Saturday, March 5, 2011

பத்திரிகைகளின் பாராட்டு மழையை பெற்ற திரைப்படம்.







Dosar { Companion }
கெளசிக்கும் மிட்டாவும் வார விடுமுறையை ஒரு அழகிய ஹோட்டலில் கழித்து ஊருக்கு திரும்புகின்றனர்.

வரும் வழியில் பயங்கர விபத்து... மிட்டா உயிரிழக்க, அவள் இறந்த விபரம் கூட தெரியாமல் உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனையில் அட்மிட் ஆகிறான் கெளசிக்.

மிட்டா அவன் மனைவியல்ல... அவனுடன் அலுவலகத்தில் வேலை பார்ப்பவள். அவளுக்கு ஏற்கனவே திருமணமாகி எழு வயது மகனும் இருக்கிறான். ஆனாலும் இருவரும் உயிருக்கு உயிராய் நேசிக்கிறார்கள்..

விபத்து பற்றிய செய்தி கெளசிக்கின் மனைவி காவேரிக்கு ( கொங்கனா சென் ) தெரியப்படுத்துகிறார் காவல் துறை அதிகாரி.


அவனுக்கு உள்ள அந்நிய தொடர்புகள் அரசல் புரசலாய் தான் அவளுக்கு தெரியும். வெட்ட வெளிச்சமாய் உள்ளூர் கேபிள் வரை தொலைகாட்சி முழுவதும் செய்தியாய் பரவ நிலை குலைந்து போகிறாள் காவேரி.


காவேரிக்கு உதவ வருபவள் பிருந்தா. இவர்களின் தோழன் பாபி.பிருந்தாவை விட வயது குறைந்த இளம் பேச்சிலர். ஆனால் பாபி விர்ஜின் இல்லை. பிருந்தாவுக்கும் பாபிக்கும் அதீத உறவு. இவர்கள் அனைவரும் ஒரு நாடக குழுவை நடத்துவதன் மூலம் நட்பு வட்டத்தில் சிக்கியவர்கள்...

அடிபட்டு ஆஸ்பத்திரியில் விழுந்து கிடக்கும் கணவன் கெளசிக் மீது கடும் கோபத்துடன் இருக்கிறாள் காவேரி. தன்னை வஞ்சித்து ஏமாற்றியவனுக்கு எந்த பணிவிடையும் செய்ய இயலாதென வீட்டோடு ஒரு நர்ஸை நியமிக்கிறாள்.

தன் செயலுக்கு வருந்துகிறான் கெளசிக். முதலில் எதற்கும் மசிவதாய் இல்லை காவேரி.

இதற்கிடையில் பிருந்தா கர்ப்பம் உண்டாகி பிறக்க போகும் குழந்தைக்கு அப்பா யாரென அவளே குழம்புகிறாள். பாபி கடுப்பாகிறான்.

பிறகு பாபி அவளுக்கு புத்திமதி சொல்லி கணவனுடனே வாழ வேண்டும் என்றும், தோழி காவேரி படும் வேதனையும் துரோக எண்ணமும் அவள் கணவனுக்கும் வந்தால் நிலைமை என்னவாகும் ..?? என்று சொல்லி மனம் திருந்தி சென்று விடுகிறான்.

தான் உயிருக்கு உயிராய் நேசித்த மிட்டாவின் பிரிவை எப்படி தாங்க முடியவில்லையோ அப்படியே தன் மனைவியும் நேசிக்கும் கணவன் இழக்க சம்மதிப்பாள் என்று வருந்தி ஒரு விபத்து அவன் வாழ்க்கையில் வந்த விபத்தாக எண்ணி மனம் திருந்தி காவேரியுடன் இணைகிறான் கெளசிக்.
காவேரியும் மெல்ல மெல்ல கணவனை நெருங்குகிறாள். கவிதையாய் இத்துடன் முடிகிறது திரைப்படம்.

தேவையற்ற அதீத உறவுகளால் வரும் நிகழ்வுகளயும் குடும்பத்தில் ஏற்படும் பிளவுகளையும் பிரச்சினைகளையும் மிக யதார்த்தமாக சித்தரித்துள்ளார் இயக்குநர் ரிதுபர்னோ கோஷ்..


2006 ஆண்டு வெளிவந்த கருப்பு வெள்ளை திரைப்படம்.
கொங்கனா சென்னின் நடிப்பே படத்தின் மிகப்பெரிய பலம். கணவனின் துரோகத்தை நினைத்து துடிப்பதும், தனக்கே உரிய தன்னம்பிக்கையுடன் வாழ முற்படுவதும், கணவன் மீதுள்ள அளவிட முடியாத அன்பால் அவனை இழக்க முடியாமல் தவிப்பதும், நடிப்பால் நம்மை மிரள வைக்கிறார்.
மனைவியை இழந்த மிட்டாவின் கணவனை கண்டு ஆறுதல் சொன்ன போன இடத்தில் அவன் உங்கள் கணவனின் பொருள் ஒன்று தவறுதலாக என்னிடம் வந்து சேர்ந்துள்ளது என்று சொல்லி ஒரு Condom பாக்கெட்டை கொண்டு வந்து கொடுக்கும் போது தர்ம சங்கடத்தில் நெளியும் போதும், கணவனின் கைப்பேசியில் கணவனுக்கும் மிட்டாவிற்கும் இடையே நடைபெற்ற குறுஞ்செய்திகளை படித்து வேதனையில் துடிப்பதும் அத்தனை வேதனைகளையும் தன் தாயிடம் காட்டி கொள்ளாது இயல்பாக இருப்பது போல் பாவிப்பதும் கொங்கனா சென்னின் நடிப்புக்கு இந்த திரைப்படம் ஒரு மாஸ்டர் பீஸ்...

சிறந்த நடிகர், நடிகை, இயக்குநர் என்று பல்வேறு பிரிவுகளில் விருதுகளை தட்டி சென்ற திரைப்படம். கேன்ஸ் திரைப்பட விழாவிலும் பங்கு பெற்றது.

பத்திரிகைகளின் பாராட்டு மழையை பெற்ற திரைப்படம்.
“Another stunner by Rituparno Ghosh!” - The Times of India
“An exceptional creation. Probably the best film ever by Rituparno Ghosh” - Pratidin
Rituparno, with his able hands, has painted an ideal woman in a male-dominated society” - Taslima Nasreen, Anand Bazaar Patrika
“With Dosar, Rituparno comes across as a master craftsman”- The Times of India, Sunday Times
சந்தர்ப்பம் கிடைத்தால் நிச்சயம் பாருங்கள்.
உடனே பார்க்க டிரைலர் இங்கே
More Info : http://butterflysurya.blogspot.com

No comments:

Post a Comment