Friday, January 28, 2011

‘நல்லெண்ணமே சிறந்த மருந்து’


எண்ணங்கள் தாம் ஒரு மனிதனை உருவாக்குகின்றன. அதுமட்டுமின்றி நல்லெண்ணங்கள் நம்மை உயர்த்தி, உடல் நலனுக்கும் உறுதுணையாக இருக்கின்றன. இன்று கல்வி, பொருளாதாரத் துறையில் வளர்ச்சி பெறும் நாம் மனச்சோர்வினால் (Depression) பெரிதும் பாதிக்கப்படுகிறோம்.
மனச்சோர்வின் விளைவுகள் என்ன? நமக்கு ஏதோ எல்லாமே இழந்து விட்டது போன்ற ஏமாற்ற உணர்வுகள், தாழ்வு மனப்பான்மை செயலில் ஆர்வமில்லாமை போன்ற உணர்வுகள் அவ்வப்போது வரச் செய்கின்றன. இந்த மனநிலை தொடரும்போது, மகிழ்ச்சியான மன நிலை குறையத் தொடங்கிவிடும். ஒரு இனம்புரியாத சோகம் தன்னையே நிலை குறையத் தொடங்கிவிடும். ஒரு இனம்புரியாத சோகம் தன்னையே நொந்து கொள்ளுதல் போன்ற நிலை உண்டாகும். நகைச்சுவையான சம்பவங்கள் கூட, முகத்தில் புன்னகையை உண்டாக்க முடியாது.
இந்த நிலையில், நம்மைச் சுற்றியுள்ள அனைவரும் நமக்கெதிராகச் செயல்டுவது போன்ற எண்ணமும், நமது வாடிக்கையாளர்களே நம்மிடம் நம்பிக்கையிழந்து விட்டது போலவும் தோன்றும். வார்த்தைகளில் விரக்தியும், வேதனையும் மிஞ்சும். இதே நிலை தொடர்ந்து நீடிக்கும் போது உடலில் பல்வேறு நோய்களாக உருவெடுக்கின்றன. இடுப்புவலி, தலைவலி, வெவேறு பாகங்களில் உண்டாகும் வலிகள், ஜீரணக்கோளாறுகள், தூக்கமின்மை, நரம்புத்தளர்ச்சி போன்றவை வரலாம். பல மாதங்களாகத் தொடரும் இந்த மனநிலை இறுதியில் தற்கொலையில் வந்து முடிவதுண்டு. இன்றைய செய்தித்தாள்களைப் புரட்டினால் நாளொன்றுக்கு ஐந்து முதல் பத்துவரை தற்கொலைச் செய்திகளைத்தான் பார்ப்போம். அதன் அடிப்படைக் காரணம் இந்த மனச்சோர்வுதான்.
பெரும்பாலும், பொருளாதர பிரச்சனைகளும் காம உணர்வு பிரச்சைகளுமே (Money and Sex) பல சிக்கல்களுக்குக் காரணம். திடீரென்று தமது தொழிலில் பெரு நட்டம் ஏற்படும்போது, நேசிக்கும் ஒருவரை இழக்க நேரிடிடும் போது மனம் சோர்வடைந்து விடுவது இயற்கை. இந்த இழப்புகள் சில மாதங்களில் குறைந்து வழக்கமான சூழ்நிலைக்கு வந்து தயாராகி விடுகிறோம். சிலர் போதைப்பொருட்களுக்குப் பழக்கமாகி மனச்சோர்வு அடைவதுண்டு. இதுபோல் எந்தக் காரணம் இன்றியும் நமக்கு மனச்சோர்வு வரலாம். அதற்கு முக்கிய காரணம் நமது எண்ணங்கள் தான்.
வாழ்க்கைக்கு அடிபடைத் தேவையான உணவு, உடை, இருப்பிடம் போன்றவைகள் கிடைத்ததும், நமது நலன், சுற்றத்தாரின் நலன் என நமது விருப்பங்கள் வளருகின்றன. இதற்கு மேலாக மேலும் முக்கியமாகச் சமுதாயத்தில் நமக்கென ஒரு அந்தஸ்து வேண்டுமென விரும்புகிறோம். அந்த அந்தஸ்து, முக்கியத்துவம் நாம் வாழ்கின்ற சூழ்நிலையில் கிடைத்தாதபோது மனச்சோர்வு உண்டாகிறது.
நாம் செய்ய வேண்டிய வேலைகளைத் தள்ளிப்போடும் பழக்கம் மிகவும் மோசமானது. ‘நாளை செய்வோம்’ இதை உடனே செய்தால் என்ன வரப்போகிறது. என்று நாம் தள்ளிப்போடும் பல சிறு விஷயங்கள் நாளடைவில், பெரியமலையாக நம்முன் தோன்றி நம்மை மலைக்க செய்கின்றன. மனச்சோர்வும் பெருகுகிறது.
நாம் நம்புவது, எதிர்பார்ப்பது, செய்வது எல்லாம் நியாயத்தின் அடிப்படையா? என்பதை நாமே அறிய வேண்டும். 1 ரூபாய்க்கு லாட்டரி சீட்டு வாங்கி சட்டைப்பையில் போட்டுக் கொண்டு லட்சாதிபதியாவோம் என எதிர்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும். ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு விலை மதிப்பு உண்டு. அந்த விலையைக்கொடுத்துத்தான் நாம் பெற முடியும். (Nature has its own price) உயர்ந்த எண்ணமும், கடின உழைப்பும் தான் சாதனைக்கு நாம் தரக்கூடிய விலை. அதற்கு மாற்று ஏதுமில்லை. நம் உழைப்பிற்கேற்ற ஊதி’ம் இன்றில்லாமலிருக்கலாம். அதன் முழுப்பலன் ஒரு மாபெரும் சாதனையாக ஒருநாள் வெளிப்படும். உழைப்பு ஒரு போதும் வீணாவதில்லை. (Effort Never fails)
மனச்சோர்வுள்ளவர்கள் எதையும் நம்ப மாட்டார்கள். என்ன வசதி வாய்ப்புகளிலிருந்தாலும் அதில் அவர்களுகுத் திருப்தி இருக்காது. அதிலுள்ள சிறு சிறு குறைகளே பெரிய பிரச்சனையாகத் தோன்றும். உதாரணத்திற்கு நமக்குள்ள சிறு உடல் வலியையும் தாங்க மாட்டார்கள். ஒரு மருத்துவரிடம் சென்றால் அவருடைய சிகிச்சையில் நம்பிக்கையில்லாமல் அடிக்கடி வெவ்வேறு மருத்துவரை நாடுவார்கள்.
மனித வாழ்க்கைக்கு நம்பிக்கைதான் உயிர்மூச்சு. அதை வளர்ப்பது ஒரு சிறந்த கலை. நம்பிக்கையிருந்தால் மலையையும் நகர்த்த முடியும். (Faih can move mountains) என்றொரு ஆங்கிலப் பழமொழி உண்டு. அந்த அளவிற்கு சக்தி கொண்டது நம்பிக்கை. அது தானாகவே வருவதில்லை. நாம் படிப்படியாக வளர்க்க வேண்டிய ஒன்று. நாம் ஒரு செயலைச் செய்து முடித்து வெற்றி காணும்போது நமக்குள்ளே நம்பிக்கை பிறக்கும்.
வெற்றி காணும்போது, அதுவே நாளடைவில் பெரிய சாதனையாக மாறும். குறைந்த மதிப்பெண்களையே பெரும் ஒரு மாணவன், அதிக நேரம் படித்து 35 சதம் பெற்று வெற்றியடைகிறான்; அடுத்த தேர்வில் மேலும் 10 சதம் அதிகம் பெறுகிறான். அதுவும் ஒரு சாதனை தான்.
டாக்டர் ஜி. இராமநாதன் எம்.டி.
உடையாம்பாளையும் – கோவை

No comments:

Post a Comment