* உன்னைப் பழிப்பவர்களிடமும் நீ அன்பு காட்டவேண்டும். அதுவே உயர்ந்த பண்பு.
எல்லா உயிர்களிலும் இறைவன் இருக்கிறார் என்றால், பழிப்பவனிடத்திலும் அவர் இருக்கத்தானே செய்வார்.
* படிப்பு ஒருவனுக்கு விவேகத்தையும், எதிலும் உள்ள நன்மை தீமைகளைப்
பகுத்தறியும் பண்பினையும் தரவேண்டும். இல்லாவிட்டால் படிப்பால் பயனேதும் இல்லை.
* கட்டுப்பாடற்ற சுதந்திரத்தை நம்மில் பலரும் விரும்புகிறோம். ஆனால்,
அது கெடுதலான பின்விளைவுகளை உண்டாக்கும் என்பதை நாம் சிறிதும் உணர்வதில்லை.
* நம் நாட்டின் சொத்து ஆன்மிகம் மட்டுமே.
அதைப் பாதுகாக்கும் பண்பாட்டு பெட்டகங்களாகப் பெண்கள் திகழ வேண்டும்.
* மேலைநாடுகளைப் போன்று செல்வமும், வளமையும் நம்மிடத்தில் இல்லையே என்று வருந்துகிறார்கள்.
பண்பின் அடிப்படையில் முன்னேற்றம் பெறும் வாழ்வே, என்றும் நிலைத்து நிற்கும்.
* நம்மால் முடிந்த தொண்டினைப் பிறருக்குச் செய்ய வேண்டும். உதவும் எண்ணம் இல்லாமல்,
எப்போதும் தியானத்தில் இருந்தால் மட்டும் கடவுளை அடைந்துவிட முடியாது.
-சாய்பாபா
No comments:
Post a Comment