Sunday, November 30, 2014

சுதந்திர வாழ்க்கை – நிரந்தர பண்ணையம் (Read this article to know about a great man living with us)


சுதந்திர வாழ்க்கை – நிரந்தர பண்ணையம்

  • நான் சுயநலகாரனும் கூட…
  • நான் – திமிர் பிடித்தவன்
  • என் துரோகிகளுக்கு நன்றி
  • இது ஒரு மாதிரி(யான) கல்வி
  • சுகமான அனுபவம்
  • உணவே நஞ்சு
  • வெங்காயமும் நவீன காரும்
  • மிருக வதை தடைச்சட்டங்களும் ஜட்டியும்
  • 5 கிலோ கங்காரு சாணமும் – 1 லிட்டர் மூத்திரமும்
  • கார்ப்பரேட் கோழிகளும் பண்ணை மனிதர்களும்
  • நுகர்வை குறை… மகிழ்வை கூட்டு…
  • குழந்தைகளின் உலகம் மிகவும் உன்னதமானது. அதை கெடுப்பதில் முதல் பங்குவகுப்பது அவர்களை பெற்றவர்கள், அடுத்து பள்ளிக்கூடங்கள், இவை இரண்டும் இல்லையென்றால் “வேலை” என்ற ஒன்று இல்லை. மனித இனம் தனக்காக உழைக்க கற்றிருக்கும். வேலை என்பது ஒரு அவமானமான செயல் என்பதை உணர்ந்திருக்கும். (வேறு எந்த உயிரினமும் தன் இனத்தில் மற்றவைகளுக்காக வேலை செய்வதில்லை) குழந்தையாக இருந்து இந்த சித்ரவதைகளில் சுழன்று இன்று ஓரளவு இந்த (so called) வாழ்க்கையிலிருந்து விடுவித்து எனக்குப் பிடித்தமான “இயன்றளவு இருக்கும்” இயற்கையோடு இயந்த “தற்சார்பு” வாழ்க்கையைப் பல சிரமங்களுக்கிடையே மகிழ்ச்சியோடு வாழ்ந்து வருகிறேன்.

    மனித இனம் மட்டுமே தனது ஆறாம் அறிவால் இந்த இயற்கைக்கு எதிராக தீவிரமாக செயல்படுகிறது. மற்ற எந்த உயிரினமும் இயற்கைக்கு உதவியாக இருந்து தன்னை தற்காத்து கொள்கிறது. எனவே இந்த ஆறாம் அறிவே வேண்டாம் என முடிவு செய்து ஒரு பறவையைப் போல வாழ வேண்டும் என பல சிக்கல்களிலிருந்து இன்றுவரை என்னை விடுவித்து கொண்டிருக்கிறேன்.
    என்மேல் வரும் வியர்வை நாற்றத்தையும் சாணி வாடையை தாங்கி கொண்டு என்மீது எப்போதும் அன்பைப் பொழியும் என் மனைவி, குழந்தை மற்றும் என் கருத்துக்களுக்கும் எண்ணங்களுக்கும் ஆதரவாக இருந்து என்னை தினமும் செதுக்கிக்கொண்டிருக்கும் எனது நண்பர் “சட்டையணியா சாமியப்பன்” அவருக்கும் பலவிதங்களில் கடமைப்பட்டுள்ளேன்.
    பருவ காலங்கள் இனி வரப்போவதில்லை என்றாலும் காலையில் சூரியன் எழுவதையும் மாலையில் மறைவதையும், எப்போவாவது மழை வருவதையும் எதிர்பார்த்து எனது நாட்கள் நகர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
    (குறிப்பு: இங்கே நான் எழுதும் கட்டுரைகள் அனைத்தும் ‘என்னையும்’ இயற்கைக்கு எதிரான இந்த மனித மூளையையும் நையாண்டி செய்யவே எழுதப்படுபவை. யாரோடும் விவாதம் செய்யவோ, விளக்கம் கொடுக்கவோ விரும்பவில்லை. எல்லோரும் தெளிவு பெற்று இயற்கையைப் புரிந்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கொஞ்சமும் இல்லை. எல்லோருக்கும் எல்லாமும் தெரிகிறது. எழுதபடும் அனைத்தும் தூங்க முடியாத நேரங்களில் என் சிறிய மூளையை நச்சரித்தவை.
    இந்த தளத்தில் உள்ள கட்டுரைகள் அனைத்தும் எந்த உரிமைக்குள்ளும் பதுக்கப்படாமல் சுதந்திரமாக உள்ளவை. இவற்றை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தி கொள்ளலாம். (திருடலாம், பகிரலாம், காரி துப்பியும் கொள்ளலாம்.)


No comments:

Post a Comment