Saturday, December 17, 2011

எனக்கு பிடித்த சில தத்துவங்கள்…


  1. ஒருவர் உன்னைத் உயர்த்திப் பேசும் போது விழிப்போடு இரு. ஒருவர் உன்னைத் தாழ்த்தி பேசும் போது ஊமையாய் இரு. புகழ்ந்து பேசும் போது செவிடனாய் இரு.  எளிதில் வெற்றி பெறலாம். விட்டுக் கொடுங்கள்; விருப்பங்கள் நிறைவேறும் தட்டிக் கொடுங்கள்; தவறுகள் குறையும்.மனம் விட்டுப் பேசுங்கள் – அன்பு பெருகும்.
  2. நண்பரின் சட்டைப்பையில் துவாரம் இருக்கும்போது அதில் நாணயங்களை போடுவதின் மூலம் அவருக்கு உதவி செய்ய முடியாது
  3. வாழ்க்கையில் மாறாதது மாற்றம் மட்டுமே.
  4. வெற்றி என்பது நிரந்தரமல்ல; தோல்வி என்பது முடிவுமல்ல!
  5. கண்கள், தம்மைத் தாமே நம்புகின்றன. காதுகளோ
    மற்றவரை நம்புகின்றன
  6. துன்பங்களை வளர்ப்பதும் தனிமை தான் ; தணிப்பதும் தனிமை தான்.
  7. நல்ல சொற்கள் நம்மைச் சிந்திக்க வைக்கின்றன. நல்ல செயல்கள் நம்மை மெளனமாக்குகின்றன
  8. அவசரம், ஆளை மட்டுமல்ல, அலுவலையும் கெடுக்கிறது.
    - ஓர் அனுபவசாலி
  9. நூறு வார்த்தைகள் வலியை ஏற்படுத்தாது; ஆனால்,
    ஒரு நல்ல நண்பனின் மவுனம்
    இதயத்தில் அதிகக் கண்ணீரை ஏற்படுத்தும்.
  10. அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்-  காந்தியடிகள்
  11. வாழ்க்கை என்பதே ஒன்றை விட்டு ஒன்றை பிடிக்க முயன்று எல்லாவற்றையும் கோட்டை விடுவதே
  12. இடர்களைக் கண்டு அஞ்சாமல் இருப்பதே விரைவான முன்னேற்றத்திற்கான வழியாகும். – அரவிந்தர்
  13. மனிதனை மாற்றி அமைக்கும் விதி, அவனது ஒழுக்கமே
  14. கோபம் என்னும் அமிலம் எறியப்படும் இடத்தைவிட அதை வைத்துக் கொண்டிருக்கும் கலதத்தையே பொ¢தும் நாசப்படுத்தி விடும்
  15. ஒரு நொடி துணிந்தால் இறந்துவிடலாம்.
    ஒவ்வொரு நொடியும் துணிந்தால் நாம் ஜெயித்து விடலாம்.
  16. என்றாவது நான் ஆசிரியரானால், அது கல்வி போதிக்க மட்டுமல்ல, கல்வி கற்பதற்காகவும் இருக்கும்
  17. எதிரியின் கையில் உள்ள ஆயுதத்தை பார்த்து கேலி செய்வதைவிட அதை பிடுங்கிகொள்வது புத்திசாலித்தனம்
  18. நாம் எப்போதுமே வாழ்வதற்குத் தயாராகிக் கொண்டிருக்கிறோம்; ஆனால் எப்போதுமே வாழ்வதில்லை.
  19. நல்ல முடிவுகள், அனுபவத்திலிருந்து பிறக்கின்றன;
    ஆனால் அனுபவமோ தவறான முடிவுகளிலிருந்து கிடைக்கிறது – பில் கேட்ஸ்
  20. நம்பிக்கை உள்ளவர்கள் எந்த சூழலையும் சாதகமாக்கிக் கொண்டு முன்னேறுகிறார்கள்
  21. அறிவுக்கும் மனசுக்கு சிக்கல் இருக்கும் போது நீங்க மனசு சொல்வதை மட்டும்கேளுங்கள்.
  22. மனதைப் பொத்தல் குடிசையாக வைத்திராமல், எந்தப் புயலையும் தாங்கும் இரும்புக்கோட்டையாக வைத்திருக்கக் கற்க வேண்டும்
  23. உதவும் கரங்கள், ஜெபிக்கும் உதடுகளைவிடச் சிறந்தது – அன்னை தெரஸா
  24. உன்னைத் தவிர வேறு யாரும் உனக்கு அமைதியைத் தர முடியாது.
  25. ஒன்று தவிர்க்க முடியாது என்னும் போது. அதை எதிர்கொள்ளும் தைரியம் வந்துதானே தீர வேண்டும்
  26. தோல்வியின் அடையாளம் தயக்கம்! வெற்றியின் அடையாளம் துணிச்சல்! துணிந்தவர் தோற்றதில்லை!  தயங்கியவர் வென்றதில்லை! வெற்றியை விரும்பும் நமக்குத் தோல்வியைத் தாங்கும் மனம் இல்லை; தோல்வியைத் தாங்கும் மனம் இருந்தால் அதுவும் ஒரு வெற்றிதான்.
  27. சிக்கல்கள் என்பவை, ஓடும் ரெயிலிலிருந்து பார்க்கும் மரங்களைப் போன்றவை. அருகில் போனால் அவை பெரிதாகத் தெரியும்.அவற்றைக் கடந்து சென்றால் அவை சிறிதாகிவிடும். இதுதான் வாழ்க்கை!
  28. காலம் போனால் திரும்புவதில்லை காசுகள் உயிரை காப்பதும் இல்லை !
  29. உங்களின் தோல்வி எங்கே ஒளிந்துள்ளது தெரியுமா?பிரச்சினைகள் வரும்போது அல்ல; பிரச்சினைகளைக் கண்டு நீங்கள் பயந்து விலகும்போது – பாரதியார்
  30. நீ மகிழ்ச்சியாக இருக்கும்போது, நீ யாரை விரும்புகிறாயோ அவரை நினைத்துக்கொள்வாய்! நீ துயரத்தில் இருக்கும்போது, உன்னை யார் விரும்புகிறாரோ அவரை நினைத்துக்கொள்வாய்!
  31. ஆசை கோபம் களவு கொள்பவன் பேசத்தெரிந்த மிருகம்..அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்..

1 comment: