Saturday, March 5, 2011

Mr & Mrs. Iyer



மீனாக்சி ஜயர் (கொங்கொன சென் ) தமிழ் பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவராவார்.மீனாக்சி தனது 9 மாத பிள்ளையுடன் பேருந்தில் நண்பரின் இல்லத்திற்குச் செல்லும் வழியில் ராஜா (ராகுல் போஸ் ) எனும் இஸ்லாமிய இளைஞரைச் சந்திக்கின்றார்.ஆரம்பத்தில் அவர் ஒரு இந்துவென நினைத்துப் பழகும் பின்னர் ஒரு இஸ்லாமியர் எனத் தெரிந்து அவரிடம் இருந்து விலகியே இருக்கவும் காணப்பட்டார். தண்ணீர் குடிக்கும் காட்சி "நச்"
அவர்கள் பயணம் செய்யும் பேருந்து திடீரென வரும் இந்துக் கும்பலால் தடுத்து நிறுத்தப்படுகின்றது.இஸ்லாமியர்களாக உள்ள அனைவரையும் கொலை செய்யப் போவதாகக் கூறிக்கொள்ளும் அக்கும்பல் இஸ்லாமிய மதத்தவர்களை அழைக்கும் போது அங்கு தன்னுடன் இருந்த ராஜாவைக் மனிதாபிமான அடிப்படையில் காட்டிக் கொடுக்க மறுக்கின்றார் மீனாக்சி அதே வேளை அக்கும்பல் அங்கு இஸ்லாமியர்களாக இருந்த முதியவர்களை வெளியே வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்கின்றது.சிறிது நேரங்களின் அருகில் இருக்கும் ஊருக்கு செல்லும் இருவரும் அங்கிருந்த விடுதியொன்றில் தங்குகின்றனர்.பின்னர் அங்கு வரும் பலர் கேட்கும் போதெல்லாம் ராஜா தனது கணவர் என அவரைக் காப்பாற்றுவதற்காக கூறிக்கொள்ளும் மீனாக்சி. கொங்கொன சென் கொள்ளை அழகு.. இருவரும் பேசுவதெல்லாம் ஒரு கவிதை போல சித்தரித்து உள்ளார் இயக்குநர். அபர்ணாசென். இவரின் புதல்வி தான் கொங்கொன சென் என்பது சூப்பர்.
இறுதியில் அவரை காப்பாற்றி பின்னர் சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து பிரிந்து செல்கிற காட்சி ஏதோ ஆழ்மனதை தொடுகின்றது

No comments:

Post a Comment