Tuesday, February 15, 2011

Kizhakku Podcast Week -Gunasekaran on Irulargal (Audio)



நாகரிகம் இல்லாதவர்கள்அசுத்தமானவர்கள்காடுகளில் விலங்குகளோடு விலங்குகளாகச் சுற்றித்திரிபவர்கள்பாம்புபூனைகுரங்கு என்று கையில் எது அகப்பட்டாலும் அடித்துச்சாப்பிட்டுவிடக்கூடியவர்கள்கல்வியறிவு இல்லாத காட்டுமிராண்டிகள்பழங்குடிகள் பற்றி பொதுவாகநிலவும் கருத்துகள் இவை.

இருளர்களின் பிரத்தியேக உலகத்துக்குள் ஒருமுறை பிரவேசித்துவிட்டால்இந்தக் குற்றச்சாட்டுகள் எத்தனை காட்டமானவை என்பதைப்புரிந்துகொள்ளமுடியும்வீட்டுக்குள் பாம்பு புகுந்துவிட்டதாபாம்பு சம்பந்தமான ஆராய்ச்சியாமருத்துவ உபயோகத்துக்காக விஷம்தேவைப்படுகிறதாகூப்பிடு இருளர்களை!. இதுவரை இங்கே நிகழ்த்தப்பட்ட அத்தனை பாம்பின ஆராய்ச்சிகளிலும் இருளர்கள் பங்குபெற்றிருக்கிறார்கள்.

பிறரது நிலங்களில் இருளர்கள் பணியாற்ற மாட்டார்கள்யாருக்காகவும் எதற்காகவும் தங்கள் தன்மானத்தை விட்டுக்கொடுக்க மாட்டார்கள்பணம்மீதும் பொருள் மீதும் பெரும் நாட்டம் இல்லை இவர்களுக்குபசியால் கதறியழும் குழந்தைக்கு உணவு கொடுக்க முடியாததால் உயிருடன்குழந்தையைப் புதைத்த இருளர் இனப் பெண்கள் இங்கே உண்டுபெண்களைக் கொண்டாடும்பெண்மையைப் போற்றும் மரபு அவர்களுடையது.காதல் திருமணம் சர்வ சாதாரணம்இசை மீது தீராத மோகம்சிறிதளவே இருந்தாலும் இருப்பதைப் பகிர்ந்துகொள்ளும் தோழமைபிறர் உடைமைமீது நாட்டம் கிடையாதுஅசாதாரணமான இறை பக்திகூர்மையான அறிவாற்றல்கொடிய விலங்குகளையும் சர்வசாதாரணமாக எதிர்கொள்ளும்இருளர்கள்நாகரிக மனிதர்களைக் கண்டால் மட்டும் அஞ்சி பின்வாங்குகிறார்கள்.

இருளர்களின் அசாதாரணமான வாழ்க்கை முறையை உள்ளது உள்ளபடி பதிவு செய்கிறது இந்நூல்.

பக்கங்கள் : 128 

No comments:

Post a Comment