Wednesday, April 20, 2011

காமத்தை அடக்கும் வழிகள் (Free Audio Speech )


வேப்பம்பூ ரசம் வாரம் இருமுறையும்,மஞ்சளை தினசரி உணவில் அதிகமாக சேர்த்துக்கொள்வதாலும்,அதிகாலையில் குளிர்ந்த நீரில் நீராடுவதும்,காமவுணர்வுக்கு கடிவாளமிட சிறந்ததுதான் எனினும் மனம் எப்போதும் பாலியல் எண்ணத்திலிருந்து விடுபட மாற்றுணர்வு தேவை,அதவது வேலைவெட்டியில்லாதவன் சோம்பேறியாக சுற்றிஅலையும் கணவன்மார்களுக்குத்தான் காமத்தின் பால் அதிகம்நாட்டம் கொண்டுள்ளதாக நாம் பார்க்கமுடியும்.அதேபோல் தொழில் புரிவோர்,ஆய்வுப்பணிநடத்துவோர்,விஞ்ஞானப்பார்வையில் ஈடுபடுவோர்கள் காமவலையிலிருந்து மீண்டுள்ளனர்,ஒரு நேர்காணல் நிகழ்ச்சியில் டாக்டர்.அப்துல்கலாம் கூறுவது பொருத்தமாகயிருக்கும் அதவது அவர் இளமைகால்த்தில் ஆய்வுப்பணிகளில் அதிகநாட்டமுடயவராகதன்னை மாற்றிக்கொண்டதின் விளைவுதான் கல்யாணத்தைப்பற்றி எனக்கு சிந்திக்கமுடியாமல் போயிற்று என்கிறார்தீவிர எண்ணம் கர்மத்தில் கொண்டவர்களுக்கு காமம் இடையூறுசெய்வதில்லை, வேலையில்லாமல் தந்தையின் உழைப்பில் திண்றுகொண்டு ஊர்சுத்துபனுக்கே காமப்பசி அதிகம் என்பது உண்மை. தன்னை ஒருகட்டுப்பட்டில் வைத்திருக்கபடித்தவன் பலசாலியாகிறான்,பலவீனமானவன் காமத்திற்கு அடிமையாகிறான்காம சக்திக்கும் காதலுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. 
காமம் இல்லாதது காதல் இல்லை. காமம் அன்பு, பரிவு, கருணை.இதனது அடக்கம் நிச்சயமாக காதலில்லாத காமம் மிருக இச்சையேதான். ஒரு வெறி என்றும் சொல்லலாம்.காம சக்தி சந்ததி விருத்தி செய்யும் ஓர் உடலியல் சார்ந்த இயற்கைச் சக்தி. காதல் என்பது ஓர் ஆத்மீகப் பிணைப்பு இயக்கம். ஆனால் சந்ததி விருத்திக்குக் காதல் தேவையில்லை. காதல் இல்லாத சந்ததி கேடுகெட்டதாய் இருக்கும். காதலில் விளைந்த சந்ததி (தெய்வீக) மனித குணம் கொண்டதாய் இருக்கும். 
ஆண்பால் இன்றேல் பெண்பால் தேயும் !பெண்பால் இன்றேல் ஆண்பால் மாயும் !வயிறுக்கு உணவு ! உடலுக்கு உறவு !ஈரினம் இணைந்து பூரணம் அடைதல்மனித நியதி ! மானிட வளர்ச்சி !காமம் உடற்கு கவின்தர வல்லது !மேனி மினுக்கும், மீன்விழி ஒளிர்க்கும்,முகக்களை ஈர்க்கும், மூளை தளிர்க்கும்,காமக் கதிர்ஒளி பூமழை பெய்தால் !காமம் மீறல் தீமையின் விதைகள் !பாமர மூடன் காமச் சுரப்பியைக்காலால் நசுக்கிக் கவினை அழிப்பான் !காம சுரப்பிகள் காய்ந்து போனால்
Couple having breakfast in bed [pe0074333]
இருக்கின்ற கட்டுப்பாடுகளிலேயே மிகவும் கடினமானது உணர்வுக் கட்டுப்பாடுதான். இவ்விஷயத்தில் கட்டுப்பாட்டைக் கொண்டு வர முடியாது என்ற எண்ணம் மனிதனுக்கு இருக்கிறது. காம உணர்வை அன்பு என்று நிறைய பேர் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். காமத்தின் தாக்குதலிலிருந்து தப்ப முடியாது என்று பரவலாக ஓர்அபிப்பிராயம் இருக்கிறது. காமத்தின் காரணமாக பெரிய குற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
காம உணர்வைக் கட்டுப்படுத்துவதற்காக சமூகம், பலவிதமான கட்டுப்பாடுகளை உருவாக்கி இருக்கிறது. பெரும்பாலும் இந்தக் கட்டுப்பாடுகள் உடைக்கத்தான் படுகின்றன. அப்படியே காமம் தடுக்கப்பட்டாலும் பின்னால் அது பெரிய வெடிபோல் வெடிக்கத்தான் செய்கிறது. இதிலிருந்து நாம் என்ன புரிந்து கொள்ள வேண்டும் என்றால் கட்டுப்பாட்டுகளால் காமத்தை அடக்க முடியாது. காமத்தை விட உயர்ந்த தெய்வீக அன்பு என்ற ஒரு பெரிய சக்தியைக் கொண்டு தான் இந்த உணர்வையே நம்மால் திருவுருமாற்றம் செய்ய முடியும். தெய்வீக அன்பு என்ற ஒரு சக்தி உலகில் செயல்படாவிட்டால் உலகம் inconscient நிலைக்குப் போய்விடும்.
உணவுப் பழக்கம் என்பது பல்வேறு உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தக் கூடிய விடயமாக நமது நாட்டில் கருதப்படுகிறது. உதாரணமாக, துறவிகள், பூசாரிகள், சன்னியாசிகள் ஆகியோர் சாத்வீக (உப்பு, காரம் இல்லாத) உணவுகளை உட்கொள்கின்றனர். அந்த உணவின் மூலம் உடல் இயக்கத்திற்கு தேவையான சக்தி கிடைக்கும் என அவர்கள் கூறுகின்றனர்.
உடல் நலனை நிர்ணயிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றாக உணவு திகழ்கிறது. ஆனால் உணவின் மூலமாக மட்டுமே ஒருவருக்கு காம எழுச்சி ஏற்படுவதில்லை. இந்த விடயத்தில் மனித மனத்தையும் கணக்கில் கொள்ள வேண்டும்.
எனவே, உணவுப் பழக்கத்தால் மட்டுமே காம இச்சையை குறைத்து விட முடியும் என்று எண்ணக் கூடாது.
வெங்காயம், பூண்டு, அசைவ உணவுகள் ஆகியவற்றைத் தவிர்த்து பாதி உப்பு, பாதி காரத்தில் மட்டும் சாப்பிட்டால் காம இச்சை முற்றிலுமாக அடங்கிவிடாது. மனதைக் கட்டுப்படுத்துவதற்கும் சில பயிற்சிகளைச் செய்ய வேண்டும்.
மனதை அடக்க தியானம் செய்வதே சிறந்தது என சில நூல்களில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இன்றைய நிலையில் தியானம் என்றால் என்னவென்றே பலருக்கு தெரியவில்லை. அதுபோன்றவர்கள் கடுமையான உடற்பயிற்சி, பயணம் மேற்கொள்ளலாம்.
உடற்பயிற்சிக்காக தனியாக நேரம் ஒதுக்க முடியாதவர்கள் அன்றாடப் பணிகளின் மூலம் தனது வேலைப்பளுவை அதிகரித்துக் கொள்ளலாம். தோட்டம் அமைக்கலாம், இதனால் அவர்களுடைய உடலில் ஏற்படும் இச்சைகளும், மனதில் ஏற்படும் மாசுகளும் குறையும்
எனவே, உடலை வருத்தி உழைத்து, ஏழை, எளிய மக்களுக்கு பயன்படும் விதத்தில் சில பணிகளை மேற்கொண்டால் மனம் தெளிவுபெறும். அதுமட்டுமின்றி காமம் நிலையானது அல்ல என்பதை சம்பந்தப்பட்டவர்கள் மனதளவில் உணர வேண்டும்.

அதனை உணர முடியாதவர்கள்   நோயாளிகளுக்கு சில பணிவிடைகளைச் செய்வதுடன், அவர்கள் படும் அவஸ்தைகளை பார்த்தால் உடல் நிலையற்றது என்ற எண்ணம் அவர்கள் மனதில் ஆணித்தரமாக பதிவாகிவிடும்.
பாலுணர்வுகளை மன தளவில் அடக்கி உடலளவில் அதன் தேவையையும் அடக்கலாம். அது இலகுவானது மனிதனைப் பொறுத்தவரை. கடினமானதல்ல. அதற்கு ஆண்கள் பெண்கள் தங்களைப் பழகப்பட்டுத்திக் கொண்டால் பாலியல் தவறுகள் நோய்கள் பெருகுவதும் கருக்கலைப்புகள் தொடர்வதும் தவிர்க்கப்படும்.


Woman in various yoga poses [42-22342209]
காமத்தை கட்டுபடுத்த முடியுமா ? எப்படி?
முனிவர்கள் காமத்தை கட்டுபடுத்தி எப்படி பல ஆண்டுகள் வாழ்ந்தார்கள்?                                                                                           
    காமம் என்பது உலகில் உள்ள உயிர்கள் அனைத்திற்கும் பொதுவான உணர்வாகும் காமம் இழுத்த இழுப்புக்களுக்கெல்லாம் மற்ற உயிர்கள் உடன் பட்டு அடிமையாய் கிடக்கும் போது மனிதன் மட்டும் தான் அதை எதிர்த்து போராடி ஆறாவது அறிவை வளப்படுத்திக் கொண்டு வருகிறான் அதை எதிர்க்க முடியாமல் மண்டியிட்ட மனிதர்கள் யாரும் நிரந்தர வெற்றிமாலை சூடமுடியாது காமத்தை எதிர்த்து போராட்டம் என்பது அதனுடன் நேருக்கு நேராக நடத்தும் யுத்தமல்ல அது வரும்வழியை விட்டுவிட்டு மாற்றுப்பாதையில் நம்பயணத்தை துவங்க வேண்டும் அதாவது காமத்தை அடக்க முயற்ச்சிக்காமல் கடக்க முயற்ச்சிக்க வேண்டும் 24 மணிநேரமும் காமத்தை அடக்கவேண்டுமென நினைத்துக் கொண்டிருப்பதே ஒரு சுமைதான் அது நமக்குள் இருப்பதை மறந்துவிட்டு அல்லது ஊதாசீனப்படுத்தி விட்டு வேலையை கவனியுங்கள் தானாக சரியாகிவிடும் முனிவர்களும் இதைத்தான் செய்தார்கள் கூடவே உடலையும் மனதையும் கட்டுக்குள் வைக்கும் சில யோகாசனங்கள் செய்தார்கள் காரம் உப்பு புளி போன்ற சுவைகளை குறைத்தும் கொண்டர்கள்.


Tamil Audio
Download1 comment:

  1. பயனுள்ள தகவல்கள். நன்றி.

    ReplyDelete