மழைக்காலங்களில் எந்தளவுக்கு நாம் சுத்தமாக இருக்கிறோமோ.. அந்தளவுக்கு நம்மை கிருமிகள் அண்டாமல் பாதுகாத்து கொள்ளலாம். மழைக் காலத்தில் ஏற்படும் தொற்று நோய்கள் சிலவற்றைப் பார்ப்போம்.
மழைக் காலத்தில் தொற்று நோய்களும் மலேரியா, சிக்குன் குனியா போன்றவையும் பரவலாம்.
மழைக் காலத்தில் தண்ணீர் மூலம் தொற்று நோய் பரவ வாய்ப்பு அதிகம். இதனால் வயிற்றுப் போக்கு, காலரா, டைபாய்டு, காமாலை போன்ற நோய்கள் பரவலாம். கொசுக்கள் மூலம் மலேரியா, டெங்கு, சிக்குன் குனியா நோய்கள் பரவவும் வாய்ப்புள்ளது.
எனவே மக்கள் அனைவரும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். முன்னெச்சரிக்கையாக இருந்தால் பல நோய்களைக் கட்டுப்படுத்திவிட முடியும்.
காய்ச்சிய நீரை பருக வேண்டும். சுகாதாரமற்ற முறையில் விற்கப்படும் உணவுப் பொருட்கள் உண்பதைத் தவிர்க்க வேண்டும். சேரும் சகதியாகவும் இருக்கும் இடங்களில் செருப்பு அணியாமல் நடக்கக் கூடாது. வீட்டின் தரையும் எப்போதும் குளிர்ச்சியாக இருப்பதால் சளிபிடிக்க அதிக வாய்ப்பு உண்டு. வீட்டில் பிரத்யேகமாகப் பயன்படுத்த ரப்பர் செருப்பைப் பயன்படுத்துவதும் நோய்களில் இருந்து காப்பாற்றும்.
வயிற்றுப் போக்கு ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள துணை சுகாதார நிலையம், ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற வேண்டும். வயிற்றுப் போக்கு ஏற்பட்டால் உப்பு கரைசல் நீரைப் பருக வேண்டும். நாமே மருந்துக் கடைகளில் மாத்திரை வாங்கி சாப்பிடுவது நல்லதல்ல
No comments:
Post a Comment