Monday, February 21, 2011

வெற்றிப்படிகளில் முதல் அடியை எடுத்து வையுங்கள். இன்றே!1)தனக்கு கிடைக்கும் ஊதியத்தின் மதிப்பை விட தன்னுடைய உழைப்பின் மதிப்பை உயர்த்திக் காட்டும் மனிதன் தான் சமூகத்தில் முன்னேற முடியும்!
-ஆபிரஹாம் லிங்கன்.

2)சரியானது எது என்று உணர்ந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதுதான் மகா கோழைத்தனம்!
- கன்பூசியஸ்.

3)தொண்ணூற்றொம்பது சதவிகித உழைப்பும், ஒரு சதவிகித உள்ளக்கிளர்ச்சியும் சேர்ந்ததுதான் மேதைத் தன்மை எனப்படுவது!
-தாமஸ் ஆல்வா எடிசன்.

4)தன்னம்பிக்கை இருந்தால் தைரியம் தன்னால் வரும்!
-எமர்சன்.

5)வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் இரண்டு கருவிகள் சிக்கனம், சேமிப்பு.
- ஹெர்பெர்ட்.

6)வரலாற்றைப் படைக்கும் மனிதர்கள் அதை எழுத அவகாசம் எடுத்துக் கொள்வதில்லை.
-மேட்டர்னிக்.

7)பிரச்சினைகளையும் நோய்களையும் சமாளித்து வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையே அனைத்தையும் வெற்றிகரமாக மாற்றித்தரும்.
- ஹெச்.ஷீல்லர்.

8)முன்னேற்றத்தை நோக்கி அது எத்தனை சிறியதாக இருந்தாலும் பரவாயில்லை,
ஒரு அடி எடுத்து வையுங்கள்.
நெப்போலியன் –கில்.

9)எல்லாம் போய் விட்டது என்று சோர்ந்து போய் விடாதீர்கள்.எந்த மனிதனாலும் வெல்ல முடியாத மன வலிமை இருக்கிறது. அதை மூலதனமாக வைத்துக் கொண்டு உழையுங்கள். வளம் பெறலாம்.
-மில்டன்.

10)பேனாவைக் கையில் பிடித்தவர்களெல்லாம் புத்திசாலிகளில்லை. பிடிக்காதவர்களெல்லாம் முட்டாள்களுமில்லை.
- சாமுவேல் ஜான்சன்.

11)திறமையால் ஜொலிக்க முடியவில்லைஆ
கவலையே படாதீர்கள் முயற்சி முயற்சி
முயற்சியால் வெற்றிக்கனியைத் தட்டிப் பறிக்கலாமே
-டேவ் வின் பாம்

12)கடுமையான் உழைப்பு, மற்றவர்களையும் மனிதர்களாக மதிக்கும் தன்மை ஆகியவற்றால் நாம் உயர முயல வேண்டும்.
13)பிறருடன் ஒத்து வாழ நம்மை பக்குவப்படுத்துவதே கல்வியின் முக்கிய நோக்கம்.
14)அமைதிக்கு உழைப்பதே, உலகிற்கு நாம் செய்யும் கடமை.
15)பெரிய லட்சியங்கள் இருந்தால் மட்டும் போதாது. அவற்றை அடைய நாம் உழைத்தாக வேண்டும்.
- எஸ்.ராதாகிருஷ்னன்.

16)எதற்கும் தயாராக இருப்பவனை நோக்கித்தான் வய்ப்புகள் தேடி வரும்.
-ராஜாஜி.

17)அதிர்ஷ்டத்தை நம்பி வாழாமல் ஒழுக்கத்தை நம்பி வாழ்ந்தால் மகத்தான காரியங்கள் செய்யலாம்.
-காந்திஜி.

18)படிப்பின்றி அறிவு மட்டும் இருப்பது ஆபத்தாக முடியும். அறிவின்றி படிப்பு மாத்திரம் இருப்பது பயனற்றதாகும்.
- ஸ்டான்லி ஜான்சன்.

19)மனிதனின் வாழ்க்கையை அவனது மனசாட்சி நிர்ணயிப்பதில்லை.ஆனால் சமூக வாழ்க்கைதான் அவனது மனசாட்சியை நிர்ணயிக்கிறது.
-கார்ல் மர்க்ஸ்.

20)யாருடைய நெஞ்சு ஏழை மக்களுக்காக துயரத்தில் அழுமோ அவன் ஒருவனே மகாத்மா ஆகிறான்.
21)எழுமின்! விழிமின்! கருதிய கருமம் கைகூடும் வரை நில்லது செல்மின்!
22)பலமே வாழ்வு! பலமின்மையே மரணம்!
23)தன்னை அடக்கிப் பழகிக் கொண்டவன் வெளியே உள்ள எதற்கும் வசப்பட மாட்டான்.
24)தம்மிடம் நம்பிக்கை கொண்டவர்களே பெருமையையும்,வளமையையும் எய்தியுள்ளனர்.
25)இவ்வுலகம் கோழைகளுக்கல்ல. வீரர்களுக்கே!
- சுவாமி விவேகனந்தர்.

26)முயற்சிதான் பாராட்டுக்குரியது!
“நாம் அடையும் பொருள் புகழ் தருவதில்லை. அதற்கான முயற்சிதான் புகழைத்தருகிறது.
நாம் பந்தயத்தின் முடிவில் அடையும் கோப்பையை யாரும் வெற்றி என்று பாராட்டுவதில்லை.
ஒடி அடைந்த வேகத்தை வெற்றி பெற முயற்சி செய்த நமது மனத்துணிவைத்தான் பாராட்டுகிறார்கள்.
- சுவாமி சின்மயானந்தர்.

27)தவம் செய்வோரைக் காட்டிலும் நடு நிலை மனமுடையவன் சிறந்தவன்.
ஞானிகளிலும் அவன் சிறந்தவனாக கருதப்படுகிறான்.
கர்மிகளிலும் அவன் சிறந்தவன். அகவே, நடு நிலை மனமுள்ளவராக மாறி விடுங்கள்.
-பகவத் கீதை.

28)எதைப் பற்றியும் பெருமையுடன் கூறிக் கொள்ளாதே. ஊன்னுடைய செயல்களே பேசட்டும்!
- ஷ்ரி அன்னை.

29)பகைவர்களை விடச் சிறந்த மனிதர்களாய் ஆகிவிடுவது தான் அவர்களை வஞ்சம் தீர்க்கும் சிறந்த வழியாகும்.
-டயோஜினீஸ்.

30)எதற்கும் அஞ்சாதே; எதையும் வெறுக்காதே; யாரையும் ஒதுக்காதே; உன் பணியை ஊக்கமுடன் செய்.
-புத்தர்.

31)செயல்கள் அனைத்தின் விளைவுகளும் எண்ணத்தைப் பொருத்தே அமைகின்றன. மனிதன் எதை எண்ணுகின்றானோ அதற்குரிய பலந்தான் அவனுக்குக் கிட்டும்.
- நபிகள் நாயகம்.

32)மனிதன் தானாக நிமிர்ந்து நிற்க வேண்டும்; மற்றவர்கள், அவனைத் தூக்கி நிமிர்த்தி வைக்கக் கூடாது.
-அரேலியஸ்.

33)எந்தப் பணியாயினும் அதனுடன் ஒன்றிவிட்டல் மட்டுமே அது பயனுடையதாய் அமையும்.
-எலியட்.

34)உறுதியுள்ளவன், உள்ளத்தில் திடமுள்ளவன், உலகை, தனக்கு வேண்டிய முறையில் அமைத்துக் கொள்கிறான்.
-கதே.

35)தளராத இதயத்தை பெற்றுள்ளவனுக்கு இவ்வுலகில் முடியாது என்பது எதுவுமே இல்லை.
- கிரேஸிஸ்.

36)உறுதியுள்ள உத்தமருக்கு உலகம் வளைந்து கொடுக்கிறது.
-கரம்ப்பே.

37)உன்னதமான ஒவ்வொரு வேலையும் முதலில் முடியாததாகவே தோன்றும்.
-கார்லைஸ்.

38)பெரிய காரியங்கள், வல்லமையால் நிறைவேறவில்லை; விடாமுயற்சியினாலேஎயே நிறைவேறியுள்ளன.
-ஜான்சன்.

39)வெற்றிக்கு காரணம் திறமையைக் காட்டிலும் ஊக்கமே அவசியம்.
-பக்ஸ்டன்.

40)நாம் , வழவேண்டும் என்பது முக்கியமன்று; வாழ்க்கைக்கு அப்பால் நமது பெயர் பொறிக்கப்பட வேண்டும் அதுதான் முக்கியம்.
-அனந்சியோ.

41)நன்மை தரக்கூடிய சக்திகளில் உறுதியானது நம்பிக்கை. பொறாமையும் சந்தேகமும் இல்லாமலிருத்தல். நல்லவர்களாக இருக்கவும் நன்மையை செய்ய முயற்சி செய்யும் எல்லாருக்கும் உதவி புரிதல் ஆகிய மூன்று விஷயங்களும் மனிதனுக்கு மிக அவசியமான ஒன்று.
- சுவாமி விவேகானந்தர்.

42)மன நோய்களை நீக்கும் மூலிகைகளுள் சிறந்தவை உழைப்பு, வியர்வை.
-குரோஷியா.

43)துணிகரமான தொடக்கம் பாதி வெற்றி என்றே அர்த்தம்.
-பிரெஞ்சுப் பழ மொழி.

44)உழைப்பு உடலைப் பலப்படுத்தும். கஷ்டங்கள் மனதைப் பலப்படுத்தும்.
-பிளமிங்.

45)வாழ்க்கையில் தன்னால் சாதிக்க முடியாதவற்றை ஓர் எழுத்தாளன் தன் நூல்கள் மூலம் செய்து காட்டுகிறான்.
-பட்சே.

46)உண்மையான நம்பிக்கை இருக்குமானால், மலையைக்கூட அசைத்து விடலாம்.
47)யாருக்கும் தோல்வி இல்லாத வெற்றிக்கே சமாதானம் என்று பெயர்.

48)உண்மையை சில சமயம், அடக்கி வைக்க முடியும். ஆனால் அதை ஒடுக்கி விட முடியாது.
49)கடுமையான உழைப்பே நமக்கு செல்வத்தைத் தரும்; நமது வறுமையை ஒழிக்கும்.
50)முன்னேற்றம் மனிதர்களின் பண்பால் வரையறுக்கப் படுவது.
51)சோதனைகளில் இருந்து விடுபட்டு, வெற்றி வாகை சூட்ட வேண்டுமாயின், அத்ற்கு தனிப் பண்பும், திண்ணிய ஆற்றலும் தேவை.
52)நாம் கஷ்டப்பட்டு, மனசாட்சிக்கு நியாயமாக பக்தி சிரத்தையுடன் உழைத்தாலன்றி வெற்றி பெற முடியாது.
53)மனித குல முன்னேற்றத்திற்காக மனிதன், உழைக்கிற இடமே உயர்ந்த கோவிலாகும்.
54)ஆணைகள் பிறப்பித்து செல்வத்தை உண்டாகி விட முடியாது; உழைப்புதான் செல்வத்தைப் படைக்கும்.
- நேருஜி.

55)தாங்கள் வெல்லலாம் என்று நம்புகிறவர்களே வெற்றி அடைய முடியும்.
-வர்கில்.

56)கண்ணியமான மனிதன், எப்போதும் நீதியாகவே சிந்தனை செய்கிறான்.
- ரூஸோ.

57)பாராட்டு, உன்னதமான உள்ளங்களை மேலும் ஊக்குவிக்கும்.
-கோல்டன்.

58)மரியாதையாகப் பேசுவதும், நடப்பதுவும் செலவில்லாத செல்வங்கள்.
- செர்வான்டிஸ்.

59)நன்றாகவும், கவனமாகவும் செய்யப்படும் காரியங்களைப் பற்றி அஞ்ச வேண்டியதில்லை.
- ஷேக்ஸ்பியர்.

60)புகழ் – வீர செயல்களின்–னறுமணம்.
- சாக்ரடீஸ்.

61)வலிமையும், உணர்ச்சியும் சாதிப்பதை விட, பொறுமையும், காலமும் அதிகமாய் சாதித்து விடும்.
- லாபன்டெயின்.

62)கவலையற்ற இதயம் நீடித்து வாழும்.
- ஷேக்ஸ்பியர்.

63)வாழ்க்கையின் உண்மையான குறிக்கோள், அழிவில்லாத வழ்க்கையை அறிந்து கொள்வது.
-பென்.

64)அன்பும், ஆற்றலும் இணைந்து பணியாற்றும்போது அற்புதமான படைப்பை எதிர்பார்க்கலாம்.
-ஜான் ரஸ்கின்.

65)அளவற்ற சக்தி, ஊக்கம், தைரியம், பொறுமை ஆகியவை நம்மிடம் இருக்க வேண்டும். ஆப்போது எந்த மகத்தான செயலையும் நம்மால் சாதிக்க முடியும்.
- நபிகள் நாயகம்.

66)உன் சொற்களைக் கொண்டு உன் உணர்ச்சிகள் மதிக்கப்படும்.
உன் உணர்ச்சிகளைக் கொண்டே உன் செயல்கள் மதிக்கப்படும்.
உன் செயல்களைக் கொண்டே உன் வாழ்க்கை மதிக்கப்படும்.
- சாக்ரட்டீஸ்.

67)எதையும் உற்சாகத்துடன் எதிர்கொள்ளும்போது, சுமையின் கனமும் குறைகிறது.
- ஓவிட்.

68)உன் எண்ணம் எவ்வாறு அமைகிறதோ அவ்வாறே உன் வாழ்க்கையும் அமையும்.
- அரேலியஸ்.

69)உறக்கத்தில் கூட உற்சாகத்துடன் இருப்பவன் சிறந்த மனிதன்.
-எட்வர்ட்.

70)தன்னைத்தானே சீர்திருத்திக் கொள்பவன், அதன் மூலம் பிறரை சீர்திருத்த பெரிதும் உதவுவான்.
-தாமஸ் ஆடம்ஸ்.


No comments:

Post a Comment