சொல்லித்தர ஆசிரைய பெருமக்களுக்கு நேரம் இல்லா காரணத்தினால், இதையெல்லாம் தனியாக சொல்லித்தர வேண்டியுள்ளது. இப்படி புரிந்து, படித்து, கிரகித்துக்கொள்ளும் யுத்திகளை தெரிந்துக்கொண்டாலே, அநேக மாணவர்கள் படிப்பில் முன்னேறி விடுகிறார்கள். அப்படியும் கொஞ்சம் முன்னே பின்னே என்று இருக்கும் மாணவர்களுக்கு மூளையை கூராக்கும் சில ஊக்க மாத்திரைகளை கொடுத்து முன்னேற்ற பார்க்கலாம்.


2. ஓவர் டென்ஷன்:அணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் பொதுவாய் எல்லா பதின்பருவக்கார்ர்களை பற்றியும் வரும் அடுத்த புகார், இந்த முன்கோபம். அது வரை சொல் பேச்சை கேட்டு, அமைதியாய் வளைய வந்த பிள்ளைகள், பருவ வயதை தொட்ட உடனே, “எல்லாம் எனக்கு தெரியும், நீங்க ஒண்ணும் சொல்ல வேண்டாம்”. என்று பெற்றோரையே எதிர்த்து பேசிவிடுகிறார்கள். சரி பிள்ளை தான் ஏதோ மனநிலையில் ஏடா கூடமாக பேசுகிறதே, நாமாவது கொஞ்சம் விட்டு கொடுத்து போவோமே என்கிற விவஸ்த்தையில்லாமல் பெற்றோர், “உன்னை எவ்வளவு கஷ்டப்பட்டு, பெத்து வளர்த்து, இவ்வளவி பெரியா ஆளாக்கினேன், என்னையே நீ....” என்று முழம் முழமாய் லெக்சர் அடிக்க ஆரம்பித்து விட, பொருத்து பொருத்து பார்த்து விட்டு, “உங்களை யாரு பெக்க சொன்னா?” என்று பொறித்து தள்ளிவிடுகிறார்கள் பிள்ளைகள். உடனே தாய் மார்கள் எல்லாம் மனமுடந்து போய், இந்த பிள்ளைக்காக நான் என்னவெல்லாம் செய்திருப்பேன், என் அருமை புரியாமன் என்னையே இப்படியெல்லாம் ...” என்று இன்னும் நொந்துப்போகிறார்கள்.
இந்த வயதில் இந்த இளைஞர்களின் ரத்த்தில் எக்கசெக்க ஹார்மோன்கள் பிரவாகமாய் சுரக்கின்றன. அதனால், தொட்டதிற்கெல்லாம் டென்ஷன், எரிச்சல், மூடி அவுட் என்று இள ரத்தம் எப்போதுமே ஒரு சல சலப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கும். எதையும் சகித்துக்கொள்ளும் தன்மை, பொருத்துபோகும் பக்குவம், அடங்கி போகும் லாவகம் எதுவுமே இந்த வயதில் ஏற்படுவதில்லை. இதை புரிந்துக்கொண்டு, பெரிசுகள் நாம் மிக பக்குவமாய், ஹாசியமாய், தோழமையாய் முக்கியமாய், பொறுமையாய் இவர்களை கையாண்டால் தான் ஹார்மோன்களின் ஆக்ரோஷம் தணிந்து அமைதியாவார்கள். இதை விட்டு விட்டு, “முளைச்சி மூணு இலை விடலை, அதுக்குள்ள இவ்வளவு திமிரா, உனக்கே இவ்வளவுனா, எனக்கு எவ்வளவு இருக்கும்” என்று போட்டிபோட்டுக்கொண்டு, அவர்களை விட அதிக முதிர்ச்சியின்மையை பெரிசுகள் வெளிபடுத்தினால், பிரச்சனை பெரிதாகிவிடும். அதனால் சிறியவர்கள் சினம் கொள்ளும் போது இந்த மாதிரி கோபதாபங்களை எப்படி நேர்த்தியாய் சமாளிப்பது என்பதை கற்றுத்தர இதையே ஒரு சந்தர்ப்பமாய் எடுத்துக்கொண்டு, பெரியவர்கள் சாந்தமாய் விஷயத்தை கையாண்டாலே போதும். மனிதர்கள் இயல்பிலேயே மற்றவர்களை பார்த்து காப்பியடித்து தான் பலதும் பற்றுக்கொள்ளும் தன்மை கொண்டவர்கள் என்பதால், முன் மாதிரி சரியாக் இருந்தால், இளைஞர்களும் தங்களை திறித்திக்கொள்வார்கள்,

3. ஓவர் கூச்சம்:”விருந்தினர் வந்தால் ஒரு வணக்கம் சொல்வதில்லை, கடைக்கு போனால், எல்லாரும் பார்க்குறாங்க, நான் இந்த பையை தூக்கீட்டு வந்தா சிரிப்பாங்கனுறது, மத்தவங்க முன்னாடி என்னை பத்தி ஏன் சொன்னேனு எல்லாரும் போன பிறகு திட்டுறது...” இப்படியாக, பதின் பருவ சிறுசுகளின் வெட்க உணர்வை பற்றி நிறைய புகார்கள் வருவதுண்டு. என்ன செய்வது, இந்த வயதில் நேரும் உடல் மாற்றங்கள் இவர்களை பிறர் எதிரில் கூசி போக செய்கிறது. போக போக இந்த கூச்சமெல்லாம் குறைந்து, முதிர்ச்சி வர வர தன்னம்பிக்கையும் தானே அதிகரித்து, “ஆமா, நான் இப்படி தான், எனக்கு என்னை பிடிச்சிருக்கு, வேறு யாருடைய அபிப்ராயமும் எனக்கு முக்கியமில்லை” என்று சுயமதிப்புக்கொள்ளவும் இவர்கள் முடிகிறது. என்ன இந்த அளவு சுவாபிமானம் வர குறைந்தது நான்கைந்து ஆண்டுகள் ஆகின்றன- அதுவரை இந்த வெட்கத்தை பெரிது படுத்தாமல் விட்டாலே, தானாய் தெளிந்து விடுகிறார்கள் இளையவர்கள். 

4. பியர் பிரஷர்.பதின் பருவத்தினருக்கு தங்கள் சமவயதுக்காரர்களின் அபிப்ராயம் மிக முக்கியம் என்று தோன்றுகிறது. இந்த சமவயதுக்காரர்கள் என்ன செய்கிறார்கள், என்ன சொல்கிறார்கள், எப்படி விஷயங்களை அனுகுகிறார்கள் என்பதை எல்லாம் மிக மும்முரமாக நோட்டம் விட்டு, அதை போலவே தானும் இருந்தால் தான் தன்னை “செட்டில் சேர்த்துக்கொள்வார்கள்” என்று அரும்பாடுபட்டு, மந்தையோடு மந்தையாய் கலந்துவிட முயல்கிறார்கள். “உன் ஃபிரெண்டு சொன்னா தான் கேட்பியா? நான் சொன்னா கேட்க மாட்டியா?” என்று பெரிசுகள் என்ன தான் தலை பாடாய் அடித்துக்கொண்டாலும் இளையவர்களின் இந்த பழக்கத்தை மாற்ற முடியாது. காரணம் பெற்றவர்களை விட இந்த மாதிரி சமவயதுக்கார peersசிடமிருந்து அதிக விஷயங்களை கற்றுக்கொள்ளூம் படியாகத் தான் மனித மூளையின் டிசைனே அமைந்திருக்கிறது. இந்த இயற்கை ஏற்பாட்டை மீறி அவர்களால் செயல் படமுடியாது. “அப்படினா, கண்டவங்களோட சேர்ந்து கெட்டு குட்டிசுவரா போயிட்டா?” என்று பெற்றவர்கள் பதைபதைக்கத் தான் செய்வார்கள். இதற்கு ஒரே வழி, உங்கள் குழந்தையின் பியர்களை பரிச்சையபடுத்திக்கொள்ளுங்கள். எந்த மாதிரி நண்பர்களுடன் பழக்கம் என்பதை நேரடியாக க்ண்காணித்தால் தானே, அவர்கள் போக்கு எப்படி என்பதை நீங்கள் சதா கண்காணிக்க முடியும். 

5. வயதிற்கு வருதல்: 
பெண்களூக்காவது பரவாயில்லை, புட்டு சுற்றுகிறேன் பேர்வழி என்று ஏரியா பெண்கள் எல்லாம் கூடி, தங்கள் வயதிற்கு வருதல் அனுபவத்தை பற்றி பேசி பகிர்ந்துக்கொள்கிறார்கள், அதனால் பெண்களுக்கு தங்கள் வயதிற்கு வரும் சமாசாரம் பற்றி தெளிவு ஏற்படிகிறது. பாவம், ஆண் குழந்தைகளுக்கு இந்த அதிர்ஷ்டம் இருப்பதில்லை. இவன் வயதிற்கு வந்தால், அம்போ என்று அப்படியே விடபடுகிறான். என்ன ஏது என்று சொல்லித்தர நாதியே இருப்பதில்லை. விளைவு, விந்து வெளியேறும் வயதுக்கு வருதல் அறிகுறியை இவன் ஏதோ பெரிய விபரீதம் என்று எண்ணி கலவரம் கொள்கிறான். இருக்கவே இருக்கிறார்கள் போலி டாக்டர்கள், இந்த சாதரண உடலியக்கத்தை பெரிய வியாதி மாதிரி பில்ட் அப் கொடுத்து இவர்கள் அச்சுறுத்த, “அய் நான் வயதுக்கு வந்துட்டேனே,” என்று எண்ணி பெருமை கொள்ள வேண்டிய வாலிவன், “அய்யோ, எனக்கு வியாதி வந்துவிட்டது” என்று தவறாக எண்ணி கவலை கொள்கிறான்.
”விந்து வெளியேறி விட்டது, அதனால் சாக்க்கிடக்கிறேன்” என்ற வகை புகாருடன் ஆலோசனை பெற வரும் இளைஞர்களின் எண்ணிக்கை நல்ல வேலையாக இப்போதெல்லாம் குறைந்துக்கொண்டு வருகிறது. தமிழ் நாட்டு ஆண் சிங்கங்கள் எல்லாம் அறிவியலை புரிந்துக்கொண்ட அறிவாளிகள் ஆகிவிட்டார்கள் போல. அப்படியே, தப்பித்தவறி, ஒன்றிரண்டு ஆண்கள் இந்த பிரச்சனையோடு வந்தாலும், அவர்களது பயத்தை கிளப்பும் மூட நம்பிக்கைகளை தெளிவு படுத்தி, அநாவசிய பதட்டத்தை தணிக்கும் மருந்துகளை கொடுதாலே போதும், ”இதெல்லாம் ஒரு மேட்டருனு யாராவது கவலைபடுவாங்களா!” என்று மாறிவிடுகிறார்கள் ஆண்கள் எல்லாம்.

6. சுய இன்பம்: என்ன தான் வேற்று கிரகத்தில் கொண்டு போய் வைத்து எவர் சவகாசமும் இல்லாமல் குழந்தையை மஹா பவித்திரமாக வளர்க்க வேண்டும் என்று பெற்றோர்கள் முயன்றாலும் பருவ வயது வந்ததுமே பாலுணர்வும் தலை தூக்கிவிடும். நூறு ஆண்டுகளுக்கு முன் என்றால் இந்த பருவம் வந்த உடனே திருமணம் என்று ஒன்றை நடத்தி, ஒரு கலவியல் துணையை பெற்றோரே ஏற்பாடு பண்ணித் தந்திருப்பார்கள், தாபம் தோன்றும் போதெல்லாம் தாம்பத்தியம் கொள்ள ஏதுவாக இருந்துருக்கும். ஆனால் இந்த நூற்றாண்டிலோ, வயதிற்கு வந்து பல வருடங்கள் கழித்து தான் திருமணம் என்று நிலைப்பாடுகள் மாறிவிட்டன. இதை பற்றி எல்லாம் சட்டையே செய்யாமல் இயற்க்கை இன்னமும் அதே பதிமூன்று – பதினேழு வயதிற்குள் எல்லோரையும் வயதிற்கு வர வைக்க, கூடவே தலையெடுக்கும் உடல் ரீதியான தேவைகளை எப்படி சமாளிப்பது என்று யாருமே சொல்லி தருவதில்லை. தாபம் ஏற்படும் போதெல்லாம் தன்னை தானே சாந்தப்படுத்திக்கொள்ளும் டெக்னிக்கை அநேகமாக எல்லா ஆண்களும் சுயமாகவே தெரிந்துக்கொள்கிறார்கள். ஆனால் இது ஒரு பெரிய குற்றம் என்று சிலருக்கு தோன்றுவதால், கவலை பட ஆரம்பித்துவிடுகிறார்கள். ஆனால் இதில் பெரிய ஆட்சரியம் என்ன தெரியுமா? அமெரிக்கா, ஐரோபா, ஆஸ்திரேலியா, ஸ்காண்டினேவியா மாதிரியான பகுத்தறிவு அதிகம் உள்ள நாடுகளில் எந்த ஆணும் சுயஇன்பத்தை பெரிய தவராகவே நினைப்பதில்லை. பாலில்லாத குறையை போக்க, குழந்தை கையை சுவைப்பது போல, துணையில்லா சமயத்தில் தாபத்தை தணிக்க இது ஒரு சிம்பிள் டெக்னிக், இதில் பெரிதாக ஃபீல் பண்ண என்ன இருக்கிறது என்பது இவர்களது மனப்பான்மை. ஆனால், இந்தியா, ஆப்பிரிக்கா, சீனா ஆகிய நாடுகளில் தான், அதுவும் படிக்காத ஆண்களிடம் தான் சுய இன்பத்தை பற்றின அநாவசிய பயங்களும் குற்ற உண்ர்வும் இருக்கிறது. இதில் பெரிய வேடிக்கை என்ன தெரியுமா? இதே இந்தியாவில் தான் அந்த காலத்தில் ’ஜீவ காருண்யம்’ என்ற பெயரில், பொது இடங்களில் நடுகல்லை நிறுத்திவைக்கும் வழக்கம் ஒரு தர்ம காரியமாய் கருதப்பட்டு, பலரால் பின்பற்ற பட்டது. நடு கல்லை நடுவதில் என்ன பெரிய ஜீவ காருண்யம் என்று யோசிக்க தோன்றூகிறதா? போகிற வருகிற மிருகங்களுக்கு மதம் பிடித்தால், இந்த கல்லில் உராய்து சாந்தபடுத்த உதவுவது, புண்ணியங்களில் சிறந்த புண்ணியமாய் கருதப்பட்ட்து. ஆக, மிருகங்கள் சுய இன்பம் புரிய கூட சாதனங்களை ஏற்பாடு செய்து கொடுத்த கலாச்சாரத்தில், மனிதன் சுய இன்பம் கொள்வதை பற்றி இத்தனை மூட நம்பிக்கைகள் தோன்றியது வேடிக்கை தான்! ஆக, மனிதர்கள் உட்பட, எல்லா ஜீவராசிகளிலும் தகுந்த துணை இல்லாத போது சுய இன்பம் கொள்வது என்பது இயல்பான ஒரு நடவடிக்கையே. என்ன, நடுகல்லே கதி என்று இதே வேலையாய் இருக்காமல், விளையாட்டு, படிப்பு, பாட்டு, கூத்து, கேளி, கும்மாளம் என்று வேறு பல வழிகளிலும் சுகம் காணும் தன்மையை வளர்த்துக்கொண்டால், இன்பம் கொள்ளை கொள்ளையாகுமே!

7. முதல் காதல்: 
மூளை சுரக்கும் ஹார்மோன்கள் ஏற்கனவே எதிர் பாலின கவர்ச்சியை தூண்டிவிட, கூடவே உடகங்களும், அதன் ஊக்கத்தால் நண்பர்களும் ”சூப்பரா இருக்கும் செய்து பார்”, என்று காதலை பெரிதும் சிபாரிசு செய்ய, கேட்க வேண்டுமா! காதல் என்கிற போதை இளமனதுகளை ஈர்க்க ஆரம்பித்துவிடுகிறது. இதனால் “எட்டாவது தான் படிக்கிறா, அதுக்குள்ள காதல் என்ன வேண்டி கிடக்குது. வயசுக்கு மீறுன வேலையெல்லாம் செய்யுறாளே” என்று பதறும் தாய்மார்கள் பலர்.
உண்மை என்ன தெரியுமா? பதிமூன்று வயதில் ஒரு பெண் காதல் வயப்படுவதென்பது வயதிற்கு மீறிய செயலே இல்லை. மனிதன் தோன்றிய காலம் முதல் பெண்களுக்கு முதல் காதல் ஏற்படும் வயதே இது தான். முதல் காதல் என்றால், இன்னும் நிறைய முறை வேறு காதல் வருமோ என்கிறீர்களா? ஆமாம். உயிர் உள்ள வரை எதிர் பாலினத்தின் மேல் ஈர்ப்பும் அவ்வப்போது காதலும் ஏற்படும் படியாக தான் இயற்கை மனிதர்களை வடிவமைத்துள்ளது. அதனால் மகள் காதல் கொண்டு விட்டாளே என்று ஓவராய் பதராதீர்கள். அந்த வயதில் முதல் காதல் கொள்வது அவள் உடம்பில் ஹார்மோன்கள் நார்மலாய் ஊருகின்றன, அவள் ஒரு நார்மல் பெண் என்பதற்கான அறிகுறி. 
ஆனால் இது அவளுக்கு முதல் அனுபவம் என்பதால் சினிமாவில் வருவது போல காதல் மஹா அழகான, புனிதமான உணர்வு என்றெல்லாம் அவள் தவறான கற்பனையில் மிதக்கக்கூடும். உடனே அத்தை, மாமி என்று யாராவது ஒரு பெண் உறவினரை பிடியுங்கள். அல்லது ஒரு கவின்சிலரை அனுகுங்கள். முதல் காதல் சொதப்பல்களை பற்றி விளையாட்டாக பேசி புரியவைத்தாலே, ’ஓகோ, இது இந்த வயதில் எல்லோருக்கும் ஏற்படுகின்ற ஒரு மிக சாதாரண் உணர்ச்சி தான்’, என்பதை புது இளைஞி புரிந்துக்கொள்வாள். இந்த புரிதலே அவள் முதல் காதலின் புனிதத்துவத்தை குறைத்து விடும் என்பதால், கொஞ்ச நாள் கழித்து இந்த உணர்வு அவளுக்கே போரடிக்க ஆரம்பித்துவிடும். சினிமாவில் சொல்வது போல காதல் அவ்வளவு ஒன்றும் ஸ்வாரசியமான உணர்வு இல்லை என்று புரிந்த்துமே, அதன் போதையிலிருந்து அவள் வெளி வந்துவிடுவாள்.

8. மூட் அவுட்
பதின் பருவத்தினர் பலரும் அடிக்கடி மனநிலை மாற்றங்களுக்கு உள்ளாவதால், திடீர் கோவம், திடீர் அழுகை, திடீர், “என்னை கண்டாலே யாருக்கு பிடிக்கல!” மாதிரியான உணர்ச்சிவெடிப்புக்கள் ஏற்படுகின்றன. மூளையின் நரம்புகள் இந்த வயதில் அதிகமாக வளருவதால் அடிக்கடி சிக்காகி விடுவதாலும், புதிதாய் ரத்ததில் ஓடும் ஹார்மோன்கள் இன்னும் ஒருனிலைபடாததாலும் இந்த வயதுக்காரர்களுக்கு அடிக்கடி இப்படி மூட் அவுட் ஆவது சகஜம். பெண் குழந்தைகள் “என்னை யாருமே புரிஞ்சிக்க மாட்டேன்றாங்க!” என்று புலம்பி அழுவதும், ஆண்கள் “என்னை கவனிக்கிறதே இல்லை” என்றி எரிந்துவிழுவதும் உங்கள் மேல் உள்ள கோபத்தினால் அல்ல, ரசாயண ஸ்ருதிபேதத்தினால். அதனால் சிறுசுகளோடு சரி சம்மாய் கத்தி சண்டையை பெரிதாக்காமல், அந்த நேரத்திற்கு அமைதி காத்து, பிறகு விளக்கம் தந்து புரியவைக்க முயன்றால் தான் குடும்ப நிம்மதியை காப்பாற்ற முடியும்.

9. ஆக்ரோஷம். 
குறிப்பாக நிறைய இளைய ஆண்களை அவர்களது பெற்றோர்கள் இந்த காரணத்திற்காக தான் சிகிச்சைக்கை அழைத்து வருகிறார்கள். “முன்னெல்லாம் அவன் உண்டு அவன் வேலை உண்டுனு குட் பாயா இருந்த பையன் தான். பெரியவங்கன்னா அவ்வளவு மரியாதையா இருந்த பிள்ளை, இப்ப எல்லாம், நீ சொன்னா, நான் கேட்கணூமானு எதிர்த்து பேசுறான். அடிக்க கைய ஓங்குனா, பதிலுக்கு அடிக்க வர்றான். நேத்து ஏதோ திட்டினேனு ரிமோட்டை தூக்கிஎரிஞ்சதுல அது ஒடஞ்சே போச்சு. எங்கிருந்து தான் அவனுக்கு இவ்வளவு ஆத்திரம் வருதோ?”
வேறெங்கும் இல்லை. அதே ஹார்மோன்கள் தான். ஆண் குழந்தை வயதிற்கு வருவதே டெஸ்டோஸ்டீரான் என்ற ஹார்மோனின் சுரத்தலால் தான். இந்த ஹார்மோன் சுரக்க ஆரம்பித்து விட்டால், ஆக்ரோஷம் ததும்ப அரம்பித்துவிடும், உடல் பலம் அதிகரித்து விடும், எதிலுமே வேகம், வீரம், அவசரம் என்கிற போக்கு ஏற்படும். பழக பழக டெஸ்டோஸ்டீரானின் இந்த தன்மையை எப்படி சாமார்தியமாய் கையாள்வது என்பதை இவர்கள் காலப்போக்கில் கற்றுக்கொள்வார்கள் தான் என்றாலும் வயதிற்கு வரும் போதே இந்த உணர்ச்சி மேலாண்மை எதுவும் சாதியமாவதில்லை தானே. அதனால் தோலுக்கு மேல் வளர்ந்த பிள்ளையை ஓவராய் மிரட்டி அவன் “நானும் ஆம்பிளை தான்” என்கிற ஆக்கிரோஷத்தை கிளறாமல் முடிந்த மட்டும் அன்பாய் பேசி, தண்டத்தை எடுக்காமல் வெறும் சாம, தான, பேத முறைகளிலேயே இளம் ஆண்களை கையாள்வது தான் புத்திசாலி தனம்.

10. தீயவை தீய பயத்தலால்.....குழந்தை பருவம் போய் வாலிய வயதை அடைய போகும் எக்களிப்பில், எதை எதையோ பரிட்சை செய்து பார்க்க தோன்றும் இள மனம். புகை, மது, மாது, பிற போதை வஸ்துக்கள் என்று களவும் கற்றுமறக்க முயலும் வயது இது தான். இந்த போதை வஸ்துக்கள் கூட ஒரு வகையில் மனிதர்களை தரம் பிரித்து யார் பிழக்க தோதானவர்கள் என்று சோதித்து பார்க்கும் ஒரு test for survival தான். இத்தனை வகை போதை பொருட்கள் இருந்தும் யார் இதில் எதுவும் மாட்டிக்கொள்ளாமல் தப்பித்து பதின் பருவத்தை தாண்டி வருகிறார்களோ, அவர்களே வாழ்வை ஜெயிக்க லாயக்கான புத்திசாலிகள் ஆகிறார்கள். ஏன் தெரியுமா? பெட்டிக்கடையில் சின்ன சின்ன பாக்கெட்டில் தொங்கும் வாசனைமிக்க பான் ரக பொருளானாலும், ஃபாரின் சரக்கு, ஒஸ்தி சரக்கு, லோக்கல் சரக்கு என இந்த வகை மது பானமானாலும், அவ்வளவு ஏன், சட்டம் போட்டு தடுக்கப்படும் மிக மோசமான போதை பொருட்களானாலும், அவை எல்லாமே அடிப்படையில் வேலை செய்கின்ற விதம் ஒன்று தான். மூளையின் இன்ப மையத்தை தூண்டி, மதி மயக்குகின்றன. அத்தோடு, ஆண்மை/பெண்மை திசுக்களை அழித்து விடுகின்றன. ஆக, போதை வயப்பட்ட மனிதர்கள் இனபெருக்க வாய்ப்பை இழப்பது தான் இயற்கையின் ஏற்பாடு. இந்த விவரங்கள் எல்லாம் சிறுசுகளுக்கு தெரியாதென்பதால் விளையாட்டு தனமாய் போதை பொருட்களை பயன்படுத்த ஆரம்பித்துவிடுகிறார்கள். ஆனால் ஒரு முறை மட்டுமே உபயோகித்தாலும், உடனே தொற்றிக்கொள்ளூம் தன்மை இருப்பதனால் தானே அதை போதை பொருள் என்றே சொல்கிறோம். ஆக சர்வைவலுக்கு ஃபிட் ஆன புத்திசாலிகள் அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில் என்று இந்த பழக்கதுக்கே ஒரு பெரிய கும்பிடு போட்டு ஜகா வாங்கிவிடுவார்கள்.

எவ்வழி பெரிசுகள்...
என்ன இருந்தாலும் பதின் பருவம் என்பது காற்றாற்று வெள்ளம் மாதிரி ஹார்மோன்கள் எந்த பதபடுத்தலும் இன்றி பச்சையாய் ஓடும் வயது. இந்த வெள்ளத்தை எப்படி அனைகட்டி அமோக விளைச்சலுக்கு ஆட்படுத்துவது என்று சொல்லித்தர யாரவது தேவை. அப்பா அம்மா, அண்ணன் அக்கா, ஆசிரியர், மதகுரு ஆகிய பெரிசுகள் எல்லாம் மொக்கை போடுங்கள், பெரிதாய் லெக்சர் அடிப்பார்கள். இப்படி இல்லாமல் தம்முள் ஒருவராய் இருந்து கேலிபேச்சு, சிரிப்பு, கலகலப்புடனே ”சரக்கு வேண்டாம் மச்சி, இனிக்கு கிரவுண்டு பக்கம் போய் கலாய்சிட்டு வரலாம்” என்று வாழ்வியல் வித்தைகளை சுலபமாக சொல்லித்தரும் ஒரு சீனியரின் ஜாலி டிப்ஸ் இருந்தால் இளைஞர்கள் எப்போதுமே சரியான தடத்தில் இருக்க உதவும். 
இளைஞர்களுக்கு விளையாட்டாய் விவரங்களை சொல்லித்தர எப்போதுமே ஒரு மூத்த ஸ்நேகிதர் தயாராக இருப்பது அவசியம். சும்மா இளைஞர்களை குறை சொல்லிக்கொண்டில்லாமல் நம்மை போன்ற பெரிசுகள் எல்லாம் இப்படிப்பட்ட ஜாலியான சீனியர்களாய் மாறினாலே போதும், பதின் பருவ பிரச்சனைகளை தாண்டி பிரமாதமாய் வெளிவந்துவிடுவார்கள் நம் இளைஞர்கள்.


My Blog

email: psrfindia@gmail.com

தமிழில்
just psychobabble
Psychiatric Services and Research Foundation
my adventures in psychiatry!