Monday, December 19, 2011

DEATH LESS LIFE IS IT POSSIBLE FOR ALL SANMAARGEES

சன்மார்கத்தில் உள்ள நாம் எதைத் தவிர்க்கவேண்டும்?எதை ஏற்றுக்கொள்ளவேண்டும், ? சுருக்கமாகச் சொல்லமுடியுமா?இந்த வழி வள்ளலார் கூறிய மரணமிலாப் பெரு வாழ்விற்கு வழியாக இருக்குமா?
பிணி, மூப்பு, பயம், துன்பம்  என்பவைகளே மரணத்திற்கு மூல காரணமாக உள்ளது. நாம் எச்சரிக்கையாக இருந்து வள்ளலார் கூறியுள்ளதை நன்கு புரிந்துகொண்டு நம் வாழ்க்கையை அவரது வழியில் அமைத்துக்கொண்டோமேயானால்  நிச்சயமாக மரணத்தை வெல்லலாம்.வள்ளலார் மரணத்தை அஜாக்கிரதை என்றுதான் கூறியுள்ளாரே தவிர விதி , தலை எழுத்து என்றெல்லாம் கூறவில்லை.நாம் எச்சரிக்கையாக இருந்தால் மரணத்தை வெல்லலாம் என்பதுதானே அவரது கருத்து? பின்னர் வள்ளலாருக்குப்பின் இதுவரை ஏன் வேறு யாரும் பெறவில்லை?  மரணமிலாப் பெருவாழ்வை நம்மால் பெறமுடியாது என்று பலர் பெரியவர்கள் என்று பெயர் இட்டுக்கொண்டுள்ளவர்களே மேடையில் பேசிவருவதை நாம் காண்கிறோம்.என்னதான் சன்மார்க்கம் பேசினாலும், எந்த சாதனை செய்தாலும், எவ்வளவு புத்தகங்கள் எழுதினாலும் ,எவ்வளவுதான் மேடைகளில் பேசினாலும் நாம் அனைவரும் என்றாவது ஒருநாள் போகத்தானே போகிறோம் என்ற நினைவில்தால் அனைவரும் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். நான் மரணமிலாப் பெருவாழ்வு அடைவேன் என்று பேசிய ஒருவரையும் இதுவரை பார்த்ததில்லை. 
மரணத்திர்க்குக் காரணம் நான்கை முதலில் எடுத்துக் கொள்வோம்..
பிணியை எவ்வாறு தவிர்ப்பது? பிணி வருவதற்கு என்ன காரணம் என்று முதலில் பார்போம். நம்முடைய முறையற்ற ஆகாரமும், நம்முடைய கோபம், காமம் போன்ற தீய குணங்கள்தான் பிணிக்குக் காரணம்.   உரை நடையில் வள்ளலார் கூறியுள்ள ஆகார முறையை முழுமையாக நடை முறைப் படுத்தினால் ஆகாரத்தால் பிணி வராது. காமம் சினம் போன்ற தீய குணங்களை ஒழித்து வள்ளலார் காட்டியுள்ள நான்கு ஒழுக்கங்களையும் முழுமையாகக் கடைப் பிடித்தால்  பிணி வராது. வெந்நீர்தான் சாப்பிட வேண்டும் என்ற ஒரு சிறிய உறுதிகூட நம்மில் பலரிடம் இல்லை.  தவத்தை முறையாக ஒரு குருவின் மூலம் அறிந்து உண்மையாக செய்தால் மூப்பை வெல்லலாம். நானே தவம் புரிந்தேன் அழியாத் தேகம் மூன்றும் பெற்றேன் என்பது போன்ற அருட்பாக்களையும், என்றே என்னினும் இளமையோடிருக்க நன்றே செய்யும் ஞானமா மருந்தே என்ற அகவல் வரியையும் நன்கு உணர்வோமாக.  அடுத்து இறை நிலை பெற்ற வள்ளலாரின் துணை இருக்கப் பெற்றால் பயமும் ,துன்பமும் இல்லாமல் போகும்.  நாம் ஏற்றுக்கொள்ளவேண்டிய  நான்கு என்னவெனில், பக்தி, ஜீவகாருண்யம், ஒழுக்கம், தவம் ஆகியவை தாம்\. இவை நான்கும் முழுமையாகக் கைவரப் பெற்றால் மட்டுமே மரணமிலாப் பெருவாழ்வைப் பெறமுடியும்.

2 comments:

  1. ஜீவகாருண்ய ஒழுக்கம் சாப்பாடு போடுவதல்ல!

    http://sagakalvi.blogspot.in/2012/04/blog-post_27.html

    ReplyDelete
  2. மரணமில்லா பெருவாழ்வு இங்கு தரப்படும் விளக்கம் உடலைவிட்டு உயிர் பிரியாமல் இருப்பது. அப்படி மரணமில்லாத பெருவாழ்வு வாழ வேண்டுமானால் பிணி, மூப்பு, பயம், துன்பம் இல்லாமல் இருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. இதைப் புரிந்துகொண்டாமல் மரணத்தை வெல்லலாம் என்று நிசயப்படுத்தப்பட்டு உள்ளது. பிணிக்கு காரணம் உணவுமுறை, வள்ளலாரின் முறைப்படி உணவு உண்டால் மரணத்தை வெல்லலாமென்றால், அந்த முறையை அடுத்தவர்களுக்குச் சொன்ன அவர் ஏன் மரணம் அடைந்தார்....? அடுத்தாக “மரணமில்லா பெருவாழ்வு அடைவேன் என்று சொன்ன ஒருவரையும் இதுவரை பார்த்ததேயில்லை” என்றும் நாம் அனைவரும் என்றாவது ஒருநாள் போகத்தானே போகிறோம் என்று குழப்பமான வரிகள். எதற்காக இப்படி தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்ப வேண்டும். பிறந்தோம், எதார்த்தமாக இயற்க்கை வாழக்கை வாழ்வோம்.

    ReplyDelete