Thursday, July 26, 2012


இராமலிங்கப் பெருமானாரை நிழற்படம் எடுப்பதற்குப் பலர் சுமார் 10 முறை முயன்றும் உருவம் பதிவாகவில்லை. ஆகவே வெவ்வேறு சந்தர்ப்பங்களில் மூன்று ஓவியர்கள் அவரை நேரில் பார்த்து வரைந்துள்ளனர். அவற்றின் விவரமாவது:-

1. கருங்குழி மணியக்காரர் வீட்டிலுள்ள மீசையுடன், கையில் சாவிக்கொத்தோடு அமர்ந்துள்ள ஓவியம்.
2 ஆடூர் ச்பாபதி குருக்கள் வீட்டு பூஜை அறையிலுள்ள, நின்ற நிலை ஓவியம்.
3. திருவண்ணாமலை வட்டம் வேட்டவலம் ஜமீன்தார் மாளிகைக்கு இராமலிங்கப்பெருமானார் சென்ற போது மாளிகை வாயிலில் நிற்கும் திருக்கோல ஓவியம். இது மிகவும் இயற்கையாக, மீசையுடன், முகத்தில் உள்ள உரோமங்களை மழிக்காத நிலையில், தலையில் முக்காட்டிற்குக் கீழே முடியுடன், நெற்றியில் மூன்று பிரிவான திருநீறு அணிந்து சோகமாக கண்ணீர் வடியும் முகத்துடன் காணப்பெறுகிறது. (தொழுவூர் வேலாயுத முதலியார், சென்னை பிரம்ம ஞான சபையில் 1882 ஜூலை மாதத்தில் கொடுத்த வாக்கு மூலத்தில் "அவர் முகம் எப்பொழுதும் சோகமாக இருக்கும்" என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

+குறிப்பு
வேட்ட வலம் ஜமீன் மாளிகையின் நுழைவு வாயிலின் வலது பக்கத்தில் காணப்பெறும் உருளை வடிவமுடைய கல்தூண் இன்றும் அழியாமல் இருப்பதைக் காணலாம்.

Pls Visit: www.ramalingaperumanar.com

No comments:

Post a Comment