யூ.ஜி.யுடன் கே.சந்திரசேகர் நடத்திய ஒரு உரையாடல்.ஒலிப்பதிவு நாடாவிலிருந்து மொழிபெயர்த்துத் தொகுத்தவர் ஜே.எஸ்.ஆர்.எல்.நாராயணமூர்த்தி.)
யூ.ஜி.என்னும் ஆன்மீகத் தீவிரவாதியின் இந்த சிந்தனைகளின் குண்டு வீச்சில்,உங்கள் மனதின் பல ட்வின் டவர்கள் தகர்ந்து பொல பொலவென உதிரும் என நம்புகிறேன்.
****************************
எண்ணங்கள்தான் பிரச்சினையா?
‘என்னால் செய்ய முடியவில்லையே’ என்று நீங்கள் எண்ணுவதிலிருந்துதான் துயரமே தொடங்குகிறது.
பிரச்சினை, துயரம் அல்ல.துயரத்தைப் பற்றி நினைத்துக் கொண்டிருப்பதுதான் பிரச்சினையே.
‘நினைப்பதை நிறுத்துங்கள்’ என்று உங்களிடம் நான் சொல்லவில்லை.ஏன் என்றால் நினைப்பது நின்றால் நீங்களே இல்லை.
எண்ணங்கள் இல்லை என்றால் நீங்களும் இல்லை.ஒன்றுமே இல்லை.எண்ணங்கள் அற்ற போது, அங்கே இருப்பதை வெளிப்பட விடுங்கள்.அதனைத் தனியே விட்டு விட்டால் அது தானே செயல் படத் தொடங்கும்.
நினைப்பின் மூலம்தான் உங்கள் துயரங்களை நிலைத்திருக்கச் செய்கிறீர்கள்.
உங்களிடம் தவறே இல்லை,ஒன்றைத் தவிர.
துணிச்சல் இல்லை.
எண்ணங்களுக்கும் அப்பால் இருப்பதை ஒத்துக் கொள்வதே துணிச்சல்.
அது ஒன்றே உண்மையான புத்திசாலித்தனம்.
‘நான் யாரோ, அதைத் தவிர வேறு யாராகவும் இருக்க மாட்டேன்’
இதுதான் துணிச்சல்.திடம்.ஏற்கனவே உங்களிடம் உள்ளதுதான் அது.புதிதாக அடைய வேண்டிய அவசியம் இல்லாதது.

எண்ணங்களின் இயக்கம்தான் நீங்கள்.
எதிரிடைகளுக்கு மத்தியில் இருக்கும் இடைவெளியைப் புரிந்து கொள்வது மிகவும் கடினம்.
உதாரணமாக,எனக்கு நண்பர்கள் இல்லையென்று சொன்னால் எனக்கு எதிரிகள் இருக்கிறார்கள் என்று அர்த்தமல்ல.எனக்கு எதிரிகள் இல்லையென்றால் ஒவ்வொருவரும் எனக்கு நண்பர் என்றும் அர்த்தமல்ல.அப்புறம்,நண்பர்களோ எதிரிகளோ இல்லாத ஒரு நிலையை நீங்கள் எப்படிப் புரிந்து கொள்வீர்கள்?
நீங்கள் ஒரு பெண்டுலத்தைப் போல இந்த முனைக்கும்,அந்த முனைக்கும் ஊசலாடிக் கொண்டே இருக்கிறீர்கள்.இதைத்தான் எண்ணங்களின் இயக்கம் என்று சொல்கிறேன்.
அந்த நிலை எதிரிடைகளுக்கு மத்தியில் இருக்கிறது.எதிரிடைகளே இல்லாத அந்த ஒரு நிலையை உங்களால் நினைத்துப் பார்க்கவே முடியாது.

நீங்கள் நீங்களாகவே இருக்கும் துணிச்சல்.
நீங்கள் நீங்களாகவே இருக்கும் ஆசையை, அடித்து,உருக்குலைக்காமல் நீங்கள் விட்டதே இல்லை.அதுதான் உங்கள் வாழ்க்கையே.
எவ்வளவுக்கெவ்வளவு அந்த ஆசையை உருக்குலைக்கிறீர்களோ அவ்வளவுக்கவ்வளவு நீங்கள் துயருறுகிறீர்கள்.
எல்லாக் கஷ்டங்களுமே நீங்கள் நீங்களாக இருக்க விரும்பாமல் இன்னொன்றாக இருக்க விரும்புவதினால்தான்.
நீங்கள் நீங்களாகவே இருக்கும் துணிச்சல் உங்களுக்கு இல்லை.அதாவது உலகத்தில் நீங்கள் மட்டும் ஒரு தனி ஆள்.உங்களை விட்டால் இரண்டாமவர் இல்லை என்ற துணிவு.

அழகு.
எது அழகு?எங்கே இருக்கிறது அழகு?பார்க்கும் பொருளிலா,இல்லை உங்கள் கண்ணிலா?அழகைப் பற்றிய உங்கள் கருத்தைத்தான் நீங்கள் பார்க்கும் பொருளின் மேல் சுமத்துகிறீர்கள்.
அங்கே ஒரு அழகான மாலைக் கதிரவனின் மறையும் காட்சி தென்படுகிறது.அது அழகாக இருக்கிறது என்று உங்களுக்குள் நீங்களே சொல்லிக் கொண்டால் கூட அதனை நீங்கள் உண்மையில் பார்த்துக் கொண்டிருக்கவில்லை.
அழகு பொருளில் இல்லை.பார்க்கும் உங்கள் கண்களிலும் இல்லை.முற்றிலுமாய் நீங்களே அங்கே இல்லாத போதுதான் அது இருக்கிறது.
என்றால், அழகு என்பது என்ன?உண்மையில் யாருக்கும் தெரியாது.
அழகை அனுபவித்து அதைச் சொல்வதற்கு உள்ளே யாருமே இல்லாத போது, உங்களது முழு இருப்பையும் ஒன்று நிரப்புகிறதே அதனை வேண்டுமானால் அழகு என்று சொல்லலாம்.
அனுபவிக்கும் ஒரு அமைப்பின் மூலம் எப்பொழுது அழகினை சிறைப் பிடிக்கிறீர்களோ அப்போதே அது தொலைந்து போகிறது.

உங்களுடைய வாழ்க்கைத் தத்துவம் என்ன?
ஒன்றுமே இல்லை என்பதுதான்.
வாழ்வதற்கு ஒரு தத்துவம் தேவையா என்ன?
வாழ்க்கையின் குறிக்கோள் என்ன?வாழ்க்கையின் அர்த்தம் என்ன? இதற்கெல்லாம் விடை தெரிய வேண்டும் என்ற அவசியம் உங்களுக்கு இருக்கிறதா?
எனில்,நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கவில்லை என்றுதான் பொருள்.ஏனென்றால்,உள்ளே செத்துப் போன மனிதர்கள்தான் இந்தக் கேள்விகளைக் கேட்பதில் ஆர்வமாய் இருப்பார்கள்.உயிர்ப்புடன் இருப்பவர்கள் அல்ல.

வாழ்ந்து கொண்டு இருப்பவர்களுக்கும்,எங்களைப் போல செத்துப் போனவர்களுக்கும் என்ன வேறுபாடுகளைக் காண்கிறீர்கள்?
கேள்வி என்ற ஒன்றே இறப்பிலிருந்துதான் வரும்,உயிர்ப்புடன் இருப்பவர்களிடம் இருந்தல்ல.
ஞானி அல்லது யோகி,அல்லது ஜீவன்முக்தன் என்கிறார்களே அவர்களுடைய அடையாளங்கள் என்ன?
தெரிந்து கொள்ள வேண்டுமென நானே விரும்புகிறேன்!
ஒரு ஜீவன் முகதன் உங்கள் எதிரிலேயே அமர்ந்திருந்தால் கூட அவனை உங்களுக்குத் தெரியாது.அவனை அடையாளம் கண்டு கொள்ள எந்த வழியுமே கிடையாது.
யோகிகளைப் பற்றி உங்களுக்கென்று சில வரையறைகள்,நடை,உடை,பாவனைகள் பற்றிய தீர்மானங்கள் இருக்கின்றன.அவற்றின் கட்டங்களுக்குள் அவர் அடைபட்டால் அவரை ஜீவன் முக்தன் என்று அழைப்பீர்கள்.
உண்மையிலேயே அப்படி ஒருவன் இருப்பானேயாகில் தான் கடவுள் நிலை அடைந்தவன் என்றோ ஜீவன் முகதன் என்றோ அவனுக்கே தெரியாது.
அதனால் நான் ஒரு ஜீவன் முக்தன் என்று யார் தன்னைத் தானே சொல்லிக் கொள்கிறானோ அவன் ஒரு மிகப் பெரிய போலியாகவோ அல்லது சாமர்த்தியசாலியாகவோ தான் இருப்பான்.

மதம்,ஆன்மீகம் பற்றி..
நான் சொல்லுவது எதற்கும் எந்த மதத்திற்கும் சம்பந்தமே இல்லை.எந்த ஆன்மீக உட்கருத்தும் இல்லை.தூய,எளிமையான புற,உடலியல் மாற்றங்களையே நான் விவரிக்கிறேன்.
எனது உரையாடலின் நோக்கம்…
மனித எண்ணங்களின் வழியே எதனையும் புரிந்து கொள்ள முடியும் என்ற எண்ணத்தை உடைத்து உங்களை மீட்க வேண்டும் என்பதுதான்..
மனதைப் பற்றி
மனதைப் பற்றிய அறிவும் மனம்தான்.இந்த அறிவிலிருந்து விடுபடும் போது அங்கு மனமும் இல்லை.
ஆசைகள் அனைத்தும் எண்ணங்களே..
ஆசைப் படுதல் அனைத்தும் எண்ணமே.’என்னை நான் புரிந்து கொள்ள வேண்டும்,இந்த மன ஓட்டத்திலிருந்து விடுபெற வேண்டும்’ என்று நினைப்பதெல்லாம் எண்ணங்களே.உலகத்தில் சாதாரணமாக இயங்குவதற்கு மட்டுமே எண்ணங்கள் பயன்படுமே அன்றி வேறெதற்கும் அவை உதவா.
அன்பு,காதல்…
நேசம்,காதல் எல்லாமே உங்கள் எண்ணம்தான்.
‘நான் எனது மனைவியைக் காதலிக்கிறேன்,எனது வீட்டை நேசிக்கிறேன்,எனது பேன்க் பேலன்ஸை விரும்புகிறேன் ‘இவை அனைத்துமே உங்கள் எண்ண ஓட்டம்தான்.அதனாலேயே அவை அழிக்கும் தன்மையே உடையது என்று கூறுகிறேன்.
உண்மையாகச் சொல்ல வேண்டும் என்றால் அன்பு வயப்பட்டிருக்கும் போது அங்கே எந்த எண்ணமும் இருக்காது.அதனால் அதற்கு எந்த உறவும் இருக்காது.
நீங்கள் அன்பு என்று சொல்வது ஒரு அதிர்வை. பிரதிபலன் கிடைக்கவில்லை என்றால் அது தானாகவே உணர்ச்சியின்மையாகவோ,அக்கறையின்மையாகவோ,வெறுப்பாகவோ மாறிவிடும்.

கேள்விகள்
கேள்வி கேட்பது புத்திக் கூர்மையின் அடையாளமல்ல.கேள்விகள் அற்று இருப்பதே புத்திக்கூர்மை
No comments:
Post a Comment