Tuesday, February 15, 2011

பெண்ணாசை தீர்க்கு மருந்து -1


'பெண்ணாசை' என்னும் வார்த்தை திருவருட்பா

 முழுவதிலும் 5 இடங்களில் உள்ளன






முதல் திருமுறை
1. தெய்வமணி மாலை


வாய்கொண் டுரைத்தல்அரி தென்செய்கேன் என்செய்கேன்
வள்ளல்உன் சேவடிக்கண்
மன்னாது பொன்னாசை மண்ணாசை பெண்ணாசை
வாய்ந்துழலும் எனதுமனது
பேய்கொண்டு கள்உண்டு கோலினால் மொத்துண்டு
பித்துண்ட வன்குரங்கோ
பேசுறு குலாலனாற் சுழல்கின்ற திகிரியோ
பேதைவிளை யாடுபந்தோ
காய்கொண்டு பாய்கின்ற வெவ்விலங் கோபெருங்
காற்றினாற் சுழல்கறங்கோ
காலவடி வோஇந்த்ர ஜாலவடி வோஎனது
கர்மவடி வோஅறிகிலேன்
தாய்கொண்ட சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே

மூன்றாம் திருமுறை
4. சிவநேச வெண்பா
இன்றோ பகலோ இரவோ வருநாளில்
என்றோ அறியேன் எளியேனே - மன்றோங்கும்
தாயனையாய் நின்னருளாம் தண்ணமுதம் உண்டுவந்து
நாயனையேன் வாழ்கின்ற நாள்
மண்ணாசை வெற்பே மறிகடலே பொன்னாசை
பெண்ணாசை ஒன்றேஎன் பேராசை - நண்ணாசை
விட்டார் புகழும் விடையாய்நான் பொய்யாசைப்
பட்டால் வருமே பதம்

மூன்றாம் திருமுறை
9. நல்ல மருந்து

பெண்ணாசை தீர்க்கு மருந்து - பொருட்
பேராசை யெல்லாம் பிளக்கு மருந்து
மண்ணாசை தீர்க்கு மருந்து - எல்லாம்
வல்ல மருந்தென்று வாழ்த்து மருந்து நல்ல

ஆறாம் திருமுறை
142. அனுபவ மாலை

கண்ணாறு367 படும்எனநான் அஞ்சுகின்றேன் பலகால்
கணவர்திரு வடிவழகைக் கண்டுகண்டு களிக்கில்
எண்ணாஎன் ஆசைவெள்ளம் என்சொல்வழி கேளா
தெனைஈர்த்துக் கொண்டுசபைக் கேகுகின்ற தந்தோ
பெண்ணாசை பெரிதென்பர் விண்ணாளும் அவர்க்கும்
பெண்ணாசை பெரிதலகாண் ஆணாசை பெரிதே
உண்ணாடிப் பற்பலகால் கண்ணாறு கழிக்கல்
உறுகின்றேன் தோழிநின்னால் பெறுகின்ற படியே

இரண்டாம் திருமுறை
39. நெடுமொழி வஞ்சி


மோகம் என்னும்ஓர் மூடரில் சிறந்தோய்
முடிவி லாத்துயர் மூலஇல் ஒழுக்கில்
போகம் என்னும்ஓர் அளற்றிடை விழவும்
போற்று மக்கள்பெண் டன்னைதந் தையராம்
சோக வாரியில் அழுந்தவும் இயற்றிச்
சூழ்கின் றாய்எனைத் தொடர்ந்திடேல் தொடரில்
ஓகை ஒற்றியூர்ச் சிவன்அருள் வாளால்
உன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே

ஆறாம் திருமுறை
51. இறைவனை ஏத்தும் இன்பம்

தாகமுள் எடுத்த போதெதிர் கிடைத்த
சர்க்கரை அமுதமே என்கோ
மோகம்வந் தடுத்த போதுகைப் பிடித்த
முகநகைக் கணவனே என்கோ
போகமுள் விரும்பும் போதிலே வலிந்து
புணர்ந்தஓர் பூவையே என்கோ
ஆகமுட் புகுந்தென் உயிரினுட் கலந்த
அம்பலத் தாடிநின் றனையே

முதல் திருமுறை
25. குறை நேர்ந்த பத்து

மெய்யாவோ நற்றணிகை மலையைச் சார்ந்து
மேன்மையுறும் நின்புகழை விரும்பி ஏத்தேன்
உய்யாவோ வல்நெறியேன் பயன்ப டாத
ஓதிஅனையேன் எட்டிதனை ஒத்தேன் அன்பர்
பொய்யாஓ டெனமடவார் போகம் வேட்டேன்
புலையனேன் சற்றேனும் புனிதம் இல்லேன்
ஐயாவோ நாணாமல் பாவி யேன்யான்
யார்க்கெடுத்தென் குறைதன்னை அறைகு வேனே
வஞ்சமட மாதரார் போகம் என்னும்
மலத்தினிடைக் கிருமிஎன வாளா வீழ்ந்தேன்
கஞ்சமலர் மனையானும் மாலும் தேடக்
காணாத செங்கனியில் கனிந்த தேனே
தஞ்சம் என்போர்க் கருள்புரியும் வள்ளலேநல்
தணிகைஅரை சேஉனது தாளைப் போற்றேன்
எஞ்சல்இலா வினைச்சேம இடமாய் உற்றேன்
என்குறையை எவர்க்கெடுத்திங் கியம்பு கேனே

முதல் திருமுறை
42. திருவருள் விலாசப் பத்து

கற்பனையே எனும்உலகச் சழக்கில் அந்தோ
கால்ஊன்றி மயங்குகின்ற கடைய னேனைச்
சொற்பனம்இவ் வுலகியற்கை என்று நெஞ்சம்
துணிவுகொளச் செய்வித்துன் துணைப்பொற் றாளை
அற்பகலும் நினைந்துகனிந் துருகி ஞான
ஆனந்த போகம்உற அருளல் வேண்டும்
சிற்பரசற் குருவாய்வந் தென்னை முன்னே
சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவே

முதல் திருமுறை
44. செல்வச் சீர்த்தி மாலை

நாணும் அயன்மால் இந்திரன்பொன் நாட்டுப் புலவர் மணம்வேட்ட
நங்கை மார்கள் மங்கலப்பொன் நாண்காத் தளித்த நாயகமே
சேணும் புவியும் பாதலமும் தித்தித் தொழுகும் செந்தேனே
செஞ்சொற் சுவையே பொருட்சுவையே சிவன்கைப் பொருளே செங்கழுநீர்ப்
பூணும் தடந்தோட்பெருந் தகையே பொய்யர் அறியாப் புண்ணியமே
போகங் கடந்த யோகியர்முப் போகம் விளைக்கும் பொற்புலமே
தாணு என்ன உலகமெலாம் தாங்கும் தலைமைத் தயாநிதியே
தணிகா சலமாம் தலத்தமர்ந்த சைவ மணியே சண்முகனே

இரண்டாம் திருமுறை
39. நெடுமொழி வஞ்ச

மோகம் என்னும்ஓர் மூடரில் சிறந்தோய்
முடிவி லாத்துயர் மூலஇல் ஒழுக்கில்
போகம் என்னும்ஓர் அளற்றிடை விழவும்
போற்று மக்கள்பெண் டன்னைதந் தையராம்
சோக வாரியில் அழுந்தவும் இயற்றிச்
சூழ்கின் றாய்எனைத் தொடர்ந்திடேல் தொடரில்
ஓகை ஒற்றியூர்ச் சிவன்அருள் வாளால்
உன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே

மூன்றாம் திருமுறை
5. மகாதேவ மாலை

யோகமே யோகத்தின் பயனே யோகத்
தொருமுதலே யோகத்தின் ஓங்குந் தூய
போகமே போகத்தின் பொலிவே போகம்
புரிந்தருளும் புண்ணியமே புனித ஞான
யாகமே யாகத்தின் விளைவே யாகத்
திறையேஅவ் விறைபுரியும் இன்பே அன்பர்
மோகமே மோகமெலாம் அழித்து வீறு
மோனமே மோனத்தின் முளைத்த தேவே









1. தெய்வமணி மாலை
காமஉட் பகைவனும் கோபவெங் கொடியனும் 
கனலோப முழுமூடனும்
கடுமோக வீணனும் கொடுமதம் எனுந்துட்ட
கண்கெட்ட ஆங்காரியும்
ஏமம்அறு மாச்சரிய விழலனும் கொலைஎன்
றியம்புபா தகனுமாம்இவ்
வெழுவரும் இவர்க்குற்ற உறவான பேர்களும்
எனைப்பற்றி டாமல்அருள்வாய்
சேமமிகு மாமறையின் ஓம்எனும் அருட்பதத்
திறன்அருளி மலயமுனிவன்
சிந்தனையின் வந்தனைஉ வந்தமெய்ஞ் ஞானசிவ
தேசிக சிகாரத்னமே
தாமம்ஒளிர் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகர் சைவமணி
சண்முகத் தெய்வமணியே

வன்பெரு நெருப்பினைப் புன்புழுப் பற்றுமோ
வானைஒரு மான்தாவுமோ
வலியுள்ள புலியைஓர் எலிசீறு மோபெரிய
மலையைஓர் ஈச்சிறகினால்
துன்புற அசைக்குமோ வச்சிரத் து‘ண்ஒரு
துரும்பினால் துண்டமாமோ
சூரியனை இருள்வந்து சூழுமோ காற்றில்மழை
தோயுமோ இல்லைஅதுபோல்
அன்புடைய நின்அடியர் பொன்அடியை உன்னும்அவர்
அடிமலர் முடிக்கணிந்தோர்க்
கவலமுறு மோகாமம் வெகுளிஉறு மோமனத்
தற்பமும்வி கற்பம்உறுமோ
தன்புகழ்செய் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தன்முகத் துய்யமணி உன்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே

மனமான ஒருசிறுவன் மதியான குருவையும்
மதித்திடான் நின் அடிச்சீர்
மகிழ்கல்வி கற்றிடான் சும்மாஇ ரான்காம
மடுவினிடை வீழ்ந்துசுழல்வான்
சினமான வெஞ்சுரத் துழலுவன் உலோபமாம்
சிறுகுகையி னு‘டுபுகுவான்
செறுமோக இருளிடைச் செல்குவான் மதம்எனும்
செய்குன்றில் ஏறிவிழுவான்
இனமான மாச்சரிய வெங்குழியின் உள்ளே
இறங்குவான் சிறிதும்அந்தோ
என்சொல்கே ளான்எனது கைப்படான் மற்றிதற்
கேழையேன் என்செய்குவேன்
தனநீடு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே

3. பிரார்த்தனை மாலை
வேல்கொண்ட கையும் விறல்கொண்ட தோளும் விளங்குமயில்
மேல்கொண்ட வீறும் மலர்முகம் ஆறும் விரைக்கமலக்
கால்கொண்ட வீரக் கழலும்கண் டால்அன்றிக் காமன்எய்யும்
கோல்கொண்ட வன்மை அறுமோ தணிகைக் குருபரனே

7. ஜீவசாட்சி மாலை
வன்சொலினார் இடைஅடைந்து மாழ்கும் இந்த
மாபாவி யேன்குறையை வகுத்து நாளும்

என்சொலினும் இரங்காமல் அந்தோ வாளா
இருக்கின்றாய் என்னேநின் இரக்கம் எந்தாய்
இன்செல்அடி யவர்மகிழும் இன்ப மேஉள்
இருள்அகற்றும் செழுஞ்சுடரே எவர்க்கும் கோவே
தன்சொல்வளர் தரும்தணிகை மணியே ஜ“வ
சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே


வந்தாள்வாய் ஐயாவோ வஞ்சர் தம்பால்
வருந்துகின்றேன் என்றலறும் மாற்றம் கேட்டும்
எந்தாய்நீ இரங்காமல் இருக்கின் றாயால்
என்மனம்போல் நின்மனமும் இருந்த தேயோ
கந்தாஎன் றுரைப்பவர்தம் கருத்துள் ஊறும்
கனிரசமே கரும்பேகற் கண்டே நற்சீர்
தந்தாளும் திருத்தணிகை மணியே ஜ“வ
சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே

18. புன்மை நினைந் திரங்கல்
கச்சுக் கட்டி மணங்கட்டிக்காமுகர்

கண்ணைக் கட்டி மனங்கட்டி வஞ்சகம்
வச்சுக் கட்டிய வன்கழற் கட்டியும்
மண்ணின் கட்டியும் மானும்மு லைக்கட்டிக்
கிச்சைக் கட்டிஇ டும்பைஎ னும்சுமை
ஏறக் கட்டிய எற்கருள் வாய்கொலோ
பிச்சைக் கட்டிய பித்தன் புதல்வனே
பெருமை கட்டும் பெருந்தணி கேசனே


19. திருவடி சூட விழைதல்
கல்லாக் கொடிய மடவார்தம் காமக் குழிக்கண் வீழாமே
நல்லார்க் கெல்லாம் நல்லவநின் நாமம் துதிக்கும் நலம்பெறவே
சொல்லாற் புனைந்த மாலையொடும் தொழுது தணிகை தனைத்துதிக்க
வல்லார்க் கருளும் நின்திருத்தாள் அடியேன் முடிமேல் வைப்பாயே

கள்ளக் கயற்கண் மடவார்தம் காமத் துழலா துனைநினைக்கும்
உள்ளத் தவர்பால் சேர்ந்துமகிழ்ந் துண்மை உணர்ந்தங் குற்றிடுவான்
அள்ளற் பழனத் திருத்தணிகை அரசே ஞான அமுதளீக்கும்
வள்ளற் பெருமான் நின்திருத்தாள் அடியேன் முடிமேல் வைப்பாயே

20. ஆற்றா விரகம்

எளியேன் என்ன இருப்பாரோ ஏழைக் கிரங்கும் விருப்பாரோ
அளியேன் பேர்நெஞ் சிருப்பாரோ அழியாக் காமம் திருப்பாரோ
களியேன் என்ன உருப்பாரோ கருதும் அருட்குக் கருப்பாரோ
தெளியேன் யான்என் செய்கேனே தென்பால் தணிகைப் பொருப்பாரே

காமப் பயலைத் தடுப்பாரோ கடப்ப மலர்த்தார் கொடுப்பாரோ
ஏமத் தனத்தைக் கடுப்பாரோ என்மேல் அன்பை விடுப்பாரோ
மாமற் றொருவீ டடுப்பாரோ மனத்தில் கோபம் தொடுப்பாரோ
தாமத் தாழ்வைக் கெடுப்பாரோ தணிகை தனில்வேல் எடுப்பாரே

22. பணித்திறஞ் சாலாப் பாடிழிவு
காமாந்த காரியாய் மாதர் அல்குல்
கடல்வீழ்ந்தேன் மதிதாழ்ந்தேன் கவலை சூழ்ந்தேன்
நாமாந்த கனைஉதைத்த நாதன் ஈன்ற
நாயகமா மணியேநல் நலமே உன்றன்
பூமாந்தண் சேவடியைப் போற்றேன் ஓங்கும்
பொழில்கொள்தணி காசலத்தைப் புகழ்ந்து பாடேன்
ஏமாந்த பாவியேன் அந்தோ அந்தோ
ஏன்பிறந்தேன் புவிச்சுமையா இருக்கின் றேனே

40. ஏத்தாப் பிறவி இழிவு

கான்அ றாஅள கத்தியர் அளக்கர்
காமத் தாழ்ந்தகங் கலங்குற நின்றேன்
வான மேவுறும் பொழில்திருத் தணிகை
மலையை நாடிநின் மலர்ப்பதம் புகழேன்
ஞான நாயகி ஒருபுடை அமர்ந்த
நம்ப னார்க்கொரு நல்தவப் பேறே
ஈனன் ஆகிஇங் கிடர்ப்படு கின்றேன்
என்செய் வான்பிறந் தேன்எளி யேனே

41. பவனிச் செருக்கு

தண்தேன்பொழி இதழிப்பொலி சடையார்தரு மகனார்
பண்தேன்புரி தொடையார்தமைப் பசுமாமயில் மீதில்
கண்டேன்வளை காணேன்கலை காணேன்மிகு காமம்
கொண்டேன்துயில் விண்டேன்ஒன்றும் கூறேன்வரு மாறே
மாவீழ்ந்திடு விடையார்திரு மகனார்பசு மயில்மேல்
நீவீழ்ந்திட நின்றார்அது கண்டேன்என்றன் நெஞ்சே
பூவீழ்ந்தது வண்டேமதி போய்வீழ்ந்தது வண்டே
நாவீழ்ந்தது மலரேகழை நாண்வீழ்ந்தது மலரே

49. திருப்பள்ளித்தாமம் தாங்கல்
வெம்பு முயிருக் கோருறவாய் வேளை நமனும் வருவானேல்
தம்பி தமையன் துணையாமோ தனையர் மனைவி வருவாரோ

உம்பர் பரவுந் திருத்தணிகை உயர்மா மலைமே லிருப்பவர்க்குத்
தும்பைக் குடலை எடுக்காமல் துக்க வுடலை எடுத்தேனே
தொல்லைக் குடும்பத் துயரதனில் தொலைத்தே னந்தோ காலமெலாம்
அல்ல லகற்றிப் பெரியோரை யடுத்து மறியேன் அரும்பாவி
செல்லத் தணிகைத் திருமலைவாழ் தேவா உன்றன் சந்நிதிக்கு
வில்வக் குடலை எடுக்காமல் வீணுக் குடலை எடுத்தேனே
அவல வயிற்றை வளர்ப்பதற்கே அல்லும் பகலும் அதினினைவாய்க்
கவலைப் படுவ தன்றிசிவ கனியைச் சேரக் கருதுகிலேன்
திவலை யொழிக்குந் திருத்தணிகைத் திருமால் மருகன் திருத்தாட்குக்
குவளைக் குடலை எடுக்காமற் கொழுத்த வுடலை எடுத்தேனே

52. தனித் திருத்தொடை
முருகா சரணம் சரணம்என் றுன்பதம் முன்னிஉள்ளம்
உருகாத நாயனை யேற்குநின் தண்ணருள் உண்டுகொலோ
அருகாத பாற்கடல் மீதே அனந்தல் அமர்ந்தவன்றன்
மருகாமுக் கண்ணவன் மைந்தா எழில்மயில் வாகனனே
திருமாலைப் பணிகொண்டு திகிரிகொண்ட தாருகனைச் செறித்து 
வாகைப்பெருமாலை அணிதிணிதோள் பெருமானே ஒருமான்றன் பெண்மேற் காமர்வருமாலை உடையவர்போல் மணமாலை புனைந்தமுழு மணியே முக்கட் குருமாலைப் பொருள்உரைத்த குமாரகுரு வேபரம குருவே போற்றி



Download Tamil Audio Links:

No comments:

Post a Comment