Thursday, January 27, 2011

அனைத்துமே சிறந்தது.... -Zen Story


சந்தையின் வழியாக பான்சான் நடந்து கொண்டிருந்தான். அப்பொழுது அருகில் இருந்த கசாப்புக்கடையில் கசாப்புக் கடைகாரனுக்கும் அங்கு கறி வாங்க வந்திருந்த ஒருவனுக்கும் இடையில் நடந்த உரையாடலைத் தற்செயலாகக் கேட்க நேர்ந்தது.

வாங்க வந்தவன் "இருக்கின்ற கறியிலேயே நல்ல பாகமாக இருப்பதிலிருந்து ஒரு துண்டினை வெட்டிக் கொடு" என்று கேட்டான்.

கசாப்புக் கடைகாரன் "என்னுடைய கடையில் இருக்கின்ற அனைத்துமே நல்லதுதான்" என்றவன், "நன்றாக இல்லை என்று இங்கு உள்ள கறியின் ஒரு துண்டு பாகம் கூட இல்லை" என்று தனக்கே உரிய பாணியில் பதில் அளித்தான்.

கேட்டுக் கொண்டிருந்த பான்சானுக்கு சட்டென்று ஏதோ உரைத்தது போல் இருந்தது. 

No comments:

Post a Comment