Monday, January 17, 2011

எது பிரம்மச்சரியம் ?

பிரம்மச்சரியம் என்பது ஒழுக்க நிலை. இன்னும் தெளிவாக சொன்னால் அது புலனடக்கம். ஐந்து புலன்களையும் தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் வைத்திருத்தல்.
மகாத்மா காந்தியடிகள் பகவத்கீதைக்கு The Interpretations of Gita,The Gospel of Selfless Action என்ற உரையை எழுதியுள்ளார். கீதையின் சாரம்சத்தினை உணர்ந்து வாழ 1.சத்தியம், 2.பிரம்மச்சரியம், 3.அஹிம்சை, 4.அஸ்தேயம், 5.அபரிக்ரஹம் இவற்றை தீவிரமாக கடைப்பிடிக்க வேண்டும் என்கிறார். நாம் பிரம்மச்சரியத்தினை பற்றி மட்டுமே பேச முடியாது. ஏனென்றால் அதற்கெல்லாம் முன்நிற்கின்ற சத்தியம் என்கிற உண்மையை முழுவதுமாக ஏற்றுக்கொண்டவனால் மட்டுமே பிரம்மச்சரியத்தினை கடைபிடிக்க இயலும். புலனடக்கம் எளிதானதல்ல என்பதால் எவன் உண்மைக்காக தன்னை வருத்தி அதனை ஏற்றுக்கொள்கின்றானோ, அவனுக்கே பிரம்மச்சரியம் கைகூடும். அதன் பின்புதான் மற்ற நிலைகள்.
எதுவரை பிரம்மச்சரியம் -
விவேகானந்தர் தன்னுடைய பிரம்மச்சரியத்தினை தன் வாழ்நாள் முழுக்க கடைபிடித்திருந்தார். ஆனால் இந்து மதம் எல்லோரையும் அப்படியே வாழுமாறு சொல்லவில்லை. அது பிரம்மச்சரியம், கிரகஸ்தம், வனப்பிரஸ்தம், துறவறம் என்ற நான்கு நிலை கோட்பாட்டின் படி வலியுருத்துகிறது. இந்த நான்கில் பிரம்மச்சரியம் முதல் நிலை மற்றும் பயிற்சி நிலை. ஒருவன் பிறந்ததிலிருந்து பதினாறு வயதுவரை பாலபருவம்.அச்சமயம் அடிப்படைக்கல்விக்கு ஒதுக்கப்படுகிறது. பின் பதினாறு வயதிலிருந்து இருபத்துநான்கு வயது வரை பிரம்மச்சரியம். அதன் பின் மனைவியுடன் இல்லற வாழ்க்கை புக அனுமதியளிக்கிறது. கிரகஸ்தம், வனப்பிரஸ்தம், துறவறம் ஆகியவை அடுத்தடுத்த நிலையில் நிகழ்கின்றன.
இல்லறம் அனுமதிக்கப்பட்டதே! –
நான்கு நிலை கோட்பாட்டின் படி கிரகஸ்தம் என்கிற இல்லற வாழ்க்கைக்கு பிரம்மச்சரியம் முதல் நிலையாக இருக்கிறது. முழுமையான பிரம்மச்சரியம் எப்படி அனுமதிக்கப்பட்டதோ, அதே போல இல்லறமும் அனுமதிக்கப்பட்டதே. ஆனால் இதனை மக்கள் உணரவில்லை. அதன் விளைவைத்தான் இன்று கண்டுகொண்டிருக்கிறோம். முதல் சித்தராக போற்றப்படும் அகத்தியர்கூட லோபமுத்திரை என்ற பெண்ணை மணந்து வாழ்ந்துள்ளார்

No comments:

Post a Comment