Saturday, March 5, 2011

உலக சினிமா: சம்சாரா - துறவறத்தை துறந்தவன்

மூன்று வருடம் மூன்று மாதம் மூன்று நாட்கள் குகையின் உள்ளேயே கடும் தவம் புரிந்து வரும் தாஷிவை அழைத்து செல்ல மடாலயத்தின் குருமார்கள் வருகின்றனர்.
பாறை மீது எழுதியுள்ள 'ஒரு சொட்டு நீரை காய்ந்து போகாமல் எப்படி தடுக்க முடியும்?'என்ற வாக்கியத்தை படித்து யோசித்து கொண்டே தன் துறவற மடாலயத்திற்கு திரும்புகிறான் தாஷி.. ஐந்து வயது முதல் பெண் பார்வையும் வாசனையும் இல்லாத கடும் துறவறம்.
தாஷிவை லாமாக்க அவனது குருமார்கள் செய்யும் ஏற்பாடுகள் ஒருபுறமிருக்க
தாஷிவுக்கு கடுமையான தடுமாற்றம் மறுபுறம். மீண்டும் துறவறமா..?? என்ன சாதித்தோம் இந்த துறவறத்தில். குழப்பி போகிறான்.

அறுவடை காலத்தில் பயிர்களையும் விவசாயிகளையும் ஆசிர்வதிக்க போன இடத்தில் பேமாவை பார்க்கிறான். சந்திக்கிறான். மனம் இழக்கிறான். மீண்டும் திரும்பி வந்ததும் மடலாயத்தில் அவனுக்கு இருப்பு கொள்ளவில்லை. ஆண்மையையும் அடக்க முடியவில்லை. பேமைவை தேடி செல்ல முடிவும் எடுக்கிறான்.
பேமா ஏற்கனவே குடும்ப முறைப்பையன் ஒருவனுக்கு நிச்சயிக்க பட்டவள். துறவறத்தை துறந்து சாதாரண உடையில் பார்த்ததும் கிராமத்தினருக்கு அதிர்ச்சியும் ஆச்சரியும் கூடுகிறது.
பேமாவும் தாஷியை விரும்புகிறாள். புல் வெளியில் இயற்கையோடு இருவரும் கலக்க முறைப்பையன் பார்த்தும் விட விட்டும் கொடுக்கிறான். பேமா தாஷி திருமணம் இனிதே நடக்கிறது.
மண்வாசனையே அறியாதவனுக்கு திடிரென்று கிடைத்த இல்லறம். அதுவும் அடக்கி வைக்கப்பட்ட ஆண்மை.... கேட்க வேண்டுமா..? காமத்தில் கொக்கேகருக்கே கற்று கொடுக்கும் அளவிற்கு மூழ்கி திளைக்கிறான் தாஷி. ஒரு மகனும் பிறக்க அவனுக்கு கர்மா என்று பெயர் சூட்டுகிறார்கள் தம்பதியர்கள்.

குடும்பஸ்தன் ஆகி விட்டதால் பொருள் ஈட்டும் ஆசையும் வருகிறது. விவசாயத்திலும் நாட்டம் கொள்கிறான். தரகு முதலாளி வேண்டாம், நாமே சந்தையில் போய் விற்றால் நல்ல லாபம் பார்க்கலாம் என்று கிராமத்தினரிடமும் தன் மாமானாரிடம் வாதாடுகிறான். ஆனால் இரவோடு இரவாக பயிர்கள் தீ பிடித்து எறிய தரகன் தான் காரணமென சந்தேகித்து அவனோடு சண்டையிட நகருக்குள் செல்கிறான். தனியாய் வந்து மாட்டி கொண்டவனை தரகனின் ஆட்கள் புரட்டி அடிக்க மீண்டும் கிராமத்திற்கே வந்து சேருகிறான்.

மீச்சம் மீதி இருக்கும் தானியங்களையாவது விற்று நாலு காசு பார்க்கலாம் என மகனுடன் நகரத்துக்கு பயணிக்கிறாள் பேமா. கூலி வேலை செய்யும் கவர்ச்சி பெண்ணொருத்தியான சுஜாதாவின் மேல் வெகு நாட்களாக கண் வைத்து காத்திருக்கிறான் தாஷி.

வீட்டில் மனைவியும் இல்லை எவரும் இல்லை. அந்த நேரத்தில் சுஜாதாவும் அடிக்கடி வந்து செல்கிறாள். ஆசையும் மோகமும் பற்றி எரிய இதுவரை எவருமே செய்யாத புது வித கலவியில் இருவரும் ஈடுபடுகின்றனர்.

தாஷிவைக் காண பழைய மடாலயத்தோழன் வருகிறான். அவனது இல்லறம் பற்றியெல்லாம் விசாரிக்கிறான். மெளனத்துடன் திரும்பி செல்கிறான். மனைவி இருக்க வேறொரு பெண்ணுடன் உறவு கொண்டதை எண்ணி வருந்துகிறான். குற்ற உணர்வால் நிலை கொள்ளது தவிக்கிறான்.

இந்த வாழ்க்கையும் கசந்து விடவே துறவறமே நல்லறம் என்று எண்ணியவனாய் இரவோடு இரவாக துறவற உடையணிந்து மடாலயம் நோக்கி பயணிக்கிறான்.

அதே பாறையின் அருகே சென்று கொண்டிருக்கும் போது பேமா குறுக்கிடுகிறாள். சித்தார்த்தன் கதையில் யசோதாவை தெரியுமா..?? என்று ஆரம்பித்து அவள் பட்ட வேதனைகள், அவமானங்கள். இரவோடு இரவாக விட்டு சென்றபின் யாரறிவார்..??
ஆண்களுக்கு இது வழக்கமாக இருக்கலாம். ஆனால் பெண்ணின் நிலைப்பாடு அவ்வாறு இருக்குமா..?? அதனை செய்ய துணியுமா என்று ஆவேசத்தோடு கேள்வி கணைகளால் தாஷிவை துளைக்கிறாள்.

பதில் பேச முடியாமல் உடைந்து போகிறான் தாஷி. பேமாவின் காலடியில் கண்ணீருடன் விழுகிறான். அவனையும் அவன் துறவறத்தையும் மதிக்காத பேமா குழந்தையை எண்ணிய படி வீட்டை நோக்கி செல்கிறாள்.

பாறையின் இன்னொரு புறத்தில் 'சொட்டு நீர் காய்ந்து போகாமல் இருக்க, அதனை கடலில் எறியுங்கள்!' என்ற வாசகம் காணப்படுகிறது. இந்த காட்சியுடன் நிறைவடைகிறது திரைப்படம்.

திபெத் / லடாக்கி மொழிகளிம் ல் வெளியான இத்திரைப்படம் பல உலக விழாக்களில் பங்கு பெற்றதுடன், உலகம் முழுவதும் முப்பதுக்கு மேற்பட்ட விருதுகளுடன் மெல்போர்ன் பட விழாவில் பரிசையும் தட்டி சென்றது. சுஜாதாவாக நடித்திருப்பது Neelesha BaVora 

வசூலிலும் நூறு கோடிகளை வாரி குவித்துள்ளது.

இயற்கை எழில் கொஞ்சும் மலை பிரதேசம், தூய்மையான நீரோடைகள், வெளிர் நீல வானம், என்று இயற்கை காட்சிகள் அனைத்தும் கண்ணுக்கு விருந்து. மலைகளின் உச்சியில் மடாலயம். அங்கு பால்யம் மாறாமல் வாழ்க்கை அறியாமல் சுற்றி திர்யும் குழந்தை துறவிகள் என்று ஒவ்வொன்றையும் ஒரு தவம் போல் இயக்கியுள்ளார் பான் நளின்.

இயக்குநர் பான் நளின் இந்தியர். குஜாராத்தை சேர்ந்தவர். பரோடா பல்கலை கழகத்தில் பயின்றவர். திரைப்பட தாகத்தால் பல வித மனிதர்களையும் அவர்களின் வாழ்வியல்புகளை நேரில் காணவும் இந்தியா முழுவதும் சுற்று பயணம் செய்தவர். இருபது மேற்பட்ட குறும்படங்களை எடுத்துள்ள பான் நளினின் முதல் திரைப்படம் இது.

2006ல் உலக சுற்று விழிப்புணர்வு குறித்தான ஸ்பெயின் நாட்டின் மிக உயரிய விருதினையும் பெற்றுள்ளார்.

பல உலக நாடுகளின் திரைபட விழாக்களிலும் நடுவர் குழுவில் இடம் பெற்றதுடன், ஐக்கிய நாடுகள் சபை உலக அளவில் அடுத்த வருடம் சுற்று சூழல் குறித்தான 30 நாடுகளிலிருந்து 30 இயக்குநர்களை ஆவண படம் எடுப்பதற்காக அழைத்துள்ளதில், அதில் அழைக்கப்பட்ட ஒரே இந்தியர் பான் நளின் ஒருவர் மட்டுமே என்பது கூடுதல் தகவல்.
Staggeringly Beautiful! A film that explores desires, destiny and spirituality. Truly a visual feast. A serene and welcome escape from the frantic pace of everyday life. Performances are marvelous, especially Shawn Ku's Tashi, whose exploration of conscience is transparent, and Christ Chung's Pema, is sublime and graceful. Possibly is as close to Shangri-La as we will ever get. Samsara is a haunting, cinematic and spiritual love story to savor. 
-Urban Cinefile, Australia
Sublime! A surprisingly intense cinematic experience. NOT TO BE MISSED. 
-Vogue Magazine International


The sacred and the profane meet head-on in Samsara. The film is spectacular, spiritual and thrilling. A distinctive debut feature by Pan Nalin is startling, with tech credits are top-notch, crisp widescreen camerawork and all other creatives combining to evoke the region with a stunning clarity and detail 
- Variety USA


Erotic Enough to Light Incense Off! Shawn Ku and Christy Chung are Quite Fantastic! A darn good sari-tearing tale of longing, lust and sexual awakening. 
-Empire Magazine

A beautiful widescreen production… a metaphorical aerial bombardment that approximates the thunderbolts of love…Hypnotic, dynamic, delicious…Pan Nalin' s film has excellent production values and thoroughly transports one to its far flung world of clear skies, jagged mountains and passionate affairs on the mind and the body. 
-Hollywood Reporter USA


Simply Stunning! Beautiful and serene, Samsara, tells a universal story of desire and destiny and about how the desire for change can change one's destiny. Exquisitely filmed and acted, Samsara, is A FILM TO SAVOUR, for the beauty of innocence and the wonder of a sex act beyond your wildest wet dreams! 
-WOW Magazine Canada


Mesmerizing Beautiful! UNIQUE AND ABSORBING. Samsara is SIMPLY BREATHTAKING… 
- FHM Magazine


Movies about the conflict between body and soul have never been so lushly explored 
- Who Weekly, New Zealand


Extraordinary! The story goes straight to your heart. A sexy love story…fascinating! 
- The Age Australia

நம் இந்தியர் ஒருவரின் இந்த உலக சினிமாவையும் பாருங்கள்.
More Info :http://butterflysurya.blogspot.com

No comments:

Post a Comment