Wednesday, November 9, 2011

Siddha Marunthu & What is Siddha ?

4 comments:

  1. காற்று நான்கு பேதங்களாக உள்ளன !
    காற்று நான்கு பேதங்களாக உள்ளன

    இவ்வுலகமும் இவ்வுலகத்தில் உள்ள ஜீவ ராசிகளும் வாழும் பொருட்டு நான்கு விதமான காற்றுகள் நான்கு பெதங்களாக உள்ளன அவை .அமுதக் காற்று ,
    பூதக் காற்று,விஷக் காற்று ,உஷ்ணக் காற்று ,என்பவையாகும் இவற்றில் முக்கியமானது அமுதக் காற்றும் ,விஷக் காற்றுமாகும்.

    பகல் காலத்தில் பூதக் காற்று,விஷக் காற்று,உஷ்ணக்காற்று அதிகமாகவும் அமுதக் காற்று மிகக் குறைவாகவும் கலந்து பூமியைக் நோக்கி இருந்து கொண்டு இருக்கும் அந்த குறைவான அமுதக் காற்றும் இல்லை என்றால் உயிர்கள் ஜீவிக்காது.

    இரவு காலத்தில் விஷக் காற்று அதிகமாயும் ,பூதக் காற்றும் உஷ்ணக் காற்று குறைவாகவும் .அமுதக் காற்று பகல் காலத்தின் அளவை விட குறைவாகவும் இருக்கும் .

    அமுதக் காற்று மட்டும் பல கோடி மைல்களுக்கு மேல் பகிரண்டத்தில் நிறைந்து இருக்கும் அங்கு மற்ற மூன்று காற்றுகளும் இருக்காது .

    உயிர்கள் வாழும் பொருட்டு அதி காலையில் அதாவது இரவு முடியும் போதும் சூரியன் உதயமாகும் முன்பும் நான்கு மணி முதல் ஆறு மணி வரையில் பூமியைக் நோக்கி அதிகமாக வீசிக் கொண்டு இருக்கும் ,அந்த காலம் அமுதக் காற்று வீசுவதால் அமுத காலம் என்பதாகும் .இதை முகூர்த்தக் காலம் என்றும், ஒரு சாமக் காலம் என்றும், அதை வைத்துதான் ஆலயங்களில் கடவுளை எழுப்புவதாக திருப்பள்ளி எழுச்சி என்பார்கள் அதுவல்ல உண்மை அந்த காலத்தில் அனைத்து உயிர்களும் தூங்காமல் விழித்து இருக்க வேண்டும் என்பதுதான் உண்மையாகும் .அந்த காலத்தில் மனிதனைத் தவிர அனைத்து உயிர்களும் விழித்திருக்கும் .

    அந்த காலை நேரத்தில் ஏசியோ ,பேனோ எதுவும் தேவைப்படாது காற்று குளு குளு என்று இருக்கும் .அதே நேரத்தில் எழுந்து இருக்க முடியாமல் துக்கம் அதிகமாக மகிழ்ச்சியாக வரும் .ஆனால் தூங்கக் கூடாது விழித்துக் கொள்ள வேண்டும்.

    மனிதனாக பிறந்த அனைவரும் அந்த அமுத காலத்தில் தூங்காமல் விழித்து இருக்க வேண்டும் .அந்த அமுதக் காற்றை அதிகம் சுவாசித்து அனுபவிக்க வேண்டும் அப்படி பழகினால் நீண்ட ஆயுள் விருத்தியாகும் ,துன்பம் துயரம் அச்சம் பயம் நோய் எதுவும் நம்மை நெருங்காது அந்த காற்றை சுவாசிப்பதே இறை வழிபாடாகும் .தியானம் யோகம தவம செய்வதை விட அதிக சக்தியும் அதிகமான அறிவு விளக்கமும் அலைபாயும் மனமும் அடங்கும்

    ஒவ்வொரு நாளும் அந்த நேரத்தில் தூங்காமல் எழுந்து விளக்கின் முன் அமர்ந்து கண்ணை திறந்து கொண்டு விளக்கின் ஒளியைப் பார்த்து தியானம் செய்ய வேண்டும் அந்த அமுதக் காற்று இல்லை என்றால் எந்த உயிர்களும் ஜீவிக்காது .

    அந்த அமுதக் காற்றினால் தான் சூரியன் சந்திரன் நட்சத்திரங்கள் மற்ற கிரக்ங்கள் எல்லாம் முறைப்படி தவறாமல் செயல் பட்டுக் கொண்டு இருக்கின்றன ஆதலால் நான்கு காற்றுகளில் அமுதக் காற்று மிகவும் முக்கியமாகும் .அமுதக் காற்றை சுவாசித்து அனைவரும் ஆனந்தமாக வாழ்வோம்.. மேலும் விரிக்கில் பெருகும் சந்தேகம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம் ,

    அன்புடன் ஆன்மநேயன் கதிர்வேலு ;--9865939896---0424-2401402

    ReplyDelete
  2. தியானம் செய்யும் முறை !
    தியானம் செய்யும் முறை !

    தியானம் செய்ய வேண்டுமானால் கண்ணை மூடிக் கொண்டு தியானம் செய்யக் கூடாது.கண்ணை திறந்து கொண்டுதான் செய்ய வேண்டும் நம் வீட்டில் தனியாக ஒரு அரை இருக்க வேண்டும் அந்த அறையில் நான்கு சதுரம் உள்ள கண்ணாடிக் கூண்டு விளக்கு வைக்க வேண்டும் அதன் மத்தியில் ஒரு அகல விளக்கோ அல்லது உலோகத்தால் செய்த விளக்கோ வைக்க வேண்டும் அதில் நல்ல எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் ஊற்றி சிறிய திரிப போட்டு தீபம் ஏற்ற வேண்டும் ,அதற்கு முன்னாடி நாம் அமர்ந்து கொள்ள வேண்டும் .அந்த விளக்கின் தீப ஒளியை இடை விடாது கண்கள் வழியாக பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் .

    நம்மால் எவ்வளவு நேரம் பார்க்க முடியுமோ அவ்வளவு நேரம் பார்க்க வேண்டும் இதற்கு நேரம் என்பது கிடையாது நேரம் கிடைக்கும் போதெல்லாம் எப்பொழுது வேண்டுமானாலும் செய்யலாம் .இதனால் என்ன பயன் என்பதை பார்ப்போம் .

    நம் உடம்பின் ஐம புலன்களில் முக்கியமானது முதன்மையானது கண்களாகும் கண்களின் வழியாகத்தான் நாம் அனைத்தும் பார்க்கிறோம் பார்க்கும் அனைத்தும் மனதில் பதிவாகிறது .கண்கள் எங்கு செல்கிறதோ அங்கு மனமும் செல்லும் கண்களில் பார்க்காதது மனதில் பதிவாகாது மனதை அடக்க வேண்டுமானால் கண்கள் வழியாகத்தான் அடக்க முடியும் .

    கண்களை மூடிக் கொண்டு தியானம் செய்தால் இல்லாத கற்பனைகளும் தேவை இல்லாத வெளி சிந்தனைகளும் தோன்றி மனம் அலைபாயுமே தவிர மனம் அடங்காது ,மனம் என்பது ஒரு பேய் குரங்கு அதை அடக்க முடியாது ஒளியின் வழியாகத்தான் அடக்க முடியும் அதை கண்கலால்தான் அடக்க முடியும் வேறு வழிகள் எல்லாம் பொய்யான மாயா ஜாலங்களாகும்.

    ஆதலால் கண்கள் உருவம் அற்ற ஒளியை தியானம் செய்ய வேண்டும் .கண்களும் ஒளி-- ,தீபமும் ஒளி --இரண்டும் ஒளியாக இருப்பதால் ஜீவனும் ஒளி --ஆன்மாவும் ஒளியாகும்--,நாம் பிறந்ததில் இருந்து கண்கள் வழியாகப் பார்த்த அனைத்தும் ஆன்மாவில் பதிவாகி உள்ளது .அந்த பதிவுதான் நினைவு அலைகளாக நமக்கு துன்பமும் துயமும் அச்சமும் தந்து கொண்டு வருகிறது .அந்த பதிவுகளை நீக்கினால் மனம் அமைதி பெரும்

    அந்த பதிவுகளை அகற்ற தீப ஒளி தியானம்தான் முக்கியமானதாகும் அப்படியே தினமும் தீபத்தை பார்த்துக் கொண்டு வந்தால் அந்த ஒளியும் உருவம் மறைந்து பின் புருவ மத்தியில் உள்ள ஆன்ம ஒளியைக காணும் செயலுக்குஅதே கண்கள் வந்து விடும் பின் .உருவம் கரைந்து அருவமாகும் .துவைதமாக இருந்தால் அத்துவைதம் தானே ஆகும் .எப்படி எனில் பார்க்கும் தான் கெடுவது அத்வைதம் ,பார்க்கப் படும் பொருளும் கெடுவது அதீதம் இதுதான் சத்தியமான உண்மையாகும் .

    மலம ஒழிப்பு என்பார்கள் அந்த மலத்தை ஒழிப்பதற்கு தீட்சை கொடுப்பதாக சொல்லுவார்கள் மலம என்பது யாதெனில் ஆணவம் மாயை கன்மம் மாமாயை பெருமாயை என்னும் ஐந்து மலங்களாகும்,அதற்கு மலம ஒழிப்பு என்பார்கள் தீட்சை என்பது யாதெனில் தீ என்பது மலம ட்சை என்பது ஒழிவு அதற்கு மலம ஒழிப்பு என்று பெயராகும் பலபேர் விபரம் தெரியாமல் நிறைய பணம் கட்டி தேவை இல்லாமல் தியானம் யோகம தவம போன்ற தவறான வழிகளில் சென்று செய்து வருகிறார்கள் அப்படி செய்வது அறியாமையாகும் அறியாத மக்களை ஏமாற்ற நிறைய அமைப்புகள் உருவாகி விட்டது

    அறியாமை என்னும் மலத்தை வேறு யாராலும் ஒழிக்க முடியாது அவரவர்கள் ஆன்மாவில் பதிவானதை அவரவர்களே தான் ஒழிக்க முடியும் ,ஒழிக்க வேண்டும்

    கண்ணில கலந்தான் கருத்தில் கலந்தான் என்
    எண்ணில் கலந்தே இருக்கின்றான் .
    கையற விலாது நடுக கண் புருவ பூட்டு
    கண்டு களி கொண்டு திறந்து உண்டு நடு நாட்டு .
    வள்ளலார் பாட்டு ,

    மேலே சொல்லியபடி செய்து வாருங்கள் உங்களுக்கே அனுபவம் தானே கிடைக்கும் ஏதாவது சந்தேகம் இருந்தால் எங்களிடம் தொடர்பு கொள்ளுங்கள் இலவசமாக சொல்லித் தரப்படும் .இதுவே சன்மார்க்க தியானமாகும் .

    போன் நெம்பர் ;-0424 2401402 -செல் --9865939896 .

    உங்கள் அன்பு கொண்ட ஆன்மநேயன் --கதிர்வேல

    ReplyDelete