Tuesday, February 15, 2011

சித்தர்கள் பாடலில் வாழ்வியல் கருத்துக்கள் - 8 'ஆனந்தா'க்களை அன்றே தோலுரித்த சித்தர்

கருவூரார் பிறந்த கருவூர் பெயராலேயே அடையாளம் காணப்படும் கருவூரார், கன்னடியராம்.

பாரேது புனலேது அனலுமேது?
பாங்கான காலேது? வெளியுமாகும்
நாரேது பூவேது வாசம் ஏது?
நல்லபுட் பந்தானேது? பூசை ஏது?
ஊரேது பேரேது சினமும் ஏது?
ஓகோகோ அதிசயந்தான் என்ன சொல்வேன்?
ஆறேது குளமேது கோயிலேது?
ஆதிசிவத்தை அறிவதனால் அறியலாமே!
எனப்பாடுகிறார். இவர்கள் கூறும் சிவனை அறியவேண்டும் என்றால் பூஏன்? பூசைஏன்? ஆற்றில், குளத்தில் முழுக்கு ஏன்? கற்பூரம் கொளுத்திப் பூஜை ஏன்? பகுத்தறிந்து பார்ப்பதனால் அறிந்து கொள்ளலாமே! என்கிறார். எத்தனை பேர் ஏற்றுக் கொள்வார்கள்? பூஜையும் புனஸ்காரமும், குளமும் கோயிலும் பிழைப்புக்கான வழி-களாக இருக்கும் நிலையில், அவர்கள் ஏற்றுக் கொள்வார்களா?
அண்மைக்காலமாக அம்பலப்பட்டுப்-போன, காஷாய கபட வேடதாரியைப் பற்றிப் பாடுவதைப் போலவே இவர் பாடியிருக்கிறார்.
புகலுவார் வேதமெல்லாம் வந்த தென்று
பொய்பேசிச் சாத்திரங்கள் மிகவும் கற்றே
அகலுவார் பெண்ணாசை விட்டோம் என்று
அறிவுகெட்டே ஊர்தோறும் சுற்றிச் சுற்றிச் சகலமுமே வந்தவர்போல் வேடம் பூண்டு
சடைமுடியுங் காசாயம் தன்னைச் சாற்றி
இகலுமனம் அடங்காமல் நினைவு வேறாய் எண்ணமெலாம் பெண்ணாசை பூசைதானே இந்தப் பாடலில் சடைமுடி என்பதை நீக்கிப் பார்த்தால் நகரங்களில் சிறந்த நகரம் சார்ந்த மடத்தலைவர் மனக்கண்முன் தோன்றுவாரே! மகாதேவர்கள் போன்ற புலவர்கள் பிசாசு எழுத்தாளர்கள் (GHOST WRITER) ஆக இருக்கும்போது இவர்கள் கோடிகோடியாய் எழுதிக் குவித்துக் கொண்டிருக்கிறார்கள் _ இவர்கள் அனைத்தும் அறிந்தவர்கள் போல! ரயில்வே கிளார்க்கின் மகன் சுப்பிரமணியன் படித்துக் கிழித்தது எல்லோருக்கும் தெரிந்தது-தானே! எண்ண-மெல்லாம் பெண் ஆசைதான் என்பதை, அய்யர், அய்யங்கார் வேறுபாடு இல்லாமல் ஆசைப்பட்டதை, அதுவே கொலையில் முடிந்ததை நாடு பார்த்துக் கொண்டுதானே இருக்கிறது! அண்மைக்கால ஆனந்தாக்களைப் பற்றிப் பாடியது போலவே கீழ்க் காணும் பாடல் காட்சி அளிக்கிறது.
பூசையது செய்வமென்று கூட்டம் கூடிப்
புத்திகெட்டுக் கைம்முறையின் போக்கை-விட்டுப் பாசையது மிகப்பேசிப் பாட்டும் பாடிப்
படிப்பார்கள் மந்திரத்தின் பயனைக் காணார்
ஆசையிலே பெண்ணாசை மயக்கத்தாலே
அங்கிருந்த வாமத்தைப் பங்கு போட்டுப்
பேசையிலே மனம்வேறாய் நினைப்பான் பாவி
புரட்டுரூட்டாய் நினைவுதப்பி பேசுவானே
யாரைக் குறித்து இது? வாழும் கலையா? குரோட்டன்ஸ் தலையா? சற்குருவா? திருச்சுழி (வெங்கட) ரமணனா? யார்? ஒன்றா, இரண்டா சட்டென்று அடையாளம் சொல்ல?
கருவூரார், கலக்கி விட்டார் தம் பாடல்களால்!
வந்தது (ஸிணிக்ஷிணிலிகிஜிமிளிழி) வேதம் என்றே மூன்று பெருமதக்காரர்களும் கூறுகிறார்கள். கர்த்தர் அறிவிக்க பைபிள், அல்லா சொல்ல குர்ஆன், கடவுள்களே அருளிய நான்கு வேதங்கள் என்றுதான் கூறுகிறார்கள்.
புகலுவார் வேதமெல்லாம் வந்தது என்று இந்தக் குட்டைப் போட்டு உடைக்கிறார் கருவூரார். இவன் கூறுகிறான் அப்படி என்று ஏகடியமாகக் கூறி எள்ளி நகைக்கிறார். என்னே ஷிகிஜிமிஸிணி காகபுண்டர் சரம்பெருக அண்டத்தில் எழுந்தே நின்ற சச்சிதானந்தமதைப் பணிகுவமே எனத் தொடங்கிய காகபுண்டர், ஆரியப் பார்ப்-பனக் கபடவேசதாரிகளின் கள்ளத்தை தெள்ளத் தெளிவாகப் பாடியுள்ளார்.
நாட்டுவார் சித்தரெல்லாம் பேதமாக
நலம்போலே சாத்திரங்கள் கூட்டினார்கள்
பூட்டியே மனிதரெல்லாம் நூலைப் பார்த்துப் பூரணமாய் அண்டமதைப் பாராமல்தான்
காட்டிலே திரிந்தலைந்த மானைப்போலே
கபடமாய் வாய்ஞானம் பேசுவார்கள்
கூட்டிலே அடைத்திருக்கும் குயிலைப் பாரார்
கூறாத மந்திரத்தின் குறிவைப் பாரே.
இட்டுக்கட்டி எழுதியவை சாத்திரங்கள் என்று பார்ப்பனப் புரட்டைப் பிட்டுப்பிட்டு வைக்கிறார்.வாத்துமேய்க்கும் கோல் ஒன்றைத் தூக்கிக் கொண்டே போகும் மடத்தலைவர்-கள்_கொலைவழக்குக் கைதியாகக் கோர்ட்டு-க்குப் போனாலும் _ குற்றவாளி எண் ஒன்று என ஜெயிலுக்குப் போனாலும் _ மூங்கில் குச்சி கையிலேயே இருக்கும், நள்ளிரவில் மடத்தை-விட்டு கார்மாறி, ஊர்மாறி ஓடிய போதுமட்டும் குச்சியைக் காணவில்லை. தண்டத்தைப் போட்டுவிட்டுப் போனால் சர்வமும் போச்சு என எழுதி வைத்து விட்டவர்களே, தண்ட-மில்லாதவரை மீண்டும் தலைமையாக்கினார்கள். எப்படி என்று கேட்டபோது தண்டத்தை என் கைகளில் ஏற்றிச் சுவீகரித்துக் கொண்டு-விட்டேன் என்று வக்கணை பேசினார்கள். இப்படிப்-பட்டவர்-களின் யோக்கியதையைப் பாடுகிறார் காகபுண்டர்
குறியென்ற உலகத்தில் குருக்கள் தானும்
கொடியமரை வேதமெல்லாம் கூர்ந்து-பார்த்தே
அறியாமல் பிரமத்தைப் பாராமல்தான்
அகந்தையாய்ப் பெரியோரை அழும்பு-பேசி விரிவான வேடமிட்டுக் காவி பூண்டு வெறும் பிலுக்காய் அலைந்திடுவான் நாயைப் போலே
பரியாசமாகவும்தான் தண்டும் ஏந்திப்
பார்தனிலே குறட்டிடு நடப்பான் பாரே!
நம்நாட்டு மடத்தலைவரைப் பற்றி எழுதி வைத்தமாதிரியே இருக்கிறது அல்லவா? ஆர்.எஸ்.எ-ஸ். தொடர்பு வேண்டாம் எனக்கூறிய பெரியவரைத் தூஷணையாகப் பேசியவர். காவிகட்டி, தடிபிடித்து, பாதக்-குறடுக்குப் பதில் ரப்பர் செருப்பு (மரத்தால் செய்த குறடு அணிந்தால் இருள் நீக்கியாரின் பாதமலர் கன்றிப் போய் விடுமாம்) அணிந்து கொண்டு நடக்கும் நடையை நாய்நடை என்கிறார். வெறும் பிலுக்காய் அலைந்திடு-வான் எனப்பாடி வெற்று ஆடம்பரக்கார ஆள் என்று அம்பலப்-படுத்துகிறார். நம் கதாநாயகனுக்குக் கச்சிதமாகப் பொருந்து-கிறது அல்லவா?
இப்படிப்பட்ட காஷாயதாரிகளைப் பார்த்து, அவர்கள் கூறும் நூல்களைப் பார்த்து (அவர்கள் மார்பில் உள்ள நூலைப் பார்த்து எனவும் பொருள் கொள்ளலாம்) மயங்கி, கானல் நீரை மெய் நீர் என நினைத்துக் காட்டில் ஓடிக் களைத்துச் சாகும் மானைப்போல மக்கள் வீணே அலையும் வண்ணம் பேசி ஏமாற்று-கிறார்கள் என்றும் பாடி வைத்துள்ளார். இன்றைய நிலைக்கும் அது பொருந்துகிறதே!
நேமங்கள் நிட்டைகள் வேதங்கள் ஆகம-நீதிநெறி ஓமங்கள் தர்ப்பணம் சந்தி ஜெபமந்தர யோகநிலை நாமங்கள் சந்தனம் வெண்ணீறு பூசி நலமுடனே சாமங்கள் தோறும் இவர் செய்யும் பூசைகள் கர்ப்பனையே!
எனப் பாடிவிட்டார் பட்டினத்தார்.
அற்றைக்கால அறிவுள்ளோர் அனைவரும் ஆரியப் பார்ப்பன வேத (வைதீக) மாக்கத்தை இன்னது எனக் கூறவொட்டா வகையில் கண்டித்துப் பாடியுள்ளனர். அன்றைய திராவிடர்கள் கதி என்னவோ? இன்றைய திராவிடர்கள் இன்னமும் பார்ப்பனச் சதியை விளங்கிக் கொள்ளாமல் இருக்கின்றனரே!
சதுர்வேதம், ஆறுவகைச் சாத்திரம், பல
தந்திரம் புராணம், கலைசாற்றும் ஆகமம்,
விதவிதமான வேறு நூல்களும்
வீணான நூல்களே என்று_ எப்பொழுது தெளிவடைவார்கள் மக்கள்?


More Info :http://www.unmaionline.com/

No comments:

Post a Comment