Friday, February 4, 2011

பயனுள்ள சிந்தனைகள் சில!


*மனிதன்தான், அவனது குணங்களை அமைக்கும் சிற்பி, சூழ்நிலையை உருவாக்கும் ஓவியன்; விதியை நிர்ணயிக்கும் சிரிஷ்டிகர்த்தா; அவனது எண்ணங்களின் தலைவன்.

*குணங்கள் என்ற நமது உள்ளாடைகளையும், சூழ்நிலைகள் என்ற வெளி ஆடைகளையும் நெய்யும் நெசவாள நிபுணர் நமது மனம்தான்.

*சூழ்நிலை மனிதனை உருவாக்குவதில்லை. அடிப்படையில் இன்ன மனிதன்தான் உள்ளே இருக்கிறான் எனக் காட்டிக் கொடுக்கிறது.

*தங்கள் சூழ்நிலையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மனிதர்கள் பதற்றப்படுகிறார்கள். ஆனால் தங்களை மேம்படுத்திக் கொள்ள முனைவதில்லை. அதனால் சூழ்நிலையின் கைதிகளாக வாழ்கிறார்கள்.

*தனது வாழ்வு எவ்வித சட்ட வரை முறைகளினால் இயங்குகிறது என்ற சூட்சுமத்தை புரிந்து கொள்ளும்போது, மனிதன் புத்திசாலியான தலைவனாய் மாறுகின்றான்.

*ஒரு மனிதன் தான் விரும்பும் சூழ்நிலையைத் தானே தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியாது என்பது உண்மைதான். ஆனால் தன் மனத்தில் உலவவிடும் எண்ணங்களைத் தேர்ந்தெடுக்கலாம். இதன்மூலம், மறைமுகமாக தான் விரும்பும் சூழலை தேர்ந்தெடுக்கலாம்.

*வாழ்வின் எல்லா நிகழ்ச்சிகளிலும் முயற்சிகள் இருக்கின்றன; விளைவுகள் இருக்கின்றன. நமது முயற்சியின் வலிமைதான் விளைவின் அளவுகோல். அதுதான் உண்மை; அதிர்ஷடமல்ல.

*நேர்மையான எண்ணங்கள் தந்த வெற்றியை, சரியாக கண்காணிப்பதன் மூலம்தான் நிரந்தரமாக்க முடியும்; பாதுகாப்பாக்க முடியும். வெற்றி வந்ததும் பலர், முன்பு கொண்டிருந்த உறுதியை மறந்து விடுகிறார்கள்; ஆணவம் தலைக்கேறி விடுகிறது; தோல்வி அவர்களை வேகமாகத் தழுவுகிறது.

*நாளைய நிஜங்களின் இன்றைய விதைகள்தான் நம் கனவுகள்.

இதையெல்லாம் கூறியவர் ஜேம்ஸ் ஆலன். 

No comments:

Post a Comment