Monday, May 16, 2011

ரஜினிக்கு கடிதம்
தமிழக மக்களின் உள்ளத்தில் இருப்பவர் ரஜினிகாந்த் அவர்கள்,அவருக்கு உடல் நிலை சரியில்லாதது முகவும் வேதனைக்குரியதாகும்.அவர் நலமுடன் வாழ எல்லாம் வல்ல அருட்பெருன் ஜோதி ஆண்டவர் அருள் புரியட்டும் .
அவர் அடிக்கடி இமயமலை போகிறார் பல துறவிகளை சந்திக்கறார் ஆசிர்வாதம் வாங்குகிறார்.ஆன்மீகத்தில் நல்ல ஈடுபாடு உள்ளவர்.அப்படி இருந்தும் ஏன் அவருக்கு உடல் நிலை சரியில்லாமல் போகிறது ?இதை நாம் சிந்திக்கவேண்டும் உண்மையான ஆன்மீக வாதிகளுக்கு யாராக இருந்தாலும்.துன்பமும் துயரமும் நோய்களும் வரக்கூடாது என்கிறார் வள்ளலார் .அப்படிவந்தால் அவர்கள் ஏதோ தவறு செய்கிறார்கள் என்பது உண்மையாகும். ரஜினி நல்லவர் அவர் என்ன தவறு செய்திருப்பார் என்று பார்க்கும் போது உண்மை தெரிகிறது.உண்மையான ஆன்மீகவாதிகள் உயிர்க்கொலை செய்யக்ககூடாது,புலால் உண்ணக கூடாது .ஆனால் அவர் உயிர்கொலை செய்வதில்லை.புலால் மட்டும் உண்கிறார் என்பது அனைவரும் அறிந்ததாகும்.அவர் பாலச்சந்தர் பேட்டியிலே சொல்லி இருக்கிறார்.அவர் புலால் சாப்பிடுவதையும் சிகரெட் பிடிப்பதையும் விட்டு விட்டால் நல்லது,
சாதாரண மனிதர்கள் எப்படி இருந்தாலும் பரவாயில்லை ,ஆன்மீகத்தை நம்புகிறவர்கள் கடவுளை நம்புகிறவர்கள் நிச்சயம் புலால் சாப்பிடக் கூடாது.என்று நான் சொல்லவில்லை.மரணத்தை வென்ற மாபெரும் அருளாளர் வள்ளலார் சொல்லுகிறார்.உலக பொதுமறை என்று சொல்லப்படும் திருக்குறளை எழுதிய திருவள்ளுவர் சொல்லுகிறார்.
வள்ளலார் பாடல் வருமாறு;--
பொய் விளக்கப் புகுகின்றீர் போது கழிக்கின்றீர்புலை கொலைகள் புரிகின்றீர் கலகல வென்கின்றீர் கைவிளக்கு பிடித்து ஒரு பாழுங் கிணற்றில் விழுகின்றீர் களியரெனக் களிக்கின்றீர் கருத்து இருந்தும் கருதீர் ஐவிளக்கு மூப்பு மரனாதிகளை நினைத்தால்அடிவயிற்றை முருக்காதோ கொடிய முயற்று உலகீர் மெய்விளக்க எனது தனித்தந்தை வருகின்ற தருணம் மேவியது ஈண்டு அடைவீரே ஆவி பெருவீரே.
என்கிறார் வள்ளலார் ஆதலால் ரஜினிக்கு எந்த குறை இருந்தாகும் அவர் புலால் மறுத்து புகை பிடிப்பதை நிறுத்தினால் சீக்கிரம் நல்ல குணமடைவார் இது சத்தியம் உண்மையாகும்.
ஏண் இதை எழுதுகிறேன் என்றால் ரஜினி மீது எனக்கு அளவில்லாத பற்றுண்டு ,அவர் நல்லவர் அவருக்கு போதித்த போதகர்கள் எப்படியோ தெரியவில்லை.எத்தனை கோடி பணமிருந்தாலும்.எவ்வளவு புகழ் இருந்தாலும் ,தன்னுடைய உடம்பை கவனிக்கவில்லை என்றால் அதில் எந்த பயனும் இல்லை.
அதைப்பற்றி வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் ;-
உடம்பு வருவகை அறியீர் உயிர்வகையை யறியீர்உடல் பருக்க உண்டு நிதம உறங்குதற்கே யறியீர் மடம்புகு பேய் மனத்தாலே மயங்க்குகின்றீர் மனத்தை வசப்படுத்தீர் வசப்படுத்தும் வழிதுறை கற்றறியீர் இடம்பெறு பொய் வாழ்க்கையிலே இன்பம் துன்பம் அடுத்தே எண்ணி எண்ணி யிளைகின்றீர் ஏழை யுலகிரே நடம்புரி என் தனித்தந்தை வருகின்ற தருணம் நண்ணியது நண்னுமினோ புண்ணியம் சார்வீரே
என்கிறார் வள்ளலார் நான் புலால் உண்பதை நிறுத்தி 35, ஆண்டுகள் ஆகிறது.இன்றுவரை எனக்கு எந்த வியாதியும் வந்ததில்லை.வள்ளலார் காட்டிய வழியில் வாழ்ந்து வருகிறேன் இன்றுவரை மருத்தவரிடம் சென்றதில்லை.எந்த செக்கப்பும் இல்லை மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகிறேன் இவை அனுபவமாகும் .
இதே கருத்தை அனைவரும் கடைபிடித்தால் நீண்ட ஆயுள்,நோயற்ற வாழ்வு,மகிழ்ச்சியான வாழ்க்கை,துன்பமில்லாத வாழ்க்கை,பெற்று ஆனந்தமாக வாழலாம்.
இன்றுவரை அடியேன் பல்லாயிரம் மக்களை நல்வழிப் படுத்தியுள்ளேன்.மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள்.அனைவரும் வள்ளலார் வழியை பின்பற்றி வருகிறார்கள் .இந்த உலகத்திற்கு உண்மையை துணிவுடன் சொன்னவர் வள்ளலார் ஒருவரே.திரு வள்ளுவர் வாழ்வதற்கு வழி காட்டினார் .வள்ளலார் வாழ்ந்து காட்டினார்.என்பது அனைவரும் அறிந்ததே.
ரஜினி நலமுடன் வாழ்வதற்கு என் அறிவார்ந்த வாழ்த்துக்கள் .நீண்ட ஆயுள் நிறைந்த செல்வம் அழியாப்புகழ் பெற்று என்றும் மகிழ்ச்சியுடன் வாழ மறுபடியும் வாழ்த்துகிறேன் .
அன்புடன் ஆன்மநேயன் ;-கதிர்வேலு.More Info : 

No comments:

Post a Comment