எந்த ஒரு செயலையும் "நான் தான் செய்தேன்", "என்னால் தான் அந்த செயல் செய்யப்பட்டது" என்று தன்னைப்பற்றி பெருமை படுத்திக் கொள்ளாமல் நமது அல்லது எங்களது கூட்டு முயற்சியால் "சாதித்தோம்" அல்லது "செய்யப்பட்டது" போன்ற வார்த்தைகளை உபயோகப்படுத்துவோம். நிர்வாகவியலில் இதைதான் கூட்டு முயற்சி(Team Work) என்கிறோம். இதைப் பற்றி பழமொழிகள் கூறுவது.
- தனிமரம் தோப்பாகாது.
- ஒரு கையைய் தட்டினால் ஓசை வராது.
- ஊர் கூடி தேர் இழுப்போம்.
- ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.
விவாதங்கள்
ஒரு செயலிலோ அல்லது பொருளைப் பற்றியோ முழுமையான அறிவு இல்லாமல், ஓரளவிற்கு அதைப் பற்றி தெரிந்ததை வைத்துக் கொண்டு "தான் சொல்வது தான் சரி" போன்ற விவாதங்களை விட்டு விடுவோம். இதனால் இரண்டு வகையான பலன்கள்.
- நமக்கு தெரியாத அல்லது ஓரளவிற்கே தெரிந்ததை பற்றி முழுமையாக அறிவதற்கான வாய்ப்பு.
- மற்றவரின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் நாம் அவர்களின் கருத்துக்களை அறிகிறோம். ஒரு வேளை மற்றவர் கூறுகின்ற கருத்து தவறாக இருந்தால் கூட அவர்களின் "நன் மதிப்பை" பெறுகிறோம்.
அறியாதவர்களிடம் அளவாகப் பேசுவோம்.
உதாரணமாக, அதிகம் பழக்கம் இல்லாத ஒருவரிடமோ அல்லது புதிதாக சந்திக்கும் ஒருவரிடமோ நல்ல விஷயங்களையோ அல்லது கருத்துக்களையோ நெடுநேரம் பகிர்ந்தாள் கூட ஒரு சில சமயங்களில் "நீண்ட நேரம் பேசுபவன்", "தன்னைப் பற்றி புகழ்பவன்" என்பது போன்ற பழிச் சொற்களை பெற்று விடுவோம்.
வாழ்க்கை கணக்கு
100 x -1 = -100. இதனை கணித சூத்திரம் என்று எண்ண வேண்டாம். “வாழ்க்கை கணக்கு” என்றே கொள்ளலாம். விளக்கம்: எந்த ஒரு செயலையும் முழுமையாகவும் முழுமனதுடனும் செய்ய வேண்டும். இதனை 100 மடங்கு நேர்மறையாக கொள்வோம். இந்த நூறு மடங்கு செய்வதனால் நான் இதனை அடைவேன் என்ற எதிர்மறையான எதிர்பார்ப்பு 1 மடங்கு என கொள்வோம். விளைவு, நீங்கள் செய்த காரியத்தில் தோல்வி அல்லது பெருமை படக் கூடிய அளவில் இல்லாத வெற்றி. ஒரு சின்ன எதிர்பார்ப்பு பெரிய வெற்றியைய் கூட மாற்றி அமைக்கும். இதைப் பற்றி பழமொழி கூறுவது,
- கடமையைய் செய்; பலனை எதிர்பாராதே.
- நல்லதே செய்; நல்லதே நடக்கும்.
உதாரணம்: நமது சினிமாத் துறையில் பல ஆண்டுகளாக அனைவராலும் சாதிக்க முடியாத வெற்றியைய் சமீபத்தில் இந்த இளம் வயதிலேயே சாதித்துள்ளார் இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான். இரண்டு ஆஸ்கர் விருதுகள். இங்கு அவரிடம் காண்பது அடக்கம், பணிவு, பொறுமை போன்ற பற்பல விஷயங்கள். இவர் விருது வாங்கி விட்டார் என்பதற்காக கூறப்படுகின்ற வார்த்தைகள் அல்ல இது. சினிமாத்துறையில் அவருடன் பணிபுரிந்த பலராலும் கூறப்பட்ட வார்த்தைகள்.
மன்னிக்கவும். இங்கு குறிப்பிட்டுள்ள வரிகள் எந்த ஒரு சினமாத் துறையினரையும் புண்படுத்துவதற்காக அல்ல. சினிமாத் துறையில் உள்ள ஒரு சிலர் "ஆஸ்கர் விருது" வாங்க வேண்டும் என்ற ஒரு எதிர்மறையான எண்ணத்திற்காகவே படத்தை தயாரித்தார்கள். இங்கு அவர்களது ஒரு மடங்கு எதிர்மறையான எண்ணம் 100மடங்கு கடின உழைப்பையும் கூட பயனில்லாமல் செய்து விட்டதும் உண்டு.
விளைவு: படத்திற்காக செலவிட்ட முதலீட்டிலும் நஷ்டம். எதிர்பார்ப்பிலும் தோல்வி.
உரையாடுதல்
யாரிடமும் உரையாடும் பொழுது நமது முழு கவனத்தையும் அவரிடம் மட்டுமே செலுத்துவோம்.
உதாரணமாக, தொலைபேசியிலோ அல்லது அலைபேசியிலோ பேசும் பொழுது கணிணி திரையைய் பார்த்தால் கூட "நமது சிந்தனை" கணிணி திரையில் தான் இருக்கும். உரையாடலில் செறிவு அதிகம் காணப்படாது.
"கண்ணும் கண்ணும்" நேராக பார்த்து பேச வேண்டும். இங்கு "கண்ணும் கண்ணும் நேராக பார்த்தால் காதல் என்று அர்த்தமல்ல, உரையாடலில் கவர்ச்சி" என்றே அர்த்தம். இது பேசுபவர்களின் ஆர்வத்தைதூண்டும். அப்படி கூர்ந்து கவனிக்கும் நம் பார்வை சிதறுகையில்,பேசுபவர் தன் பேச்சின் தன்மையையும் அறிந்து செயல் பட ஏதுவாக இருக்கும்.
Best Regards,
Jaikumar Krishnasamy| Chief Executive | Sri Saravana Spinning Mills Pvt Ltd., Dindigul - 624 002, India. Tel : 91-451-248 0501 to 503 | Fax : 91-451-248 0504 | Mail : jai@ssm-india.com | www.ssm-india.com |
No comments:
Post a Comment