Showing posts with label மனோதத்துவம் (Psychology). Show all posts
Showing posts with label மனோதத்துவம் (Psychology). Show all posts

Saturday, October 8, 2011

நகுலன் கவிதைகள்

நல்ல கதைகளை படிக்கும்போதும், நுட்பமான உறவுகளை எடுத்து சொல்லும்
சினிமாக்களை பார்க்கும்போதும் அவை ஏற்படுத்தும் பாதிப்பு முழுவதுமாக
விலக சில நாட்கள் பிடிக்கும். இந்த உணர்வுகள் கதை, சினிமாக்களுக்கு
மட்டுமல்ல கவிதைகளுக்கும் உண்டு என்பது சில கவிதைகளை வாசிக்கும்
போது உணர முடியும். தற்செயலாக நகுலன் அவர்களின் கவிதை ஒன்றினை
ஆ.வியில் படித்தேன். படித்து முடித்த பிறகும் அதன் பாதிப்பு என்பது
என்னை விட்டு விலக வெகு நேரமாயிற்று.

Photobucket - Video and Image Hosting

பொதுவாக கவிதை என்பது எது என்ற புரிதலே இல்லாமல் நானும் சில
கவிதைகள் எழுதியிருக்கிறேன். பின்னாளில் நானே வாசிக்கும்போது அபத்தம்
போல தோன்றுவது மறுக்க முடியாத ஒன்று.

"நான் இறந்த பிறகு எனக்கு அஞ்சலிக் கூட்டங்கள் நடத்த
வேண்டாம். ஏனென்றால், என்னால் வர முடியாது"


தன்னை பார்க்க வரும் இலக்கிய நண்பர்கள் விடைபெறும்போது, அவர்களிடம்
நகுலன் கடைசியாக வைக்கும் வேண்டுகோள் இதுதான். தமிழ் இலக்கியப்
பரப்பில் குறிப்பிடத்தகுந்த எழுத்தாளரான இவர் தற்போது வசிப்பது திருவனந்த
புரத்தில், தனிமையில் வசிக்கிறார்.

Photobucket - Video and Image Hosting

தமிழில் யாரையும் பின்பற்றிப் போகாத தனிப்பட்ட ஆளுமையும் மௌனத்தில்
எரியும் மகத்தான மொழியும் நகுலனுடையவை.தற்போது எழுதுவதை முற்றிலும்
நிறுத்திவிட்டார். தற்போது நகுலனின் அவர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைத்
தொகுப்பை வெளியிட்டுள்ளது காவ்யா பதிப்பகம்.

இனி அவரின் கவிதைகள்!

எந்தப் புத்தகத்தை
படித்தாலும்
நமக்குள் இருப்பதுதான்
புஸ்தகத்தில்
எழுதியிருக்கிறது
அதை மீறி ஒன்றுமில்லை!


இருப்பதற்கென்றுதான்
வருகிறோம்
இல்லாமல்
போகிறோம்!


என்னைப் பார்க்க வந்தவர்
தன்னைப் பார்
எனச் சொல்லிச் சென்றார்!



வேளைக்குத் தகுந்த
வேஷம்
ஆளுக்கேற்ற
அபிநயம்
இதுதான்
வாழ்வென்றால்
சாவதே சாலச் சிறப்பு!


எனக்கு
யாருமில்லை
நான்
கூட!

யாருமில்லா பிரதேசத்தில்
என்ன நடந்துகொண்டிருக்கிறது?
எல்லாம்!


நீயிருக்க
நானிருக்க
நேற்று
இன்று
நாளை
என்ற நிலை
ஒன்றும் இல்லை
ஒன்றுமே இல்லை!


உன்னையன்றி
உனக்கு வெறு யாருண்டு?


ஆர்ப்பரிக்கும் கடல்
அதன் அடித்தளம்
மௌனம்; மகா மௌனம்!


முக்கோணம்
முடிவில்
ஒரு ஊசி முனை ஞானம்!


வந்தவன் கேட்டான்
"என்னைத் தெரியுமா?"
"தெரியவில்லையே"
என்றேன்.
"உன்னைத் தெரியுமா"?
என்று கேட்டான்.
"தெரியவில்லையே"
என்றேன்.
"பின் என்னதான் தெரியும்"
என்றான்.
"உன்னையும் என்னையும் தவிர
வேறு எல்லாம் தெரியும்"
என்றேன்!


எழுத்தாளனுக்கும்
வாசகனுக்கு
நடுவில்
வார்த்தைகள்
நி
ற்
கி
ன்

ன!




இதிலும் சில கவிதைகள் புரியாததுபோல தோன்றினாலும் எல்லாமே ஆழமான
அர்த்தங்கள் கொண்டவை.

Monday, May 9, 2011

தகவல் தொடர்பில் உடல் மொழியின் பங்குதகவல் தொடர்பில் உடல் மொழியின் பங்கு


தகவல் தொடர்பு(Communication) என்பது ஒருவர் தமது கருத்துக்களை, தமது தேவைகளை பிறருக்கு அறிவிப்பது ஆகும். ஆராய்ச்சிகள் பல, விலங்குகள், பறவைகள், ஏன், மரம் செடி கொடிகள் கூட தகவல்களைத் தமக்குள் பரிமாறிக்கொள்கின்றன என்று கூறுகின்றன. ஆனால், மனித இனமானது பேசவும் எழுதவும் மொழியைப் பயன்படுத்துவதன் மூலம் தகவல் தொடர்பின் உயரிய நிலையில் உள்ளது. இருந்தாலும், ஒருவருக்கொருவர் நேர்முகமாகப் பேசுகையில் நமது அடிப்படைத் தகவல் தொடர்பு சாதனம் உடல் மொழியே(Body Language) ஆகும். அது மட்டுமல்ல, ஒவ்வொரு நாட்டினரும் பேசும் மொழி மாறுபடலாம். ஆனால் உடல் மொழி பொதுவாக மனித இனம் முழுவதற்குமே பொதுவானது. பசிக்கிறது என்பதற்கு வயிற்றைச் சுட்டிக்காட்டினாலும், போதும் என்பதற்குக் கையை உயர்த்திக்காட்டினாலும் எல்லாருமே புரிந்துகொள்ளலாம்தானே.

body-languageநாம் பேசவும் எழுதவும் பல மொழிகளைப் பயன்படுத்துகிறோம். ஆனால் ஒருவருடன் நேரில் பேசுகையில், தகவல் தொடர்பினைச் செயல்படுத்துவதில் நாம் பேசும் வார்த்தைகளின் பங்கு, அதாவது பேசும் மொழியின் பங்கு எவ்வளவு தெரியுமா? வெறும் ஏழே சதவீதம்தான். ஏறத்தாழ முப்பத்து எட்டு சதவீதம் பங்கு நாம் பேசும் தொனிக்கு (அதாவது குரலில் ஏற்படும் மாறுபாட்டிற்கு-Vocal). ஒருவர் மகிழ்ச்சியாக இருக்கிறாரா அல்லது வருத்தமாகவோ கோபமாகவோ இருக்கிறாரா என்பதை அவர் குரலை தொலைபேசியில் கேட்டால் கூட நம்மால் உணர முடியுமல்லவா?
தகவல் தொடர்பில் மீதம் ஐம்பத்து ஐந்து சதப் பங்கினை வகிப்பது நமது உடல் மொழி ஆகும். ஒருவர் முகத்தினை, அவர் அமர்ந்திருக்கும் விதத்தை, வைத்து அவரது மனநிலையை நாம் கணிக்கிறோம்தானே? அதிலும் உடல்மொழியில், குறிப்பாகக் கண்பார்வையின் பங்கு மிக அதிகம். ஒருவர் கண்ணைப் பார்த்தே அவரது உணர்வைப் புரிந்துகொள்ளலாம் என்பார்கள். அதைப் பார்த்துப் புரிந்துகொள்ள எதிராளிக்குக் கண் அவசியமல்லவா? இதிலிருந்து நாம் அறிந்துகொள்வது என்னவென்றால் தகவல் தொடர்பில் பெரும்பங்கினை, அதாவது தொண்ணூற்று மூன்று சதவீதப் பணியினை, உடல்மொழி மற்றும் குரல்தான் வகிக்கிறது. எனவே,அத்தகைய உடல் மொழியை நாம் புரிந்துகொள்வதும், நமது உடல் மொழியினை நேர்மறையானதாகவும், செம்மையானதாகவும் மாற்றிக்கொள்வதும் தகவல் தொடர்பில் நாம் வெற்றிபெற அவசியமாகிறது.
இதைத் திருவள்ளுவர் எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்பே உணர்ந்துள்ளார் என்பதை 'குறிப்பறிதல்' (பொருட்பால்) என்ற அதிகாரமும், அதில் உள்ள குறள்களும் தெரிவிக்கின்றன.

'குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள்
என்ன பயத்தவோ கண்'
 (குறள்- 705) என்ற குறளில், பிறரது முகத்தைக் கண்டு அவரது உள்ளக் குறிப்பினை அறிய இயலாதவருக்குக் கண் என்ற ஒரு உறுப்பு இருந்து என்ன பயன் என்று கேட்கும் திருவள்ளுவர், தமது அடுத்த குறட்பாவில்
'அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்'
. (குறள் -706) என்று உடல் மொழியில் முக்கியப் பங்கு வகிக்கும் முகத்தினைப் பற்றிக் கூறுகிறார். (பொருள்- தன்னை அடுத்திருக்கும் பொருளை, பக்கத்தில் இருக்கும் பொருளைக் காட்டும் கண்ணாடி போல், மனம் நினைப்பதை வெளிக்காட்டக்கூடியது முகமாகும்)

மேலும் ஒருவனது மனநிலையை, அவன் மகிழ்ச்சியுடன் இருக்கிறானா, வெறுப்புடன் இருக்கிறானா என்பதைக் காட்டும் அளவுகோல் முகமே என்பதை
'முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும்
காயினும் தான்முந் துறும்.'

என்ற தமது 707ம் குறளில் கூறுகிறார் அவர்.

உடல் மொழியில் கண்ணின் பங்கே மிக அதிகம் என்பதையும் கீழ்க்கண்ட குறள்கள் மூலம் தெளிவாக்குகிறார் திருவள்ளுவர்.

'பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின்
வகைமை உணர்வார்ப் பெறின்'

(குறள் 709; பொருள் - ஒருவன் நமக்குப் பகைவனா நண்பனா என்பதை, கண்ணின் தன்மை அறிந்தவர்களுக்கு எதிராளியின் கண்ணே கூறிவிடும்)
'நுண்ணியம் என்பார் அளக்குக்கோல் காணுங்கோல்
கண்ணல்லது இல்லை பிற'

(குறள் 710; பொருள் - கூரிய அறிவு படைத்தவர்கள், பிறரைக்குறித்து, பிறர் மனநிலை குறித்து அளவிடப் பயன் படுத்துவது கண்ணைத்தவிர வேறொன்று இல்லை)

உடல்மொழியின் சில கூறுகள்:
ஒருவரது அருகாமை அல்லது தொலைவு(Proximity), அவர் நிற்கும் விதம், கைகள் மற்றும் கால்களை அவர் வைத்திருக்கும் விதம்(Posture), முக பாவனைகள்(Facial Expressions), அவர் பார்வை(Eye contact) இவை எல்லாம் உடல் மொழியின் சில கூறுகள் ஆகும்.

ஒருவர் தமக்கு முன் பின் அறிமுகமற்றவரின் அருகில் நிற்கும்பொழுது அல்லது தமக்குப் பிடிக்காதவர் ஒருவருடைய அருகில் உள்ள இடைவெளியானது தமது நண்பர் அல்லது உறவினரது அருகில் இருக்கின்ற பொழுது உண்டாகும் இடைவெளியை விட அதிகமாக இருக்கும். மனத்தின் நெருக்கம் அதிகரிக்க அதிகரிக்க, இந்த இடைவெளி குறைவதுண்டு. இந்த இடைவெளி மிக நெருங்கிய உறவாகிய தாய்-மகன்/மகள், கணவன்- மனைவி இவைகளில் மிகமிகக் குறைவாக இருக்கும். அதே போல் உயரதிகாரியின் அருகில் அவரின் கீழ் பணிபுரிபவர் நிற்பதற்கும், தமது சக ஊழியர் அருகில் நிற்பதற்கும் மிகுந்த வேறுபாடு காணப்படும். இந்த அருகாமை அல்லது தொலைவு இருவருக்கிடையே உள்ள அன்பின் நெருக்கத்தையோ, அல்லது ஒருவரது பதவி, அந்தஸ்து வேறுபாடுகளையோ சுட்ட வல்லது.

நிற்கும்/அமரும் விதம்: ஒருவர் நம் பேச்சை ஆர்வத்துடன் கேட்கிறாரா என்பதை அவர் நிற்கும் அல்லது அமரும் விதத்தில் இருந்தும், அவர் கைகளை வைத்திருக்கும் நிலையில் இருந்தும் அறிய இயலும். ஒருவர் முன்னோக்கியோ, பக்க வாட்டிலோ சாய்ந்து அமர்ந்துகொண்டு, நமது கண்களைக் கவனிப்பாராயின் அவர் நமது பேச்சை இரசிக்கிறார் என்று பொருள் கொள்ளலாம். அவர் பின்புறம் சாய்ந்துகொண்டும், பார்வையை வேறு எங்கோ நிலைக்கவைத்தும், அல்லது அமர்ந்திருக்கும் நிலையை அல்லது நிற்கும்பொழுது கால்களை அடிக்கடி மாற்றிக்கொண்டும் நின்றால் அவர் நமது பேச்சினால் கவரப் படவில்லை, சலிப்படைந்துவிட்டார் என்று புரிந்துகொள்ளவேண்டும். அதே போல், கைகளைக் கட்டிக்கொண்டு விறைப்பாக நிற்பாரானால் நமது கருத்தினை அவர் ஒப்புக்கொள்ளவில்லை என்று அர்த்தம்.

முக பாவனைகள்: ஒருவர் முகத்தில் இருக்கும் புன்னகை, புருவத்தை வைத்திருக்கும் விதம், உதடுகளை மூடியிருக்கும் தன்மை இவை அவரது மனநிலையைத் தெளிவாகக்கூற வல்லவை. புன்னகையைப் பார்த்தே அது மகிழ்ச்சியில் உண்டான புன்னகையா, கேலிப்புன்னகையா அல்லது துயரத்தாலோ வெறுப்பாலோ உண்டான புன்னகையா என்று இனம் பிரித்துவிட இயலும். அதே போல் புருவங்கள் நெறிவது சினத்தின் அடையாளமாகவும், புருவங்களை உயர்த்துவது வியப்பின் அடையாளமாகவும், முகத்தைச் சுளிப்பது அருவருப்பின் அடையாளமாகவும் இருப்பது நாம் அனைவரும் அறிந்ததே!

கண்கள்: கண்களை முகத்தின் வாயில் என்று சொல்வதுண்டு. ஒருவர் கண்ணை மட்டும் பார்த்தே அவர் கூறுவது உண்மையா பொய்யா என்று அறிய இயலும். அதனால்தான் யாராவது பொய் சொல்கிறார் என்று தோன்றுகையில் 'கண்ணைப்பார்த்துப் பேசு' என்கிறோம். ஒருவர் மற்றவர் கண்களைச் சந்திப்பதில் இருந்தே அவரது தன்னம்பிக்கை, நேர்மை இவற்றை உணர முடியும். ஒருவர் பேசுகையில் மற்றவர் கண்களைப் பார்ப்பதைத் தவிர்ப்பது எதிர்மறையாகக் கருதப் படுகிறது. பொய், விருப்பமின்மை, பதட்டம் இவற்றை அவை சுட்டுகின்றன. கேட்பவர் பேசுபவரின் கண்களைப் பார்ப்பதைத் தவிர்ப்பது ஆர்வமின்மை, சலிப்பு, பேசுபவர் மீது உள்ள கோபம் அல்லது வெறுப்பு முதலியவற்றைக் காட்டுகிறது.

இவ்வாறு உடல்மொழி உணர்த்தும் ஃபீட்பேக்கைத் தெரிந்து கொள்வோமானால், எதிராளியின் மன நிலையைப் புரிந்துகொண்டு தகவல் தொடர்பை மேற்கொள்ள முடியும். இதுவே நாம் தகவல் தொடர்பில் வெற்றி பெறச் சிறந்த வழி. தகவல் தொடர்பில் வெற்றி பெறுபவர் தனிப்பட்ட வாழ்விலும், தொழிலிலும் மேம்பாடு காண்பதும் உறுதி!!!தகவல் தொடர்பு(Communication) என்பது ஒருவர் தமது கருத்துக்களை, தமது தேவைகளை பிறருக்கு அறிவிப்பது ஆகும். ஆராய்ச்சிகள் பல, விலங்குகள், பறவைகள், ஏன், மரம் செடி கொடிகள் கூட தகவல்களைத் தமக்குள் பரிமாறிக்கொள்கின்றன என்று கூறுகின்றன. ஆனால், மனித இனமானது பேசவும் எழுதவும் மொழியைப் பயன்படுத்துவதன் மூலம் தகவல் தொடர்பின் உயரிய நிலையில் உள்ளது. இருந்தாலும், ஒருவருக்கொருவர் நேர்முகமாகப் பேசுகையில் நமது அடிப்படைத் தகவல் தொடர்பு சாதனம் உடல் மொழியே(Body Language) ஆகும். அது மட்டுமல்ல, ஒவ்வொரு நாட்டினரும் பேசும் மொழி மாறுபடலாம். ஆனால் உடல் மொழி பொதுவாக மனித இனம் முழுவதற்குமே பொதுவானது. பசிக்கிறது என்பதற்கு வயிற்றைச் சுட்டிக்காட்டினாலும், போதும் என்பதற்குக் கையை உயர்த்திக்காட்டினாலும் எல்லாருமே புரிந்துகொள்ளலாம்தானே.


Friday, April 1, 2011

உளவியல்

1 மரணம் உறுதியானபின்பு ஏற்படும் பயத்தை எப்படி எதிர்கொள்வது?வ.க.கன்னியப்பன்
2 பயத்தை போக்குவது எப்படி?வ.க.கன்னியப்பன்
3 அன்புடைத்ததே தழைக்கும் முனைவர் க.மணி
4 பொருள்களை சேகரிக்கும் மனநோய் முனைவர் க.மணி
5 தற்கொலை எண்ணத்தை மாற்ற முடியுமா?R.B.நாகலதா
6 அவநம்பிக்கை அதிகமாகக் காரணம் என்ன?முனைவர் க.மணி
7 கனவுகள் ஓர் அறிமுகம் த.விவேக்
8 பழகத் தெரிந்த மனமே விலகத் தெரியாதா?Dr.K.வெள்ளைச்சாமி, R.H.M.P.,
9 உறங்கி விழித்தவனும் உறக்கமிழந்து விழித்தவனும் மு.குருமூர்த்தி
10 மனச்சிதைவு நோய் (Schizophrenia)உ.அறவாழி
11 கற்பனையின் பலம் முனைவர் க.மணி
12 குழந்தைகளை அடிக்கலாமா?சிடா அறக்கட்டளை வெளியீடு
13 தோற்றுப்போகும் திருமணங்கள் நளன்

Thursday, March 10, 2011

த‌ம்மை கே‌லி செ‌ய்வா‌ர்களோ எ‌ன்ற அ‌ச்ச‌ம்



உலக‌த்‌தி‌ல் ‌நம‌க்கு ‌எ‌ல்லாமே பு‌திதுதா‌ன். அது பழகு‌ம் வரை. ‌பிற‌க்கு‌ம் குழ‌ந்தை‌க்கு இ‌ந்த உலகமே பு‌திது. தா‌ய், த‌ந்தை, சகோதர சகோத‌ரிக‌ள் என அனை‌த்து உறவுகளு‌ம் பு‌தியவ‌ர்க‌ள். அழுதுகொ‌ண்டே இரு‌ந்தா‌ல் இவ‌ர்க‌ள் பு‌தியவ‌ர்களாகவே‌த் தெ‌ரிவா‌ர்‌‌க‌ள். அவ‌ர்களை‌ப் பா‌ர்‌த்து ‌சி‌ரி‌க்க ஆர‌ம்‌பி‌த்தவுட‌ன் இவ‌ர்க‌ள் நெரு‌ங்‌கியவ‌ர்களா‌கிறா‌ர்‌க‌ள்.
ப‌ள்‌ளி, க‌ல்லூ‌ரி, அலுவலக‌ம், ந‌ண்ப‌ர்க‌ள், பகைவ‌ர்க‌ள் என எ‌ல்லாமே முத‌லி‌ல் பு‌திதா‌ன். ‌பிறகுதா‌ன் அது ந‌‌ட்பாகவு‌ம், பகையாகவு‌ம், நெரு‌க்கமாகவு‌ம் மாறு‌கிறது.
ஒரு ‌சில‌‌ர் மா‌ற்ற‌ங்களை எ‌‌ளிதாக எடு‌த்து‌க் கொ‌ண்டு ஒருவரோடு ஒருவ‌ர் பழ‌கி தோழமையை ஏ‌ற்படு‌த்‌தி‌க் கொ‌ண்டு போ‌ய்‌க்கொ‌ண்டே இரு‌ப்பா‌ர்க‌ள். ஆனா‌ல் ஒரு ‌சில‌ர் அ‌வ்வாறு இரு‌ப்ப‌தி‌‌ல்லை. ம‌ற்றவ‌ர்களுட‌ன் பேசவோ, வெ‌ளி‌யிட‌ங்களு‌க்கு‌ச் செ‌ல்லவோ தய‌ங்குவா‌ர்க‌ள்.
இத‌ற்கு அவ‌ர்களு‌க்கு‌ள் இரு‌க்கு‌ம் ஒரு சமூக அ‌ச்சமே‌க் காரண‌ம் எ‌ன்பதை முத‌லி‌ல் பா‌ர்‌த்தோ‌ம். அ‌ந்த சமூக அ‌ச்ச‌ம் எ‌ன்பது எ‌ப்படி‌ப்ப‌ட்டது எ‌ன்று இ‌‌ங்கு பா‌ர்‌ப்போ‌ம்.
‌சில குழ‌ந்தைக‌ள் ம‌ற்ற குழ‌ந்தைகளுட‌ன் பேசவே‌த் தய‌ங்குவா‌ர்க‌ள். அத‌‌ற்கு‌க் காரண‌ம், ‌வீ‌ட்டி‌ல் அவ‌ர்க‌ள் பேசு‌ம்போது ஏதேனு‌ம் ‌கி‌ண்ட‌ல் செ‌ய்வது அதாவது ஏதாவது ஒரு வா‌ர்‌த்தையை ச‌ரியாக உ‌ச்ச‌ரி‌க்காத ப‌ட்ச‌த்‌தி‌ல் அதை‌ச் சொ‌ல்‌லி ‌கே‌லி செ‌ய்வதா‌ல், ‌வீ‌ட்டை‌ப் போலவே இ‌ங்கு‌ம் ந‌ம்மை கே‌லி செ‌ய்வா‌ர்களோ எ‌ன்ற பய‌த்தா‌ல் பேசவே தய‌ங்குவா‌ர்க‌ள்.
சமூக‌த்‌தி‌ன் ‌மீதான நமது பா‌ர்வை, ‌வீ‌ட்டி‌ல் இரு‌ந்துதா‌ன் துவ‌ங்கு‌கிறது. ‌வீ‌ட்டி‌ல் நா‌ம் செ‌ய்யு‌ம் ஒ‌வ்வொரு செயலையு‌ம் குறை சொ‌ல்‌லி‌க் கொ‌‌ண்டே இரு‌ந்தா‌ல், அ‌ந்த ‌பி‌ள்ளைக‌ள் வெ‌ளி‌யி‌ல் த‌ங்களது ‌திறமையை வெ‌ளி‌க்கா‌ட்ட தய‌ங்குவா‌ர்க‌ள். அவ‌ர்களு‌க்கு‌ள்ளாக ஒரு தா‌ழ்வு மன‌ப்பா‌ன்மை வள‌ர்‌ந்து‌விடு‌ம்.
‌சில ‌வீடு‌க‌ளி‌ல் ஒரு ‌பி‌ள்ளையை வை‌த்து ம‌ற்றொருவரை குறை சொ‌ல்வது உ‌ண்டு. அதுவு‌ம் ‌மிக‌ப்பெ‌ரிய தவறு. இதனா‌ல் சகோதர‌த்த‌ன்மை குறை‌ந்து, ஒருவரு‌க்கு ஒருவ‌ர் பகையாக மா‌றி‌விடு‌ம். மேலு‌ம், ‌எ‌ப்போது‌ம் குறை சொ‌ல்ல‌ப்படு‌ம் குழ‌ந்தை நாளடை‌வி‌ல், தன‌க்கு ஏது‌ம் தெ‌ரியாது எ‌ன்று ‌நினை‌த்து ஒரு பாழா‌கி‌விடு‌ம்.
உலக‌த்‌தி‌ல் எ‌த்தனையோ பே‌ர், எ‌த்தனையோ ‌விஷய‌ங்க‌ளு‌க்கு தய‌ங்கு‌கிறா‌ர்க‌ள். ஒரு பெ‌ண் இரு‌க்‌கிறா‌ள், அவ‌ள் எ‌ப்போதுமே ஒரு ட‌ம்ளரை இர‌ண்டு கைகளாலும‌் ‌பிடி‌த்தபடிதா‌‌ன் ‌நீ‌ர் அரு‌ந்துவா‌ள், தே‌னீ‌ர் அரு‌ந்துவா‌ள். அது அவளு‌க்கு பழ‌கி‌வி‌ட்டது. அவ‌ள் வள‌ர்‌ந்து பெ‌ரிய பெ‌‌ண் ஆன ‌பிறகு‌ம் அ‌ந்த பழ‌க்க‌த்தை அவளா‌ல் மா‌ற்ற முடிய‌வி‌ல்லை. ‌வீ‌ட்டி‌ல் இதுப‌ற்‌றி எ‌ப்போது‌ம் ‌கி‌ண்ட‌ல் செ‌ய்து கொ‌ண்டே இரு‌ப்பதா‌ல், அவ‌ள் வெ‌ளி‌யிட‌ங்களு‌க்கு, உற‌வின‌ர் ‌வீடுகளு‌க்கு எ‌ங்கு செ‌ன்றாலு‌ம், எதையு‌ம் வா‌ங்‌கி குடி‌க்கமா‌ட்டா‌ள். எ‌வ்வளவு கெ‌ஞ்‌சினாலு‌ம், கொ‌ஞ்‌சினாலு‌ம் ஒரு சொ‌‌ட்டு ‌நீரையு‌ம் குடி‌க்க மா‌ட்டா‌ள்.
இத‌ற்கு காரண‌த்தை அ‌றி‌ந்தபோது, அவளது பழ‌க்க‌ம் வெ‌ளி‌‌ப்ப‌ட்டது. அவ‌ளிட‌ம், அ‌வ்வாறு குடி‌ப்ப‌தி‌ல் எ‌ந்த தவறு‌ம் இ‌ல்லை எ‌ன்று‌ம், அது உ‌ன்னுடைய ‌ஸ்டை‌ல் எ‌ன்று‌ம் அ‌றிவுறு‌த்‌தி பு‌ரிய வை‌க்க வெகு நா‌ட்க‌ள் ஆனது.
இதுபோ‌ல், இழு‌த்து இழு‌த்து பே‌சுபவ‌ர்க‌ள், கையெழு‌‌த்து ந‌ன்றாக இ‌ல்லாதவ‌ர்க‌ள், ஆ‌ங்‌கில‌ம் பேச‌த் தெ‌ரியாதவ‌ர்க‌ள், ‌ஸ்பூ‌னி‌ல் சா‌ப்‌பிட‌த் தெ‌ரியாதவ‌ர்க‌ள், டெ‌ன்‌னி‌ஸ், கேர‌ம், செ‌ஸ் போ‌ன்ற ‌விளையா‌ட்டுக‌ள் ‌விளையாட‌த் தெ‌ரியாதவ‌ர்க‌ள் எ‌ன்று ‌எ‌த்தனையோ ‌விஷய‌ங்களு‌க்காக பல‌ர் இ‌ந்த சமூக‌த்‌தி‌ன் ‌மீது அ‌ச்ச‌ப்படு‌கி‌ன்றன‌ர். இதனா‌ல் நா‌ம் ந‌ண்ப‌ர்க‌ள் மு‌ன்‌னிலை‌யி‌ல் அ‌ல்லது உற‌வின‌ர்க‌ள் மு‌ன்‌னிலை‌யி‌ல் அவமான‌ப்பட வே‌ண்டி வருமோ எ‌ன்று அ‌ச்ச‌ப்படு‌கி‌ன்றன‌ர்.
இ‌ந்த அ‌ச்ச‌ம் இரு‌க்கு‌ம் வரை, உ‌ங்களது குறையு‌ம் உ‌ங்க‌ளிடமே‌த்தா‌ன் இரு‌க்கு‌ம். அ‌ச்ச‌த்தை ‌விடு‌த்து வெ‌ளியே வாரு‌ங்க‌ள். எ‌ந்த ‌விஷயமு‌ம் தெ‌ரி‌ந்து கொ‌ள்ளு‌ம்வரை பு‌திதுதா‌ன், தெ‌ரியாததுதா‌ன், ஆனா‌ல் அதையே ‌நீ‌ங்க‌ள் பழ‌கி‌வி‌ட்டா‌ல், உ‌ங்களு‌க்கு அது அ‌த்து‌ப்படி எ‌ன்று ம‌ற்றவ‌ர்க‌ள் பாரா‌ட்ட‌த் தவறமா‌ட்டா‌ர்க‌ள்.
எனவே, சமூக‌ அ‌ச்ச‌த்தை து‌ச்சமாக ‌நினை‌த்து, வெ‌ளியே வாரு‌ங்க‌ள். இ‌ங்கு ‌‌வி‌ரி‌ந்து பர‌ந்து ‌கிட‌கு‌ம் பூ‌மி உ‌ங்களை வரவே‌ற்கு‌ம்.

மன அள‌வி‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள ஊ‌ழிய‌ர்க‌ள்


பொருளாதார நெரு‌க்கடி காரணமாக வேலை ப‌றிபோகுமோ எ‌ன்ற அ‌ச்ச‌த்‌திலேயே வேலை செ‌‌ய்யு‌ம் ஊ‌ழிய‌ர்க‌‌ள் மன அள‌வி‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு இரு‌ப்பதா‌ல் அவ‌ர்களது உட‌ல்‌நிலையு‌ம் மோசமா‌கிறது எ‌ன்று மரு‌த்துவ ஆ‌ய்வு ஒ‌ன்று தெ‌ரி‌வி‌க்‌கிறது.
அமெரிக்காவில் நிதி நெருக்கடி தொடங்கியது முதல் லட்சக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர். இதனால் எஞ்சியுள்ளவர்கள் வேலை பறிபோ‌ய்‌விடுமோ அ‌ல்லது த‌ங்களது ‌நிறுவன‌த்தை மூடி‌விடுவா‌ர்களோ எ‌ன்ற அச்சத்தில் உள்ளனர்.
அவர்களது மனநிலை காரணமாக ஏற்படும் பாதிப்புகள் பற்றி மிச்சிகன் பல்கலைக்கழக சமூகவியல் துறை ஆய்வு நடத்தியது. அதில், நிதி நெருக்கடிக்குப் பிறகு அமெரிக்க தொழிலாளர் சந்தையில் அதிக மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. முதலாளி – தொழிலாளி இடையேயான இணைப்புகள் பலவீனம் அடைந்து விட்டன. வேலை போகும் அச்சத்தில் ஊழியர்க‌ள் பலரு‌ம் உள்ளனர்.
வேலை இழந்தவர்களைப் பார்த்த மற்றவர்களுக்கு தங்கள் வேலை பற்றிய அச்சம் அதிகரித்து விட்டது. அவர்களில் பலர் அடிக்கடி உடல்நலம் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு மரு‌த்துவமனை‌க்கு செ‌ன்று‌ள்ளன‌ர். அவ‌ர்களது உட‌ல்‌நிலை பாதிக்கப்பட்டதற்கு மனநிலையே காரணம். வேலை பற்றிய அச்சம், ஊழியரின் உடல்நலத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.
வேலையில் பாதுகாப்பின்மையால் ஊழியர்கள் மது, புகைப் பழக்கத்துக்கு அடிமையாகின்றனர். அதிக மன அழுத்தத்துக்கு ஆளாகின்றன. இவையும் அவர்கள் உடல்நல பாதிப்புக்கு காரணமாகிறது. குடும்ப எதிர்காலம், பணத் தேவை ஆகியவை குறித்து நிரந்தர வேலையில்லாத ஊழியர்கள் மனதில் கேள்விக் குறி எழுகிறது. இதுவும் அவர்கள் ஆரோக்கியம் கெடக் காரணமாகிறது.
ஆய்வில் பங்கேற்ற சுமார் 1,700 பேரில் 18 சதவீதத்தினர் வேலை பறிபோகும் அச்சத்தில் உள்ளதாக தெரிவித்தனர். அவர்களை சோதனை செய்ததில் அடிக்கடி உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளது தெரிய வந்தது எ‌ன்று ஆ‌ய்வு தெ‌ரி‌வி‌க்‌கிறது.

பதினென் பருவமும், மனோநிலையும்


பொதுவாக அலைபாயும் வயது என்பது பதினென் பருவத்தில் ஆண்/பெண் இருபாலருக்கும் இருக்கும். இந்தக் காலக் கட்டம் இரு பாலருக்குமே மிகவும் முக்கியமான காலம் ஆகும்.
பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு தொடங்கி முதல் காதல், இனக்கவர்ச்சி, அதிகமான விஷயங்களைக் கற்றுக் கொள்தல் அல்லது கற்றுக்கொள்ளத் துடித்தல், தேடல் ஆர்வம் போன்றவை 11 வயது தொடங்கி 22 வயதுக்குள் வரும்.
பெண்கள் எனில் பருவமடைதல் (பூப்பெய்தல்) நிகழ்வும் 11 வயதுக்குப் பிறகே நிகழக்கூடியது. மனோவலிமை குறித்த விஷயத்தைப் பொருத்தவரை பெண்கள், ஆண்களைக் காட்டிலும் முதிர்ச்சியடைந்தவராக இருக்கிறார்கள்.
20 வயதுடைய ஆண்களையும், பெண்களையும் ஒப்பிடுகையில், ஆண்களை விடவும் பெண்கள் தெளிவான- உறுதியான மனோநிலையைக் கொண்டிருக்கிறார்கள் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மனதளவில் முதிர்ச்சி பெறும் வயது 11 – 20 என்பதால், பெற்றோர் இந்த வயதுடைய குழந்தைகளை தீவிரமாக கண்காணித்து பராமரித்தல் அவசியம்.
தனிமையில் உட்கார்ந்து ஆழ்ந்த சிந்தனையில் இருக்கிறார்களா என்பதை அறியவும். கூடிய வரை தனிமையில் இருப்பதை அனுமதிக்க வேண்டாம்.
பெண் குழந்தைகளாக இருப்பின் அவர்கள் உற்சாகமாக – மகிழ்ச்சியாக இருக்கிறார்களா என அறியவும். என்னதான் நெருங்கிய நண்பர்கள் – குடும்ப நண்பர்கள் என்றாலும், இந்த வயதுடைய பெண் குழந்தைகளை அவர்கள் பாதுகாப்பில் விட்டு வெளியில் செல்லாதீர்கள்.
முடிந்தால் உடன் அழைத்துச் செல்லுங்கள். அல்லது அவர்களை தனியாகவே செயல்பட அனுமதியுங்கள். இப்படிச் செய்வதால், அவர்களுக்கும் பொறுப்புணர்ச்சி அதிகரித்து, படிப்பு மற்றும் வேலைகளில் ஆர்வம் காட்டத் தொடங்கி விடுவார்கள்.
எனவ மனோநிலை முதிர்ச்சி என்பது பதினென் பருவத்தில் மிகமிக குறிப்பிடத்தக்கது என்பதை அறிந்து செயலாற்றுங்கள்.

தற்கொலைகளும் தைரியசாலிகளும்!



ஒரு நிமிடம் தைரியம் இருந்தால் தற்கொலை செய்து கொள்ளலாம். ஆனால் ஒவ்வொரு நிமிடமும் தைரியம் இருந்தால் தான் வாழ முடியும் என்பது வாக்கு.
தற்போது எங்கு பார்த்தாலும் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. இதற்குக் காரணம் பலவாக இருக்கலாம். ஆனால் தற்கொலை செய்து கொண்டு இறக்கும் ஒருவரது பிரச்சினை இந்த உலகத்தில் எத்தனையோ பேருக்கு இருக்கிறது. அவர்கள் எல்லாம் தற்கொலைதான் செய்து கொள்ள வேண்டும் என்றால் உடல்களை எடுத்துப் போடக் கூட ஆள் இருக்காதல்லவா.
தற்கொலை என்பது தனிப்பட்ட ஒருவரது மனநிலையைப் பொறுத்தது. மன இறுக்கம், பிரச்சினை, தோல்வி, நம்பிக்கையின்மை, ஏமாற்றம் போன்ற பல பிரச்சினைகளுக்காக தற்கொலைகள் நடக்கின்றன.
ஒரு மனிதனின் வாழ்க்கையில் ஏதேனும் ஒன்று தவறாக நடக்கும்போது மனம் வெறுத்து தற்கொலை செய்து கொள்கிறான். தற்கொலைக்கு வயது, பொறுப்புகள், ஏழை, பணக்காரன், படித்தவன், படிக்காதவன் என்ற பேதமெல்லாம் இல்லை. மனநிலை ஒன்று மட்டுமே காரணமாகிறது.
தற்கொலை செய்ய முயன்றவர்களில் 30 விழுக்காட்டில் இருந்து 70 விழுக்காட்டினர் மனநிலை அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டுள்ளது. மனநிலை அழுத்த நோய் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் எடுத்துக் கொள்ளும் மது அல்லது வேறு வகையான போதைப் பொருட்கள் தற்கொலையை தூண்டும் ஒரு கருவியாக அமைந்துவிடுகிறது.
மனநிலை தடுமாற்றம், மன அழுத்தம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் தற்கொலை செய்து கொள்வார்கள் என்று கூற முடியாது. ஆனால் அதே சமயம் அவர்களுக்கு நமது உதவி தேவைப்படுகிறது என்று கூறலாம்.
தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் உடையவர்கள்,
எப்போதும் ஏதாவது ஒரு தற்கொலை முறையைப் பற்றி பேசி அல்லது யோசித்துக் கொண்டிருப்பார்கள்.
தன்னம்பிக்கையை இழந்தவர்கள் போல அல்லது தனக்கென்று யாருமில்லை என்பது போன்ற ஒரு எண்ணத்தை வெளிப்படுத்துவார்கள்.
நடத்தையில் வெகுவாக மாற்றத்தை வெளிப்படுத்துதல்
எப்போதும் இல்லாத அளவிற்கு குடிப்பது அல்லது போதைப் பொருளை உபயோகிப்பது
யாருடனும் பேசாமல் எதையோ பறிகொடுத்தது போல இருப்பது
எந்த பொறுப்பையும் ஏற்றுக் கொள்ளாமல் தட்டிக் கழிப்பது
எதிர்கால திட்டங்களைப் பற்றிய எண்ணமோ ஆசைகளோ இல்லாமல் இருப்பது போன்ற நடவடிக்கைகளில் ஏதேனும் ஒன்றாவது தற்கொலை செய்து கொள்ளும் 10 பேரில் 8 பேரிடம் காணப்படும் என்று மன‌‌ச்‌சிதைவு‌‌த் துறை நட‌த்‌திய ஆய்வு தெரிவிக்கிறது.
அதே சமயம், தற்கொலைப் பற்றி அடிக்கடி பேசுதல், தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டுதல், தற்கொலையில் இருந்து மீட்கும் அமைப்புகளுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசும் நபர்களில் பாதி பேர் தற்கொலை பற்றிய பயத்தில்தான் அவ்வாறு செய்கிறார்களே தவிர, தற்கொலை செய்து கொள்ள அவர்களுக்கு எள்ளளவும் துணிச்சல் இருக்காது என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.

ஒரு வேளை தற்கொலைக்கு முயன்ற ஒரு நபரை நீங்கள் கண்டால்…
உடனடியாக உங்களது அதிர்ச்சியை அவரிடம் வெளிக் காட்டாதீர்கள்.
திட்டுவதோ அல்லது மற்றவர்களுக்கு தெரிவிப்பதாக எச்சரிப்பதோ பிரச்சினையை மேலும் சிக்கலாக்கும்.
அவருக்கு தைரியமூட்டி அவரது பிரச்சினையை எந்தவித எதிர்வாதமும் இன்றி அமைதியாகக் கேளுங்கள்.
மனநிலையை நீங்களாக மாற்ற முயற்சிக்க வேண்டாம். அதற்குரிய மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்றுதான் ஆலோசனைகளை அளிக்க வேண்டும்.
அவரை தனியாக விட்டுவிட்டு எங்கும் போக வேண்டாம்.
அவர் மறுத்தாலும் அவருக்குரிய உதவிகளை செய்யுங்கள்.
தற்கொலைக்கு மருந்து!
தற்கொலைக்கு முயன்றவர்களுக்கு இரண்டு வகைகளில் சிகிச்சை அளிக்க‌ப்படு‌கிறது. ஒன்று தியானம், மற்றொன்று ஆலோசனை வழங்குதல். ஒரு சிலருக்கு இரண்டுமே தேவைப்படும்.
ஆலோசனை
தற்கொலைக்கான காரணத்தைக் கண்டறிந்து அந்த பிரச்சினையை வேறு வகையில் பார்க்கவும், அதற்குரிய தீர்வைத் தேடவும், அவர்களைப் பற்றி அறிந்து கொள்ளவும், தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளவும் ஆலோசனை வழங்கப்படும்.
தங்களது மனோபாவத்தை மாற்றிக் கொள்ளுதல், தன்னம்பிக்கையை வளர்க்க பயிற்சி, பிரச்சினைகளை கையாளும் திறன், சமூக அமைப்பு பற்றிய அறிவு, மனதிற்கு ஓய்வளிக்கும் பயிற்சி, தசைகளை அமைதிப்படுத்துதல் போன்றவையும் இந்த ஆலோசனை சிகிச்சையில் அடங்கும்.
தியானம்
மனதை ஒருநிலைப்படுத்தும் தியானப் பயிற்சி அளிக்கப்படும். தியானம் பயின்றவரை வைத்து அவருக்கு பயிற்சி அளிக்கப்படும்.
அதே சமயம் மனநிலைக்குத் தகுந்தவாறு மனநல மருத்துவரிடம் மருந்துகளும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
நாட்கள் செல்ல செல்ல மருந்தின் அளவில் லேசான மாற்றத்துடன் மருந்தை தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும். பொதுவாக நான்கு முதல் 9 மாதங்கள் வரை மருந்துகளை உட்கொள்ள வேண்டியிருக்கும். பின்னர் மருத்துவரின் ஆலோசனையுடன்தான் மருந்தை நிறுத்த வேண்டும்.
இந்தியாவில் தற்கொலை
தற்கொலைக்குக் மன அழுத்தம்தான் முக்கியக் காரணம் என்பது பு‌ரி‌ந்து ‌வி‌ட்டது. ஆனால் தற்கொலைக்கே தூண்டும் அளவிற்கு மன அழுத்தம் வர முக்கியமாக மூன்று காரணங்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
அதில் முதல் காரணம் எய்ட்ஸ் நோய் என்றும், இரண்டாவதாக தேர்வு அல்லது மற்றவற்றில் தோல்வியாகவும், மூன்றாவதாக கடன் தொல்லை என்றும் தெரிய வந்துள்ளது.
குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால் இந்தியாவில் கிராமங்களில்தான் அதிகப்படியான தற்கொலைகள் நடக்கி‌ன்றன.
எ‌ய்‌ட்‌‌ஸ் நோ‌ய்‌க்கு மரு‌ந்து இதுவரை க‌ண்ட‌றிய‌ப்படாத ‌நிலை‌யி‌லு‌ம், எ‌ய்‌‌ட்‌ஸ் எ‌ன்றாலே தகாத உறவு வை‌த்‌திரு‌ந்தா‌ல் வர‌க்கூடிய நோ‌ய் எ‌ன்ற பொதும‌க்க‌ளி‌ன் எ‌ண்ண‌த்‌தினாலு‌ம் எ‌ய்‌ட்‌ஸ் நோ‌ய் தா‌க்‌கியவ‌ர்க‌ள் உட‌ல் அள‌வி‌ல் அ‌ல்லாம‌ல் மன அள‌வி‌ல் ‌மிகு‌ந்த உளை‌ச்ச‌ல் அடை‌கி‌ன்றன‌ர்.
இ‌ந்த சமூக‌ம் எ‌ன்ன சொ‌ல்லுமோ எ‌ன்று பய‌ந்து‌ம், உ‌ற்றா‌ர் உற‌வின‌ர்க‌ளி‌‌ன் புற‌க்க‌ணி‌ப்பாலு‌ம் தா‌ன் அ‌திகமான எ‌ய்‌ட்‌ஸ் நோயா‌ளிக‌ள் த‌ற்கொலை செ‌ய்து கொ‌ள்‌கி‌ன்றன‌ர்.
சில ப‌ள்‌ளி‌, க‌ல்லூ‌ரி மாணா‌க்க‌ர்க‌ள் த‌ங்களது தே‌ர்வுக‌ளி‌ல் ஏ‌ற்படு‌ம் தோ‌ல்‌வி‌‌க்காக மனமுடை‌ந்து த‌ற்கொலையை‌த் தேடி‌‌க் கொ‌ள்‌கி‌ன்றன‌ர். தே‌ர்வு‌‌த் தோ‌ல்‌வி‌க்கு அடு‌த்தபடியாக காத‌ல் தோ‌ல்‌வியு‌ம் உ‌ள்ளது.
கட‌ன் அள‌வி‌ல் எடு‌த்து‌க் கொ‌ண்டா‌ல் க‌ந்து வ‌ட்டி‌க்கு‌ம், வ‌ங்‌கி‌யி‌ல் கட‌ன் வா‌ங்‌கியு‌ம் ‌நில‌த்‌தி‌ல் பண‌த்தை‌ப் போடு‌ம் ‌விவசா‌யி‌க்கு, மழையு‌ம், த‌ட்பவெ‌ப்ப ‌நிலை‌யி‌ல் கைகொடு‌க்காம‌ல் போகு‌ம் ப‌ட்ச‌த்‌தி‌ல் பே‌ரிடி ‌விழு‌கிறது. இ‌ந்த ‌நிலை‌யி‌ல் வா‌ங்‌கிய‌க் கடனை செலு‌த்த முடியாம‌‌ல், உண‌வி‌ற்கு‌ம் ப‌ஞ்ச‌ம் ஏ‌ற்ப‌ட்டு, ‌நில‌த்தையு‌ம் இழ‌ந்து த‌ங்களது வா‌ழ்‌க்கையை முடி‌த்து‌க் கொ‌ள்ளு‌ம் ‌நிலை‌க்கு‌த் த‌ள்ள‌ப்படு‌‌கி‌ன்றன‌ர்.
எனவே எ‌ந்த ‌பிர‌ச்‌சினை‌க்கு‌ம் த‌ற்கொலை எ‌ன்பது ‌தீ‌ர்வாகாது. ‌பி‌ர‌ச்‌சினையை‌க் க‌ண்டு ஓடுவதை‌ ‌விட, அதனை எ‌தி‌ர்கொ‌ண்டு வெ‌ல்வதே மானுட‌த்‌தி‌ன் வெ‌ற்‌றி.
வாழ ‌நினை‌த்தா‌‌ல் வாழலா‌ம்.

தன் பயமும் மனோவியாதியே!


மனிதர்களில் பொதுவாக காணப்படும் ஒருவகை பயம் பின்னாளில் மனோவியாதியாக மாறி விடுவதுண்டு.
கமல்ஹாசன் நடித்த `தெனாலி’ படத்தில், அவர் எதற்கெடுத்தாலும் பயப்படுபவராக நடித்திருப்பதை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.
சிலர் குழந்தைப் பருவத்தில் இருந்தே பயந்த சுபாவம் உள்ளவர்களாக இருப்பர். வேறு சிலர் ஏதாவதொரு நிகழ்ச்சிக்குப் பிறகு பயந்த நிலையைக் கொண்டிருப்பர்.
இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் அவர்கள் வளரும் முறை எனலாம். சிறிய வயதில் குழந்தைகளை பயமுறுத்துவதற்காக `பூச்சாண்டி’ என்று தொடங்கி, காலப்போக்கில் அவர்கள் வேறுவகையான பயம் அல்லது அச்சத்தை தங்களுக்குத் தாங்களே ஏற்படுத்திக் கொள்வார்கள்.
வேறு சிலருக்கு தாங்கள் செய்யும் சட்டவிரோத செயலால் பயம் தானாகவே ஏற்பட்டு விடும். அதாவது எப்போது மாட்டிக் கொள்வோமோ என்ற ஒரு பயம் இருக்கும்.
இதனால் அவர்களால் வேறு எந்தப் பணியிலும் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படும்.
வேறு சில நேரங்களில் அலுவலகங்களில் உயர் பதவிகளில் இருப்பவர்கள் தங்களுக்கு கீழே பணியாற்றுபவர்களைக் கண்டு அஞ்சுவர். ஆனால் அதனை நேரிலும் வெளிப்படுத்த முடியாமல் மனோரீதியாகத் தவிப்பர்.
திறமையின்மையால் தவிப்பார்கள். மாறாக தங்கள் திறமையையும் வளர்த்துக் கொள்ளாமல், எப்போதும், ஏதாவதொரு குற்ற உணர்ச்சியுடனேயே சந்தேகக் கண்களைக் கொண்டிருப்பார்கள்.
ஏதாவது சூழ்ச்சி தங்களுக்கு எதிராக இருக்குமோ என்பதை சிந்திப்பதிலேயே அதிக நேரத்தை செலவிடுவதால், பணியை திறம்பட செய்ய முடியாமல், அதுவே அவர்களின் வேலைத் திறனைப் பாதித்து விடும்.
நாளடைவில் தங்களுக்குள்ளேயே புழுங்கிக் கொண்டிருக்கும் நிலை, மனதளவில் எரிச்சலை வரவழைத்து, எதிரில் இருப்பவர்களிடம் தேவையற்ற கோபத்தை உருவாக்கும். மன அழுத்தம் அதிகரிக்கும்.
இதன்காரணமாக மனோதிடம் பாதிக்கப்பட்டு, குறிப்பிட்ட காலத்தில் மனோவியாதியாகி விடக்கூடிய சூழல் உருவாகும்.
எனவே மனதை குழப்பம் இல்லாமல் வைத்திருப்பதுடன், இறுக்கம் ஏற்படும்பட்சத்தில் உடனடியாக உரிய மனோதத்துவ நிபுணரை அணுகி கவுன்சலிங் எடுத்துக் கொள்ளலாம். தன்பயத்தை தவிர்த்து, தலைசிறந்து வாழ்வோம்!

தனிமையை விரும்புவது மனநோயா? -டாக்டர் டி. காமராஜ்


தகவல் தொழில்நுட்பம் – ஐ.ி துறை. இந்தியாவில் ஐ.ி துறையின் வளர்ச்சிஎத்தனையோ மாற்றங்களை பொருளாதார ரீதியில், சமூக ரீதியில், பெருநகரங்களினவளர்ச்சி அடிப்படையில் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது எனலாம்.
வாரத்தில் 5 நாள் வேலை, அதிக சம்பளம், விடுமுறைக் கொண்டாட்டம், அழுத்தத்தையும், சோர்வையும் போக்குவதாகக் கூறிக் கொண்டு அவ்வப்போதசினிமா, விருந்து, விழா, கூடிக் கொண்டாடுதல் (get together) போன்றவை இந்தத் துறையில் வெகுசாதாரணமான ஒன்று.
ஆனால், ஐ.டி. நிறுவனங்களின் ஊழியர்களை மகிழ்விக்கும் நோக்கம் உண்மையிலேயே நிறைவேறுகிறதா? இதனால் ஊழியர்களுக்கு சாதகம் இருக்கிறதா? அல்லது மன அழுத்தத்தை மேலும் ஏற்படுத்துகிறதா? என்பது பற்றி இக்கட்டுரையில் பார்ப்போம்.
தனிமையை விரும்புவோர்:
சிலர் எப்போதுமே தனிமையை விரும்புவார்கள். அவர்களுக்கு நல்ல திறமை இருந்தாலும் மற்றவர்களுடன் பழகுவதற்கு மிகவும் யோசிப்பார்கள். சின்ன வயதில் நண்பர்கள் அல்லது பழகியவர்களிடம் ஏற்பட்ட ஏமாற்றம், தேவையிலாத நட்பு வேண்டாம் என்ற அறிவுரை, தன்னைப் போன்றே சிந்திப்பதற்கு யாரும் இல்லை என்ற மனப்பான்மை போன்ற ஏதாவதொரு காரணத்தால் தனிமையில் இருப்பதையே விரும்புவார்கள்.
வலிய வந்து யாராவது பேசினாலும், ஒருசில வார்த்தைகள் மட்டுமே பேசி தட்டிக்கழித்து விடுவார்கள். தனிமையில் இருப்பதே ஒருவகையான மனநோய்தான். ஆனால் அது விபரீதமான சிந்தனைகளுக்கு வழிவகுக்காதவரை பிரச்னை இல்லை.
தகவல் தொழில்நுட்பத் துறை (ஐ.டி) ஊழியர்கள் பெரும்பாலான நேரம் கணினியிலேயே நேரத்தைக் கழிக்க வேண்டியிருப்பதால், பிறருடன் கலந்து பழக வேண்டியது மிகவும் அவசியம். அலுவலகத்தில் எவருடனும் பழகாமல் இருப்பதால் அவர்களது கொண்டாட்டங்களிலும் கலந்து கொள்ள மாட்டார்கள். அதற்குப் பதிலாக உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் விடுமுறையைக் கழித்தால் உண்மையில் எவ்விதப் பிரச்னையும் உண்டாகாது.
மற்றவர்கள் சந்தோஷமாக இருக்கும்போது, தம்மால் சந்தோஷமாகக் கொண்டாட முடியவில்லையே என்று ஆதங்கப்படும்போது தான் பிரச்னை ஆரம்பிக்கிறது. அந்த மனத்தாங்கலே அவர்களுக்கு பல பிரச்சினைகளை ஏற்படுத்தி விடக்கூடும்.
இப்படி தனிமையை விரும்புவர்கள், சில நேரங்களில் தங்களுக்குத் தாங்களே பார்ட்டி வைத்துக் கொள்வார்கள். மற்றவர்கள் சந்தோஷமாக இருக்கும்போது தம்மால் மகிழ்ச்சியாகக் கொண்டாட முடியவில்லேயே என்ற எண்ணத்தில் தனியே எங்காவது சுற்றுப்பயணம் செய்வது, தனியே மது அருந்துவது, பாக்கு, கஞ்சா போன்று ஏதாவது ஒரு போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி விடுவதும் உண்டு.
சில நேரங்களில் அளவு தெரியாமல் குடித்து விட்டு, சாலையில் தள்ளாடி நடப்பது, கீழே விழுந்து அடிபடுவது, வாந்தி எடுப்பது போன்றவை ஏற்பட்டு மயங்கி விழக்கூடும்.
அடுத்த நாள் அவர்கள் மீதே அதிக வெறுப்பு ஏற்பட்டு பிறருடன் பேசுவதை மேலும் குறைத்துக் கொள்வார்கள். இதனால் கிட்டத்தட்ட ஒரு மனநோயாளியின் நிலைக்கே தள்ளப்படுவார்கள். எவருடனும் பழக விருப்பம் இல்லை என்பதும் உண்மையில் ஒரு மனநோய்தான் என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். ஊருடன் ஒத்து வாழ்பவர்களால் மட்டுமே வாழ்க்கையை எளிதாகக் கொண்டு செல்ல முடியும்.
வீட்டிற்கும் தாவும
அலுவலகத் தோழர்களுடன் பேசுவதில் இருக்கும் விருப்பமின்மை நாளடைவில் வீட்டுக்கும் பரவக் கூடும். தாய், தந்தை மற்றும் உறவினர்கள் பேசினால்கூட எரிச்சலும், கோபமும் உண்டாகி தனித்தீவாக மாறி விடுவார்கள். அப்படியொரு நிலை உருவாகும் முன்பே, உரிய மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். மனதுக்குப் பிடித்தவர்கள் யாருடனாவது ஒரு சில நிமிடங்களாவது பேசுவதைக் கட்டாயமாக்கிக் கொள்ள வேண்டும்.
கொஞ்சம் கொஞ்சமாக பேசும் நேரத்தைக் கூட்டிக் கொள்ள வேண்டும். மனதில் இருக்கும் சோகம், துக்கம், வேதனை போன்றவற்றை அடுத்தவர்களோடு பகிர்ந்து கொள்ளும் போதுதான் அவை குறையும். ஆறுதல் சொல்ல நண்பர்கள் இருப்பதே பெரும் பலமாக இருக்கும்.
இவற்றுக்கெல்லாம் என்னதான் தீர்வு?
கொண்டாட்டத்தை அனுபவிக்கக்கூடிய மனநிலை இருப்பது போன்று, அதை நிறுத்துவதற்கான மனநிலையையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். எல்லா வாரமும் கொண்டாட்டம் வேண்டும் என்று அடம்பிடிக்கக் கூடாது.
ஒருவாரம் குடும்பத்துக்கு, ஒரு வாரம் பழைய நண்பர்களுக்கு என்று விடுமுறையைப் பகிர்ந்து கொண்டால் எந்தப் பிரச்னையும் வராது.
இந்த விஷயத்தில் ஐ.டி. நிறுவனங்களும் தங்களது போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். ஊழியர்களைத் தக்கவைத்துக் கொள்வதற்காக இதுபோன்ற கொண்டாட்டங்களை சில நிறுவனங்கள் ஊக்குவிக்கின்றன. ஊழியர்களுக்குத் தேவையான வாகன வசதி செய்து தருவது, மது மற்றும் உணவு வகைகளை ஏற்பாடு செய்வது, ஹோட்டல் ரிசார்ட்ஸ் புக் செய்வது என்றெல்லாம் ஊழியர்களை பலமாகக் கவனிக்கிறார்கள்.
இவையெல்லாம் ஊழியர்களின் நன்மைக்காகச் செயல்படுகின்றன என்றுதான் நிறுவனங்கள் சொல்கின்றன. ஆனால் நிறுவனங்களின் இத்தகைய ஏற்பாடுகள் ஊழியர்களின் வாழ்க்கையைத்தான் பாதிக்குமே தவிர, நன்மை எதையும் செய்து விடாது. ஊழியர்கள், அதலபாதாளத்தை நோக்கிப் பயணப்பட்டால், நிறுவனங்கள் கைகொடுத்து அவர்களை மீட்க வேண்டும். மாறாக அழிவுக்கான பயணத்தை விரைவுபடுத்தி விடக்கூடாது.
More Info :http://mahizhaithiru.wordpress.com/