Friday, February 4, 2011

கோபத்தை கைவிட வேண்டும்.

ஒருவர் கோபத்தை கைவிட வேண்டும். தற்பெருமையை விட்டு விடவேண்டும். தற்புகழ்ச்சியை விட்டு விடவேண்டும். அப்படிப்பட்ட ஆசையற்றவனின உடலையும் மனத்தையும் துன்பம் பீடிக்காது.

சாரதியானவன் தான் ஓட்டும் இரதத்தை எப்படிக் கடடுப்படுத்துகிறானோ அப்படித்தான் வெகுண்டெழும் கோபத்தை அடக்க வேண்டும். அப்படிப்பட்டவரே திறமையான சாரதி. மற்றவர் பெயரளவில்தான் சாரதி.

கோபத்தை அன்பினாலும், தீயதை நன்மையாலும் வெற்றி காணமுடியும்; அதேபோல் கருமியை ஈகையாலும், பொய்யரை மெய்யினாலும் வெற்றி கொள்ள முடியாது.

சத்தியத்தைப் பேசு; கோபத்திற்கு அடிமை ஆகாதே; கேட்டால் உன் பொருளில் சிறிது கூட கொடுக்கலாம்; இம்மூன்று தன்மையாலும் ஒருவர் தெய்வம் இருக்கும் இடத்தை அடைய முடியும்.

துறவிகள் மற்றவர்களுக்குத் தீமை செய்யார். பிற உடலைத் துன்புறுத்த மாட்டார். இறவாத நிலைக்குச் செல்வார். அவர் என்றும் வேதனை கொள்ள மாட்டார்.

இரவு பகலாக யாரொருவர் விழிப்புடன், ஒழுங்குடன் இருக்கிறாரோ, அவர் "நிர்வாணத்திற்கு" உரியவர். அவர்களிடமுள்ள அழுக்குகளும், குறைபாடுகளும் மறைந்து போய்விடும்.

இது நேற்று இன்று அல்ல, தொன்றுதொட்டே உள்ளது. சும்மா இருப்பவர்களை அவர்கள் குறை கூறுவார்கள். அதிகம் பேசுபவர்களை குறை கூறுவார்கள். மிதமாக பேசுபவர்களையும் குறை கூறுவார்கள். அவர்கள் குறை கூறாதவர்கள் யாருமில்லை.

முற்றிலுமாகப் போற்றப்படுபவரும், முற்றிலுமாகத் தூற்றப்படுபவர்களும், எப்போதும் இருந்ததுமில்லை இனி இருக்கப் போவதுமில்லை.

இரவு பகலாய் நெறி தவறாத அறிவாளிகள், அனைத்தையும் அறிந்த குணவானை, அறிஞர்கள் போற்றும்போது, யார்தான் அந்தப் புடம் போட்ட பொற்காசை குறை கூற முடியும்? ஆண்டவரே அவரைப் போற்றுவார். அவரைப் பிரம்மனும் போற்றுவாரே!

அருவருக்கத்தக்க வார்த்தைகளைச் சொல்லாது ஒருவன் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். வார்த்தைகளை அளந்து பேச வேண்டும். தவறான வார்த்தைகளைப் பிரயோகப்படுத்துவதைக் களைய வேண்டும். அத்துடன் தூய்மை மிகுந்த வார்த்தைகளைப் பேசப் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அறிஞர்கள் உடலைக் கட்டுப்படுத்துவர். வார்த்தைகளைக் கட்டுப்படுத்துவர். மனத்தைக் கட்டுப்படுத்துவர். அவர்கள் உண்மையாகவே கட்டுப்படுத்திக் கொண்டவர்கள் ஆவார்கள்.

புத்தர்.

No comments:

Post a Comment