Thursday, January 27, 2011

கற்பனையான எதிர்மறையான எண்ணங்களை விட்டுத்தள்ளுங்கள்

Author: டாக்டர் ந.செந்தில்


கற்பனையான எதிர்மறையான   எண்ணங்களை விட்டுத்தள்ளுங்கள்!
நீங்கள் உங்கள் இயக்குனர் அல்லது முதலாளியிடம் வேலை செய்யும்     போது அவருடன் உங்களால் ஒத்துப்போக  முடியவில்லை. இதற்கு     பல காரணங்கள் உண்டு, சில நியாயமாகவும் இருக்கலாம்; நீங்கள் வேலையை விட்டுவிடலாமா அல்லது வேறு ஒருவரிடம்வேலையில் சேர்ந்துவிடலாமா என பல நேரங்களில் நினைப்பதுண்டு.
இவை அனைத்திற்கும் நீங்கள் உங்கள் வேலையில், உங்கள் மேலாளர் மீது கொண்டுள்ள கற்பனையான எண்ணங்களே காரணம்.
இந்த கற்பனையில் இருந்து வெளிவந்து எது நியாயமான நிலை என ஆராய்ந்தால் உங்கள் பிரச்சனைகள் அனைத்திற்கும் தீர்வு கிடைத்துவிடும்.
இதோ அணுகுமுறைகள் :
1.    நீங்கள் வேலை செய்யும் விதத்தை முன்பே முடிவு செய்துவிடாதீர்கள், இப்படித்தான் செய்ய வேண்டும் என்று. இது உங்களின் பிறவிக் குணமாக இருக்கலாம், அல்லது நீங்கள் பழகிய குணமாக இருக்கலாம்.
உங்களை நிர்வகிப்பவர், புதிய முறையில் செய்ய சொல்லும்போது உங்களால் அதை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. இதனால் உங்களுக்கும் அவருக்கும் பிரச்சனை ஆரம்பிக்கிறது. இதனால் வேலையை வெறுக்கிறீர்கள்.
2.    சில நேரங்களில் நீங்கள் அதிமேதாவியாக நின்றுகொண்டு வேலையில் உள்ள விபரங் களை அறியாமல் வேலை செய்வதால் இடையில் வரும் பிரச்சனைகளை சமாளிக்க முடியாமல் போகிறது; இதனால் மேலாளர் உங்களை சரிசெய்ய வேண்டி உள்ளது.
இந்த இரண்டு சூழ்நிலையிலும் வேலையை விட்டு உங்களை அனுப்புவதற்கு மேலாளர் விரும்புவதில்லை. அதே சமயம் நீங்களாக வேலையை விட்டு வேறு வேலைக்கு செல்வதும் சரியான முடிவு இல்லை. நீங்கள் புது வேலைக்கு சென்றாலும் இதே பிரச்சனை வராது என்பதற்கு உத்திரவாதம் இல்லை. அதே போல் புதியவரை வேலைக்குஎடுக்கும் நிறுவனத்திற்கும் மீண்டும் இதே பிரச்சனை வரநேரிடும்!

இதற்கு வழிதான் என்ன?
1.    எதிர்மறையான எண்ணங்கள் கொண்டவர் கள் ஒரு நிறுவனத்தில் வேலை செய்வது எப்போதும் புதியதல்ல. “Boss always boss” தலைவர் எப்போதும் தலைவர்தான்; எனவே அவருடைய எண்ணங்கள், செயல்களுக்கு மதிப்பு கொடுங்கள். அதேசமயம் தவறுகளை நாசுக்காக, நேரம் காலம் அறிந்து சுட்டிக் காட்டுங்கள். அதற்காக கொடுக்கப்பட்ட வேலையை தலைவர் சொன்ன விதத்தில் முடிப்பதுதான் உங்களுக்கும் உங்கள் நிறவனத்திற்கும் நல்லது.

2.    நீங்கள் எதிர்பார்த்தது கிடைக்காதது கோபம், மன உழற்சி, வெறுப்பு, பொறாமை இவை அனைத்தும் மனிதனுடன் பிறந்த குணங்கள். இவை பலபேர் வேலைசெய்யும் நிறுவனத்தில் இருக்கத்தான் செய்யும். இவற்றிற்கு முழுவதுமாக நீங்கள் அடிமையாகிவிட்டால் உங்கள் வளர்ச்சி நிறுவனத்தில் கேள்விக்குறியாகிவிடும்.
எனவே மற்றவர்களிடம் நன்கு பழகும் தன்மையை வளர்த்துக்கொள்ளுங்கள். இது உங் களின் இயக்குனராக இருக்கலாம், உங்களுக்கு சமமான இடத்தில் பணி புரிபவராக இருக்கலாம் அல்லது உங்களுக்கு கீழ் பணிபுரியும் ஊழியர் கள், மாணவர்களாக இருக்கலாம்.

உங்களிடம் உள்ள, உணர்ச்சிக்கு அடிமைப் படாத தன்னை, வேலையில் உள்ள உங்கள் ஈடுபாடு உங்களை மற்றவர்களிடமிருந்து வேறு படுத்திக் காட்டும். அதே சமயம் உங்களின் கோபம், விரக்தி, பொறாமை இவைகள் உங்கள் வளர்ச்சியை மட்டுமல்லாமல், உங்களைச் சார்ந்து இருக்கும் குழு மற்றும் நிறுவனத்தின் முன்னேற்றத்திற்கு தடையாக அமையும்.
உங்கள் இயக்குநர்கள் என்ன எதிர்பார்க் கிறார்கள் என்பதை தெளிவாக உணர்ந்து கொள்ளுங்கள். ஒரு நிறுவனத்தின் திட்டங்களை இயக்குநர் செயல்படுத்த வேண்டும். அதனால் அவருடைய திட்டங்கள் என்ன, எப்படி செயல் படுத்த விரும்புகிறார் என்பதை உற்று கவனி யுங்கள். அதற்கு ஏற்றாற்போல் உங்கள் வேலை செய்யும் முறையை மாற்றி அமையுங்கள், வேலை களை செய்து முடியுங்கள். நீங்கள், இடையில் ஏற்படும் சங்கடங்களை காலம் வரும்போது எடுத்துச் சொல்லி அதற்கு தீர்வு காண முயற்சி செய்யுங்கள்.

அதேபோல் இயக்குநராக நீங்கள் உயர்ந்து விட்டால், உங்கள் வளர்ச்சியின் போது கிடைத்த அனுபவங்களை வைத்து, நீங்கள் உதவியாளராக வேலை செய்த காலத்தில் இருந்த அந்தந்த பிரச் சனைகளை கருத்தில் கொண்டு இயக்குனராக பணியாற்றுங்கள்.
உங்களிடம் வேலை செய்பவர்களை உற்சாகப்படுத்துங்கள்.
அவர்களின் உணர்ச்சி களை புரிந்துகொள்ளுங்கள். அவர்களின் பிரச்சனைகளை புரிந்துகொண்டு அதை சரி செய்ய அறிவுரை கூறுங்கள்.

சிந்தனைகள், யோசனைகளை எப்போதும் ஒத்துச் செல்லும் என்பது கிடையாது. நல்ல யோசனைகளாக இருந்தால் உடனடியாக எடுத்துக்கொண்டு செயல்படுத்த முயற்சி செய்யுங்கள்.
புதிய சிந்தனைகள், புதிய முயற்சிகளுக்கு உறுதுணையாக இருங்கள். உணர்ச்சிகளுக்கு அடிமையாகாமல் தெளிவான முடிவுகள் உங்களையும் உங்களை சார்ந்தவர்களையும் முன்னேற்றும் என்பதில் ஐயமில்லை

No comments:

Post a Comment