Showing posts with label ஜே. கிருஷ்ணமூர்த்தி. Show all posts
Showing posts with label ஜே. கிருஷ்ணமூர்த்தி. Show all posts

Sunday, May 8, 2011

பிரச்சினையை புரிந்து கொள்ளுங்கள். தப்பிக்க பார்க்காதீர்கள் – ஜே கிருஷ்ணமூர்த்தி

நான் மிகவும் மதிக்கும் பெரியவர் ஒருவரால் , கடும் ஏமாற்றத்துக்கு உள்ளானேன். சில நாட்களாகவே அந்த விஷ்யம் என்னை வாட்டி வந்த்து. மன உளைச்சல். ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியின் இந்த உரையாடல் ஒரு வெளிச்சத்தை மனதில் பாய்ச்சியது.
எனவே உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். கவனமாக படியுங்கள் ( அடைப்பு குறிக்குள் இருப்பது நம் சொந்த சரக்கு. கண்டு கொள்ள வேண்டாம். ஹி ஹி ) 

******************************************************************************************
j_krishnamurti-2


‘’ நான் பல பிரச்சினைகளில் மாட்டிகிட்டு கஷ்டபட்றேன். இதுல என்ன கொடுமைனா , ஒரு பிரச்சினையை தீர்க்க முனைவது எனக்கு மேலும் கஷ்ட்த்திலும் , சித்திரவதையிலும் முடிகிறது. போதும் போதும்னு ஆகி போச்சு. இனி என்ன பண்றதுனு தெரியல. இன்னொன்னும் சொல்லணும். நான் செவிப்புலன் பாதிக்கப்பட்டவள். ஹியரிங் எய்ட் பயன்படுத்துறேன். எனக்கு பல குழந்தைகள். ஒரே கணவர் . அவரும் என்னை கை விட்டுட்டு ஓடிட்டாரு. என் குழந்தைகள்தான் எனக்கு இப்போது எல்லாம். நான் பட்ட கஷ்டங்கள் அவர்கள் பட கூடாது என்பதுதான் என் இப்போதைய நோக்கம் “


நம்ம துன்பங்களுக்கெல்லாம் ஒரு நல்ல பதில் வேண்டும் என்பதில் நமக்கு எவ்வளவு அக்கறை !! தீர்வு வேண்டும் என்ற நமது துடிப்பு , பிரச்சினை என்ன என்பதை அமைதியாக பார்க்கும் தன்மையை பாதிக்கிறது. பிரசினைதான் முக்கியம்.. தீர்வு அல்ல. ஒரு தீர்வை தேடினால் , கண்டிப்பாக ஒரு தீர்வு கிடைக்கும். ஆனால் பிரச்சினை அப்படியேதான் இருக்கும். ஏனென்றால் தீர்வுக்கும் , பிரச்சினைக்கும் சம்பந்தம் இல்லை . பிரச்சினையிலிருந்து தப்பிக்கும் ஒரு யுக்தியாகத்தான் தீர்வு என்பதை தேடுதலை பயன்படுதுகிறோம் . அந்த தீர்வில் அர்த்தம் இருக்காது. எனவே புரிதல் என்பதும் இருக்காது . எல்லா பிரச்சினைக்கும் அடிப்படை ஒன்றுதான். அந்த அடிப்படை காரணம் என்ன என பார்க்காமல் பிரச்சினையை தீர்க்க முயல்வது மேலும் கஷ்ட்த்தையும் , சிக்கலையும்தான் ஏற்படுத்தும். 
( குடியின் தீமையை அறிந்து கொள்வதால் மட்டும் குடியில் இருந்து விடுதலை பெற முடியாது. குடியை நிறுத்தபோகிறேன் என்று உறுதி எடுப்பது பெரும்பாலும் தோல்வியில் முடிவது இதனால்தான் ) 
பிரச்சினையை புரிந்து கொள்வது முக்கியமானது என்ற தெளிவு வேண்டும். எல்லா பிரச்சினைகளிலிருந்தும் விடுதலையாவதன் முக்கியத்துவம் புரிய வேண்டும். அப்போதுதான் பிரச்சினை எங்கிருந்து தோன்றுகிறது என்பதை பார்க்க முடியும். பிரச்சினைகளிலிருந்து விடுதலை இன்றி அமைதி இல்லை. மகிழ்ச்சிக்கு அமைதியே அடிப்படை. ஆனால் அதுவே முடிவு அல்ல. காற்று இல்லாத போது தண்ணீர் குளம் அமைதியாக இருக்கும். அதே போல பிரச்சினைகள் இல்லாதபோது மனம் அமைதியாக இருக்கும். ஆனால் மனதை முயற்சி செய்து அமைதியாக்க முடியாது . ( தியானம் செய்வது, மந்திரம் சொலவது போன்றவை மூலம் ) .அப்படி செய்தால் அந்த மனம் உயிர் துடிப்போடு இருக்காது. 
மனம் தெளிவாக இருக்கும்போது பிரச்சினையின் அடிப்படையை தெளிவாக பார்க்க முடியும். கவனிப்பு என்பது இப்படித்தான் இருக்க வேண்டும். இந்த முடிவு கிடைதால் நல்லது, இது கெட்ட்து என்பது போன்ற நம்பிக்கைகள் எதுவும் இல்லாமல் வெறுமனே பார்க்க வேண்டும்.


“ நடக்க முடியாத ஒன்றை சொல்கிறீர்கள். நமது கல்வி என்ன சொல்கிறது. நல்லது கெட்ட்தை பிரித்து பார். ஒப்பிடு .. முரண்படு. தேர்ந்தெடு. தீர்ப்பளி என்பதைத்தான் நாம் கற்றிருகிறோம். எதுவும் தீர்ப்பளிக்காமல் வெறுமனே கவனி என்கிறீர்களே. இதெல்லாம் வேலைக்கு ஆகுமா ? தவறாக கற்றுகொடுத்து விட்டார்கள் என்று வைத்துக் கொண்டாலும் அதை எப்படி மறப்பது? அதில் இருந்து எப்படி விடுபடுவது? “


வெறுமனே கவனித்தல் , செயலற்ற விழிப்புணர்வு – இவைதான் புரிதலுக்கு அடிப்படை என்பதை உங்களால் உணர முடிந்தால் , இந்த உண்மையே உங்களுக்கு விடுதலை வழங்கும். செயல் அற்ற – ஆனால் விழிப்புணர்வு மிக்க நிலையின் அவசியம் புரியவில்லை என்றால் தான் “ எப்படி “ என்ற கேள்வி பிறக்கிறது. உண்மைதான் விடுதலை தருகிறது. தியான முறைகளோ , வேறு வழிமுறைகளோ அல்ல . அமைதியான கவனிப்புதான் புரிதலை தருகிறது என்ற உண்மையை பார்க்க முடிந்தால், கண்டித்தல் நியாயப்படுதுதல் போன்றவற்றில் இருந்து விடுதலை கிடைக்கும். ஓர் ஆபத்தை பார்த்தவுடன் உடனடியாக தப்பிக்க முயல்வோம். ஏன் எதற்கு எப்படி என கேள்வி கேட்பதில்லை. அதே போன்ற தீவிரத்துடன் செயலற்ற விழிப்புணர்வின் அவசியத்தை பார்க்க முடியவில்லை. அதனால்தான் இப்படிப்பட்ட கேள்விகள் கேட்கிறீர்கள். 
இந்த அவசியத்தை ஏன் பார்க்க முடியவில்லை ?

” நானும் முயல்கிறேன் , ஆனால் இது போல நான் இதற்கு யோசித்து பார்த்த்தில்லை. நான் சொல்ல விரும்புவது ஒன்றுதான்: என் பிரச்சினைகளில் இருந்து விடுதலை வேண்டும். பெரிய டார்ச்சரா இருக்கு.. எல்லோரையும் போல சந்தோஷமா இருக்க விரும்புறேன் “

தெரிந்தோ தெரியமலோ , செயலற்ற விழிப்புணர்வு என்ற நிலையை தவிர்க்கவே நாம் விரும்புகிறோம். பிரச்சினைகளிடம் இருந்து விடுதலை பெற நம் உள்மனம் விரும்புவதில்லை. பிரச்சினை இல்லாவிட்டால் நமக்கு என்ன அடையாளம் இருக்கிறது ? நம் வீட்டு பிரச்சினை நமக்கு தெரியும் . பிரச்சினை இல்லாத நிலை எப்படி இருக்கும் என்பது தெரியாது. எனவேதான், என்னதான் கஷ்டமாக இருந்தாலும் தெரிந்த ஒன்றையே கட்டியழ விரும்புகிறோம். 
பிரச்சினை எப்போதும் இருக்கும் ஒன்றுதான். ஆனால் பிரச்சினையின் அடிப்படையை ஆராய தொடங்கினால் அது எதில் போய் முடியும் என்பது தெரியாது. இது மனதிற்கு பயத்திற்கு பயத்தை அளித்து சோர்வடைய செய்கிறது . பிரச்சினைகளே இல்லை என்றால் மனதிற்கு வேலை இல்லாமல் போய் விடும். பிரச்சினைகளால்தான் மனம் வாழ்கிற்து. பிரச்சினை என்பது உலகம் சார்ந்த்தாகவோ, சமையலறை சார்ந்த்தாகவோ, அரசியல் சார்ந்த்தாகவோ, உறவுகள் சார்ந்த்தாகவோ , ஆன்மீகம் அல்லது சித்தாதந்தம் சார்ந்த்தாகவோ இருக்கலாம் ( அட எதுவும் இல்லை என்றால், மெகா சீரியலில் வரும் பிரச்சினைகளை நினைத்து கவலைப்ப்டலாம் ) : எனவே பிரச்சினை என்பது நம்மை குறுகிய வட்ட்த்தில் அடைக்கிறது. உலக பிரச்சினையில் மூழ்கி இருக்கும் மனதிற்கும் ஆன்மீக பிரச்சினையில் ஆழ்ந்து இருக்கும் மனதிற்கும் அடிப்படையில் வித்தியாசம் இல்லை ( டோனி பிளைர் புத்தகதில் சொல்வது பற்றி யோசிப்பதற்கும் , நித்தியானதா நல்லவரா என விவாதிப்பதற்கும் , கடவுள் இல்லை அல்லது இருக்கிறார் என வாதம் செய்வதற்கும் அடிப்ப்டை வித்தியாசம் இல்லை ) .. பிரச்சினைகள் மனதிற்கு ஒரு சுமையாக இருக்கின்றன ( சுகமான சுமைகள் ) “ நான் “ எனது “ போன்றவற்றுக்கு ஊட்டமளிப்பது பிரச்சினைகள்தான். பிரச்சினைகள், சாதனைகள் , தோல்விகள் இல்லாமல் “ நான் “ என்பது இல்லை.. ( நமது வாழ்க்கை என நாம் நினைப்பது நாம் என்ன சாதித்தோம் என்ன பிரச்சினைகலை சந்தித்தோம், என்ன கஷ்டப்பட்டோம் என்பதைத்தானே )


“ நான் என்ற உணர்வு இல்லாமல் எப்படி வாழ்வது ? அனைத்துக்கும் அடிப்படை அதுதானே ? “

செயல் என்பது ஆசை , நினைவுகள் , பயம்,. சந்தோஷம், வலி போன்றவற்றின் அடிப்படையில் இருக்கும் வரை , செயலின் விளைவு குழப்பமாகவும், முரண்பாடு நிறைந்தும் , பகையுணர்வு நிறைந்தும்தான் இருக்கும். உலகால் குறிப்பிட்ட வகையில் புரோகிராம் செய்ய வைக்கப்பட்டு இருக்கிறோம் ( நான் இந்த மதம் சார்ந்தவன், இந்த நாடு சேர்ந்தவன் என்பது போல ) அதற்கேற்ப நம் செயல் அமைகிறது. ஆகவே நம் செயலில் முழுமை இருக்காது. எனவே முரண்பாடுகள்.இதனால்தான் பிரச்சினைகள். 
நான் என்பதன் வெளிப்பாடுதான் முரண்பாடுகள். வெற்றி தோல்வி, ஆசை பயம் போன்ற முரண்பாடுகள் இன்றி வாழ்வது சாத்தியமான ஒன்றுதான் . ஆனால் அது தியரட்டிக்கலாகத்தான் இருக்கிறது. நேரடியாக அதை அனுபவித்தால்தான் அது உண்மையாக மாறும். 
நான் என்பது எப்படியெல்லாம் செயல்படுகிறது என்பதை உணர்ந்தால்தான் பேராசையில் இருந்து விடுபட முடியும்.

“ எனது காது கேளாமை என்ற குறை , என் பயங்கள் , அடக்கப்பட்ட உணர்ச்சிகள் இவற்றின் விளைவு என நினைக்கிறீர்களா? உடல் ரீதியாக எந்த குறையும் இல்லை என மருத்துவர்க்ள் சொல்கிறார்கள். காது கேட்கும் திறன் எனக்கு திரும்ப கிடைக்குமா ? ஏதாவது ஒரு வகையில் நான் என் வாழ்வில் அடக்கப்பட்டுத்தான் வருகிறேன். நான் நினைத்த எதுவும் எனக்கு கிடைக்கவில்லை., நினைத்தை செய்யவும் முடியவில்லை “

புரிந்து கொள்ளுதலை விட அடக்கிதல் எளிது. குழந்தை பருவத்தில் இருந்து அடக்கி வைக்கப்பட்டவர்களுக்கு புரிந்து கொள்ளல் கஷ்டமான ஒன்று. அடக்குதல் என்பது பழக்கமாகி விடும் . ஆனால் புரிதல் என்பது அவ்வப்போது நிகழ வேண்டும். அது பழக்கம் ஆகாது. தொடர் கவனிப்பு, விழிப்புனர்வு தேவை. புரிதல் நிகழ வேண்டுமென்றால் நிதானம் , அமைதி , நெகிழ்வுத்தன்மை , சுரணைத்தன்மை ஆகியவை தேவை. செண்டிமெண்ட்டுகெல்லாம் இதில் வேலை இல்லை.
ஒரு பிரச்சினை என்றால் அடக்குதல் என்பதற்கு எந்த வித விழிப்புணர்வும் தேவையில்லை.சுலபமானது ஆனால் முட்டாள்தனமானது ( ஒருவர் மேல் கோபம் என்றால் நான் கோப்ப்படமாட்டேன்,. நான் அமைதியானவன் என திரும்ப திரும்ப சொல்லும் செல்ஃப் ஹிப்னாடிசம் மூலம் கோபத்தை அடக்க முயலுதல் ஓர் உதா. ) இப்படி அடக்குதல் நமக்கு ஓர் மரியாதையை தரும். மேலோட்டமான பாதுகாப்பை தரும் . புரிதல் என்பது விடுவிக்கிறது. அடக்குதல் என்பது ஒரு குறுகிய இட்த்தில் சிக்க செய்கிரது. அதிகாரத்தின் மேல் பயம், பாதுகாப்பின்மை , கருத்தின் மீது பயம் போன்றவை ஏதோ ஒன்றை பற்றிக்கொண்டு அதில் பாதுகாப்பு பெற முயல்கிறது ( மாமியாரிடம் பேச பயப்படும் சில பெண்கள் , எதயாவது ஒன்றை படித்து கொண்டே இருப்பார்கள் . படிப்பாளி என்ற முத்திரை அவர்களுக்கு ஒரு பாதுகாப்பை தரும். சிலர் ஆன்மீக்வாதி என்ற முத்திரை பெற பார்ப்பார்கள் ) , மனம் சார்ந்த இது உடலிலும் பாதிப்பு ஏற்படுத்தி உடல் சார்ந்த விஷ்யமாகவும் மாறும். இந்த அடைக்கலம் எப்படிப்பட்ட்தாக இருந்தாலும் , அதில் பயம் என்பது இருந்து கொண்டுதான் இருக்கும். பயதில் இருந்துதான் , ஒன்றுக்கு பதில் இன்னொன்றை பயன்படுதுதல், இன்னொன்றில் ஒளிதல் , கட்டுப்பாடு போன்றவை பிறக்கின்றன. இது எல்லாமே அடக்கு முறைதான். இந்த அடக்குமுறைக்கு ஏதோ ஒரு வடிகால் தேவை. இது உடல் ரீதியாக வெளிப்படலாம் .. அல்லது ( ஆன்மீக !! ) மாயத்தோன்றங்களாக வெளிப்படலாம் . இது தனி நபரை பொறுத்த்து..


“ எனக்கு பிடிக்காத விஷயங்களை கேட்க நேரும்போது, காது கேட்க உதவும் கருவியை சரணடைவேன். யதார்த்த்தை விட்டு தப்பித்து எனக்கே உரிய தனி உலகில் வாழ இது உதவுகிறது. ஆண்டுக்கணக்கில் அடக்கி வைக்கப்பட்ட்தில் இருந்து எப்படி விடுதலை ஆவது? இதற்கு பல ஆண்டுகள் ஆகுமே !! ? “

எத்தனை ஆண்டுகள் ஆகும் என்பதே அர்த்தம் அற்றது. இது காலம் சம்பந்தப்பட்ட்து அல்ல. கடந்த காலத்தை ஆய்தல், பாதிப்பு ஏற்படுதிய சம்பவங்களை அலசுதல் என்பதெல்லாம் தேவையில்லை. அடக்குதல் என்பதை ஓர் உண்மையாக நேருக்கு நேர் பார்ப்பதுதான் முக்கியம். செயலற்ற விழிப்புணர்வு , விருப்பு வெறுப்பு இன்றி கவனித்தல், உண்மைக்கு எடுத்து செல்லும். நேற்று நாளை என்ற சிந்தனை மூலம் உண்மையை காண முடியாது. காலம் என்பதை கடந்தாக வேண்டும். உண்மையை அடைய முடியாது. பார்க்கவும் முடியாது. கொஞ்சம் , கொஞ்சமாக முயற்சிது , தவணை முறையில் உண்மையைஅ அறிய முடியாது. 
உண்மையை அறிய வேண்டும் என்ற துடிப்பே தடைக்கல்லாக அமைந்து விடும். ஆசையில் நல்ல ஆசை, கெட்ட ஆசை என்று இல்லை. ஆசை இருக்கும் இட்த்தில் விழிப்புணர்வு இருக்காது. தேடல், விடாமுயற்சி என்றெல்லாம் பெயரிட்டாலும், தேடினால் உண்மை கிடைக்காது. செயல் புரியாமல் வெறுமனே கவனிப்பதுதான் உண்மையை காட்டும். நான் என்பது எண்ணங்களால் ஆனது . எனவே நான் என் எண்ணத்தை ஆராய முடியாது. ஆராயப்படும் விஷயமும் ஆராயும் நபரும் ஒரே பொருளால் ஆனது. இரண்டும் வேறு வேறு அல்ல.. 
உண்மைதான் விடுவிக்கும். முயற்சியோ செயலோ அல்ல

அனுபவத்தை மறந்தால்தான் அனுபவிக்க முடியும் – ஜே கே


ஒரு விஷயத்தை பற்றிய கருத்து , அந்த விஷயத்தை புதிதாக பார்ப்பதை தடை செய்யும் என்கிறார் ஜெ கிருஷ்ணமூர்த்தி..
க்டவுள் இருக்கிறாரா இல்லையா என்பதில் மட்டுமல்ல , ஒரு மலரின் அழகை ரசிப்பதிலும் கூட , முன்கூட்டியே ஒரு கருத்து இருப்பது தெளிவான பார்வை தடுக்கும் என்கிறார்
************************************************************************************************************
அனுபவம் என்பது வேறு.. அனுபவித்தல் என்பது வேறு. நமது அனுபவங்கள் புதிதாக அனுபவிப்பதை தடை செய்கின்றன. மோசமான அனுபவம் அல்ல்து இனிதான அனுபவம் என்ற வித்தியாசம் எல்லாம் இல்லை. இரண்டுமே இடையூறுதான்.
அனுபவம் என்பது காலத்தின் பிடியில் உள்ளது., அனுபவம் முடிந்து போனது. இறந்த கால்ம். நிகழ்காலத்திற்கேற்ப இது உயிர் பெறுகிறது. வாழ்க்கை என்பது நிகழ்காலத்தில் நிகழ்வது. இது அனுபவம் அல்ல.
அனுபவத்தின் நிழல் நிகழ்காலத்தில் விழுவதால், அனுபவித்தல் என்பது முழுமையாக இல்லாமல் அனுபவம் ஆகிறது.
அனுபவங்களால் ஆனதுதான் மனம். எனவே இது எதையும் அனுபவிக்க முடியாது.  தொடர்ச்சி எதுவும் இல்லாமல் ஒரு விஷ்யத்தை புதிதாக பார்க்கும் தன்மை மனதுக்கு இல்லை. அனுபவம் இல்லாத இடத்தில்தான் அனுபவித்தல் நிகழும்..
மனம் தனக்கு ஏற்கனவே தெரிந்த ஒன்றைத்தான கற்பனை செய்து அதைத்தான் பார்க்கும். மனம் செயல்படுபவதை நிறுத்தினால்தான் தெரியாத ஒன்றை பார்க்க முடியும்..
அனுபவத்தின் வெளிப்பாடுதான் சிந்தனை. இது நினைவு சார்ந்தது. சிந்தனை இருக்கும்வரை அனுபவித்தல் இருக்காது.
சரி, அனுபவத்தை எப்படி துறப்பது? இப்படி துறக்க நினைப்பதே , துறக்க முடியாமல் செய்து விடும்.
துறக்கவேண்டும் என்பது ஓர் ஆசைதான். ஆசையற்ற அமைதியான நிலையே அனுபவித்தலுக்கு அவசியம்… ஆனால் மனம் அந்த நிலையை அடைய பேராசை படுகிறது… தான் அனுபவித்ததை அனுபவமாக மாற்றபார்க்கிறது. எனவே அனுபவம் அதை அனுபவித்தவர் என்ற இருமை நிலை தோன்றுகிறது..
ஒன்றை முழுமையாக அனுபவிக்கும்போது அங்கு அனுபவிப்பனோ , அனுபவிக்கபடும் பொருளோ இருக்காது… அனுபவிதல் மட்டுமே நிகழும். நான் அனுபவிக்கிறேன் என்ற எண்ண்ம் இருக்காது..சிந்தனை இல்லாமல் மனம் அமைதியாக இருக்கும். ஒரு விண்மீனை பார்த்தால் , அதன் அழகை முழுதும் ரசிப்போம், நான் அதை ரசிக்கிறேன் என்ற எண்ணம் இல்லாத நிலையில் அனுபவம், அனுபவிப்பவன் என்ற இருமை இல்லை.
இந்த நிலையை அடைய எந்த வழிமுறையும் இல்லை. முயற்சி செய்து அடையவும் முடியாது .
காலம் கடந்த அமைதியை , நான் என்ற எண்ணம் மறையும்போதுதான் அடைய முடியும்…

எண்ணங்களுக்கு அப்பால்… – ஜே கிருஷ்ணமூர்த்தி

தத்துவ ஞானி ஜே கிருஷ்ணமூர்த்தின் நாள் குறிப்பு இங்கே …  (அடைப்புக்குறிக்குள் இருப்பது, அடியேனின் கமெண்ட் ..ஹி ஹி)

************************************************************************************************* 
image 
அவர் ஓர் அறிஞர். ப்ல புத்தகங்களை படித்தவர்.. ஏதாவது பேசும்போது, அவற்றில் இருந்து அனாயசமாக மேற்கோள் காட்டுவார். புத்தகம் சொல்வதை தவிர இவருக்கு என்று தனியாக சிந்தனை இருக்கிறதா என நமக்கு தோன்றும்.
           அவருக்கு என்று அல்ல.. உண்மையில் சொந்த சிந்தனை , சுய சிந்தனை என்று ஒன்று கிடையாது. எல்லா சிந்தனையுமே ஏதாவது ஒரு அச்சில் வார்க்க்கப்பட்டதுதான் . ( பெரியார் பாசறையில் வளர்ந்தவர்கள், கடவுள் இல்லை என நம்புவார்கள்.. ஓர் ஆன்மீக சூழ்  நிலையில் வளர்பவர்கள் , கடவுள் இருக்கிறார் என நம்புவார்கள்.. இரு தரப்புமே தாம் சுய சிந்தனையாளர்கள் என்றுதான் நினைத்துக்க்கொள்வார்கள் )
          நம் சுற்றுப்புறமே நம் சிந்தனையை உருவாக்குகிறது.. எனவே சுதந்திரமான சிந்தனை என்று ஒன்று கிடையாது.. சிந்தனை நமக்கு தெளிவையும் அளிக்காது.

         வந்து இருந்தவர் கற்பதில் ஆர்வம் மிக்கவர் . அறிவுசுமையை சுமந்து கொண்டு இருந்தார். சமஸ்கிருத மொழியில் உற்சாகமாக பேச ஆரம்பித்தார். கேட்பவருக்கு அது புரியுமா இல்லையா என்றெல்லாம் கவலையே படவில்லை..
               தான் பேசியது எதுவும் புரியவில்லை என்பது கொஞ்ச நேரம் கழித்துதான் அவருக்கு தெரிந்தது,, எனக்கு அந்த மொழி தெரியாது என்ற தகவல் அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது
        “ உங்கள் சொற்பொழிவை கேட்டு இருக்கிறேன். சம்ஸ்கிருதத்தில் வல்லவனாக இருக்கும் ஒருவர்தான் அப்படி பேச முடியும். அல்லது அதன் மொழி பெயர்ப்பையாவது நீங்கள் படித்து இருக்க் வேண்டும் “
   மத புத்தகங்கள், ஆன்மீகம், மனவியல். தத்துவம் என எதுவும் படித்ததில்லை என்று சொன்னதை அவரால் நம்பவே முடியவில்லை.
           படிப்புக்கு நாம் இவ்வளவு தூரம் முக்கியத்துவம் கொடுப்பது வினோதம்தான். அறிவு ஜீவிகள் என்பவர்கள் ஒரு டேப் ரிக்கார்டர்கள் போல இருக்கிறார்கள்.. என்ன ரிக்கார்ட் ஆனதோ அதை ஒப்பித்தபடி இருக்கின்றனர் ( என்கவுண்டர் விவகாரத்தில், உணர்வு பூர்வ விபரங்கள் எதையும் புரிந்து கொள்ளாமல் , மனித உரிமை , சட்டம், லா பாயிண்ட் என இந்த அறிவு ஜீவீகள் உளறியதை , இங்கே நினைத்து பார்க்கலாம் ) 
இவர்களுக்கு அறிவு முக்கியம்.. அனுபவம் முக்கியமில்லை. ஒரு விஷ்யத்தை பற்றிய அறிவு அந்த விஷ்யததை நேரடியாக உணர்வதை தடுக்கிறது. அறிவு என்பது கற்காத ஒருவனை ஏங்க வைக்கிறது.. கற்றவனுக்கு மரியாதையை தருகிறது .
அறிவு என்பது ஒரு வகை போதை. இது புரிதலக்கு அழைத்து செல்லாது..
படிப்பதன் மூலம் அறிவை வளர்க்கலாம். ஞானத்தை ,புத்தியை அல்ல.
ஞானத்தை வாங்கும் கரன்சியாக அறிவை நினைக்க முடியாது. சிந்தித்தல் என்பது அறிதலை தடுக்கும். நம்பிக்கை , கருத்து , அறிவு போன்றவை ஞானத்துக்கு தடைக்கல் 
( கடவுள் இருக்கிறார் அல்லது இல்லை என முன்பே ஒரு நம்பிக்கை இருந்தால், உண்மை நிலை என்ன என்பது புரியாது.. ஒரு மனிதன் நல்லவனா , இல்லையா என்பதை திறந்த மனத்துடன் அணுகினால்தான் கண்டுபிடிக்க முடியும் ) 
எண்ணங்களால் நிறைந்த மனம் ஒரு பிரச்சினையை சரியாக கணிக்க முடியாது. சிந்தனை இருக்கும் வரை , அது தன்னை பற்றியேதான் நினைக்கும்.. எனவே புதிய கருத்துக்கள் நுழைய வாய்ப்பில்லை.  ( நான் நாத்திகவாதி, ஆன்மீகவாதி , அந்த இய்க்கத்தை சேர்ந்தவன், இவர் ரசிகன் என்றெல்லாம் சொல்லி கொள்வதில் ஒருவகை ஆறுதல் கிடைக்கும். ஆனால் இது புரிதலை தடுக்கும் )
மனம் தான் நினைப்பதை உணமையாக்கும்… கடவுள் இல்லை என    நினைத்தால் , இல்லை என அதனால் நிருபிக்க முடியும். இருக்கிறார் என நினைத்தால் அதையும் நிரூபிக்க முடியும். பறக்க முடியும் என நினைத்தால் , அதற்கான விமானத்தை கண்டுபிடிக்கமுடியும்… கெட்டதையே நினைத்து கெட்டவனாகவும் முடியும்…
   “ சரி சார்..   ஆனால் கண்ட விஷ்யங்களை பற்றி நினைப்பதை விட , கடவுள் பற்றி நினைப்பது நல்லதுதானே “ 
              நாம் என்ன நினைக்கிறோமோ அதுதான் நாம் . எதை நினைக்கிறோம் என்பது முக்கியம் அல்ல.. அது எப்படி செய்ல்படுகிறது என கவனித்தலே முக்கியம். 
கடவுளை பற்றி நினைக்கலாம் அல்லது கீழ்த்தரமாக எதையாவது நினைக்கலாம். நினைப்புக்கேற்ப விளைவுகள் உண்டு.
ஆனால் இரண்டிலுமே சிந்தனைதான் ஆதிக்கம் செலுத்துகிறது. தன்னையே அது முன் நிறுத்துகிறது ஆகவே கடவுளை பற்றி நினைத்தாலும், கீழ்த்தரமாக எதையாவது நினைத்தாலும் அடிப்படையில் இரண்டுமே ஒன்றுதான்.. ( விளைவுகள் வேறு வேறாக இருக்கும் என்பது வேறு விஷ்யம் ) .
இப்படி ஆதிக்கம் செலுத்தும் மனதின் செயல்முறையை புரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு சம்பவம் நடக்கிறது . அதை நாம் எப்படி எதிர்கொண்டோம் என்பதுதான் நம் அனுப்வம்.. இந்த அனுபவம் வார்த்தை வடிவில் மாறி மனதில் நினைவாக பதிகிறது . இப்போது நமக்கு கிடைக்கும் அனுபவங்களை வைத்து இந்த நினைவு , மனதில் மாற்றம் அடைந்து பதிகிறது..இந்த அடிப்படையில் செயல்படுவதைத்தான் சிந்தனை என்கிறோம் . (அதாவது நிகழ்காலத்தை , கடந்த காலத்தை வைத்து சந்திக்க முயல்கிறோம் )
“  அவ்வள்வுதானா? ஆழந்த சிந்தனை, புத்தாக்க சிந்தனை , மாற்று சிந்தனை என்றெல்லாம் இல்லையா.. எல்லாமே டேப் ரிக்கார்ட் மாதிரி, மெம்ரி அடிப்படையிலான் செயல்தானா ? “
புனித சிந்தனை, அறிவு ஜீவி சிந்தனை என்றெல்லாம் மனம் தன்னை தானே ஏமாற்றி கொள்ளும் , ஆனால் எல்லாவர்ருக்கும் அடிப்படை ஒன்றுதான் . உயர்ந்த விஷ்யத்தை பேசுவதால் உயர்ந்தவன் என்பது இல்லை.. உய்ர்ந்த விஷ்யங்கள் மனதில் பதிந்து இருக்கின்றன என்பதே இதன் பொருள். இதற்கு காரணம் நம் ச்சுழ் நிலை ( என்வே யாரையும் இளக்காரமாக நினைக்க கூடாது )
“ எண்ணங்களுக்கு அப்பால்  நான் எப்படி செல்வது ?:
  தவறான கேள்வி.. எண்ணங்களுக்கு அப்பால் நாம் செல்ல முடியாது, ”நான்” என்பது எண்ணங்களினால் உருவாக்கப்பட்ட ஒன்றுதான்..  எண்ணம் இல்லை என்றால் நான் இல்லை.. எனவே எண்ணத்திற்கு அப்பாற்பட்ட நிலைக்கு “ நான் “ செல்ல முடியாது.
எண்ணம் என்பது முடிந்த நிலையில் உண்மை தன்னை வெளிக்காட்டும் . இதை படித்து தெரிந்து கொள்ள முடியாது 
” அப்படி என்றால் உண்மையை எப்படித்தான் கண்டு பிடிப்பது? “
கண்டு பிடிக்க முடியாது.
கண்டு பிடிக்க முயற்சி செய்தால் , நாம் கண்டு பிடிக்க விரும்புவதே, நம் கண் முன் நிற்கும் . அது உண்மையாக இருக்காது, 
எந்த கட்டுபாடும் , முயற்சியும் இன்றி மனம் அடங்கிய நிலையில் உண்மை தன்னை வெளிக்காட்டும்,. எந்த விருப்பு வெறுப்பும் இன்றி இந்த உண்மையை பார்த்த்லே விடுதலைக்கு வழி..
உண்மையே நம்மை விடுவிக்கும்.. முயற்சி அல்ல

ஜே கிருஷ்ணமூர்த்தி

Philosopher J. Krishnamurti
அது எனது உயர்நிலைப் பள்ளியின் இறுதி நாளொன்றில் நடந்தது. இலங்கையின் திருக்கோண மலையிலிருந்த ராமக்கிருஷ்ண மிஷன் பாடசாலையில் படிப்புக்குப் புறம்பான விஷயங்களைப் பகிர்ந்து கொள்கிற ஒரு ஆசிரியரிடமிருந்து நான், ஜே.கிருஷ்ணமூர்த்தயின் The First and Last Freedom என்ற நூலை இரவல் வாங்கினேன். அதுவரை நான் படித்த அதற்குப் பின்பும் நான் படிக்கவிருந்த ஏராளமான நூலாசிரியாகளிலுள் இந்த நூலாசிரியரல்லாத ஒருவரது வாசகங்கள் எவ்வளவுக்கு என்னைச் சல்லடையிடப் போகின்றன என்று நான் அப்போது சந்தேகிக்கவில்லை.
நூலை எனக்குத் தந்தவர் ஒரு மார்க்ஸீயவாதியெனினும் ராமக்கிருஷ்ண மிஷனின் அடிப்படைகளில் மதிப்புக் கொண்டவர். ஏற்கனவே அவரிடம் மார்க்ஸீயம், கம்யூனிஸம் பற்றி சில பல உபதேசங்களைப் பெற்றிருக்கிறேன். எனது சில பல நண்பர்கள் அவர் மூலம் ஏற்கனவே கம்யூனிஸ போதம் பெற்றுவட்டார்கள். நான் அவரிடம் ஏற்கனவே கம்யூனிஸ போதம் பெற்றுவிட்டார்கள். நான் அவரிடம் கேட்டேன். 'மனிதனை உந்துகிற உண்மையான வேட்கையைப் பற்றி மார்க்ஸ் என்ன சொல்கிறார்?'
மாக்ஸியத்தை நான் பின்பு கற்றறிந்ததுக்கும் அவர் சொன்ன பதிலுக்கும் நிறையத் தொடர்பு உண்டு. ஆனால் இலங்கையிலும் இங்கும் நான் சந்தித்த எத்தனையோ மார்க்ஸிஸ்டுகளிடம் நான் இந்தக் கேள்வியைக் கேட்டபோது, பதில் தெரியாமல் விழித்திருக்கிறார்கள். அவர் சொன்ன பதில்: மனிதனை உந்தும் வேட்கை பொருளாதார வேட்கை என்பதுதான் மார்க்ஸின் கோட்பாடு.'
மார்க்ஸிற்கும் எனக்கும் ஒத்துவராது போலிருக்கிறதே என்று நினைத்த நான் இன்னொரு நாள் கேட்டேன்:'மனித லட்சியம் ஆன்ம ஈடெற்றமாக, உண்மையை அறிந்து விடுதலை பெறுவதாக இருக்க வேண்டும் என்பதுபற்றி உங்களுக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால் கம்யூனிஸ முறைகளுக்கும் இந்த லட்சியத்துக்கும் சம்பந்தமில்லையே!
கம்யூனிறும் ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமூகத்தைச் சிருஷ்டிக்கும். இந்த சமூகத்தை சிருஷ்டித்த பிறகு நாம் ஆன்ம ஈடேற்றத்துக்கான முயற்சிகளில் இறங்கத் தடையிராது.'
இதில் நான் சிரித்துவிட்டேன். ஆசிரியரும் சேர்ந்து சிரித்தார். இதற்குப் பின்புதனா அவரிடமிருந்து ஜே கிருஷ்ணமூர்த்தியின் மேற்படி நூல் கிடைத்தது. அத்துடன், நூலைத் திரும்பக் கேட்காமல் என்னிடமே விட்டுவிட்டார். இப்படியும் ஒரு மார்க்ஸிஸ்டு.
ஆனால் வேறு பையன்கள், முக்கிய உதாரணமாக எனது சீனியர் பையன் ஒருவன், 'சோவியத் ரஷ்யாவில் கார் பண்ணுகிறான். ஒரு கார் இந்த லைட்போஸ்டிலிருந்து அந்த லைட்போஸ்ட் வரை அவ்வளவு நீளம்,' என்று பேசும் ரகமான கம்யூனிஸ்டுகளாகி விட்டார்கள். இத்தகையர்களிடம் பள்ளி நாட்களில், அவ்வளவு நீளமான கார் சந்தில் திரும்புவது எப்படி?' என்று கேட்கும் ரகமானவனாக நான் மாறினேன். வளர்ந்த பிறகு எனது எழுத்தியக்கமும் எழுத்துலகத்து கம்யூனிஸ்டுகளின் அபத்தவாதங்களை இதே விதமாக விசாரிக்கும் இயக்கமாக வளர்ந்தது என்பது ஒருபுறமிக்க, அன்று பள்ளி நாட்களில் என்னைச் சுற்றி முளைத்த குட்டிக் கம்யூனிஸ்டுகள் ஒவ்வொருவருமே பணக்காரக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். எனது குடும்பம் ஏழைக் குடும்பம் என்படு மட்டுமல்ல, ஆழ்ந்த சிக்கல்களும் வன்முறை நிறைந்தவர்களது உபாதைகளும் நிறைந்த சூழலைக் கொண்டிருந்தது. இருப்பினும் இதனூடே எனது தாயாரின் நுட்பமான குணாம்சங்கள் பரிகார அம்சமாக விளங்கி இருக்கின்றன. மார்க்ஸீயக் கோட்பாடுகளில் ஏதும் ஆழமான இருந்திருந்தால் நான்தான் கருவிலே திருவுடைய கம்யூனிஸ்டாகி இருக்க வேண்டும்.
பள்ளிக்கூடத்துக் குட்டிக் கம்யூனிஸ்டுகளையும், தொடர்ந்து எழுத்துலகத்தில் தெரிய வந்த கம்யூனிஸ்டுகளையும் தூக்கிச் சாப்பிடக் கூடிய கம்யூனிஸ்டாகி இருக்க வேண்டும். எனது சூழலை பொருளாதாரக் கோட்பாட்டின் மூலம் சந்திப்பதற்கான தண்டால், பஸ்கிகளில் நான் ஈடுபட்டிருக்க வேண்டும். ஆனால் அன்றும் சரி, இன்றும் சரி, கம்யூனிஸ உபாஸனையை நான் அதன் கோட்பாடுகளின் மூலம் மட்டுமின்றி அதனை உபாஸிப்பவர்களை அவதானிப்பதன் மூலமும் கூடத்தான் கணித்திருக்கிறேன். வன்முறைக் குணத்தை மனிதாபிமானம் என்று மாய்மலம் பண்ணுகிறவர்களும், அப்பட்டமான சுயலாப வேட்கைகளை சோஷலிஸ லட்சியம் என்று திருகுதாளம் செய்கிறவர்களும், தரமற்ற எழுத்தை முற்போக்குப் படைப்பு என்று திரித்துக் காட்டுகிறவர்களும் மலிவதற்கு கம்யூனிஸ இயக்கம் இடம் தந்திருக்கிறது. இதன் விளைவாக, இந்த இயக்கத்தின் வழிமுறைகளையே பிரதிபலிக்கிற எதிர் இயக்கங்கள் ஜனித்தன. பொது வாழ்வும் கலாசார வாழ்வும் நீதியுணர்வு செம்மை, தரிசனப் பண்பு ஆகியவை ஏதுமற்ற கீழ்மைக் குணங்களின் பலமாகின.
என்னுடன் சேர்ந்த அன்று தமிழுலகின் கம்யூனிஸ இயக்கங்களில் உள்ள குறைபாடுகளைத் தங்கள் உபாயங்களைத் தாக்கியவர்களது இயக்கங்கள் இன்று அதே குறைபாடுகளைத் தங்கள் உபாயங்களாகக் கொண்டுவிட்டன. இதன் காரணம் ஜீவிதப் போராட்ட நியதிகளுக்கு இவை ஆட்பட்டவைதான். 'உயிரோடு இருப்பதற்காக எதுவும் செய்யலாம்,' என்ற ரகமான மிருக நோக்கம் உள்ளவர்கள் நீதி, செம்மை, தரிசனம், ஆகிய நுண்ணிய மனித நோக்கங்கள் உள்ளவர்களாக தங்களை ஸ்தாபிக்க முயன்றமைதான். இந்நிலையின் விடம்பனம், சமரஸங்களாகவும் ஸ்தாபன வலுவிற்கு முக்கியத்துவம் தருவதன் மூலமும் இன்று வெளிப்பட்டு பவனி வந்து கொண்டிருக்கிறது.
இன்றைய சீரிய தமிழிலக்கிய உலகில் எனது குரலுக்கு மேற்படி விடம்பனத்திலிருந்து மாறுபட்ட ஒரு தொனி இருப்பதை உணர்கிறவர்கள் உள்ளனர். இந்தத் தொனியைக் காப்பாற்றிய எனது அந்தரங்க சக்தி ஜே கிருஷ்ணமூர்த்தியால் போஷிக்கப்பட்டமையை அவர்கள் நிச்சயம் அறிய வேண்டும். பிரசுர சாதனங்கள் மூலம் நான் வெளிப்படு முன்பே ஜே கிருஷ்ணமூர்த்தியின் The First and Last Freedom எனக்குக் கிடைத்தமை இதில் முக்கிய விஷயமாகிறது. இருந்தும் நான் எனது கட்டுரைகளில் அவரது பெயரைக் குறிக்பிடாமல் நீண்ட காலங்களாகத் தவிர்த்து வந்திருக்கிறேன். இதன் காரணம் நான் அவரைப் பின்பற்றியவன் அல்ல என்பதுதான். எனக்கு இயற்கையாக இருந்த சில விசேஷ குணங்கள் உண்மையில் காப்பாற்றப்பட வேண்டிய அபூர்வத் தன்மை உள்ளவை என்பதுதான் முதன்மையாக அவரது நூல்களிலிருந்த நான் பெற்ற போஷனை.
இயற்கை அழகில் லயித்தல், எனது சுபாவ சக்திக்கும் விருப்பத்துக்கும் ஏற்ற கலையுலகை நாடதல் என்பவை இந்தக் குணங்களாகும். சூழலின் அழுத்தமும் ஆலோசகர்களும் என்னைத் திருத்த முயன்றவர்களும் இந்த எனது போக்குகளை பலவீனப்படுத்தி விடாதபடி அன்று உதவியவர் ஜே கிருஷ்ணமூர்த்திதான். இதற்கும் மேலே போய், பால்ய வயதில் சமூக மரபுகளினது கெடுபிடிகளின் விளைவாகப் பிறக்கக்கூடிய குற்ற உணர்வு என்ற விபரீதமான பின்னணி எதுவும் பிறந்து விடாமலும் அவரது போஷனை காத்திருக்கிறது. 'இது நல்லது, அது கெட்டது' என்ற பிளவுபட்ட ம஧னொபாவத்தின் கொடுங்கோல் என் மனசில் எப்போதுமே வலிமையற்றுத்தான் இயங்கி வந்திருக்கிறது. இதற்கும் ஜே.கிருஷ்ணமூர்த்தியை நான் காரணம் காட்டலாம்.
உண்மையைத் தேடுதல், ஆத்மானுபவத்தை உத்தேசித்தல் அகியவற்றை முக்கியமாக்குகிறபோது, உலகையும் இயற்கையையும் சுபாவசக்திகளையும் இதன் விளைவாகச் செயலூக்கத்தையும் மனம் முக்கியமாகக் கொள்வதில்லை. இவற்றுக்கு முக்கியத்துவம் தராவிட்டால் மனசின் நுட்பமான உணர்வுகள் மழுங்கிவிடும். இந்த ஆபத்து எனக்கு ஏற்படாதவாறு ஜே கிருஷ்ணமூர்த்திதான் காத்திருக்கிறார். ஏனெனில் எழுத்துலகினுள் நுழையும் தறுவாயில் சந்நியாஸம் வாங்கிக் கொள்கிற நோக்கமும் எனக்கு இருந்திருக்கிறது. சந்நியாஸ மதிப்பீடுகள் உணர்வுகளை மழுங்க அடித்துக் கொன்றுவிடுகிற குணத்தைக் கொண்டவை. இது விஷயமாக ஜே கிருஷ்ணமூர்த்தி தீவிரமான கருத்துக்களை வெளியிட்டடிருக்கிறார். உணர்வுகளைக் கொல்கிற மத மரபுகளையும், அனுஷ்டானங்களையும், மதிப்பீடுகளையும் மிகுந்த வலிமையுடன் சாடி நொறுக்கிவிடுகிற சக்தி அவருடைய கருத்துக்களுக்கு உண்டு.
உணர்வின் பரிபூர்ணமான சுதந்திர நிலையிலேயே அது தனது குழந்தைமைக்குத் திரும்ப முடியும். விருப்புமற்று வெறுப்பு மற்ற புத்துணர்வே இந்த குழந்தமை. இந்தப் புத்துணர்வுதான் உள்ளதை உள்ளபடி தரிசிக்க உறுதுணையாகும். உணர்வுக்கு மரபுகள் இடும் தளைகள், உள்ளதை உள்ளபடி தரிசிக்க உதவாதவை. இந்த மரபு பழையதோ, புதியதோ என்பதல்ல பிரச்னை. உள்ளது என்பது இப்போது மனம் கொள்ளும் தாகங்களும் எதிர்ப்புகளும் அனுதாபங்களும்தான். இந்நிலையில் உழன்றபடியே இதைத் தாண்டி உள்ள ஏதோ ஒன்றை லட்சியமாகக் கொள்வதென்பது இப்போது 'உள்ளது' எதுவோ அதனை தரிசிப்பதனின்றும் தப்புவதாகிவிடும். இப்போது உள்ளது தாகம். எவ்வித முன்னபிப்பிராயமும் அற்ற பரிவுடன் மெளனமாக இதைப் பார்த்தால்தான் முக்கியமானது. இந்தப் பார்வையில் நிச்சலன நிலை மட்டும் உண்டு. அதாவது பார்க்கப்பட்டதை விரும்பாலும் வெறுக்காமலும் அது இத்தகையது என்று சிந்திக்காமலும் 'சும்மா' பார்ப்பதே இது. மரபு வசப்பட்ட உள்ளம், அரசியல் ரீதியான உள்ளம் எதுவும் பார்க்கப்பட்ட தாகத்தினை, ஆராயவோ அபிப்பிராயம் சொல்லவோ ஏற்கவோ மறுக்கவோதான் செய்யுமே அன்றி, சும்மா பார்த்திருக்காது. எனவே தாகங்கள் மேலும் சலனங்களாகத் தொடர்கின்றன. மனசின் சலனம் என்பது மரபினாலும் பழக்கத்தினாலும் சூழலினாலும் உருவாக்கப்பட்ட மனக் கட்டமைப்புகளின் விளைவுதான். 'உண்மை' என்ற ஏதோ ஒன்றை லட்சியமாக்குகிறபோதும் கூட பழைய அல்லது புதிய கட்டமைப்பு ஒன்றுக்குத்தான் மனம் வசப்படுகிறது. நேற்று அனுபவித்ததையே மீண்டும் மனம் அசைபோடுகிறபோதுகூட, நாம் நமக்கு நாமே உருவாக்கிய ஒரு மனக் கட்டமைப்புக்கு வசப்படுகிறாம். இந்த அமைப்பைக் கொண்டு இப்போது எழும் மனப் பிரச்னையான தாகம், கோபம் முதலியவற்றைச் சந்திக்கிறோம். இது குழந்தைமையுடன் தன்னைத்தானே பார்ப்பதாகாது.
ஜே.கிருஷ்ணமூர்த்தியின் இந்த அணுகுமறை ஒரு மார்க்கமல்ல. ஏனெனில் 'உண்மை என்பது மார்க்கங்களற்றது,' என்பதே அவரது அடிப்படைச் செய்தி. மேலே சொல்லப்பட்டிருக்பதன் தாத்பர்யம் இதுதான். இதனை அவர் எண்ணற்ற கோணங்களில் இருந்து வெளிப்படுத்தி உள்ளார்.
சரி, இப்படி தனது தாகங்கள் முதலியவற்றை அவதானிப்பதால் என்ன லாபம்?
இந்தக் கேள்வியே தாகங்களை அவற்றின் தளத்தில் ஒரு பிரச்னையாகக் காணாத மனசில்தான் ஜனிக்கும். தாகங்களை பிரச்னைகளாக, அவதானத்துக்குரிய இயற்கை வடிவுகளாகக் காண வேண்டுமானால் மனசிற்கு மென்மையும் வீரியமும் இருந்ததாக வேண்டும. தாகங்களை அவதானிப்பதால் எதோ லாபம் கிடைக்கும் என்று புறப்பட்டால், அந்த லாபத்தைப் பற்றிய தாகமாக மற்றைய தாகங்கள் மாற்றியமைக்கப்படும். தாகம் என்ற மனநிலை இவ்விதமாக தற்காப்படைந்த விடும். அந்த ஏதோ ஒரு லாபத்துக்கான தாகம் என்ற நிலையில் மனசின் சுகதுக்கங்களும் விருப்பு வெறுப்புகளும் அமையும். இதுவே உலகைப் பிளவுபடுத்தும் உன்னத லட்சியங்களினது மோதல்களாக வடிவெடுக்கிறது.
இதனால்தான் 'உண்மைக்கு மார்க்கம் இல்லை' என்கிறார் ஜே.கிருஷ்ணமூர்த்தி. ஏனெனில் மார்க்கம் ஒரு லட்சியத்திற்குச் செல்லும் பாதையாகும். லட்சியமாகக் கொள்ளப்படும் எதுவும், மனசினது தாகம் பூணும் வெளிவேஷம்தான். லட்சியத்தை விட்டுவிட்டால் தாகம் தாகமாகவே நிற்கும். 'சிலுவைப் போர்' என்பது லட்சியமாக உருமாற்றப்பட்ட வெறும் போர்தான். இதில் சிலுவை என்ற லட்சியாம்சத்தை அகற்றினால்தான் இது வெறும் போர் என்று புலனாகும். இதே போன்று உலக சரித்திரத்தில் எண்ணற்ற ரணகளங்களாக லட்சியம் நியாயமடைந்துள்ளது. இந்த இயக்கத்தின் சுனை, ஒவ்வொரு தனிமனித உள்ளமுமே என்கிறார் ஜே.கிருஷ்ணமூர்த்தி. இதனால்தான் தனது தாகங்களையும் விருப்பு வெறுப்புகளையும் அவதானிப்பதால் என்ன லாபம் என்ற கேள்வி பாரதூரமான அளவுக்குத் தவறானது. இங்கேதான் குழந்தைமையுடன் எவ்வித லாபநோக்குமற்று தன்னைத்தானே அவதானிப்பது என்பது விரிவடையும். இவ்விதம் தன்னைத் தானே அவதானிப்பதென்பதும், இயற்கையை உலகை, வாழ்வை அவதானிப்பதுவும் ஒரே கதியில் நிகழ்பவை.
ஜே.கிருஷ்ணமூர்த்தி முதன்மையாக இயற்கையை அவதானிக்கும் கலையினையே தமது செய்திக்கு அடித்தளமாக்குகிறார். 'உண்மையைத் தேடி' அவரிடம் போகிறவர்கள் இதைப் பெரும்பாலும் உணர்வதில்லை. ஆனால் இயற்கையுடன் கொள்ளும் உறவு, ஒரு வகையில் அந்தரங்கத் தளம் ஒன்றில் ஜே.கிருஷ்ணமூர்த்தியினது விகாஸம் ஒன்றுடனேயே கொள்ளும் உறவாகக் கொள்ளத் தக்கதுதான். அவருடன் எவ்வளவுக்கு ஒருவர் நெருங்கிப் பழகி இருந்தாலும் சரி இயற்கையுடன் பழகாதவராயிருந்தால் அந்த ஒருவர் ஜே.கிருஷ்ணமூர்த்தியுடனும் உறவு பூணவில்லை என்றதான் ஆகும்.
நான் ஜே.கிருஷ்ணமூர்த்தியை 1970 - 71 வாக்கில் ஒரு சில நிமிஷங்கள் சென்னையில் சந்தித்துப் பேசி இருக்கிறேன். அவருடன் அதிகம் பழகுவது முக்கியமற்ற சில்லறை விஷயமாகத்தான் எனக்குத் தோன்றி வந்திருக்கிறது. இருந்தும், நான் என்னை அவதானிக்கும் கலையில் ஈடுபட்டமையிலேற்பட்ட வீரிய ஏற்ற இறக்கங்களுக்கேற்ப அவருடன் எனது உறவும் பல்வேறு ரஸ பேதங்களைக் காட்டி வந்திருக்கிறது. 'பிறருக்கும் எனக்கும் இடையே யாரும் வர முடியாது,' என்று அவர் உறுதியாக்க கூறுவதனை நான் இவ்விடத்தில் ஸ்தாபிக்க விரும்புகிறேன். 'உண்மையான ஜே.கிருஷ்ணமூர்த்தி, உலகப்பிரசித்தி பெற்ற ஒரு சரீர வடிவம் அல்ல' என்பதை உணர்வது இதற்கு அவசியம். நமது கவனம் விழாத திசையில் தனது கவனத்தைச் செலுத்துவதன் மூலம் நம்முடனேயே உறவு கொள்ள நாடுகிற ஒரு அபூர்வ சக்தி என்றுதான் அத்தகையவரைக் கொள்ள வேண்டும். இதை உணர்கிறவருக்கும் அவருக்குமிடையில் எவரும் வரமுடியாதுதான்.
(ஜனவரி - மார்ச்சு 1991ல் நவீன விருட்சம் இதழில் பிரசுரமான கட்டுரை)