Monday, January 7, 2013

இந்த நூற்றாண்டின் சிறந்த மனிதராக – Man of the Millenium – இவரை தேர்ந்தெடுத்து

He is the first person in the world to spend his entire earnings for a social cause. In recognition to his service, (UNO) United Nations Organisation adjudged him as one of the Outstanding People of the 20th Century

விந்தை மனிதர் - பாலம் கல்யாண சுந்தரம் (Palam Kalyanasundaram)

சமீபத்தில் கேள்வியுற்ற, விந்தை மனிதர் - பாலம் கல்யாண சுந்தரம்.

வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாரின் மனம்போல தேவைப்படுவோருக்கு தேடிச் சென்று உதவுவதில், தான் சம்பாதித்த பணத்தை மற்றவருக்கு கொடுத்து உதவும் "தர்மவான்" திரு. பாலம் கல்யாணசுந்தரம் அவர்களைப் பற்றி தெரிந்து கொள்ள போகிறோம். இவரைப் பற்றி......

இவரின் சொந்த ஊர் ஏர்வாடியில் இருந்து எட்டு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் கருவேலங்குளம். இவரது தந்தை பெயர் பால்வண்ணன். அந்த ஊர் மக்களின் நாட்டாமை. இவர்

* "
பாலம் ஐயா" அவர்கள் நெல்லை மாவட்டத்துக்காரர். ஸ்ரீவைகுண்டம் குமர குருபரர் கலைக்கல்லூரியில் நூலகராக பணியாற்றியவர்.

*
கற்பனை செய்துகூட பார்க்கவியலாத கனவு மனிதராக காணப்படுகிறார்.

*
தனக்கு வந்த பென்ஷன் தொகை 11 லட்சம் ரூபாயை அப்படியே குழந்தைகள் நல நலநிதிக்காக தந்தவர்.

அமெரிக்கா வழங்கிய 30 கோடி ரூபாயை உலக குழந்தைகள் நலனுக்காக கொடுத்தவர்.

*
ஓட்டல் ஒன்றில் ஊழியராக வேலை செய்து அதன் வருமானத்தை மற்ற நற்பணிகளுக்காக கொடுத்தவர்.

*
சூப்பர் ஸ்டார் ரஜினி இவர் நற்பண்புகளை கண்டு "இவரை தந்தையாக" தத்து எடுத்து வீட்டில் வைத்திருந்தார். தன்னை சந்திக்க வரும் அறிஞர் பெருமக்களை சுதந்திரமாக சந்திக்க முடியவில்லை என்று ஒரு சிறிய அறையில் தங்கி உள்ளார்.

இவருடைய பொது சேவைகள்

1)
ஏழை எளிய மாணவர்களை தத்து எடுத்து கொள்ளுதல்

2)
மாணவ மாணவியர்களின் கல்வி வளர்ச்சிக்கு சீருடை, நோட்டு புத்தகம் வழங்குதல்

3) 10
மற்றும் பிளஸ் 2 பொது தேர்வில் மாநில அளவில் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெறும் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு பரிசு வழங்குதல்.

4)
பள்ளியில் ஒவ்வொரு வகுப்பிலும் நல் ஒழுக்கம், பொது அறிவு, அதிக மதிப்பெண் ஆகியவற்றுடன் தேர்வு அடையும் மாணவர்களுக்கு பரிசு வழங்குதல்.

பாலம் ஐயா அவர்கள் உரை: - (அல்லது வேண்டுகோள்)

தமிழக அரசு ஊழியர்கள் நிலுவை தொகை பெறுவோர் தொகை 1150 கோடி. தங்களது நிலுவை தொகையினை அரசு வழங்கும்போது அவர்கள் புதிய சம்பளத்தில் ஒரு ரூபாய்க்கு ஒரு பைசா அளித்தாலே ஒரு ஆண்டுக்கு ரூ. 3,000 கோடி கிடைக்கும்.

மத்திய அரசு 6வது ஊதியக்குழு அமுலானது அவர்களும் 17 சதவீதம் கொடுத்தாலல் ரூ. 4,000 கோடி கிடைக்கும்.

இந்த 3000 கோடியை, மக்கள் வரிபணத்தின் மூலம்தான் அரசு ஊதியம் மற்றும் நிலுவை தொகை அளிக்கிறது. வரி செலுத்தும் கோடிக்கணக்கான ஏழை மக்கள் பிள்ளைகள் படிக்க நமது வருவாயில் ஒரு சிறு பகுதியை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாமே, இதை முழுவதும் கல்விக்கு பயன்படுத்தினால் அனைவருக்கும் ஏற்ற தாழ்வு இல்லா கல்வி கிடைக்கும்.

கல்வியில் ஒரு நாடு தன்னிறைவு பெற்றால் எல்லா வளங்களும்தானே வந்து சேரும். இது அரசு ஊழியர்களின் காதில் ஏறுமா?

இவரை பற்றி அறிஞர்கள் கூறும் கருத்தை தெரிந்து கொள்ளலாமா?

மாண்புமிகு டாக்டர் சா. ஜெகத்ரட்சன் எம்.., டி. லிட்.,

பாலம் ஐயா அவர்களை போல் ஒரு மனிதரை காண்பது அரிது. அவர் வாழும் காலத்தில் நாமும் வாழ்கிறோம் என்று பெருமை கொள்கிறேன். சாதனையாளர்களின் சாதனையாளர் அவர்.

பாரத ரத்னா .பி. ஜே. அப்துல்கலாம், முன்னாள் குடியரசு தலைவர்

தன்னலம் இல்லாமல் வாழ்வது சிறப்பான பெருவாழ்வாகும். இறைவன் பா. கல்யாண சுந்தரத்திற்கு அந்த அரும்பெறும் வாழ்க்கையை கொடுத்திருக்கிறார். அவர் நிழலில் பலர் சிறப்படைந்துள்ளனர்.

பெருந்தலைவர் முன்னாள் முதல்வர் காமராஜர் அவர்கள் - (1-5-1963)

இந்தியாவிலே தேசிய பாதுகாப்பு நிதிக்கு நன்கொடை அளித்த முதல் மாணவன் என்ற வகையில் நமது நாட்டின் பாதுகாப்பு நிதிக்கு தங்கம் வழங்கிய மாணவர் கல்யாண சுந்தரம் தமிழ்நாட்டுக்கே பெருமை சேர்த்துள்ளார்.

ஆளுநர் பாத்திமா பீவி (முன்னாள் தமிழக ஆளுநர்) (15.8.99)

நீதி மிகுந்த உங்கள் வாழ்க்கை மக்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

தமிழக முதல்வர் கலைஞர்:-

அறிவு பரப்பும் ஆக்க பணியில் அயராது உழைக்கும் திரு கல்யாண சுந்தரனாரின் கடமை உணர்வு பாராட்டுதற்குரியது.

நீதிபதி நடராஜன் (உச்சநீதிமன்ற நீதிபதி) (ஓய்வு)

நல்ல தலைமை பண்புகளுடன் ஏராளமான இளைஞர்களையும் மாணவ மாணவிகளையும் ஒருங்கினைத்து பா. ., செய்து வரும் சேவைகள் நிச்சயம் ஒரு சமுதாய மாறுதலை எற்படுத்தும் என்பதில் அய்யமில்லை.

நீதிபதி மோகன் (உச்ச நீதிமன்ற நீதிபதி) - (ஓய்வு)

பிறப்பாலே தமிழன், தொழிலால் கொடை வள்ளல், இமயம் போன்ற உயர்ந்த உள்ளம் கொண்ட கல்யாண சுந்தரம் 21ம் நூற்றாண்டின் சாதனை சக்கரவர்த்தி என்றால் மிகையல்ல.

இப்படி பல அறிஞர் நீதியரசர்கள், அரும்பெரும் தலைவர்களால் பாராட்டு பெற்ற போதும், மிகவும் எளிமையாக, அடக்கமாக, ஊருக்கு உழைக்கும் உத்தமனாக, உயர்ந்து மற்றவருக்கு பாடமாக வாழும் பா. கல்யாண சுந்தரம் அவர்களை வாழ்த்துவோம்.


என்ன சொல்வது எப்படி சொல்வது?
என்ன சொல்வது எப்படி சொல்வது? என்னிடம் மிச்ச மீதியிருந்த அழுக்குகளை எல்லாம் துடைத்து எறிந்து என்னை மேலும் பக்குவப் படுத்திவிட்டார் இந்த மனிதர். இவருடன் பேசப் பேச சில இடங்களில் வெட்கப்பட்டேன். பல இடங்களில் வியப்பின் எல்லைக்கே சென்று கைகளை தட்டி மகிழ்ந்தேன். (அடுத்தடுத்த பதிவுகளை படிக்கும்போது அந்த இடங்களில் நீங்களும் கைதட்டுவீங்க. அப்போ புரியும் நான் சொல்வது துளியும் மிகையல்ல என்பது!)
அண்ணல் காந்தியை பற்றி ஐன்ஸ்டீன் அவர்கள் சொன்னபோது, “இப்படி ஒரு மனிதர் ரத்தமும் சதையுமாக பூமியில் வாழ்ந்தார் என்பதையே வருங்கால சந்ததியினர் நம்ப மறுப்பார்கள்” என்றார்.
அதே வார்த்தைகள் இவருக்கும் 100% பொருந்தும்.  என்ன ஒரு சின்ன திருத்தம். இவரை பற்றி கூறினால் இப்படி ஒரு மனிதர் நம்முடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார் என்று நிகழ் காலத்திலேயே நம்ப மறுப்பார்கள்.
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல். (குறள் 664)
உபதேசம் யார் வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் செய்யும் உபதேசப்படி வாழ்வது என்பது அரிதினும் அரிய குணம். இவர் வாழ்ந்து காட்டி வருகிறார்.
எளிமை என்பதற்கு பொருளாக அகராதியில் இவர் பெயரை சேர்த்துவிடலாம். அதனால் அகராதிக்கே பெருமை சேரும்.
இவரது கொடைத்தன்மை பற்றி கேள்விப்பட்ட தருணம்… கேள்விப்பட்டவர்களுக்கு தோன்றும் பாடல் இதுவாகத் தான் இருக்கும்.
*நடுத்தர குடும்பத்தில் பிறந்து மாத ஊதியம் வாங்கிய ஒருவர், தன் ஊதியம் முழுவதையுமே சமூகசேவைக்காகச் செலவழித்திருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா?
*மக்கள் வரிப் பணத்தில் அரசு தரும் சம்பளம் வாங்கிக்கொண்டு அலுவலகத்துக்கு செல்லாமல், வேறு பசையான தொழில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள் பலர் வாழும் இந்த உலகில், அரசு தரும் ஓய்வூதியம் முழுவதையுமே பொது நலனுக்காக செலவிடுகிறார் என்பது தெரியுமா?
*35 ஆண்டுகள் பணி  செய்த இவர் ஒரு நாள் ஊதியத்தை கூட தனக்காக இவர் எடுத்துக்கொள்ளவில்லை என்பது தெரியுமா?
*மாதம் ரூ.20,000/- சம்பளம் வாங்கிய போதிலும், அனைத்தையும் பொதுக் காரியங்களுக்கு கொடுத்துவிட்டு தனது வாழ்விற்கு தேவையானதை திருநெல்வேலியில் ஓட்டல் ஆர்யாஸில் மாலை நேரத்தில் சர்வராக வேலை பார்த்து சம்பாதித்துக்கொண்டவர் என்பது தெரியுமா? (ஓவராயிருக்கே…. என்று தானே நினைக்கிறீங்க ? இதுக்கு காரணத்தை அப்புறம் சொல்றேன்!)
*1969 இல் இவரது குடும்ப சொத்துக்களை பாகம் பிரித்த போது இவருக்கு கிடைத்த ரூ.5 லட்சம் மதிப்புடைய சொத்தை உடனடியாக தானம் செய்துவிட்டார். (1969ல் 5 லட்சம் என்றால் இப்போ அதன் மதிப்பு எத்தனை இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்…!)
*இவரது கண்கள் உள்ளிட்ட அனைத்து  உடலுறுப்புக்களையும் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரிக்கு தானம் கொடுத்துவிட்டார். அதுவும் 25 ஆண்டுகளுக்கு முன்பாகவே.
*பொதுவாழ்க்கைக்கு மண வாழ்க்கை இடையூறாக இருக்கக் கூடாதென்று திருமணமே செய்துகொள்ளவில்லை இவர்.
*சிறுவயதிலேயே தந்தையை இழந்தவர் இவர். தாயாரின் அரவணைப்பில் வளர்ந்தவர். தாய் தான் தமது தயாள குணத்திற்கு ஆசான் என்று தாயாரை ஆராதிப்பவர்.
*ஏழை எளிய மக்கள் படும் துன்பங்களை நேரடியாக அறிந்துகொள்ள அவர்களுடனே சுமார் 7 ஆண்டுகளுக்கும் மேல் நடை பாதை வாசியாகவே வாழ்ந்திருக்கிறார்.
*ஆந்திர புயல், குஜராத் பூகம்பம், சுனாமி உள்ளிட்ட பேரிடர்களின்போது பல லட்ச ரூபாய்களை நன்கொடையாக திரட்டி பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அளித்தவர்.
*1963 ல் இந்தியா – சீனா யுத்த நிதிக்காக காமராஜரிடம் தமது தங்கச் சங்கலியை தேசிய நிதிக்கு அளித்தவர்.
*தன் பெயருக்கு பின்னால் M.A. (Lit), M.S. (His)., M.A., (GT), B.Lib.Sc., D.G.T., D.R.T., D.M.T.I.F. & C.W.D.S. என பட்டங்களை பெற்றுள்ள இவர் அனைத்திலும் கோல்ட் மெடல் வாங்கிய முதல் மாணவர்.
*வாழ்நாள் முழுதும் தன பெயரில் ஒரு சென்ட் நிலமோ அல்லது ஒரு ஒலைக்குடியாசையோ அல்லது பணமோ இருக்கக் கூடாது என்ற கொள்கையுடையவர்.
*ஐந்தாவது ஊதியக் குழுவில் விடுபட்ட ஊதியத்தை 14 ஆண்டுகள் முன் தேதியுடன் அரசு வழங்கிய ரூ.10 லட்சத்தையும் தனது 70 வது பிறந்த நாளில் மக்களுக்கு அளித்தார்.
*ஆறாவது ஊதியக் குழுவில் பயன்பெறும் ரூ.5 லட்சத்தை ஏழைக் குழந்தைகளின் குழந்தைக்காக எழுதி வைத்துவிட்டார்.
*கோடிக்கணக்கில் அள்ளிக் கொடுத்த இவர் ஏழைகளுக்கு கிட்டாத உணவையோ அல்லது உடையையோ இருப்பிடத்தையோ பயன்படுத்தாமல் எளிய வாழ்க்கை வாழ்ந்து வருபவர்.
*இவரது ஆடை சாதாரண கதராடை தான். செருப்பு ரப்பர் செருப்பு தான்.
*தாம் கதர் உடுத்த ஆரம்பித்த காரணத்தை பற்றி கூறுகையில் : “எளிமையையும், காந்தீயம் பற்றியும் உரையாற்ற கல்லூரிகளுக்குச் சென்றுள்ளேன். மில் உடைகளுடன் எளிமையையும், காந்தியத்தையும் பற்றிப் பேசுவது என் மனத்தை உறுத்தியது. உடனேயே காதிக்கு மாறி விட்டேன்.” என்கிறார்.
*நூலகத் துறையில் இவரது சேவையை பாராட்டி நமது இந்திய அரசாங்கம் இவருக்கு “இந்தியாவின் சிறந்த லைப்ரரியன்” என்ற பட்டத்தை அளித்தது. “உலகத்து சிறந்த 10 லைப்ரரியன்களில் ஒருவர்” என்ற புகழ் பெற்றார்.
*உலக பயோகிராஃபிகல் மையம், கேம்பிரிஜ் – உலகத்தின் சிறந்த மனிதாபிமானி – என்று கெளரவித்தது.
*ஐக்கிய நாட்டுச் சபை “20-ம் நூற்றாண்டின் சிறந்த மனிதர்” என்று தேர்வு செய்து, பாராட்டியது.
இவரை சேவைகளை பற்றி கேள்விப்பட்ட அமெரிக்க நிறுவனம் ஒன்று இவரை கௌரவிக்கும் வகையில் இந்த நூற்றாண்டின் சிறந்த மனிதராக – Man of the Millenium – இவரை தேர்ந்தெடுத்து $ 6.5 Million  வழங்கியது. (சுமார் 30 கோடி ரூபாய்). அந்த நிதியை கூட அந்த விழா மேடையிலேயே சர்வதேச குழந்தைகள் நல அமைப்புக்கு நன்கொடையாக கொடுத்துவிட்டார்.
*இவர் சேவைகளை பற்றி கேள்விப்பட்ட அமெரிக்க நிறுவனம் ஒன்று இவரை கௌரவிக்கும் வகையில் இந்த நூற்றாண்டின் சிறந்த மனிதராக – Man of the Millenium – இவரை தேர்ந்தெடுத்து $ 6.5 Million  வழங்கியது. (சுமார் 30 கோடி ரூபாய்). அந்த நிதியை கூட அந்த விழா மேடையிலேயே சர்வதேச குழந்தைகள் நல அமைப்புக்கு நன்கொடையாக கொடுத்துவிட்டார்.
*சூப்பர் ஸ்டார் ரஜினி இவர் நற்பண்புகளை கேள்விப்பட்டு ஒரு விழாவில் “இவரை தந்தையாக” தத்து எடுத்து தன் வீட்டிற்கு அழைத்து சென்றுவிட்டார். அங்கு அவரால் சில மாதங்களுக்கு மேல் இருக்க முடியவில்லை. மூன்றடுக்கு பாதுகாப்பு மிகுந்த அந்த சூழல் தன்னை சந்திக்க வரும் நண்பர்களுக்கும் உதவி கோரி  வருபவர்களுக்கும் கடினமாக இருக்கிறது  என்றும் அவரது சுதந்திரமான குணத்திற்கும் எளிமைக்கும் அந்த சூழல் ஒத்துவரவில்லை என்றும் கூறி அதை அன்புடன் மறுத்து வெளியே வந்துவிட்டார். (இது பற்றிய விரிவான நெகிழ்ச்சியான தகவல்களை நம்மிடம் கூறியிருக்கிறார் இவர். அது தனிப் பதிவாக வரும்.)
இவருடைய பொது சேவைகள்:
1) ஏழை எளிய மாணவர்களை தத்து எடுத்து கொள்ளுதல்
2) மாணவ மாணவியர்களின் கல்வி வளர்ச்சிக்கு சீருடை, நோட்டு புத்தகம் வழங்குதல்
3) 10 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வில் மாநில அளவில் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெறும் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு பரிசு வழங்குதல்.
4) பள்ளியில் ஒவ்வொரு வகுப்பிலும் நல் ஒழுக்கம், பொது அறிவு, அதிக மதிப்பெண் ஆகியவற்றுடன் தேர்வு அடையும் மாணவர்களுக்கு பரிசு வழங்குதல்.
இவரின் கொள்கைகள் என இவரது விசிட்டிங் கார்டின் பின்னால் காணப்படும் வாசகங்கள் :
என்றும் இன்பமுடன் இனிது வாழ எதன் மீதும் பேராசை கொள்ளாது இருப்போம்! பத்தில் ஒன்றை தானம் செய்வோம்!!  தினமும் ஒரு உயிருக்கு நன்மை செய்வோம்!!!
பணம் மட்டுமே உலகம் என்றெண்ணி இயந்திர வாழ்க்கை நடத்திக் கொண்டிருப்பவர்களுக்கு இவரின் வாழ்க்கை ஒரு பாடம்.
இத்தனை பெருமைக்கும் புகழுக்கும் சொந்தக்காரர்… ஐயா திரு.பாலம் கலியாண சுந்தரம்.
இவரைப் பற்றி பல ஆண்டுகளுக்கு முன்பே கேள்விப்பட்டிருக்கிறேன். பத்திரிக்கைகளில் படித்திருக்கிறேன். வியந்திருக்கிறேன்.
>>ஐயா திரு.பாலம் கலியாண சுந்தரம் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருள்மிகு குமரகுருபரர் கலைக்கல்லூரியில் 35 ஆண்டுகள் நூலகராக பணிபுரிந்தார்.
>>1995 இல் ‘இந்தியாவின் சிறந்த நூலகர்’ என்கிற பட்டத்தை ‘கோவா பல்கலைக்கழகம்’ இவருக்கு வழங்கியது.
>>1996 இல் உலகின் பத்து சிறந்த நூலகர்களுள் ஒருவர் என்கிற பட்டத்தை ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் இவருக்கு வழங்கியது.
>>உச்ச நீதி மன்ற நீதிபதிகள் அடங்கிய சபை உலகின் சிறந்த பண்பாளர்களில் ஒருவர் என்ற கௌரவத்தையும் அப்போது அளித்தனர்
>>புதுமையான நூலக நூற்பட்டியை இவர் கல்லூரியிலேயே ஆறு மாத காலம் தங்கியிருந்து தயாரித்தார். அந்த ஆராய்ச்சி முடியும் வரை அவர் வீட்டிற்க்கே செல்லவில்லை. இம்முறையில் நூல்பட்டி தயாரித்தால் ஒரு நூலின் தலைப்பையும் ஆசிரியரின் பெயரையும் சொன்னால் உடனடியாக அந்த நூலின் புத்தக எண்ணை சொல்லிவிடலாம்.
>>மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் இவரது ஆராய்ச்சியை பாராட்டி அதை ஏல் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பியது. ஏல் பல்கலைக்கழக அதற்கு தகுதி சான்றிதழ் (மெரிட் சர்டிஃபிகேட்) வழங்கியதுடன் அதை கேம்ப்ரிஜ் பல்கலைக்கழகத்திற்கு வழங்கியது.
>>கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் ‘A most notable intellectual’ பட்டத்தை வழங்கியதுடன் நூலகத்துறைக்கு நோபிள் பரிசு இருந்தால் அதை பெற தகுதி இதற்க்கு உண்டு என்ற குறிப்பையும் வழங்கியது.
>>தனது குடும்பத்திற்கும் நாட்டிற்கும் மட்டுமின்றி மாத ஊதிய வர்கத்தினர் அனைவருக்கும் கௌரவத்தை தேடித் தந்தவர் பாலம் கலியாணசுந்தரம் ஐயா.
இவரை சந்தித்ததையும் இவருடன் பேசியதையும் இவரது நட்பு கிடைத்ததையும் மிகப் பெரிய பாக்கியமாக கௌரவமாக கருதுகிறேன். இவருடன் எடுத்த புகைப்படத்தை பொக்கிஷமாக கருதுகிறேன்.
இவர் ஏதோ சமூக சேவகர், அனைத்தையும் அள்ளி வழங்கிய வள்ளல் மட்டுமல்ல. மிகப் பெரிய ஆத்ம  ஞானி. ஆன்மீகவாதி. சைவத் திருமுறைகள், பக்தி இலக்கியங்கள், பைபிள், திருக்குர்-ரான் என அனைத்தையும் படித்து மெய்யறிவில் பூரணத்துவம் பெற்றவர்.
வாழ்க்கையில் உங்களுக்கு ஏற்படும் பல சந்தேகம் பலவற்றுக்கு இவர் மிக மிக அனாயசமாக விடை தருகிறார்.
இவரது சந்திப்பு மற்றும் இவர் பகிர்ந்து கொண்ட விஷயங்களை தொடர்ந்து நமது தளத்தில் படித்து வாருங்கள்…
அள்ளிக் கொடுத்து வாழ்பவர் நெஞ்சம் ஆனந்தப் பூந்தோப்பு
நல்லவர் என்றும் கெடுவதில்லை இது நான்கு மறை தீர்ப்பு!
* அடுத்த பகுதியில்….
கடமை தவறிய ஒருவருக்கு இறைவன் அளித்த சொர்க்கம் – இவர் கூறிய சுவையான குட்டிக்கதை + மேலும் மேலும் பல சுவையான அனுபவங்கள்…


No comments:

Post a Comment