Saturday, July 18, 2015

சூபி ஞானி மவுலானா ரூமி.

1. "குழந்தைகள் பாலை விரும்புகின்றன
வளர்ந்தவர்கள் பாலூட்டுபவளைக் காதலிக்கிறார்கள்"

2. எது உங்களை நெறிபடுத்தியதோ அதுவே உங்களது சரியான பாதை.
நான் எந்த பாதையையும் உங்களுக்கு வரையறுத்துக் கூறமாட்டேன் !

3. "உனது செயலே, உன் நேசத்தின் அழகாய் அமையட்டும்."

4. நீ பார்ப்பது உன்னைத்தான்!

5. "அன்புதான் முழுமையானது; நாமோ சிதிலங்கள் மட்டும் தான்"

6. நீ தேடும்பொருளாக நீயே இருக்கின்றாய்

7.அன்புதான் மனிதன்
அதனால் ஏற்படும் வேதனையும் மனிதன்தான்.
அன்பையும் வேதனையும் அனுபவிக்கும்போது
மனிதன் தேவதை ஆகிறான் "

8.உண்மையையும் நேர்மையையும் நீ அடைய
உனக்கு அழகிய, மென்மையான இதயம் தேவை !!

9 உன் கண்ணொளிதான் கற்றுத் தந்தது
காதல் இதுதான் என்று
உன் அழகுதான் கற்றுத் தந்தது
கவிதை இதுதான் என்று
என் நெஞ்சில் ஆடும் உன்
நடனத்தை வேறு யார் பார்க்காவிட்டாலும்
சில சமயம் விழும் என் பார்வையே
நான் கற்ற இந்தக் கல்வி.

10. நான் ஒரு கண்ணாடி; வாதம் செய்பவன் அல்ல.

11. மௌனம் இறைவனின் மொழி!
அதை மொழிபெயர்க்க முயற்சித்தால்
வார்த்தைகள் ஏழையாகிவிடும் !!!

12. நீ......?
உனக்குள் நீ பயணிக்கும் நெடும் பயணம்தான் நீ!!!

13. நமதுபலம் நமது பெருந்தன்மையில் இருந்தும், கருணையில் இருந்தும்தான் உருவாகிறது !

14.நம்பிக்கையை இழக்காதே!
அதிசயங்கள் கண்ணுக்கு புலப்படாதவை!

15.எப்போதெல்லாம் எதிர்பார்ப்பில்லாமல், கணக்குப் பார்க்காமல், பேரம் நிகழ்த்தாமல் நேசிக்க முடிகிறதோ அப்போதெல்லாம் நாம் சொர்க்கத்தில் இருக்கிறோம்.

16.கூண்டிலிருந்து விடுபட்டுவிட்டீர்களா?
சிறகை விரித்து பறந்து செல்லுங்கள்!

17.முட்டாள்தனமாய் காதலி!
காதல் அங்குதான் உள்ளது!

18.நடந்ததை நினைத்து மகிழ்
அன்பைப்பெருக்கு!!

19.கண்களில் ஒளி
இதயத்தின் ஒளி !!

20. "நெருங்கி வா; நானே நீ என்பதை உணர்"

21.இதயத்தை விரும்பினால்
அன்பை விதை.
சொர்கத்தை விரும்பினால்
பாதையில் முற்களைப் பரப்பாதே!

22.எதையும் உற்று ஆராயாதே!
அதனால் அதன் ஜீவனை நீ இழந்துவிடக்கூடும்!

23.மானுடர்கள் பலர் உடை இல்லாமலிருப்பதை கண்டேன்!
உடைகள் பல மானுடங்கள் இல்லாமல் நடப்பதைக் கண்டேன்!

24."இருளை வெளிச்சமாகுங்கள் !
வெளிச்சத்தை வீணாக்காதீர்கள் !"

25.மெழுகுவர்த்திகள் உருகி மடிகின்றதே என்று கவலைப்படாதே !
நம்மிடத்தில் பெரு நெருப்பை உண்டாக்க
அனல் பொறிகள் உள்ளன!!

26.என்னை எத்தனை முறை வேண்டுமானாலும் உற்றுப்பார்!
என்னை நீ உணர்ந்துகொள்ள முடியாது!
நீ பார்க்கும் பார்வையில் நான் இல்லை!
நீ நோக்கும் இடத்தில நான் இல்லை !

27.மௌனம் காத்திருங்கள்!
நம்மில் யார் சப்த வார்த்தைகளை சிருசஷ்டிகிறானோ
அவனே கதவுகளின் படைப்புவாதி!
பூட்டுகளின் அதிபதி !
திறவுகோலின் நாயகனும் அவனே!

28."இப் பிரபஞ்சத்தின் ஆத்மாவின் ஆத்மா, அன்பாகவே அமைந்திருக்கிறது"

29."விளக்குகளின் வடிவங்கள் வேறானதாக இருந்தாலும், ஒளி ஒன்றுதான்"

30.உன் சாலையில் தன்னந்த்தனியே நீ!
அதில் உனக்காக யாரும் நடக்கமாட்டார்கள்!!

31.சிறிய விஷயங்களாக சிந்திப்பதை தவிர்த்து விடு !
உலகை ஆளப் பிறந்தவன் நீ !!

32.நீ இப்புவியில் வாழவில்லை!
நிலத்தில் நடக்கிறாய்! அவ்வளவுதான்!!

33.காதலர்களின் வீடுகள் இசையால் நிரம்பியவை !
அம்மாளிகையின் சுவர்கள் பாடல்களால் கட்டப்பட்டவை !
தரை நாட்டியத்தால் மெழுகப்பட்டது !!

34.நீ புரட்டிக் கொண்டிருக்கும் நூறு நூறு நூல்களையும்
தாள்களையும் நெருப்பில் போட்டுவிடு;
உன் இதயத்தை நண்பனின் ஒளி கொண்டு பூஞ்சோலை ஆக்கிவிடு...!!

35.நம்பிக்கையை இழக்காதே!
கண்ணுக்கு புலப்படாத புதையல்கள் கொட்டிக்கிடக்கின்றன!

– சூபி ஞானி மவுலானா ஜலால் – அல் – தின் ரூமி.